Jump to content

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்!!!


Recommended Posts

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்!!!

 

 

corruption.jpeg?resize=640%2C381

வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­சுின் செயற்படுத்தப்படும் கூட்டுறவுக்  கிரா­மிய வங்­கி­யில் இடம்­பெற்ற ஒரு கோடி ரூபா ஊழல் மோசடி தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்கப்படவில்லை என வட மாகாண சபை உறுப்­பி­னர்­கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

மாகா­ண­ச­பை­யின் நேற்­றைய அமர்­வில் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், கூட்­டு­றவு கிரா­மிய வங்­கி­யின் சிமெந்து  விற்பனையில்  மோசடி இடம்­பெற்­ற­தாக பொது­மக்­கள் முறைப்பாட்டுக் குழுக்கள் மற்­றும் கணக்­கு குழு ஆகி­யன கண்­ட­றிந்­தி­ருந்­ததாகவும அது தொடர்­பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த விட­யம் சபை­யில் முதன்­மு­றை­யா­கப் பேசப்­பட்­ட­போது 29 லட்­சம் ரூபா பணமே ஊழல்­மோ­சடி செய்­யப்­பட்­டி­ருந்தாகவும்  இன்று ஒரு கோடியே 6 லட்­சம் ரூபா­வாக அது  வளர்ந்துள்ளதாகவும், எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ண­சபை பொறுப்­பேற்ற பின்­னர் நடந்த ஊழல் மோசடி இதுவெனக் கூறிய அவர் இது தொடர்­பில் அதி­கா­ரி­கள் உரிய காலத்­தில் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால் இந்­த­ளவு தூரம் மோசடி நடைபெற்றிருக்க மாட்டாது  என்றும் இனி­யும் அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள் என்று நம்ப முடி­யாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவைள, இது­வ­ரை­யும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இப்­போது அதி­கா­ரி­களை துரி­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கச் சொல்லி அவர்­கள் நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் என்ன  செய்யப்போகிறீர்கள்  என, ஆளும் கட்சி உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி கேள்வி எழுப்­பி­னார்.

‘அடுத்த அமர்­வுக்கு முன்­ன­தாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து இப்போது குறிப்பிட விரும்பவில்லை என்று அவைத் தலை­வர் சி.வி.கே சிவ­ஞா­னம் கடுந்தெனியில் குறிப்பிட்டார்.

அத்துடன் கிளி­நொச்சி பனை­தென்­னை­வள கூட்டுறவுச் சங்கம், விசு­வ­மடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற மோச­டி­கள் தொடர்­பி­லும் நட­வ­டிக்கை எடக்கப்படவில்லை என்ன ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளான அ.பரஞ்­சோதி, ஆ.புவ­னேஸ்­வ­ரன்  ஆகி­யோர் சபை­யில் குற்றம் சுமத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/91109/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.