Jump to content

எல்லாம் எவன் செயல்?

Recommended Posts

எல்லாம் எவன் செயல் ?

கடவுளை வணங்குபவர்கள்  அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான்.

எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால்,  ஒரு மனிதன் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவனால் அவன் விரும்பும் ஏனைய மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் சிவனையோ, கிருஷ்ணரையோ கடவுளாக கொண்டவன் ஏசுவையோ அல்லாவையோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் விசயங்களில் நல்ல விசயம் என்று கொண்டால் அது மொழிதானே தவிர கடவுள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இன்றுவரை ஆராய்ச்சியில் எத்தனையோ புதிய புதிய கண்டு பிடிக்க முடிந்த மனிதனால், கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட பிடித்து குடுவையில் அடைத்த மனிதனால் கடவுளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள், இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் பதில். ஆக, கடவுள், கடவுள் நம்பிக்கை யாவும் ஒவ்வொரு மனிதனின் பெற்றோரின் செயலே அன்றி வேறில்லை.

நன்றி - கடவுளின் தத்துவம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

பிழை. நான் எனது பெற்றோர்களின் மதத்தை பின்பற்றுவதிலை. நான் ஓர் இறைவனாகிய‌ இயற்கையை வழிபடுகின்றேன். 

48 minutes ago, tulpen said:

எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

பிழை. உ+ம். இயேசு பிறந்தது யூத நாட்டில் ஆனால் அங்கு கிறிஸ்தவம் பின்பற்றப்படுவதில்லை.

48 minutes ago, tulpen said:

கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால்,  ஒரு மனிதன் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவனால் அவன் விரும்பும் ஏனைய மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் சிவனையோ, கிருஷ்ணரையோ கடவுளாக கொண்டவன் ஏசுவையோ அல்லாவையோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் விசயங்களில் நல்ல விசயம் என்று கொண்டால் அது மொழிதானே தவிர கடவுள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

பிழை. மதம் நம்பிக்கை சார்ந்தது. மொழிதொடர்பாடல் சார்ந்தது.

48 minutes ago, tulpen said:

இன்றுவரை ஆராய்ச்சியில் எத்தனையோ புதிய புதிய கண்டு பிடிக்க முடிந்த மனிதனால், கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட பிடித்து குடுவையில் அடைத்த மனிதனால் கடவுளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள், இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் பதில். ஆக, கடவுள், கடவுள் நம்பிக்கை யாவும் ஒவ்வொரு மனிதனின் பெற்றோரின் செயலே அன்றி வேறில்லை.

நன்றி - கடவுளின் தத்துவம். 

கடவுள் இருக்கின்றார் என‌ விசுவாசம் / நம்பிக்கை முக்கியம் அது இருந்தால் கடவுளின் செயல்களை காணலாம். "விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள்"

Link to comment
Share on other sites

மனிதர்களாகிய எம்மை மீறிய  ஒரு சக்தி உண்டெண்ற ரீதியல் அந்த சக்தியை கடவுள் என்று நம்புவது வேறு. மதங்களை அதன் முரண்பாடான கோட்பாடுகளை நம்புவது என்பது வேறு. 

மதவாதிகள் ஆயிரம் கூறினாலும் மதங்கள் என்பவை இவ்வுலகில் நீண்டகாலமாய் இயங்கும் அரசியல் கட்சிகளே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.