Sign in to follow this  
Athavan CH

சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்

Recommended Posts

கருனாநிதி என்னும் மனிதரால் ஈழத்தமிழருக்கு இன்றுவரை கிடைக்கப்பெற்ற நண்மைகள் என்ன அல்லது தீமைகள் என்னவென்று எவராவது பட்டியலிட்டால் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

இவரின் மரணமும் முகம்தெரியாத எவரோ ஒருவரின் மரணமும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. இங்கே அவருக்காக அழும் உள்ளங்கள், அவரின் பிரமாண்டமான உருவத்திற்காகவும், தமிழ் சினிமாவில் அவர் ஆற்றிய பணிக்காகவும் அழுகிறார்களா அல்லது எதற்காக அழுகிறோம் என்கிற காரணமே தெரியாமல் அழுகிறார்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இவரின் மரணம் தாயகத்தில் ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தாமல் விட்ட தாக்கத்தையும், 1984 இல் திருமதி இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், அமரர் திரு எம். ஜி. ராமச்சந்திரன் மரணமானபோதும் தமிழர் தாயகம் தனது சொந்த வீட்டில் ஒருவர் மரணமானத்தைப்பொன்ற தாங்கொணாத் துயர் பற்றியும் சிந்தித்து ஒப்பிட்டுப்  பார்க்கிறேன்.

இரண்டுக்குமே பாரிய வேறுபாடு. மக்களின் மனதிலிருப்பவர்களின் இழப்பினால் ஏற்படும் இயற்கையான சோகம் என்பது, மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் எவ்வளவுதான் பெரியவர்களாக இருந்தபோதும்கூட, அவர்களின் இழப்பினால் ஏற்படுத்தப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.

தனிமனித வழிபாட்டையும், குடும்ப வாரிசு அரசியலையும் தமிழகத்துக்குக் கொடுத்த இவர்போன்றவர்களின் இழப்போடு, தமிழகத்தில் இனிமேல் வாரிசு அரசியலுக்கும், தனிமனித வழிபாடும் முடிவிற்குக் கொண்டுவரப்படுகிறது என்று சர்வதேசம் எதிர்வுகூற, அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் எப்போதுமே இந்த சாக்கடை அரசியலைக் கொண்டாடுவோம் என்று அவரது கட்சி அறிவித்திருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை கருனாநிதி என்னும் அரசியல்வாதி என் மனதில் விட்டுச் செல்லும் ஒரு விடயம் இருக்கிறதென்றால், அது 2009 இல் அவர் நடந்துகொண்டவிதம் மட்டும்தான். இதை இங்கே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமோ அல்லது கவலையோ இல்லை.

நண்பர்கள் நிழலியும், கிருபனும் கோபித்துக்கொண்டாலும் கூட, நான் இப்படித்தான் இந்த மரணத்தைப் பார்க்கிறேன்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

சகோதர யுத்தம் நடைபெற “ரோ” முக்கிய காரணி. ஆனால் அவர்களும் தமிழ் இயக்கங்களிடையே இயல்பாக இருந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியற்ற செயல்பாடுகளையும் சாதுரியமாக பாவித்துக்கொண்டனர். கருணாநிதி தனது கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தியே “ஈழப்போராளிகளையும்”, தமிழீழப் போராட்டத்தையும் பார்த்தார். ஒரு கட்சியின் தலைவர் என்ற  வகையில் அந்தக் காலத்தில் அவர் நடந்துகொண்ட முறைதான் சகோதர யுத்தத்தை தூண்ட முக்கிய காரணி என்பது போராட்ட இயக்கத் தலைவர்கள் ஒன்றும் விளங்காத மொக்கர்கள் என்று சொல்லுவது போலாகும். 

 

 

முதலமைச்சர் பதவியிலிருந்த MGR ஐ சந்திக்காமல் கருணாநிதியை போய்  சந்தித்த மற்ற இயக்கங்களை மொக்கர்கள்  என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இங்கு எனக்கு புரியாத விடயம் ஒன்று சிங்களவரோ அல்லது வேறு இனத்தவரோ அவர்களின் பார்வைகள் வேறாக இருக்கலாம் ஆனால் இறுதியில் தங்கள் இனத்தின் நீண்டகால நன்மை கருதி விட்டுக்குடுத்து பல விடயங்களில் ஒத்து போவார்கள் ஆனாலும் தங்கள் சிந்தனை மாற்றம் கொள்ள மாட்டார்கள் ஆனால் இங்கு தங்கள் சிந்தனைக்கு எதிரான கருத்துக்கள் வந்தால் அதை தாங்கி கொள்ள முடியாமல் இருப்பது ஆனால் அந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கழுவி ஊத்தி கடைசியில் அனுமதிக்கபட்ட இணையம் செய்தியாக போடும்போது இங்கு இணைக்கபடுவதை பலமுறை கண்டு உள்ளன் .

Share this post


Link to post
Share on other sites

தனது கருத்துடன் உடன்படாது இருப்பவர்களை துரோகி என்பதும் . போராட்டம் தோற்றதுக்கு பல் வேறு சர்வதேச அக புறக் காரணிகள் இருக்குமிடத்து போராட்டத்துக்கு ஆதரவு நல்கிய அனைவருமே களவு எடுத்தார்கள் என்று கூறுவதும் ஒன்றே. தமிழ் நாடே தமிழருக்கு இருக்கும் ஒரு அரசு. எவ்வாறு மேற்கு வங்க முதல்வர் வங்காளிகள் சார்பாகப் பேசுகிறாரோ அவ்வாறே தமிழக முதல் வரும் பேசி இருக்க முடியும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ragunathan said:

ண்பர்கள் நிழலியும், கிருபனும் கோபித்துக்கொண்டாலும் கூட, நான் இப்படித்தான் இந்த மரணத்தைப் பார்க்கிறேன்.

இதில் கோபிக்க எதுவுமில்லை.

கலைஞர் கருணாநிதிக்கான அஞ்சலியில் ஈழத்தமிழர்களுக்கு செய்த நன்மைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அந்தளவுக்கு அவரைப் பற்றிய தெளிவு இருக்கின்றது. ஆனால் அவர் சகோதர யுத்தத்தை தொடங்கிவைத்தார், முள்ளிவாய்க்கால் அழிவுக்குக் காரணமாக இருந்தார் என்று சொல்லுவதற்கு முட்டுக்கொடுக்கும் கீழ்மையும் என்னிடம் இல்லை. மேலே எழுநாயிறு கூறியதுபோன்று அவரது மரணத்தைப் பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாதவர்கள்தான் அதிகம்.

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு கலைஞர் காரணமில்லை. அவருக்கு அந்தத் தேவை எப்போதுமே இருந்ததில்லை. அவரது விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ முள்ளிவாய்க்கால் நடந்துமுடிந்தது என்பதுதான் உண்மை. ஏனென்றால், சோனியா தலமையில் நடந்துகொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தியோ அல்லது செல்வாக்கோ, அன்று எவருக்குமே இருந்திருக்காது என்பது திண்ணம்.

ஆதங்கம் என்னவென்றால், அவர் முயற்சித்திருந்தால் ஏதாவது வித்தியாசமாக நடந்திருக்குமா என்பதுதான். சோனியாவுக்கு எழுதிய கடிதங்கள், இறுதிநேரத்தில் கலைஞர் கூறிய விடயங்கள், மூன்றுமணிநேரம் இருந்த உண்ணாவிரதம், கனிமொழிக்காகவும், ராஜாவுக்காகவும் தில்லியில் போய்க் கூடாரமடித்து அமைச்சர்ப் பதவி கேட்டு அவர் ஆடிய சதுரங்க ஆட்டங்கள், தமிழக மக்களின் உணர்வு எழுச்சியை மூடிபோட்டு மூடி அவர் செய்த திருகுதாலங்கள் என்பவைதான் அவர்மேலான விமர்சனங்களுக்குக் காரணமாகின்றன. 

சகோதரப் படுகொலைகள் பற்றி அவர் பேசிய விடயங்களில் உண்மை இல்லாமல் இல்லை. இயக்கங்களுக்குள் உள்முரண்பாடுகள், வேற்றியங்களுடனான மோதல்கள் என்று எம் கண்முன்னாலேயே நடந்தவைதானே? ஆனால், சகோதரப் படுகொலைகள் என்று வரும்போது கலைஞரும் சில நேரங்களில் அவற்றுக்கான காரணங்களில் ஒன்றாக வந்துபோயிருக்கிறார். ஆனால், அவரினால்த்தான் சகோதரப்படுகொலைகள் நடந்தன என்பதையும் ஏற்பதற்கில்லை.

அவரை விட்டு விடலாம். இறந்துபோனவர் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் வந்துவிடப்போகிறது?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ragunathan said:

கருனாநிதி என்னும் மனிதரால் ஈழத்தமிழருக்கு இன்றுவரை கிடைக்கப்பெற்ற நண்மைகள் என்ன அல்லது தீமைகள் என்னவென்று எவராவது பட்டியலிட்டால் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

இவரின் மரணமும் முகம்தெரியாத எவரோ ஒருவரின் மரணமும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. இங்கே அவருக்காக அழும் உள்ளங்கள், அவரின் பிரமாண்டமான உருவத்திற்காகவும், தமிழ் சினிமாவில் அவர் ஆற்றிய பணிக்காகவும் அழுகிறார்களா அல்லது எதற்காக அழுகிறோம் என்கிற காரணமே தெரியாமல் அழுகிறார்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இவரின் மரணம் தாயகத்தில் ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தாமல் விட்ட தாக்கத்தையும், 1984 இல் திருமதி இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், அமரர் திரு எம். ஜி. ராமச்சந்திரன் மரணமானபோதும் தமிழர் தாயகம் தனது சொந்த வீட்டில் ஒருவர் மரணமானத்தைப்பொன்ற தாங்கொணாத் துயர் பற்றியும் சிந்தித்து ஒப்பிட்டுப்  பார்க்கிறேன்.

இரண்டுக்குமே பாரிய வேறுபாடு. மக்களின் மனதிலிருப்பவர்களின் இழப்பினால் ஏற்படும் இயற்கையான சோகம் என்பது, மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் எவ்வளவுதான் பெரியவர்களாக இருந்தபோதும்கூட, அவர்களின் இழப்பினால் ஏற்படுத்தப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.

தனிமனித வழிபாட்டையும், குடும்ப வாரிசு அரசியலையும் தமிழகத்துக்குக் கொடுத்த இவர்போன்றவர்களின் இழப்போடு, தமிழகத்தில் இனிமேல் வாரிசு அரசியலுக்கும், தனிமனித வழிபாடும் முடிவிற்குக் கொண்டுவரப்படுகிறது என்று சர்வதேசம் எதிர்வுகூற, அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் எப்போதுமே இந்த சாக்கடை அரசியலைக் கொண்டாடுவோம் என்று அவரது கட்சி அறிவித்திருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை கருனாநிதி என்னும் அரசியல்வாதி என் மனதில் விட்டுச் செல்லும் ஒரு விடயம் இருக்கிறதென்றால், அது 2009 இல் அவர் நடந்துகொண்டவிதம் மட்டும்தான். இதை இங்கே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமோ அல்லது கவலையோ இல்லை.

நண்பர்கள் நிழலியும், கிருபனும் கோபித்துக்கொண்டாலும் கூட, நான் இப்படித்தான் இந்த மரணத்தைப் பார்க்கிறேன்.

காழ்ப்புணர்வற்ற குழுவாதம் சாராத நல்ல கருத்தாடல்களுக்கு ஏன் கோபம் வரப் போகின்றது ரகு? எனக்கு உங்கள் கருத்தில் எந்த கோபமும் இல்லை.

அதே நேரத்தில் கிருபன் கூறியிருப்பது போன்று முள்ளிவாய்க்காலுக்கும் சகோதர சண்டைக்கும் கருணாநிதியை சாட்டி தப்பித்துக் கொள்ளும் போக்குக்கும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கும் திமுக ஆதரவளார்களின் எதிர்ப்பை அவரது மரணத்தை கொண்டாடி பெறுவதற்கும் நான் எதிராக இருக்கின்றேன்.

அத்துடன் ராஜீவ் படுகொலைக்கு முன்னர் இந்தியப் படைகளுடனான யுத்த காலத்தில் கூட காயம்பட்ட போராளிகள் தமிழகத்தில் சிகிச்சை பெறும் அளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் தமிழக அரசு  நடந்து கொண்டமைக்கும்  ஈழ அகதிகள் இன்றிருக்கும் கெடுபிடிகள் எதுவும் இன்றி அன்று இருக்க ககூடிய சூழ்நிலையை கொடுத்தமைக்கும்  கருணாநிதியும் ஒரு காரணம் என்பதையும் மறுக்கவில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

கருணாநிதி யின் உண்ணா நோன்பு ம் முள்ளிவாய்க்காலில் நடந்தவையும் விபரமாக பதிவு செய்யப்பட்டுள்து . திராவிட அரசியலை தனது குடும்பச் சொத்தாக்கி சிதைவுறச் செய்தார். 

 

Share this post


Link to post
Share on other sites

பிழையான தலமை மீதான விமரிசனம் தொண்டர்கள் மீதான விமரிசனமாகாது. மக்கள் விரோதமான சந்தர்ப்ப வாத தலமை அம்பலப் படுத்த வேண்டும். 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்கள் தான்  தம் தலைவர்கள் நல்லவர்களா, ஊழல் செய்தவர்களா, 3 பெண்களை திருமணம் செய்தவரா என்று பார்த்து தம் வாக்கை தீர்மானிக்க வேண்டும். அவர்கள் தலைவர்களை விமர்சித்து அம்பலப்படுத்த அங்கு ஏராளமான ஊடகங்களும், அமைப்புகளும் கட்சிகளும் இருக்கு. இந்தியாவில் தமிழகத்தில் வாக்களிக்க உரிமையில்லாத நாம் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எமக்கு தேவையெல்லாம் தமிழகத்தின் தார்மீக ஆதரவு. கலை, கலாச்சார, மொழி ரீதியான ஒற்றுமை இருப்பதாலும் வியாபார நலன்கள் இருப்பதாலும் அவர்களின் தார்மீக ஆதரவு எமக்கு அவசியம். நாம் கட்சி பார்த்து ஆதரவு கொடுப்பதும் அவர்களின் தலைவர்களின் சாவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிப்பதும் எந்த நன்மையையும் கொடுக்கப் போவதில்லை. மேலும் மேலும் எதிரிகளை சம்பாதிக்கவும் மேலும் மேலும் தனிமைப்படவும் மட்டுமே உதவும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிழலி அவர்களே,

திமுகவைச்சேர்ந்த ஒருகோடி தொண்டர்களில் ஒரு விகிதம் தொண்டர்களாவது கடந்தகாலங்களில் நடந்த ஈழத்தமிழர்க்கு ஆதரவான அவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கெதிரான எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலுமோ அன்றேல் அதற்கிணையான நிகழ்ச்சிகளிலுமோ கலந்துகொண்டதாக ஏதாவது பதிவுகள் உண்டா?
 
இல்லை காரணம் கருனாநிதி அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க அல்லது ஆட்சி அதிகாரத்தை நோக்கிப்பயணம் செய்யவே தனது தொண்டர்கள் பலத்தைப் பயன்படுக்துவார் ஒருவீதம்  எனப்படுவது நீங்கள் கூறிய கூட்டுத்தொகையின்படி ஒரு லட்சம் என்பதாகும்.

ஈழப்போரின் இறுதிக்காலத்தில் கருனாநிதியின் ஆட்சியில் வன்னியிலிருந்து தமிழ்நாடு நோக்கிப்பயணம்செய்யும் அனைத்து வழிகளும் முற்றாக மூடப்பட்டிருந்தது. அவசர காலத்தில் பாவிக்கப்படும் மருந்துகளிலிருந்து எரிபொருள் ஈறாக அனைத்தையும் தமிழகத்திலிருந்து கடல்மார்க்கமாக வன்னிக்கோ அன்றேல் ஈழத்தில் ஏனைய பகுதிகளுக்கோ வருவிக்கும் அனைத்துப்பாதைகளும் மூடப்பட்டன.

காரணம் இந்திய கட்ற்படை இல்லை தமிழ்நாட்டின் கரையோரக்காவல்படை மிகவும் இறுக்கமான சூழலை தமிழ்நாட்டின் கரையோரப்பகுதியில் கடைப்பிடித்தது தமிழ்நாடு காவல்துறையும் அதுபோலவே. காரணம் காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர்க்கு தமிழ்நாட்டிலிருந்து உதவிகள் போனால் திமுக அரசு கலைக்கப்படும் என்பதாலேயே. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அப்படி இருந்ததில்லை இவ்விடையம் அவருக்கு ஒருபொருட்டே இல்லை ஆகையால் இதுவிடையத்தில் கண்டும்காணமலேயே இருந்தார் ஆனால் கமிழ் நாட்டில் விடுதலைப்புலிகளால் வன்முறச்சூழலை கொண்டுவராமலிருக்க இருக்கமான சூழலைக்கடைப்பிடித்தார் புலிகளுக்கான பொருள் விநியோத்தில் கண்டும்காணாமலிருந்தார்..

நான் இன்னுமொரு கருத்தில் கூறியதுபோல் இனிமேல் தமிழ்நாட்டில் எவர் நினைத்தாலும் ஈழத்தமிழர்க்கு அரசியல்ரீதியில் குரல்கொடுப்பதற்கோ அன்றேல் வேறு எந்த விடிவிலோ உதவிசெய்வதற்கோ வழிகள் எல்லாமே அடைபட்டுப்போய்விட்டன வன்னிப்போரின்பின்பு அதற்கான சாத்தியமில்லாது செய்யப்பட்டுவிட்டது இந்திய உளவுத்துறை மிகநீண்டகாலமாகக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு எல்லாக்கதவுகளையும் அடைத்துவிட்டது.

இதற்குபின்பும் முத்துவேலர் மகன் செய்த தகிடுதித்தங்களை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

தவிர எமக்கான விடுதலைக்கான நகர்வுகளை நாம்தான் முன்னெடுக்கவேண்டுமே தவிர இரத்தத்தின் இரத்தங்களோ உடன்பிறப்புக்களோ என்னைவாழவைத்ததெய்வங்களோ அன்றேல் சீமானின் தம்பிகளோ அதுவுமில்லாதுவிடின் இதர அதிரிபுதிரிகளோ அல்ல.

பத்துக்குமேற்பட்ட விடுதலை இயக்கங்கள் அதன்பின்பு ஒரே ஒரு விடுதலைப்புலி இயக்கம் இவைகளது முதுகில் நாம் பாரத்தைச் சுமத்திவிட்டு வெளிநாட்டிலி அசைலம் அடித்து இங்கு வாழப்பழகிக்கொண்டுவிட்டு இன்னமும் தமிழ்நாட்டின் சகோதரர்கள் எமக்கான உதவிகளைசெய்வார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

தமிழ்நாட்டின் சகோதரர்கள் தங்களது அரசியல் மற்றும் சமூகம்சார் உரிமைகளை மீட்டெடுக்க இன்னும் வெகுதூரம் பயணம் செய்யாவேண்டியுள்ளது ஆகவே கற்பனையில் கருனாநிதிக்காக வாதாடாதீர்கள்

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஈழத்துக்கும் இவரே கலைஞர்!

122823-e1534483774147.jpg?resize=270%2C220

மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’  சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன்.

தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதேவேளையிலேயே தி.மு.கவின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின.

இலங்கையில் தமிழ்த் தேசியமும் தமிழருக்கு சுயாட்சிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முளைவிடத் தொடங்கிய காலமும் இதுதான். இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களின் உணர்வுமிக்க தீவிரத் தொண்டர்களும் தி.மு.கவைப் பின்பற்றியே தங்களது அரசியலை வடிவமைத்துக்கொண்டார்கள். தி.மு.கவின் தனித் தமிழ்நாடு கோரிக்கையும் அதன் பின்னான முழுமையான மாநில சுயாட்சிக் கோரிக்கையும் அந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்க அவர்கள் முன்னெடுத்த மொழிப் பற்று, இனவுணர்வு, பண்டையகால தமிழ்நில அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாவற்றையும் இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள் அப்போது தி.மு.கவை பின்பற்றியே அமைத்துக்கொண்டார்கள். பிற்காலத்தில் அவர்களது தேர்தல் சின்னமாக தி.மு.கவின் உதயசூரியனே அமைந்து போயிற்று.

அதேவேளையில் தி.மு.கவின் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சமூகநீதி, சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றையெல்லாம் மிகக் கவனமாக இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொண்டார்கள். ஏனெனில், அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் அதிகாரம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமே இருந்து வருகிறது. தங்களது அரசியல் வளர்ச்சிக்குத் தேவையான தமிழ்த் தேசியத்தை மட்டுமே அவர்கள் தி.மு.கவிடமிருந்து எடுத்துக்கொண்டார்கள். அன்னப்பறவை தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்து எடுக்குமாம். இவர்கள் பாலிலிருந்து தண்ணீரை மட்டுமே பிரித்து எடுத்துக்கொண்டார்கள்.

நான் மின்சாரமோ திரையரங்கோ பத்திரிகைகளோ இல்லாத ஒரு சிறு கிராமத்தில் சிறுவனாக வளர்ந்த எழுபதுகளில் கிராமத்து கோயில் திருவிழாக்களிலோ அல்லது திருமண நிகழ்ச்சிகளிலோ கிராமத்தின் உயர்ந்த பனைகளில் லவுட் ஸ்பீக்கரைக் கட்டி கலைஞரின் திரைப்பட வசனங்களை ஒலிக்கவிடுவார்கள். பராசக்தி, மனோகரா, பூம்புகார் என எத்தனையோ படங்கள். என் கிராமத்தின் பனைகளிலிருந்து ஒலிக்கும் அந்த வசனங்களில் சாதி மறுப்பும் கடவுள் மறுப்பும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையும் பெண் உரிமைக்குரலும் சிவாஜி கணேசனதும் எஸ்.எஸ்.ராஜேந்திரனதும் கண்ணம்பாவினதும் விஜயகுமாரியினதும் குரல்களிலே வரும். கலைஞரின் அரசியல் எழுச்சி உரைகள் தேர்தல் சமயங்களில் சற்றே மாற்றிப் பிரதிபண்ணி உள்ளூர் இளைஞர்களால் பேசப்படும். கலைஞரின் திரைப்பட வசனங்கள் கிராமத்து நாடகங்களில் அப்படியே நடிக்கப்படும். கலைஞரின் குரலை வாங்கிப் பேசிய பல இளைஞர்களில் நானுமொருவன். எந்தவொரு முற்போக்கு அரசியல் இயக்கமோ அரசியல் பத்திரிகையோ கிடையாத என் கிராமத்தில் கலைஞரின் வசனங்கள் மூலமே நான் இலக்கியத் தமிழையும் சமூகநீதி கோரிய குரலையும் சாதி எதிர்ப்பையும் நாத்தீகத்தையும் முதன் முதலில் கற்றுக்கொண்டேன். அந்தப் பெரும் நன்றிக் கடனே என் நூலொன்றைக் கலைஞருக்கு நான் சமர்ப்பிக்கக் காரணாமாயிருந்தது. இதொன்றைத் தவிர நான் ஒருபோதும் எனது நூலொன்றை உயிருடன் இருந்த ஒருவருக்குச் சமர்ப்பித்ததில்லை.

இலங்கையில் தமிழர்கள் மீதான முதலாவது இன வன்முறை 1956இல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதற் குரல் கலைஞருடையதாக இருந்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு சுயாட்சியும் கெளரவமான அரசியல் தீர்வும் ஜனநாயக ஆட்சிமுறையும் கிடைக்க வேண்டும் என இறுதிவரை மனப்பூர்வமாக விரும்பிய தலைவர் கலைஞர்.

கலைஞர் வெறும் அறிக்கைளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர் அல்ல. அவரும் அவரது கட்சியினரும் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக எண்ணற்ற போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர்கள். ஈழப் போராளிகளிற்கு தமிழகத்தில் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதிகளிலும் அடைக்கலம் கொடுத்தவர்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து புலிகளைச் சட்டத்தை மீறியும் காப்பாற்றியவர்கள். தி.மு.கவின் முக்கிய தலைவரான சுப்புலஷ்மி ஜெகதீசனும் மற்றும் பலரும் இதற்காக நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். கலைஞர் வைகோ போலவோ சீமான் போலவோ ஒருபோதும் சகோதரப் படுகொலைகளை ஆதரித்தவரல்ல. ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்திப் பேசியவரல்ல. ஆனால், புலிகள் சென்னையில் பத்மநாபாவையும் தோழர்களையும் கொலை செய்ததைத் தொடர்ந்து கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜீவ் காந்திப் படுகொலையைத் தொடர்ந்து தி.மு.க. குறிவைத்துத் தாக்கப்பட்டது. கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாதவாறு தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது.

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களாக விளங்கிய செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற எல்லோருடனும் கலைஞருக்கு எப்போதுமே நல்லுறவு இருந்தது. பிரபாகரன் ஒரு முறை கலைஞருக்கு உதவிகோரி எழுதிய கடிதத்தில் எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் என எழுதியிருந்தார்.

பிரபாகரனின் 23ஆவது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் போல வெறுமனே புலிகளிற்கு மட்டுமான நட்புச் சக்தியாகவோ ஈழப் பிரச்சினை குறித்துக் கிஞ்சிற்றும் அறிவில்லாதவராகவோ கலைஞர் இருக்கவில்லை. அவர் ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்திருந்தார். வைகோ அல்லது நெடுமாறன் போல அவர் வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராக இருந்ததில்லை. புலிகளைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கச் செய்தார். எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல்துறை தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார். அப்போது தன்னுடைய திரைப் படங்களில் ஈழத்துக்கு ஆதரவான கூறுகளைக் கலைஞர் பொதித்துவைத்து எழுதினார். தமிழகத்தின் கட்டப்பொம்மனுக்கு இணையாக ஈழத்தில் பேசப்படும் பண்டாரவன்னியனை வைத்து பாயும்புலி பண்டாரவன்னியன் எனக் காவியம் எழுதினார்.

கலைஞர் 1985இல் உருவாக்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) ஈழத்தமிழர்களிற்காக பல்வேறு போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியது. ஆன்டன் பாலசிங்கம் உட்பட மூன்று போராளி இயக்கத் தலைவர்களை இந்தியாவிலிருந்து நாடு கடத்த மத்திய அரசு முடிவெடுத்தபோது கலைஞர் அதை உறுதியாக எதிர்த்துநின்று டெசோ அமைப்பின் மூலம் போராடினார். பிரமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவேன் என்றார். மத்திய அரசு உத்தரவை திரும்பப் பெற்றது. 1986 மேயில் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாட்டை நடத்தினார். வாஜ்பாய், என்.டி.ராமராவ் என அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு அது. இம்மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும்  கிடைக்கும் வரை போராடுவது

போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது

தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது

இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது

என்பவையாக இருந்தன.

இலங்கைக்கு 1987இல் சென்ற இந்திய அமைதிப் படையினர் பொதுமக்கள் மீது நிகழ்த்திய கொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் பொதுமக்களின் குடியிருப்புகள் மீதான விமானத் தாக்குதல்களையும் கலைஞர் உடனுக்குடன் கண்டித்தவாறேயிருந்தார். இதன் உச்சக்கட்டமாக 1990 மார்ச் இந்திய அமைதிப் படை நாடு திரும்பியபோது முதலமைச்சர் என்கிற ரீதியில் அதை வரவேற்க வேண்டிய கடமை கலைஞருக்கு இருந்தது. ஆனால், கலைஞர் அந்தக் கடமையை மறுத்தார். அப்போது கலைஞர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் ‘தேசத்துரோகி’ என்பதற்கு ஒப்பாக இருந்தது. அதற்கெல்லாம் கலங்காமல் தன் முடிவில் உறுதியாக இருந்தார் கலைஞர்.

இந்திய அமைதிப்படையை வரவேற்க செல்லாத முதல்வர் கலைஞர் இரகசியமாக ஆன்டன் பாலசிங்கத்தைச் சென்னைக்கு வரவேற்றார். அவரோடும் வட – கிழக்கு மாகாணசபை முதல்வர் வரதராஜப்பெருமாளோடும் பேசி தமிழ்ப் போராளிகளிடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர முயற்சித்தார். அது நடக்கவில்லை. இதன் பின்பு நடந்தது ராஜீவ் கொலை. இதற்குப் பின்பு இந்திய அரசு மட்டுமல்ல இந்திய மக்களும் ஈழப் போராளிகளை வேறு மாதிரிப் பார்க்கத் தொடங்கினார்கள். புலிகளை அழித்துவிடுவது என்கிற முடிவில் இந்தியா மட்டுமல்ல பல்வேறு சர்வதேச நாடுகளும் உறுதியாக இருந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து புலிகள் சர்வதேச அளவில் நெருக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 30 நாடுகளில் புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. வெறுமனே ஒரு மாநிலக் கட்சியின் தலைவரான கலைஞரின் கைகளை மீறிச் சம்பவங்கள் நடந்தன.

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்ததுவரை கலைஞர் இந்த யுத்தத்தை நிறுத்த தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தனர். கலைஞர் மெரினா கடற்கரையில் சில மணிநேரங்கள் நடத்திய யுத்த நிறுத்தம் கோரிய உண்ணாவிரதம் கேலியானது எனச் சிலர் சொல்வதை நான் ஏற்பதாக இல்லை. அவர் உண்ணாவிரமிருந்தபோது இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது. அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரிடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

கலைஞர் தமிழ்த் தேசியவாத முகம்கொண்ட பிற தமிழகத் தலைவர்களைப் போல புலிகளை விமர்சனமின்றி வழிபட்டவரல்ல. தீவிர புலி விசுவாசம் காட்டி அரசியல் செல்வாக்குப் பெற வேண்டிய நிலையில் அவரிருக்கவில்லை. அவரது அரசியல் பலமும் அவரது கட்சியின் கட்டமைப்பும் இந்த மொண்ணைத்தனமான தமிழ்த் தேசியத்திலிருந்து வேறானவை. ஜனநாயக அரசியலை அடிப்படையாக்கொண்டவை.

திராவிட இயக்கத்தில் தமிழ் இலக்கியத்தில் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் தலைமகனாகக் கலைஞர் கருதப்படுவது போல ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உடன் இருந்தவராக எங்களது அரசியலிலும் கலை – இலக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவருமாகவே கலைஞரைக் காலம் குறித்துக்கொள்ளும்.

ஷோபாசக்தி

 

http://maatram.org/?p=7082

Share this post


Link to post
Share on other sites

பத்மநாபா படுகொலையின்போது கருனாநிதி முதல்வர், 

செல்வம் அடைக்கலநாதனை அவர் இன்னுமொருவருடன் சந்திக்கும்போது பத்மநாபா கொலைசெய்யப்பட வாய்ப்பிருக்கு அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லவும் என அறிவுறுத்தியதாக அறியப்படுகிறது.

அவர் முதல்வராக இருக்கும்போது கியூ பிரிவு உள்வுத்துறை அவரது இலாகாவின் ஒரு அங்கமாக இருக்கும்போது சென்னையின் முக்கிய பகுதியான சூளைமேட்டுப்பகுதியில் வன்முறை நட்தும் என அறிந்திருந்தும் அவர்களுக்கு மேலதிகமான பாதுகாப்புக்கொடுக்காது அல்லது அவர்கள்ப் பாதுகாக்கும்வண்ணம் ஏதோ ஒரு பொய் வழக்குப்போட்டு தற்காலிகமாகச் சிறையிலடைத்தாவது அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்கள் கொலை செய்யப்படுவதால் காய்நகர்த்தல்களை இலகுவாக்கலாம் விடுதலைப்புலிகள்மீதான பிடியை இறுக்கலாம் ஏனைய ஈபிஆர் எல் எப் தோழர்களை கண்டமேனிக்குக்கையாளலாம் எனும் மத்திய அரசின் உளவுத்துறைக்கு கருனாநிதி கைகொடுத்துநின்றதுதான் உண்மை.

கையாலாகத தன்மை என்பதைவிட தனது குடும்ப உறுப்பினர்களைக்காப்பாற்றவே இருமணிநேர உண்ணாவிரதநாடகம் அவ்வேளையில் கலாநிதிமாறனது கனிமொழியினதும் ராஜாவினதும் தலைகளுக்குமேல் கத்தி தொங்கியதை யாரும் மறந்துவிடவில்லை. கருனாநிதி ஆரம்பகாலத்தில் தமிழ் உணர்வை எனக்கும்தான் ஊட்டியவர் அதற்காக அவரை நாம் இறுதிகாலத்தில் சோணியாகாந்தியுடனும் இந்திய நடுவண் அமைச்சுடனும் உளவுத்துறையுடனும் சேர்ந்து செய்த இனத்துரோகத்தை என்னால் மறந்துவிடமுடியாது. 

நாம் விழிக்கமுதலே ஆரம்பகாலங்களிலிருந்தே தமிழர்க்கெதிரான இந்திய நடுவண் அரசின் காய்நகர்த்தல்கள் ஆரம்பித்துவிட்டது.

இந்திய அமைதிப்படையின் திரும்பிவரல் என்பது இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானதாகக் கருதப்பட்டது, நான் சென்னையில் வாழ்ந்தகாலத்தில் இந்திய உளவுத்துறையான ராவின் அதிகாரி எனது நண்பர் ஒருவருக்குக்கூறிய விடையம் இந்த அவமானத்துக்காக விடுதலைபுலிகள் அழிக்கப்படுவார்கள் அது உடனடியாக நடக்காதுவிட்டாலும் காலப்போக்கில் நடந்தேதீரும் இந்தியா, இந்திய நிர்வாகம் என்பது இன்றோடோ நாளையோடோ காலவதியாகிவிடும் ஒரு பண்டமில்லை அங்கீகரிக்கபட்ட ஒரு நாட்டின் நிர்வாகம் அரசியல்வாதிகள் புலிகளுக்குச்சார்பானவர்களாகவிருந்தால் அவர்களைப் புறந்தள்ளி விடுதலைப்புலிகளை அழிக்கும் நடவடிக்கை நடந்தேதீரும் என இராஜீவ் காந்தி கொலைக்குப்பின்னதான ஒரு சந்திப்பில் கூறியிருந்தார்  இது விடுதலைப்புலிகளுக்குச் சொன்ன ஒரு செய்தாகவும் இருக்கலாம் புலிகளும் இதை உணர்ந்தே இருந்தனர் அச்செய்தியை சாடைமாடையாக அவர்களுக்கு உணத்திய சம்பவமும் நடந்தது அவர்களது எண்ணத்தை என்னால் அறியமுடியவில்லை.

கருனாநிதியால் இறுதிப்போரில் எதுவும் கொள்கைரீதியான மாற்றத்தைக்கொண்டுவரமுடியாவிடினும் வங்கதேசத்தின் பிரிவினையின்போது ஜோதிபாசுவின் அறைகூவல் போன்றதொரு பிரளயத்தை அவரால் தமிழ்நாட்டில் நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் பிள்ளைப்பாசம் அவரது ஈழக்காதலை அவர் நடாத்திய செம்மொழி மாநாடுபோலவே புஸ்வானமாகியது.

Edited by Elugnajiru
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, ragunathan said:

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு கலைஞர் காரணமில்லை. அவருக்கு அந்தத் தேவை எப்போதுமே இருந்ததில்லை. அவரது விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ முள்ளிவாய்க்கால் நடந்துமுடிந்தது என்பதுதான் உண்மை. ஏனென்றால், சோனியா தலமையில் நடந்துகொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தியோ அல்லது செல்வாக்கோ, அன்று எவருக்குமே இருந்திருக்காது என்பது திண்ணம்.

ஆதங்கம் என்னவென்றால், அவர் முயற்சித்திருந்தால் ஏதாவது வித்தியாசமாக நடந்திருக்குமா என்பதுதான். சோனியாவுக்கு எழுதிய கடிதங்கள், இறுதிநேரத்தில் கலைஞர் கூறிய விடயங்கள், மூன்றுமணிநேரம் இருந்த உண்ணாவிரதம், கனிமொழிக்காகவும், ராஜாவுக்காகவும் தில்லியில் போய்க் கூடாரமடித்து அமைச்சர்ப் பதவி கேட்டு அவர் ஆடிய சதுரங்க ஆட்டங்கள், தமிழக மக்களின் உணர்வு எழுச்சியை மூடிபோட்டு மூடி அவர் செய்த திருகுதாலங்கள் என்பவைதான் அவர்மேலான விமர்சனங்களுக்குக் காரணமாகின்றன. 

சகோதரப் படுகொலைகள் பற்றி அவர் பேசிய விடயங்களில் உண்மை இல்லாமல் இல்லை. இயக்கங்களுக்குள் உள்முரண்பாடுகள், வேற்றியங்களுடனான மோதல்கள் என்று எம் கண்முன்னாலேயே நடந்தவைதானே? ஆனால், சகோதரப் படுகொலைகள் என்று வரும்போது கலைஞரும் சில நேரங்களில் அவற்றுக்கான காரணங்களில் ஒன்றாக வந்துபோயிருக்கிறார். ஆனால், அவரினால்த்தான் சகோதரப்படுகொலைகள் நடந்தன என்பதையும் ஏற்பதற்கில்லை.

அவரை விட்டு விடலாம். இறந்துபோனவர் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் வந்துவிடப்போகிறது?

ஈழத்தமிழர்கள் எங்கெங்கெல்லாம் தங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்கவேண்டுமோ அங்கெல்லாம் தங்களின் அதிமேதாவித்தனங்களை திருப்தியாக நிரூபிப்பதில் வல்லவர்கள். தருணம் பார்த்திருந்து பாய்ந்து சென்று தங்களின் பைத்தியக்காரத்தனங்களை பட்டம் விட்டு காண்பிப்பவர்களில் விண்ணர்கள். தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்னமே உண்டியலை கண்டுபிடித்துவிட்ட விஞ்ஞானிகள் என்ற தரம்வாய்ந்த தங்களது மூளையால் தற்போது அரசியல் செய்யப்போகிறோம் என்று புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து செய்யும் அலப்பறைகள் எல்லாவற்றையும்விட "எக்ஸ்ட்ரா" எடுப்பானவை!

அண்மையில் கருணாநிதி அவர்களின் இறப்பின்போது ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர் காண்பித்த 'சாடிஸ' அணுகுமுறையும் அதுபோன்றதே. மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்திகளை கொலை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற வெறியோடு அலைபவர்கள்போலத்தான் கருணாநிதியின் சாவின்போது இவர்கள் கரகமெடுத்து ஆடினார்கள். மறந்தும் நாங்கள் இந்தியாவின் பக்கம் போய்விடக்கூடாது என்ற நோக்கத்தோடு உரலை போட்டு இடித்தார்கள். 

இந்த கூத்துக்கள் அனைத்தும் தனிநபர் கருத்துக்களாக - சமூக வலைத்தளங்களில் - வெளியிடுவது என்பது வேறு, ஒரு அமைப்பாக - அதிகாரவர்க்கமாக அணுகுவது என்பது வேறு!

கருணாநிதியின் இறப்பை எள்ளி நகையாடியதும் அதன் வழி தமிழகத்தில் தி.மு.க. என்ற பலம் வாய்ந்த கட்சியின் - லட்சக்கணக்கான - ஈழத்தமிழர்களின் மொத்த சனத்தொகையை விட அதிகமான -  தொண்டர்களை சீண்டி வேடிக்கை பார்க்க முயற்சித்ததும் எவ்வளவு பெரிய தவறோ - 

அதற்கு சமனான தவறு கருணாநிதியின் இறப்பிற்கு தமிழ் கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் என்று அறிவித்துக்கொண்டிருக்கின்ற எவையும் ஒரு அஞ்சலி அறிக்கையைக்கூட விடுக்காதது. சம்பந்தர் மாத்திரம் கவலை என்று எங்கோ ஒரு மூலையில் செய்தி வந்தது. அவ்வளவுதான். 

நாலு வருடமாக இருபது லட்சம் ரூபா அரச பணத்தில் விமானத்தில் பறந்துகொண்டிருந்த விக்னேஸ்வரன் ஐயாவாவது, ஒரு பிராந்திய முதலமைச்சராக இன்னொரு பிராந்திய முதலமைச்சரின் இறுதி நிகழ்வுக்கு போய் வந்திருக்கலாம். தனிப்பட்டளவில் பிடிப்பு இல்லாவிட்டாலும், "இந்தா வாறான் - அந்தா வாறன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அவரது புதிய அரசியல் முஸ்தீபுக்காவது இந்தப்பயணம் கொஞ்சம் பிரயோசனமாக இருந்திருக்கும். தமிழகத்தோடு அவருக்கும் ஒரு புதிய உறவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், எங்களுக்கு உதுக்கெல்லாம் எங்க நேரம்? தீர்மானம் போட்டு போட்டே நாரி முறிஞ்சுபோட்டுது. ஒன்றும் நடக்கவில்லை. செல்வம் அடைக்கலநாதன் மாத்திரம் போய் மனோகணேசனுக்கு பின்னுக்கு பம்மிக்கொண்டு நின்றுவிட்டு வந்தார்.

இது இவ்வாறிருக்க - 

இங்கு ஆஸ்திரேலியாவில் தமிழக தமிழர்கள் கருணாநிதியின் இறப்பை ஒட்டி நினைவு நிகழ்வொன்றை அண்மையில் நடத்தினார்கள். சிட்னியில் மாத்திரம்தான். மெல்பேர்னில் இல்லை. சிட்னி நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து பொது இடங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்களை ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு இயங்குகின்ற "கும்பல்" ஒன்று போய் கிழித்து எறிந்துவிட்டு வந்திருக்கிறது. இதே கும்பலின் மெல்பேர்ன் கிளைதான் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மரணவீட்டில் வந்து "எதிரொலி" பத்திரிகையையும் தூக்கி எறிந்தது என்பது வேறுகதை.

ஆஸ்திரேலியாவில் தற்போது தமிழக தமிழர்கள் பல முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துவருபவர்கள். சமூக மட்டத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருபவர்கள். ஈழத்தமிழர்கள் மட்டத்திலிருந்து பல அமைப்புக்கள் அவர்களோடு இணைந்து செயற்படுகிறார்கள். மொழியாலும் இனத்தாலும் ஒன்றுபட்டவர்களாக பல முன்னேற்றகரமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். முக்கியமாக, இந்திய - ஆஸ்திரேலிய உறவெனப்படுவதும் முன்னெப்போதிலும் இல்லாதவாறு தற்போது வியாபித்து வருகிறது. இந்திய முதலீடுகள் - இந்திய குடிவரவாளர்கள் என்று எல்லாவற்றிலும் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்த திடீர் இறுக்கத்தை பொருளாதார ரீதியான உறவை பலப்படுத்தும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல், சீனாவை தள்ளிவைப்பதற்கான கருவியாகவும் ஆஸ்திரேலியா பயன்படுத்துகிறது.

இன்றையதினம் வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி - 

சீனர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இரகசியமாக மிகப்பெரிய தடையை போட்டுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு, அதிக இந்தியவர்களை ஆஸ்திரேலியர்களாக ஏற்றுக்கொள்வதில் அக்கறை காண்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் 1590 சீனர்களை மாத்திரம் ஆஸ்திரேலியர்களாக ஏற்றுக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு, இதே காலப்பகுதியில் 6500 இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமையை வழங்கியிருக்கிறது.

ஆக, ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த இந்திய சமூகமானது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய பலம். அரசியல் - இராஜதந்திர வெற்றிடத்தோடு அல்லாடிக்கொண்டிருக்கிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தோடு இணைந்து இயங்குவதுதான் இப்போது இருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பும்கூட. அவர்களது அமைப்புக்களோடு இணைந்து அரசியலை அணுகுவது, சமூக கட்டமைப்புக்களை விஸ்தரிப்பது என்பவை மிகவும் ஆரோக்கியமாக அமையக்கூடியது. ஒரு பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டில் அதைத்தான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் எதிர்பார்க்கின்றன. ஒற்றைப்படையாக - தூய்மைவாத கொள்கைகளோடு காவடியாடுகின்ற எவரையும் ஆஸ்திரேலியா திரும்பியும் பாராது என்பது இங்குள்ள சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், மக்கள் அமைப்பு என்று கூறிக்கொண்டு என்று இன்னமும் கொத்து ரொட்டிக்குள் கோழியை பிடித்துப்போட்டுக்கொண்டிருக்கும் சில மங்குஸ்தான் மண்டைகளுக்கு இது எங்கே புரிகிறது. சாண் ஏற முழம் சறுக்குவதுபோல, தமிழ் சமூகம் ஒரு பக்கத்தால் தனது பல்லின - கலாச்சார உறவுகளை விஸ்தரித்துக்கொண்டு வர, இன்னொரு பக்கத்தால் கோமணத்தை கழற்றிக்கொண்டு ஓடுவதிலேயே "குறி"யாக நிற்கிறது. 

இவர்களை சாத்தானாலும் காப்பாற்ற முடியாது.
கடவுளாலும் காப்பாற்ற முடியாது!

அவ்வளவுதான்.

ப. தெய்வீகன் 

ஆய்வு பத்தியாளர் அவுஸ்திரேலியா 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

 

ஈழதமிழருக்கு,

நிகழ்காலமும் எதிர்காலமும் கடந்த காலத்தைபற்றி பேசுவதை தவிர வேறெதையும் விட்டுவைக்கவில்லை.

 

 

Share this post


Link to post
Share on other sites

ka3hrsfast.jpg

 

karuna+3hr+fastimg.jpg

 

Ãhnliches Foto

 

Ãhnliches Foto  

Ãhnliches Foto

 

இந்தப் பதிவில்,   கருணாநிதிக்கு... வெள்ளை அடிப்பவர்கள்  புரிந்து கொள்ள வேண்டியது,
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், அவரின்   மூ ன்று மணித்தியால  பம்மாத்து  உண்ணாவிரதம் மட்டுமே...
கலைஞர் ஆதரவாளர்களாக... இருந்த எங்களையும்,  அவரின் மீது... வெறுப்பை கொண்டு வர வைத்தது.
எம்  இனத்துக்கு... துரோகம் செய்த ஒருவரை,    என்னால்... வாழ் நாளில் மன்னிக்க முடியாது. 

சுத்தமான  காற்று வாங்கும்... மெரினா  கடற்கரையில், 
கருணாநிதியின்... மூன்று மணித்தியால உண்ணா விரதத்துக்கு, 
மூன்று   "எயார் கண்டிஷன்"  கருவிகள்   இணைக்கப் பட்டுள்ளதை, கவனிக்கவும்.
இதில்,  இருந்து...  அறிவது என்ன வென்றால்...
மக்கள் எல்லாம்... முட்டாள்  பயலுகள்,   என்ற   நினைப்பு.  ❗

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

தெய்வீகன் 

ஆஸ்டேலியாவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்தது அவர்களில் தமிழர்கள் கணிசமானாலும் வேலைக்காகாது காரணம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்நாட்டுத்தமிழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களோடு சமாந்தரமாகப்பயணிப்பவர்கள் இல்லை பக்கத்துவீட்டில் வாழ்ந்தாலும் கதைபேச்சுக்கிடைக்காது. 

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈழத்தமிழர்களில் அனேகர் அகதியாக வந்து செற்றிலாகியவர்கள் எனவே எம்மைப்பற்றி நினைக்கிறார்கள் அதுதான் உண்மையும்கூட தமிழ் அரசியல்சார்ந்த நிகழ்சி மாத்திரமல்ல பொதுவாக பொங்கல் தீபாவளி போன்ற நிகழ்சிகளிலேயே ஈழத்தமிழர்களுடன் ஒன்றுகூடமாட்டார்கள்.

அபராஜிதன் தமிழ்நாட்டில் இப்போது ஈழத்தமிழர்களுக்கு இரண்டாம் இடம்தான் காவல்நிலையத்தில் சொல்லவே வேணாம். 

ஈழப்போரின் ஆரம்பகாலங்களில் அதாவது திமுக மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைவரும் எமை ஆதரித்த எண்பதுகளில்  திமுகவின் மேடைப்பேச்சாளர் நன்னிலம் நடராஜன் அவர்கள் ஒரு மேடைப்பேச்சில் அப்போது அதிகாரத்திலிருந்த எம்ஜிஆர் அரசால் கொடுக்கப்பட்ட இலவச சேலையை விமர்சனம் செய்யும்போது.

"அந்தச்சேலையை எந்தப்பொம்பிளை கட்டுவாள் ஒரு சிமெண்டுக்கலரில் சகிக்கமுடியாத நிறம் அதைக் கட்டிக்கிட்டு பொண்டாட்டி படுத்துக்கிடந்தால் யாரோ சிலோன் அகது படுத்திருக்கிறாள் என ஓரமாப் போய் படுத்திடுவான்" புருசன் என கூறியது இப்போதும் எனது காதுகளில் ஒலிக்கிறது.

ஆக நாம் எவ்வளவு உயரப்பறந்தாலும் அவர்களுக்கு நாம் ஊர்க்குருவிதான் அப்படி இருக்கையில் புலம்பெயர்தேசங்களில் வாழும் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் ஆதரவை நாம் இழப்பது என்பது கற்பனையே.

தெய்வீகன் யாருமே முத்துவேலர் மகன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அனைவரும் மங்குஸ்தான் மண்டையர்கள் ஆகார். ***

மீண்டும் மீண்டும் கூறுகிறேன் இனிமேல் யார் நினைத்தாலும் தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டின் சகோதரர்களால் எங்களுக்கான போராட்டத்தில்  எங்கள் உரிமைக்கான போராட்டத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடமுடியாது அதற்கான கதுவுகள் எப்போதோ மூடியாயிற்று அதாவது முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு அடுத்துவந்த ஓரிரு வருடங்களிலேயே. 

அந்தவேளையில் கருனாநிதி மிகப்பெரிய நம்பிக்கை அந்த நம்பிக்கையில் அவரே வாய்க்கரிசிபோட்டுவிட்டர். இனிமேலும் அவரை போற்றப் புகழ தூற்ற எதுவித தேவையும் ஈழத்தமிழர்க்கு இல்லை.

எமது சிலுவைகளின் பாரத்தைச் சுமந்து நாமே பயணிக்கவேண்டும் அது கல்வாரிமலையா அன்றேன் காததூரத்தில் தெரியும் விடுதலைச் சுடர்நோக்கியா என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் .

அதுவரை தூய்மைவாதத்தை நாம் கையிலெடுக்கவேண்டுமெனில் அதையும் எடுத்தேயாகவேண்டும். இதன் காரணமாகவே அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கைவந்தபோது தமிழர்தரப்பிடம் 

"நீங்கள் ஏன் இலங்கைத்தமிழர் எனும் பெருமைகொள்கிறீர்கள்" 

எனக் வினவவைத்தது. 

 

இவண்,

மங்குஸ்தான் மண்டையன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Ãhnliches Foto

அம்மாடி... "மங்குஸ்தான் மண்டையன்"  என்றெல்லாம்  பெயர் வைப்பார்களா.... :grin:
எப்படி என்றாலும், இந்தப் பதிவுக்கு பொருத்தமான பெயர். நன்றாக உள்ளது. ?

Share this post


Link to post
Share on other sites

கருணாநிதிக்காக வரிந்துகட்டிக்கொண்டு வக்காளத்து வாங்குபவர்கள் அவரது ஊழல் அரசியலையும் இந்த இடத்தில் விமர்சனம் செய்ய தவறுவது ஏன்? கருணாநிதியை ஆதரிப்பதால் அவரது ஊழலையும் ஆதரிப்பதாக தானே எடுத்துக்கொள்ளவேண்டும்.


தனது அதாள பாதாள ஊழலை மறைக்கத்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவ்வப்போது ஈழ அரசியலுக்கும் சாமரை  வீசினார் என்பது என கருத்து.

இப்படிக்கு...
கருக்குமட்டை மண்டையன் :grin:

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, அபராஜிதன் said:

ப. தெய்வீகன் 

ஆய்வு பத்தியாளர் அவுஸ்திரேலியா

இதன் உண்மையான மூலம் எது சார் ?

முகநூலில் வந்தது என்றால் நாங்களும் எதிர் முகாம் இதே போல் ஆயிரம் பேர் கருணாநிதியை திட்டி எழுதியதை  இணைப்பம் அது நிழலி போன்றவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கருணாநிதியின் பேச்சைக்கேட்டு தான் எங்கள் தமிழ் இயக்கத்தலைவர்கள் சகோதர சண்டையை தொடங்கினார்கள் எனில் அவர்கள் எல்லாம் உஷார் மடையர்கள் அவர்களை நம்பிய எங்களைத்தான் செருப்பால் அடிக்கணும்,

11 hours ago, பெருமாள் said:

இதன் உண்மையான மூலம் எது சார் ?

முகநூலில் வந்தது என்றால் நாங்களும் எதிர் முகாம் இதே போல் ஆயிரம் பேர் கருணாநிதியை திட்டி எழுதியதை  இணைப்பம் அது நிழலி போன்றவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா ?

செய்திகளின் இணைப்புக்கு தான் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகாமல் இருப்பதற்கு மூலம் தேவை, இது செய்தி அல்ல, கருத்தாகவே இணைக்கப்பட்டுள்ளது.. உங்களிற்கு ஒவ்வாத கருத்துகள் வந்த உடனே மூலம் எங்கே என்று கேட்கிறீர்கள்...

வார்டன் ன்னா அடிப்பம் கருணாநிதி என்டா  எதிர்ப்பம் என்ட மைன்ட் செட் ல இருந்து வெளில வந்து கருத்தை கருத்தாக  பாருங்க.. 

என்னிடம் மூலம் கேட்பதற்கு நீங்கள்  மட்டு/ நிர்வாகம் இல்லை ?

பிடிக்கலை அல்லது  abuse ஆகஇருப்பின் ரிப்போர்ட் அடியுங்க, இல்லாட்டில் நிர்வாகத்திற்கு தனிமடல் போடுங்க உங்களிற்கும் நிர்வாகத்திற்கும் அல்லது நிழலிக்கும் இடையில்இருக்கும் பிரச்சினைக்கு நான் என்ன ஊறுகாவா...

 

மற்றது ஸார்.....மோர் இன்னும் புளிக்க தொடங்கல..:D

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, குமாரசாமி said:

கருணாநிதிக்காக வரிந்துகட்டிக்கொண்டு வக்காளத்து வாங்குபவர்கள் அவரது ஊழல் அரசியலையும் இந்த இடத்தில் விமர்சனம் செய்ய தவறுவது ஏன்? கருணாநிதியை ஆதரிப்பதால் அவரது ஊழலையும் ஆதரிப்பதாக தானே எடுத்துக்கொள்ளவேண்டும்.


தனது அதாள பாதாள ஊழலை மறைக்கத்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவ்வப்போது ஈழ அரசியலுக்கும் சாமரை  வீசினார் என்பது என கருத்து.

இப்படிக்கு...
கருக்குமட்டை மண்டையன் :grin:

போராட்ட தோல்விக்கும் புலிகளின் வீழ்சசிக்கும் பல ஆயிரம் காரணிகள் இருந்தும் கருணாநிதி உதவி செய்யாதது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதுபோல் ஒவர்  பில்டப் கொடுப்பதும் எம்மவர்கள் தமது தவறுகளை மறைக்கும் தந்திரம் தான்.

Share this post


Link to post
Share on other sites

பட்டுச் சேலை +பட்டு வேட்டியை யார் உரவினார்கள் என்று பிடுங்குப் பட்டிக்கொன்டிருக்க அங்கே கோவனமே போகுதாம்.இலலை போகுது எமது கண்ணுக்கு முன்பே.முதல் அதைப் பாருங்கள் சகோதரங்கள்.??

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, tulpen said:

போராட்ட தோல்விக்கும் புலிகளின் வீழ்சசிக்கும் பல ஆயிரம் காரணிகள் இருந்தும் கருணாநிதி உதவி செய்யாதது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதுபோல் ஒவர்  பில்டப் கொடுப்பதும் எம்மவர்கள் தமது தவறுகளை மறைக்கும் தந்திரம் தான்.

 ஈழத்தமிழர்கள்  கருணாநிதிதான் போராட்டத்தோல்விக்கு முழுக்காரணமும் என எவரும் நினைக்கவில்லை என நான் நினைக்கின்றேன். இவர் கடைசி நேரத்தில் செய்த உண்ணாவிரத திருகுதாளங்கள்  தான்  அனைவரினது  வெறுப்புக்கும் காரணம். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, குமாரசாமி said:

 ஈழத்தமிழர்கள்  கருணாநிதிதான் போராட்டத்தோல்விக்கு முழுக்காரணமும் என எவரும் நினைக்கவில்லை என நான் நினைக்கின்றேன். இவர் கடைசி நேரத்தில் செய்த உண்ணாவிரத திருகுதாளங்கள்  தான்  அனைவரினது  வெறுப்புக்கும் காரணம். 

இதுதான் சரி. அவரால் 2009 இல் எதுவுமே செய்திருக்க முடியாது, ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம், ஆனால் அவரும் செய்யவில்லை, செய்ய முயற்சித்தவர்களையும் விடவில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி  மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார்.  அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர்.  அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம்.   மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர். மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை.  இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை. கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர்கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், 'ஆறுமுகன்' என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான்.  1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது.  அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது. 'தொழிற்சங்கம்', 'அரசியல்' என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான்.  இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது.  அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும். அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன.  வரலாறு சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன. 1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார். இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார்.  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார். முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார்.  2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார்.  நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார். 2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார். மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை - கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார். அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார். 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பசுக்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார். பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார். இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது.  இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார். ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரண்-சாய்ந்துவிட்டது/91-250996
  • பொத்துவில் தமிழர் பிரதேசம்.. முழுச் சிங்கள பெளத்த மயம். 
  • இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு  எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம், வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்
  • யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.   https://www.virakesari.lk/article/82905
  • டென்சில் கொப்பேகடுவ இருந்து இவர் வரைக்கும் இதுதான் சொல்லிக்கிட்டு தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழர் நிலத்தில்.. சிங்கள மயமாக்கத்திற்கு இந்தக் கூச்சல் மிக அவசியம். உலகத்தை ஏமாற்ற.