• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

IMAX என்றால் என்ன..?

Recommended Posts

'IMAX' என்றால் என்ன?

 

 

 

சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள்.

ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்?

Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ்.

 சென்னையில் 'ஐமேக்ஸ்'!

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.

சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது

டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது.

 என்ன தான் இருக்கு?

 ஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.

ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.

 ஐமேக்ஸில் 3D படம்!

 வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும்.

அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். 

ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.

 

இதந்தி

 • Like 1
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி,  ராஜவன்னியன்.
ஐமேக்ஸ் படம் எப்படி தயாரிக்கின்றார்கள் என்ற அடுத்த காணொளி வந்தவுடன், மறக்காமல் இணைத்து விடுங்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.

திரையரங்குகளில் போய் படம் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ் யாழ்ப்பாணம், தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். இதில், ஆசிரியர்கள் மூவர் காயமடைந்தனர். வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது. இந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன் பாதுகாப்பை உறுதியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வாள்வெட்டு-சம்பவத்தை-கண்டித்து-கவனயீர்ப்பு/71-245695
  • கனடாவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்றுமதி வசதிக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையோரம் 670 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் எரிவாயு குழாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பூர்வக்குடி மக்கள் 2 வாரங்களாக ரயில் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பூர்வக்குடி மக்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலிறுத்தினார். https://www.polimernews.com/dnews/100929/இயற்கை-எரிவாயு-குழாய்அமைக்க-எதிர்ப்பு-தெரிவித்தபோராட்டக்காரர்களுடன்பிரதமர்-ஜஸ்டின்-ட்ரூடோபேச்சு-வார்த்தை  
  • ஜப்பானில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, ஹெச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் ஹெச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில், ஜப்பானும் அந்த முயற்சியில் ஈடுபடவுள்ளது. https://www.polimernews.com/dnews/100867/HIV-மருந்துகள்-மூலம்-கொரானாதொற்றுக்கு-சிகிச்சை-அளிக்கமுடிவு
  • உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு&nbsp; இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான&nbsp; புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில்  கிட்டத்தட்ட 8 சதவீதத்தைக் குறிக்கிறது. சில அமேசன் ஊழியர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இன்னும் பலவற்றை செய்யுமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p> வெளிநடப்பு மற்றும் சில ஊழியர்கள் பகிரங்கமாக பேசியுள்ளனர். மேலும், பெசோஸ் அதன் கார்பன் தடம் குறித்து விமர்சிக்கப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்வெளி திட்டத்திற்கு நிதியளித்து வருகிறார். சில பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது, பெசோஸ் வரையறுக்கப்பட்ட பரோபகாரத்தை செய்துவருகிறார். திங்கட்கிழமை உறுதிமொழிக்கு முன்னர் அவர் செய்த மிகப் பெரிய நன்கொடை வீடற்ற குடும்பங்களுக்கும் மற்றும் பாடசாலைகளுக்கும்&nbsp; உதவ செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு 2 பில்லியன் டொலர் நிதி&nbsp; வழங்கியுள்ளார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று, ' பெசோஸ் எர்த் ஃபண்ட் (Bezos Earth Fund) தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "காலநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு பெரிய அச்சுறுத்தலாகும். தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இந்த கிரகத்தில் காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்த முன்முயற்சி விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்&nbsp; இயற்கை உலகை சிதைவடையாமல்&nbsp;பாதுகாக்கவும் உண்மையான வாய்ப்பை வழங்க நிதியளிக்கும் . "நாங்கள் பூமியைக் காப்பாற்ற முடியும். பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், தேசிய மாநிலங்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கூட்டு நடவடிக்கை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். "நான் இத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 10 பில்லியன் டொலர் செலவிடுகிறேன், இந்த கோடையில் மானியங்களை வழங்க ஆரம்பிக்கின்றேன். பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது, அதை நாம் ஒன்றாகப் பாதுகாப்போம்." எனத் தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/75864
  • உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும்&nbsp; ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள்<strong> ( i phone )</strong> உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அத்தோடு ஐ போனின் ( i phone ) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன. இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் அதில் பெரிய அளவு வருமானம் வரவில்லையென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேவேளை ஐ போன்களின் உற்பத்திக்கும் , வருமானத்திற்கும் சீனாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,873 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரிகளின் தொகையும் 73,335 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75918   Apple shares slide after coronavirus guidance warning as its global suppliers are hammered Apple said it does not expect to meet its own guidance for the March quarter because of the impact from the coronavirus. Apple shares fell on Tuesday. Shares of its suppliers across the world also dropped sharply. https://www.cnbc.com/2020/02/18/apple-shares-slide-after-coronavirus-revenue-guidance-warning.html