Sign in to follow this  
Athavan CH

இந்தச் சிங்களவருக்கு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான வரலாற்றுப்புரிதல்

Recommended Posts

இந்தச் சிங்களவருக்கு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான வரலாற்றுப்புரிதல் தற்போதைய தமிழ் தலைமைகள் எனக்கூறும் தறுதலைகளுக்கு இல்லையே.
இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருந்துகொண்டு புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லும் சம்பந்தர் ஐயா எங்கே?
நீங்கள் பேசவேண்டியதை யாரோ ஒரு சிங்களப் பேராசிரியர் வெளிநாட்டவர்களுக்கு விளக்கப்படுத்துகிறார்.

 

 

fb

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தமிழனை தமிழன்தானே இளிச்சவாய் ஆக்குவது தமிழ்நாட்டிலை தமிழை சொல்லியே பத்து தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை ஊழல் மூலம் சேர்த்துவைத்து விட்டு போயிற்றார் இங்கும் பிரபாகரன் பெயரை சொல்லிக்கொண்டு தேர்தலில் வெண்டு விட்டு சர்வதேசம் நியாமாய் தரவேண்டிய போர்குற்ற விசாரணைகளில் இருந்து இன அழிப்பு இராணவத்தை தப்ப வைத்து உள்ளனர் சம்சும் கூட்டம் .எவ்வளவு கோடி கொமிசன் என்பதை காலம் போட்டுடைக்கும் .

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” கொரோனா வைரஸ் பிரச்சினையால் தகுதியான முறையில் இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவ்விடயம் கவலையளித்தாலும் நாட்டின் நலனும், பாதுகாப்பும் எமக்கு முக்கியம். அப்பா இருந்திருந்தால் அவரும் இதனையே ஆசைப்பட்டிருப்பார். எனவே, கொரோனா பிரச்சினை எல்லாம் முடிவடைந்ததும் நீங்கள் எல்லாம் எதிர்ப்பார்க்கும் வகையில் ஒரு மாபெரும் நிகழ்வு கட்டாயம் நடத்தப்படும். மலையக அபிவிருத்தி சம்பந்தமாக எனது தந்தை கனவுகள் கண்டார். அந்த கனவுகளை நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கின்றோம். குறிப்பாக கல்விக்கு முன்னுரிமை வழங்கினார். மலையக பல்கலைக்கழகம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தியிருந்தோம். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக அது நிச்சயம் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். எமது சமூகம் ‘கெத்தாக’ வாழும் வகையில் வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படும். அப்பா மரணிக்குள் நாளன்றுகூட ஆயிரம் ரூபா பற்றிதான் கதைக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் சந்தோசமாகவே வீடு திரும்பினோம். வீட்டில் நானும், தந்தையும் சிரித்து பேசிக்கொண்டிருந்தோம். ஜீவன் என்றதும் திரும்பி பார்த்ததும், பெருமூச்சிவிட்டார். அவரை சென்று பிடித்தேன். அவர் கண்களில் முதற்தடவையாக ‘என் மக்களை விட்டு போகின்றேன்’ என்ற பயம் தெரிந்தது. நானும், அக்காவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தோம். இரண்டொரு நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. 26 வயதில் என் தந்தையை பிரிவேன் என தெரிந்திருந்தால் நான் தூங்கியிருக்கவே மாட்டேன். எனக்கு செந்தமிழ் பேசவராது. இது பற்றி அப்பாவிடம் சொன்னேன். குடும்ப உறுப்பினருடன் பேசுவதுபோல் மக்களிடம் கதை, ஏற்றுக்கொள்வார்கள் என்றார். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. அதற்குள் போய்விட்டார். எனது அனுபவம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். தந்தையிடம் கேட்டேன். முதுகில் குத்துவதற்குதான் அனுபவம்தேவை, சேவை செய்ய நல்ல மனது இருந்தால் போதும் என்றார். அந்த நம்பிக்கையில்தான் இவரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு என ஜீவன் தொண்டமான் ஆகிய நான் உறுதியளிக்கின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிட்டது என சிலர் நினைக்கின்றனர். இருட்ட பார்த்து பயப்படவேண்டாம். ஏனெனில் காலையில் சூரியன் உதிக்கும். சேவல் கட்டாயம் கூவும். – என்றார்.   http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தொழிலாளர்-காங்கி-6/
  • ஹஸ்பர் ஏ ஹலீம்_ இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள்  அதிகமாக வாழ்கின்றார்கள். இந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.   ஊடகங்களுக்கு அவர் இன்று (01)விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:   கிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பணியகத்திற்கான தவிசாளர் மற்றும் மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்கள்.   எமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.அமீர்தீன், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பை போன்றோர் எமது ஆட்சிக் காலத்தில் இதன் தவிசாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள். எவ்வித பிரச்சினைகளும் இன்றி இந்தப் பணியகத்தின் செயற்பாடுகள் இருந்தன.    தற்போது இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிப் பணியக தவிசாளர் மற்றும் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லை.    கிழக்கு மாகாணம் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் என்ற அடையாளச் சின்னம். இந்த அடையாளம் வேறு மாகாணங்களில் இல்லை. கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த இந்த அடையாளம் இப்போது அரசாங்கத்தினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.    அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடாகவும் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் செயற்பாடுகளுமாகவே இருந்து வருகின்றது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசாங்கத்துக்கு சார்பாக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரோ இதுவரை இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.   அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளினதும் அரசாங்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களினதும் நோக்கம் தாங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தவிர சமுகம் சார்பான இப்படியான பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி சமுக நலன் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதல்ல என்பதை பொதுமக்கள விளங்கிக் கொள்ள வேண்டும்.   திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எம்.எம்.தௌபீ, புல்மோட்டையைச் சேர்ந்த ஏ.பீ.தௌபீக் ஆகியோர் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர். தற்போது இந்த அடையாளம் நமக்கு இல்லை. இந்த அடையாளத்தை இந்த அரசாங்கம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. இதனை மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் https://www.madawalaenews.com/2020/06/blog-post_2.html
  • நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்   நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை.   சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.   அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.   அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/01104231/Vadivelu-sensational-complaint-on-actors-Manobala.vpf
  • சட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020 சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. மல்லாகம் சட்டத்தரணி ஒருவர், தனது கட்சிக்காரரிடம் நீதிமன்றில் சொந்தப் பிணைக்கு பண கட்டவேண்டும் என்று தெரிவித்து மேலதிகமாகப் பணம் அறவீடு செய்தார் என்ற விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அவ்வேளை அந்த விவகாரத்தில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் க.சுகாஷ் மீது குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் தனிநபர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதுதொடர்பில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக சட்டத்தரணி க.சுகாஷ், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய அதன் தலைவர் சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமூக வலைத்தளங்களில் 28.05.2020 திகதி எமது சங்கத்தின் செயலாளர் கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது தொடர்பிலும் சங்கம் கவலை கொள்கிறது. எந்தவொரு சட்டத்தரணியினது பெயர் குறிப்பிட்டும் எந்தவொரு முறைப்பாடும் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இதுவரை கிடைக்காத நிலையிலும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது கவலையானதும் கண்டித்தக்கதுமான செயலாகும். மேற்படி உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பான விடயப்பொருள் தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆழமாக ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறான ஏதேனும் விடயம் வெளிப்பட்டால் எமது சங்கம் அதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராகவுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது – என்றுள்ளது. #சட்டத்தரணி  #மோசடி  #சட்டத்தரணிகள்சங்கம்  #கவலை   http://globaltamilnews.net/2020/144067/