நவீனன்

திருமுருகன் காந்தியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்? சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மறுப்பு

Recommended Posts

திருமுருகன் காந்தியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்? சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மறுப்பு

 

 

 
download%205

ஐநாவில் திருமுருகன் காந்தி, சைதாப்பேட்டை நீதிமன்றக் காவலில்- கோப்புப் படம்

ஜெனிவாவில் பேசியதால் கைதா? திருமுருகன் காந்தியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள் என்று கேள்வியெழுப்பிய நீதிமன்ற நடுவர் அவரைச் சிறையிலடைக்க இயலாது என்று மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100-வது நாள் நிகழ்ச்சியில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் பெருந்திரளாகச் சென்றனர்.

 

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர்வரை காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவிதம் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

தேசிய அளவில் இப்பிரச்சினை எதிரொலித்தது. தற்போது துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்ய ஜெனிவா சென்றார்.

அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் தமிழக போலீஸாரால் கொடுக்கப்பட்டிருந்தது.

ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை ‘லுக் அவுட்’ நோட்டீஸ் மூலம் பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். அவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த தமிழக போலீஸார் நேற்றிரவு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இந்நிலையில் திருமுருகன் காந்தியை இன்று சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன் நிறுத்திய போலீஸார் அவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மனு அளித்தனர்.

அப்போது தனக்காக வாதாடிய திருமுருகன் காந்தி, ''நான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசியதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது ஐநா.  நான் வெளியிடவில்லை. அப்படியானால் ஐநா மனித உரிமை கவுன்சில் மீது வழக்கு போடுவீர்களா?

நான் ஜூன் மாதம் பேசினேன், ஆனால் நீண்ட கால நடவடிக்கையாக இந்த வழக்கு போடப்பட்ட நிகழ்வு உள்ளதே ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் பிரகாஷ் எதன் அடிப்படையில் இவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஐநாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன பேசினார்? ஐநாவில் பேசியதற்கு நீங்கள் எப்படி வழக்கு போட முடியும்? எதன் அடிப்படையில் இவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை நடுவர் பிரகாஷ் எழுப்பினார்.

தாம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று நடுவர் உத்தரவிட்டார். அதுவரை திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் வைக்க இயலாது என உத்தரவிட்டார்.

மேலும் நேற்றிரவு தமிழக போலீஸார் திருமுருகன் காந்தியை கைது செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை சைபர் பிரிவு அதிகாரி மூலம் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்ட 11 -வது குற்றவியல் நீதிமன்ற நடுவர், விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என திருமுருகன் காந்திக்கும் உத்தரவிட்டார்.

திருமுருகன் காந்தி கைதை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்திருக்கும் வேளையில் நீதிமன்றம் காவலில் வைக்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24654820.ece

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஜெனிவா சென்று மக்களுக்காகத் குரல் கொடுத்து வந்த திருமுருகன் காந்திக்கு வணக்கமும் வாழ்த்தும். சொந்த மண்ணில் போராட்டத்தைத் தொடரும் அவருக்குப் போராட்ட வாழ்த்துக்கள். அவரளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது அவருக்குத் தோள் கொடுப்போம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரி- யாழ்ப்பாணத்தில் போராட்டம்!!

 
DkO4Q73VsAEJ5h6-780x405.jpg

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி இதனை ஏற்பாடு செய்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை திருமுருகன் கைது செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

DkO4Q78VAAEaVuk.jpg

http://newuthayan.com/story/17/திருமுருகன்-காந்தியை-விடுவிக்கக்-கோரி-யாழ்ப்பாணத்தில்-போராட்டம்.html

 

 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது 

 

 
thirumurugan

 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சில கருத்துகளை கூறியதாக பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். அதேசமயம், திருமுருகன் காந்தியிடம் போலீஸார் 24 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளலாம், அதற்கு திருமுருகன் காந்தி ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்நிலையில், திருமுருகன் காந்தி போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி, திருமுருகன் காந்தி அனுமதி இல்லாமல் பேரணி மூலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற குற்றத்துக்காக அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீஸார் திருமுருகன் காந்தியை தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர். 

http://www.dinamani.com/tamilnadu/2018/aug/10/மே-17-இயக்கத்தின்-ஒருங்கிணைப்பாளர்-திருமுருகன்-காந்தி-மீண்டும்-கைது-2977943.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நவீனன் said:

திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரி- யாழ்ப்பாணத்தில் போராட்டம்!!

 
DkO4Q73VsAEJ5h6-780x405.jpg

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி இதனை ஏற்பாடு செய்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை திருமுருகன் கைது செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

DkO4Q78VAAEaVuk.jpg

 

ஆன்டி லங்கன்ஸ் ..  ?

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஜெனிவா சென்று மக்களுக்காகத் குரல் கொடுத்து வந்த திருமுருகன் காந்திக்கு வணக்கமும் வாழ்த்தும். சொந்த மண்ணில் போராட்டத்தைத் தொடரும் அவருக்குப் போராட்ட வாழ்த்துக்கள். அவரளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது அவருக்குத் தோள் கொடுப்போம்.

ஈழத்து... பம்மாத்து  அரசியல் வாதிகளை விட,  திரு முருகன் காந்தி  எம் பிரச்சினைகளை... 
சர்வதேச அளவில் கொண்டு சென்றவர் என்பதற்காக...
திருமுருகன் காந்திக்கு, பெருமளவிலான  ஈழத்து தமிழர்கள் மிகவும் கடமைப் பட்டவர்கள்.

  • Like 4
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

திருமுருகன் காந்தி,  இதுக்காகவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...?! 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now