ராசவன்னியன்

காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!

Recommended Posts

Picture2.jpg

csm_4_zu_3_teaser_Huawei_P20_Pro_Twiligh

 

ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்.. :)

கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என்  சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..:(

கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. !

உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.

மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..!

வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..!

உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.

40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..

மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..

என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..!

அதாங்க.. வாங்கிவிட்டேன்..!!  :grin:

 

 • Like 3
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

 

huawei_mate_rs_black.jpg   PORSCHE-DESIGN-HUAWEI-MATE-RS.jpg

 

 

ஹூவாய் (Huawei) கைப்பேசிகள் விற்பனை சந்தைக்கு இப்படியும் ஒரு மாடல் வந்துள்ளது..

6 ஜிபி நினைவுத் திறன், 256 ஜிபி சேமிப்பு கொள்ளளவு, 40 மெகா பிக்ஸலுடன் மூன்று லைக்கா(Leica) காமிரா, வயர்லெஸ் சார்ஜர், டால்பி அட்மாஸ் ஒலித்திறன், இரண்டு வகையில் கைரேகை அடயாளம் மூலம் உட்புகும் வசதி இன்ன பிற சமீபத்திய அம்சங்கள்..

விலையைக் கேட்டால் மயங்கிவிடுவீர்கள்.. ஏறக்குறைய இந்திய ரூபாய்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்(Rs.1,40,000) மட்டுமே..

அமீரகத்தின் விலையில் Dhs.5,999/- திர்காம்..

இக்கைப்பேசி பக்கம் போகமுடியுமா..?

இதிலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நான் சென்ற மாதம் வாங்கிய கைப்பேசியிலும் உள்ளது..

இம்மாடலிலுள்ள சில கூடுதல் வசதிகள்:  538(PPI) பிபிஐ டிஸ்ப்ளே, 256 ஜி.பி சேமிப்பு, வயர்லெஸ் சார்ஜர், இரண்டு வகை கைரேகை அடையாள முறை.. மற்றவை ஒரே அம்சங்கள் தான்..

 

நிறுவன காணொளியில் பார்த்தால் விளங்கும்..

https://consumer.huawei.com/en/phones/porsche-design-mate-rs/

 

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019 இந்த நிலையில் மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை  மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றைய தினம் (21.09.19) இரவு முல்லைத்தீவு காவல்  நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்ட்டது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி 23 .09.2019 நாளை காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளையதினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் கட்டளை ஒன்று ஆக்கும்வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும் அதுவரையான காலப்பகுதியில்   பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக காவற்துறையினர் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் இறந்த பௌத்த பிக்குவின் உடலம்  பழைய செம்மலை நீராவியடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது . சிங்கள மக்கள் சிங்கள மாணவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் உள்ளிட்வர்கள் பௌத்த பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து  கடமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி என்ற  பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக  தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த  ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை  அமைத்து   அங்கு தங்கியிருந்து  பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்தார் . இதன்காரணமாக முல்லைத்தீவு காவற்துறையினரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதாவது பிள்ளையார் ஆலய தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தக்கூடாது இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் . புதியகட்டுமானங்களை மேற்கொள்ளும்போது உள்ளூர் திணைக்கள் பெறப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் பௌத்த பிக்குசார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும்  நிலையில் பௌத்த பிக்கு மரணமடைந்துள்ளார் .   http://globaltamilnews.net/2019/130962/
  • நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் முன்னாள் பிரதமர் தேவகவுடா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர். பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் மகன் திருமணம் கொழும்பில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர்  சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 17 பிரிவுகள் இலங்கையில் நன்றாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.     http://globaltamilnews.net/2019/130922/
  • நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்! September 22, 2019 யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். #நாகர்கோவில்  #பாடசாலை #மாணவர் #படுகொலை  #நினைவுதினம்   http://globaltamilnews.net/2019/130918/
  • கடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019   அமெரிக்க இளைஞர் ஒருவர் தன்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன் தோழி கெனிஷாவுடன் தன்சானியாவில் உள்ள பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந’;தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் நீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்து தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் நீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்த நேரம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக அவரது தோழி கெனிஷா முகப்புத்தக பதிவொன்றில் தெரிவித்துள்ளார். நீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ள இந்த விடுதியின் ஓர் இரவுக்கான கட்டணம் 1700 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது #கடலுக்கடியில் #காதலை #இளைஞர்  #நீரில் #மூழ்கி #உயிரிழப்பு     http://globaltamilnews.net/2019/130948/  
  • நொடுங்காலபோவான் அண்ணா எழுதின‌தில் ஒரு த‌வ‌றும் இல்லை , நீங்க‌ள் அவ‌ர் மேல் தேவை இல்லாம‌ நொண்டி சாட்டு வைக்க‌ வேண்டாம் என்ப‌த‌ தாழ்மையுட‌ன்  சொல்லி கொள்ளுகிறேன் 😉 /