Jump to content

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்


Recommended Posts

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்

 

 
04THALAGIRI1320788f

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

 

எனவே, கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.

சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969-ல் காலமானார். அதன்பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுக தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘’மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்’’ என்றார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.thehindu.com/tamilnadu/article24651115.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®¤à®¯ நிதி

அப்படியே... ஸ்ராலின் மகன்... உதய நிதியை, செயல் தலைவராக்கி  விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®¤à®¯ நிதி

அப்படியே... ஸ்ராலின் மகன்... உதய நிதியை, செயல் தலைவராக்கி  விடுங்கள்.


தோழர். .  நான் இந்த விடயத்தில் அழகிரி பக்கம் .. அவரின்ட மகன் என்ன ரொமாட்டோ சட்னியா ரெல் மீ ?.. அவருக்கு பதவி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:


தோழர்.நான் இந்த விடயத்தில் அழகிரி பக்கம் .. அவரின்ட மகன் என்ன ரொமாட்டோ சட்னியா ரெல் மீ ?.. அவருக்கு பதவி ? ?

 

Bildergebnis für à®à®´à®à®¿à®°à®¿  à®®à®à®©à¯ Bildergebnis für à®à®´à®à®¿à®°à®¿  à®®à®à®©à¯

அழகிரி  மகன்.... துரை  தயாநிதி  கொஞ்சம் பொறுத்தால், அன்பழகனின் பதவி கொடுக்கப்படும். ? :grin:
அவசரப் பட்டால்...  திருநெல்வேலி  அல்வா  தான் கிடைக்கும். ?

 

Link to comment
Share on other sites

தி.மு.க-வில் யார், யாருக்கெல்லாம் பதவிகள்? - கோபாலபுரத்தில் நள்ளிரவு ஆலோசனை 

 

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் குடும்ப விவகாரம், கட்சி தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7-ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என தி.மு.க.வின் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதற்கு அழகிரி தரப்பு இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதி, நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கியபோது செயல் தலைவரானார் ஸ்டாலின். தி.மு.க-வின் முழுகட்டுப்பாடும் ஸ்டாலின் கையில் இருந்தாலும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்கள் இன்னமும் தி.மு.க-வில் உள்ளனர். இதைத்தவிர குடும்ப அரசியலால் அவ்வப்போது முட்டல் மோதல்கள் கட்சியில் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் சமாளித்துதான் கருணாநிதிக்குப்பிறகு தி.மு.கவை  வழிநடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். 

 

 

அழகிரி, கனிமொழியின் அடுத்தகட்ட மூவ்மெண்ட்கள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதை மற்ற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்துவருகின்றன. குடும்பத்திலிருந்தே குழப்பம் ஏற்படாமலிருக்க ஒவ்வொரு காய் நகர்த்தல்களிலும் ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாகவே செயல்பட்டுவருகிறார். கருணாநிதியின் சமாதி விவகாரத்திலிருந்து இறுதி அஞ்சலி, ஊர்வலம், கட்சியின் செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும்  குடும்ப உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல் கட்சியினேராடு கலந்து ஆலோசித்துதான் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். குறிப்பாக கனிமொழி, ஸ்டாலினுடன் அடிக்கடி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த நிலையில் அடுத்து கட்சியை எப்படி வழிநடத்தலாம் என்று குடும்ப உறுப்பினர்களோடும் கட்சியின் மூத்த தலைவர்களோடும் ஸ்டாலின் தரப்பு ஆலோசித்துள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

 

 

 திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் அழகிரி மற்றும் கனிமொழி

``கோபாலபுரத்தில் குடும்ப உறுப்பினர்களோடு ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது குடும்பத்திலேயே மீண்டும் முட்டல் மோதல் இருந்தால் அது நமக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படும்போது,  தயாளு அம்மாள் மூலம் தீர்வு எட்டப்படும். தற்போது உடல்நலக்குறைவால் அவராலும் அந்தளவுக்கு செயல்பட முடியவில்லை. தயாளு அம்மாளின் பொறுப்பை செல்வி செய்துவருகிறார். அவர்தான் குடும்பத்தினருக்கு இணைப்புப் பாலமாக இருந்துவருகிறார். 

குடும்பத்தில் உள்ள சொத்துகள் குறித்து ஏற்கெனவே சில முடிவுகள் எட்டப்பட்டுவிட்டன. இதனால் சொத்துகள் தொடர்பாக பெரியளவில் பிரச்னைகள் இல்லை. இருப்பினும் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் எழுந்தபோது அதற்கும் ஸ்டாலினே ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது, கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி ஆகிய மூவருக்கும் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுக்கலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுபோல அழகிரிக்கு கட்சியில் மீண்டும் முக்கியப் பதவி கொடுக்கவும் க்ரீன் சிக்னல் காட்டப்பட்டுள்ளது. மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியே வழங்கப்படலாம். இதற்கு அழகிரி தரப்பு யோசித்து முடிவு சொல்வதாகக் கூறியிருக்கிறார்களாம்.

 

 

கனிமொழி தற்போது, மகளிரணி செயலாளராக உள்ளார். அவருக்கு ஸ்டாலின் வகித்து வரும் பொருளாளர் பதவியைக் கொடுக்கலாமா என்று ஆலோசனை நடந்தது. அதற்கு கட்சியின் 90 சதவிகித மூத்த நிர்வாகிகள் சம்மதித்துள்ளனர். அப்போது குடும்பத்தினருக்கே கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற விமர்சனம் எழும் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால், கே.என் நேரு அல்லது ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவியை வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் மறைவுக்குப்பிறகு செல்வி, தமிழரசு ஆகியோர் கட்சியில் நேரிடையாக களமிறங்க உள்ளனர். அதாவது அவர்கள் இருவரில் ஒருவருக்கு திருவாரூர் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஸ்டாலின் எடுத்த முடிவுகளுக்கு அழகிரி, கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கட்சியினரும் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து அதை மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருக்கிறார். விரைவில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் கட்சிப் பொறுப்புகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் " என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133564-discussion-about-dmk-appoinments-is-going-on-inside-gopalapuram-house.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை 3 பொண்டாட்டி பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சிட்டுப் போயிருக்கு மனுசன். இதில தொண்டர்கள் ஓசி புரியாணிக்கு அலைய வேண்டியான். நல்ல சன நாய் அகம் மப்பா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி:சத்தியம் டிவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தாட்டின் முன்னாள் முதலமச்சர் ஐயா காமராசர் அவர்கள் இறந்த பின்-

அவர் சொத்து மதிப்பு என்ன என்ற விபரம் புகைப்படத்தோடு கீழ் உள்ளது.

DkT3N9xXsAAud-6.jpg:large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது கட்சியில்ல, கம்பனி.

கிழவரின் மூன்று பேரன்கள்...

எங்கள் தலைவரின், மூத்த மகன், எங்கள் அண்ணன் மு.க.முத்துக்கும் பதவி கொடுங்கப்பா. ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.