Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

அம்புலி மாமாவிற்கு என்னாச்சு ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீராத மர்மச் சுழலில் அம்புலிமாமா
------------------------------------------------

பல மொழிகளில் வெளிவந்த அம்புலிமாமாவின் பழைய இதழ்கள் அனைத்தும் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு, மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு 10,000 சதுர அடி கட்டடத்தில் தூசிபடியக் கிடக்கின்றன என்றால், குழந்தைகள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள யாருக்கும் ரத்தக் கண்ணீர் நிச்சயம் வரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது.  அவ்வளவு பெரிய சிக்கல். 

கடந்த எழுபது ஆண்டுகளாக எத்தனை குழந்தைகளின் கனவுகளை இந்த இதழ்கள் வடித்துத் தந்திருக்கும்? எத்தனை முறை வேதாளம் விக்ரமாதித்யனின் தோளில் இருந்து பறந்துசென்றிருக்கும்? அம்புலிமாவுக்கு ஏன் இந்த கதி?

அதற்கு முன்பாக ஒரு ஃப்ளாஷ் பேக்.

2008ல் நான் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஜியோதேசிக் என்ற நிறுவனம் அம்புலிமாமாவை புதுப்பிக்க முயன்றுகொண்டிருந்தது. 

அந்த புகழ்பெற்ற குழந்தைகள் இதழைத் துவங்கிய நாகி ரெட்டியின் மகன் பி விஸ்வநாத ரெட்டி 2007 மார்ச் வாக்கில் அம்புலிமாமாவின் 97 சதவீதப் பங்குகளை சுமார் 10.2 கோடி ரூபாய்க்கு ஜியோதேசிக் என்ற நிறுவனத்திற்கு விற்றிருந்தார். அப்போது அந்த இதழ் சிந்தி, சிங்களம் உட்பட 13 மொழிகளில் வெளியாகிக்கொண்டிருந்தது. 

கார்னகி மெலன் பல்கலையில் பணியாற்றிவந்த ராஜ் ரெட்டி பழைய இதழ்களை டிஜிட்டல் வடிவாக்கும் பணியைத் துவங்கியிருந்தார்.  ஐஐடி பாம்பேவில் படித்த ஜி.வி. ஸ்ரீகுமார் சந்தமாமாவுக்குப் புதிய வடிவைக் கொடுத்தார். 

இதையடுத்து ஜியோதேசிக் எல்லா மொழிகளுக்கும் புதிய ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தது. தமிழுக்கு என்னிடமும் வேறு சிலரிடமும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் அப்போது வாங்கிக்கொண்டிருந்த ஊதியத்தைச் சொன்னதும் அதோடு அந்தப் பேச்சுவார்த்தை முடிந்து போனது. 

அதே ஆண்டில், சந்தமாமாவின் ரசிகரான அமிதாப் பச்சன், இதழின் அறுபதாவது ஆண்டு மலரை வெளியிட்டார். ஒரு வெளிநாட்டு நிறுவனம் அதிலிருக்கும் கதைகளை அனிமேஷன் படங்களாக உருவாக்க முடிவுசெய்தது. ஆனால், புதிய நிறுவனம் பெரிதாக எதிலும் ஆர்வம் காட்டவில்லை. 2013 எல்லா இதழ்களுக்கும் சுபம் போடப்பட்டது. 

ஜியோதேசிக் நிறுவனம் பெரும் பிரச்சனைக்குள்ளாகியிருந்தது. உண்மையில் அந்த நிறுவனம், மென்பொருள் ஏற்றுமதி செய்வதாகக் கூறி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும் ஒரு நிறுவனமாக செயல்பட்டுவந்தது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. 

பராகுவே, ஹோண்டுராஸ், குவாதமாலா, சிலி, உருகுவே ஆகிய நாடுகளுக்கு மென்பொருட்களை ஏற்றுமதி செய்ததாகக் கூறி 812 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்கியதற்காக வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவை இந்த நிறுவன உரிமையாளர்களின் மீது தற்போது குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளன. கிரண் பிரகாஷ் குல்கர்னி உள்ளிட்ட மூன்று இயக்குனர்களும் தற்போது சிறையில் உள்ளனர். 

இப்போது நிகழ்காலத்திற்கு வந்தால், இந்த வழக்கை விசாரித்துவரும் பிரிவுகள் எதற்கும் இதன் மதிப்பு தெரியவில்லை. இவற்றை என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  இன்னமும் இந்த பிராண்டின் மீதும் அவற்றின் அறிவுரிமை சார் சொத்துக்கள் மீதும் பலரும் ஆர்வம்காட்டிவருவதாக அதன் முன்னாள் சிஇஓ கூறியிருக்கிறார். ஆனால், அதனை யாரும் வாங்குவது உடனடியாக நடக்கக்கூடிய காரியமில்லை. 

ஆனால், புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் இம்மாதிரி ஒரு கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் ஒரு நிறுவனம் எதற்காக அம்புலிமாமாவின் மீது ஆர்வம்காட்டியது என்பதுதான்.

 

 

முகநூல் -முரளிதரன் காசி விஸவநாதன்

Link to post
Share on other sites

சிறுவயதில் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பும்போது, வழியிலிருக்கும் கிராம நூலகத்தில் அம்புலிமாமா மற்றும் முத்து காமிக்ஸ் புத்தகங்களை உடனே படிப்பதுண்டு..!

எப்போ அடுத்த பதிப்பு வரும் என ஆவலோடு காத்திருப்பதும் வழக்கம்.  புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதில் எம்மில் எற்படுத்தியதே அம்புலிமாமா பதிப்புகள் தான்..

அதன் தற்போதைய நிலை கண்டு, மனம் வருந்தவே செய்கிறது.

Link to post
Share on other sites

சிறுவயது முதல் இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், இந்த "இரும்புக் கை மாயாவி" தான்..

ஏனோ தெரியவில்லை அப்படியொரு ஈர்ப்பு..

இத்திரியை படித்தவுடன், இளமைக்கால நினைவுகளினால், காலம் அப்படியே திரும்பாதா..? என்றொரு ஏக்கம்..! :(

 

mayavi

 

இன்றும் சில 'முத்து காமிக்ஸ்' புத்தகங்களை வீட்டில் சேமித்து வைத்துள்ளேன்..

விடுமுறையில் வீட்டிலிருந்தால், பழைய 'நேசனல் பனாசோனிக் 443'  ரெக்காடரில், டிடிகே காஸட்டில் பதிந்துள்ள பழைய பாடல்களையே இன்னமும் கேட்பதுண்டு..

659017709_1_644x461_radio-kasetowe-panas

 

அக்காலத்தில் எம்முடன் பழகிய பொருட்களை, இன்றும் பிரிய மனம் வருவதில்லை ! :)

 

Link to post
Share on other sites

m80mrr.jpg

அம்புலிமாமா திரியை படித்ததும் பால்ய நினைவுகளால், அப்போதைய காலகட்டத்தில் சிவகாசியிலிருந்து மாதமொரு முறை வெளியான 'முத்து காமிக்ஸ்' பற்றி இணையத்தில் தேடினேன்..

அதில் எனக்குப் பிடித்த மிகப் பிரபலமான "இரும்புக் கை மாயாவி" யின் 'நடுநிசிக் கள்வன்' என்ற முத்து காமிக்ஸ் புத்தகம் பற்றி சிறு தொகுப்பு இருந்தது..(இக்கதை மூன்று பாகமாக வெளிவந்தது..)

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அதில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள், மிக நேர்த்தியாக, தத்ரூபமாக காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்துவதுதான்..

(முத்து காமிக்ஸ் பதிப்பாசிரியர் அமரர். முல்லை தங்கராசனையும், உரிமையாளர் திரு.செளந்திர பாண்டியனும் இன்றும் எம்போன்றோர்களால் மறக்க முடியாதவர்கள்..)

ஆங்கிலத்தில் பிரபலமான "தி ஸ்டீல் க்ளா" என்பதன் தமிழ்ப் பதிப்புதான் இந்த "இரும்புக் கை மாயாவி"

இணையத்தில் துழாவியபோது, இக்கதை சுருக்கம் கிடைத்தது.. (பொறுமையாக படிக்கவும்..! :))

***

  10_thumb1.gif?imgmax=800  _thumb2.gif?imgmax=800 41.gif32.gif31.gif

5.gif  3.gif

‘நடுநிசிக் கள்வன்’ ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கும்..!

முதல் அத்தியாயம்:

ஸ்பெயின் நாட்டில் பிரபலமான காளை மாட்டுச் சண்டை ஒன்றில் கதை தொடங்குகிறது.

மாவீரன் ‘மாண்டிஜூமா’ காளையை அடக்க முயற்சிப்பதைக் கண்டு ஆர்ப்பரிக்கிறது மக்கள் கூட்டம்.

கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் ஒரு ரசிகர் ‘வெற்றி வீரனுக்குதான்! இல்லையா நண்பரே?’ என்கிறார். அதற்கு ‘காளைக்கே வெற்றி கிடைக்கலாமென்று கருதுகிறேன்’ என ஒருவர் பதிலடியளிக்கிறார். அசந்து போகிறார் ரசிகர். மேலும் சண்டையின் முடிவிற்கு காத்திருக்காமல் முக்கியப்பணி இருப்பதாகக் கூறிக் கிளம்பி விடுகிறார். யாரிந்த மர்ம மனிதன்...?

அவர்தான் ஈடிணையற்ற துப்பறியும் வீரரான ‘இரும்புக்கை மாயாவி’.

உலகெங்கிலும் பல்வேறு அருங்காட்சியகங்களிலிருந்து பழங்கால ‘அஸ்டெக்’ பொக்கிஷங்கள் நள்ளிரவில் களவு போகின்றன. ‘நடுநிசிக் கள்வன்’ ஐ பிடிக்க மாயாவி மாட்ரிட் வருகிறார். மாண்டிஜூமாவின் வீரத்தைக் கண்டு வியக்கும் மாயாவி தனது பணிக்குத் தயாராகிறார்...

தனது இரும்புக்கரத்தைப் பார்த்துப் புன்முறுவலித்தவாறே ‘தயாரா நண்பனே?’ என்று கேட்கிறார்.  ஒதுக்குப்புறமான ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்சாரக் கம்பியை பற்றுகிறார். மாயாவியின் உடல் வழியே மின்சாரம் பாய்ந்து அவர் மாயமாய் மறைகிறார்.

பிரபல ‘ப்ராடோ’ மியூசியத்தில் இருளின் போர்வையில் நடுநிசிக் கள்வனுக்காக மாயாவி காத்திருக்கிறார். பளபளக்கும் இரும்புக்கரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகிறது. கள்வனும் வருகிறான். ஒரு தங்கத்தட்டை களவாடிச் செல்ல முயல்கிறான். மாயாவி அவனை தடுத்துப் பிடிக்கிறார். நடுநிசிக் கள்வனை பிடித்துவிட்ட திருப்தியில் மாயாவி அங்கிருந்து அகல்கிறார்.

பின்னிரவில் ஒரு மர்ம உருவம் தனது வைர மோதிரத்தால் ஜன்னலில் துளையிட்டு உட்புகுந்து அந்தத்  தட்டைக் களவாடிச் செல்கிறது. அது வேறு யாருமல்ல. காளைச் சண்டை வீரன் ‘மாண்டிஜூமா’வே ஆவான். இதற்குமுன் வந்து பிடிபட்டவன் அவனது அல்லக்கையான ‘சாஞ்சோ’.

தங்கத் தட்டுடன் தனது தாய்நாடான மெக்ஸிகோ செல்லும் மாண்டிஜூமா 'யுகாடான்' பிராந்தியத்திலுள்ள ஒரு புராதான கோவிலுக்குச் செல்கிறான். அங்கு ஒரு முரட்டுக் காளை கொட்டிலில் அடைபட்டு சீறிக்கொண்டிருக்க அதை மாண்டிஜூமா பாசத்துடன் நோக்குகிறான். காளையோ அவனை வெறுப்புடன் வெறிக்கிறது. முன்பு அக்காளையுடன் போட்ட சண்டையில் மாண்டிஜூமாவின் தலையில் காயம் ஏற்பட்டு புத்திபேதலித்துவிட்டதை நாம் இலைமறைகாயாக உணர்கிறோம். தனது அறிவுக்கண்ணை திறந்துவைத்தாக நம்பி அக்காளையைக் கொல்லாமல் பராமரித்து வருகிறான் மாண்டிஜூமா.

அடுத்த காட்சியில் முழு ராஜாலங்காரத்தோடு அரியனையில் வீற்றிருக்கும் மாண்டிஜூமா அத்தங்கத்தட்டில் உள்ள ரகசியத்தைப் படிக்குமாறு ஒரு கிழட்டு மதகுருவிற்கு ஆனையிடுகிறான். அதில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, எதிரிகளின் பார்வையைப் போக்கும் ஆயுதம் பற்றிய ரகசியத்தைக் கண்டறிந்து கூறுகிறான், 'டாடெக்' என்னும் அம்மதகுரு.

அதைக்கேட்டு உற்சாகமடையும் மாண்டிஜூமா, தன்னை எதிர்ப்போர் அனைவரையும் வென்று, அஸ்டெக் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவப்போவதாக சூளுரைக்கிறான். தன்னைத் தடுக்கும் டாடெக்கிடம் "இனிமேல் என்னைத் தலைவரே என்று அழைக்காதே மாமன்னரே என்று அழை" என்று உத்தரவிட்டு குரூரமாக நகைக்கிறான்.  

இரண்டாம் அத்தியாயம்:

மாயாவி பிரிட்டனில் உள்ள ஒரு சீனப்பகுதியில் 'பச்சை வேதாளம்' என்று அழைக்கப்படும் ஒரு நிழற்படை ஏஜென்டை சந்தித்து நடுநிசிக் கள்வன் விவகாரம் இன்னும் முற்றுப் பெறவில்லை எனவும், மாண்டிஜூமாதான் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்றும் அறிகிறார். மாண்டிஜூமாவைப் பிடிக்க மெக்ஸிகோ கிளம்புகிறார் மாயாவி.

கதைக்களம் மெக்ஸிகோவுக்கு மாறுகிறது. அஸ்டெக் படையினர் மெக்ஸிகோ நகரை ஆக்ரமிக்கின்றனர். எதிர்ப்போர் அனைவரையும் ஹெலிகாப்டரில் அமைக்கப்பட்ட பயங்கர ஒளி விளக்கு குருடாக்குகிறது. அஸ்டெக் படை மாபெரும் வெற்றி பெறுகிறது.

மெக்ஸிகோ வந்தடையும் மாயாவியின் விமானத்தை அங்கிருந்து தப்பிக்கத் துடிக்கும் குருடாகிப்போன மக்கள் கூட்டம் சூழ்ந்துவிட, மாயாவி மீண்டும் மின்சாரத்தின் துணையோடு அங்கிருந்து நைஸாக நழுவுகிறார். கடந்து செல்லும் அஸ்டெக் படையில் ஒரு வாகனத்தைத் தாக்கி அதில் ஒரு வீரனை விசாரிக்கிறார். உண்மைகளைக் கண்டறிகிறார்.  'யார் நீ?' என்று முனகும் வீரனிடம் 'எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லி பழக்கமில்லை!' என பன்ச் அடித்துவிட்டு, அங்கிருந்து ஒரு விமானத்தைக் கிளப்பிகொண்டு 'யுகாடான்' விரைகிறார்.

இதற்கிடையே...  அமெரிக்கா  அஸ்டெக் படையை எதிர்த்து மூன்று போர் விமானங்களை அனுப்புகிறது. அவர்களும் ஒளிக்கதிருக்கு பலியாகின்றனர். 

மூன்றாவது அத்தியாயம்:

இதன் தொடக்கத்திலும் அற்புதமான காட்சியமைப்பு. கண் குருடாகிப்போன அமெரிக்க விமானிகளை அரூபமாக இருக்கும் மாயாவி வழிநடத்திச் செல்வார்.

அமெரிக்காவின் அத்துமீரலினால் வெகுண்டெழும் மாண்டிஜூமா அமெரிக்கா மீது படையெடுத்து டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரை சூறையாடி வெல்கிறான். இரும்புக்கை மாயாவி விமானத்தில் யுகாடானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்!

அப்போது அவருக்கு எதிரில் ஒளிக்கதிர் ஏந்திச் செல்லும் ஹெலிகாப்டர் வருகிறது! மாயாவி மீது ஒளியை பாய்ச்சுகிறது! மாயாவி ஒளிக்கற்றையின் தாக்கத்தால் மறைகிறார்.

மாயாவியின் சுயரூபம் வழக்கம் போல அவருக்கு இக்கட்டை உண்டாக்கும் சூழலில் திரும்புகிறது! எதிரிகள் அவரது விமானத்தை சுட்டு வீழ்த்தி அவரது இரும்புக் கரத்தைப் பிரித்து மாண்டிஜூமாவிடம் கைதியாகக் கொண்டு செல்கின்றனர். அங்கே அவரை சூரியனுக்கு பலியிடுமாறு கிழட்டு மதகுரு 'டாடெக்'கிற்கு உத்தரவிடுகிறான் மாண்டிஜூமா.

பலிபீடத்தில் இருக்கும் மாயாவியைக் காக்க திடீரென புயல் வருகிறது. மின்னல் தாக்கி இறக்கிறான் டாடெக். அதே மின்னல் மாயாவியை மறையச் செய்கிறது. இரும்புக்கரம் இல்லாமல் தப்பி ஓடுகிறார். மாண்டிஜூமாவுடன் ஒற்றைக் கையுடன் மோதுகிறார். மாயாவி மீது ஒளிக்கதிரை ஏவுகிறான் மாண்டிஜூமா. மாயாவி கண்ணைப் பொத்திக் கொள்கிறார். மாண்டிஜூமா நேராக ஒளிக்கதிரைப் பார்த்துக் குருடனாகிறான்!

குருடாகிப்போன மாண்டிஜூமா கால் இடறி முரட்டுக் காளை அடைபட்டிருக்கும் கொட்டகைக்குள் விழுகிறான். மாட்டின் உறுமலைக் கேட்டு சட்டையைக் கழற்றுகிறான். இறுதி மோதலுக்கு தயாராக நிற்கிறான்!

கண் தெரியாத போதிலும் காளைக்குப் போக்கு காட்டுகிறான்! அவனது முடிவு நெருங்கும்போது மாயாவி அவனைக் காக்கிறார். அவனது வீரத்தை மெச்சிவிட்டு ஒளிக்கதிரை அழித்துவிட்டு, அங்கிருந்து வழக்கம் போல நழுவுகிறார் மாயாவி.

மாண்டிஜூமாவை அமெரிக்க இராணுவம் பரிதாபத்திற்குரிய நிலையில், கைது செய்கிறது..!

13_thumb1.gif?imgmax=80052.gif

நன்றி :  அ.கொ.தீ.க

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவுகள். மறக்க‌ முடியாத நாட்கள் அவை. சிறுவயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே இத்தகைய அம்புலிமாமா கதைகள்தான். செட்டியார்தெருவில் உள்ள சுஜிகலா புத்தகசாலையில் இவை விற்கும்  8,9 வயதில் இவைகளை வாங்க காசிறுக்காது, இரவல் வாங்கி படிப்பேன். 

சிறுவயதில்  எத்தனை கதைகள் இதுபோல் வாசித்துள்ளேன்.

இரும்புக்கை மாயவி, வேதாளன், ஃப்ளாஷ் கோர்டன், பட்லர் , ரிப் கிர்பி என ஒவ்வொன்றும் மறக்க முடியாத பாத்திரங்கள். 

அக்கலத்தில் இவைகளுக்கு போட்டியாக, பாலமித்ரா, ரத்னபால, லயன் காமிக்ஸ் போன்றன வெளியிடப்பட்டன. நட்சத்திரமாமா என ஒர் புத்தகமும் வந்ததாக ஞாபகம். இது இலங்கையில் வெளியிடப்பட்டது என நினக்கின்றேன். ராஜவன்னியன் குறிப்பிட்டதுபோல் மிகவும் அழகான ஒவியங்கள். 

முன்பு பி.டி. சாமி என்பவர் ஒருவர் பேய்க‌தைகள் எழுதும் நாவலாசிரியர். இவரது கதைகளுக்கு அட்டைப்படங்கள் வரைபவர்கள் மிகவும் திகிலாக பயங்கரமாக வரைந்திருப்பார்கள். இவர் இன்னும் எழுதுகின்றார தெரியவில்லை.

Link to post
Share on other sites

இந்த இரு கதாபாத்திரங்களும் அவற்றின் கதைப் புத்தகங்களும் பிரபலமானவை. அப்பொழுது கருப்பு வெள்ளை பதிப்புகளே வந்தன. அபூவர்மாக பின்னர் வண்ணத்திலும் வந்ததன. ஆனால் கருப்பு வெள்ளையிலுள்ள ரியலிஸம், ஈர்ப்பு வண்ணப் பதிப்பில் வரவில்லை..!

"மஞ்சள் பூ மர்மம்" - லாரன்ஸ் & டேவிட்

"பெய்ரூட்டில் ஜானி" - ஜானி நீரோ

 

011%20Manjal%20Poo%20Marmam%5B4%5D.jpg        32336.jpg

 

இப்பொழுது கீழேயுள்ள இணைத்திலும் சில காமிக்ஸ் புத்தகங்கள், வண்ண மறு பதிப்புகளாக கிடைக்கின்றன.

(நான் சிறுவயதில் இவற்றை படிக்கும்போது, இதன் விலை 90 காசுகள், தற்பொழுது விலை 50 ரூபாய்கள்..!)

 

லயன் - முத்து காமிக்ஸ்

Link to post
Share on other sites

Small Update:

அக்காலத்தில், சிவகாசியிலிருந்து வெளிவந்த முத்து காமிக்ஸ், லண்டனிலிருந்து வெளியான ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பை உரிமம் பெற்று, எப்படி தமிழிலில் தயாரித்தார்களென்பதை பற்றிய விளக்கம், மிகவும் சுவாரசியமானதுதான்.!

ஒவ்வொரு பக்கத்திலும், படத்திலிருக்கும் ஆங்கில உரையாடல் பெட்டிகளை மறைத்து, தமிழில் மொழிபெயர்த்து ஒட்டி, கம்போசிங் செய்து, அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்..

இதில் கதையின் சுவாரசியம் குன்றாமலிருக்க, பதிப்பாசிரியர் திரு.முல்லை தங்கராசனின் தமிழ் வண்ணம் மிக அருமை.

 

ஒரிஜினல் ஆங்கில வடிவம்

E+32.JPGE+33.JPG

 

 

தமிழில் மொழி பெயர்ப்பு

TE+32+33.jpg

 

 

இறுதி தமிழ் பதிப்பு

T+32.JPGT+33.JPG

 

நன்றி:   முத்து விசிறி

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

சிறுவயதில் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பும்போது, வழியிலிருக்கும் கிராம நூலகத்தில் அம்புலிமாமா மற்றும் முத்து காமிக்ஸ் புத்தகங்களை உடனே படிப்பதுண்டு..!

எப்போ அடுத்த பதிப்பு வரும் என ஆவலோடு காத்திருப்பதும் வழக்கம்.  புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதில் எம்மில் எற்படுத்தியதே அம்புலிமாமா பதிப்புகள் தான்..

அதன் தற்போதைய நிலை கண்டு, மனம் வருந்தவே செய்கிறது.

 

8 hours ago, colomban said:

அருமையான நினைவுகள். மறக்க‌ முடியாத நாட்கள் அவை. சிறுவயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே இத்தகைய அம்புலிமாமா கதைகள்தான். செட்டியார்தெருவில் உள்ள சுஜிகலா புத்தகசாலையில் இவை விற்கும்  8,9 வயதில் இவைகளை வாங்க காசிறுக்காது, இரவல் வாங்கி படிப்பேன். 

சிறுவயதில்  எத்தனை கதைகள் இதுபோல் வாசித்துள்ளேன்.

இரும்புக்கை மாயவி, வேதாளன், ஃப்ளாஷ் கோர்டன், பட்லர் , ரிப் கிர்பி என ஒவ்வொன்றும் மறக்க முடியாத பாத்திரங்கள். 

அக்கலத்தில் இவைகளுக்கு போட்டியாக, பாலமித்ரா, ரத்னபால, லயன் காமிக்ஸ் போன்றன வெளியிடப்பட்டன. நட்சத்திரமாமா என ஒர் புத்தகமும் வந்ததாக ஞாபகம். இது இலங்கையில் வெளியிடப்பட்டது என நினக்கின்றேன். ராஜவன்னியன் குறிப்பிட்டதுபோல் மிகவும் அழகான ஒவியங்கள். 

முன்பு பி.டி. சாமி என்பவர் ஒருவர் பேய்க‌தைகள் எழுதும் நாவலாசிரியர். இவரது கதைகளுக்கு அட்டைப்படங்கள் வரைபவர்கள் மிகவும் திகிலாக பயங்கரமாக வரைந்திருப்பார்கள். இவர் இன்னும் எழுதுகின்றார தெரியவில்லை.

நன்றி வருகைக்கும் மேலதிக தகவல்களிற்கும் 

ட்விற்றரில் @KATHYKALPDF என்ற ஐடி யை ஃபலோ பண்ணுவதன் மூலம் காமிக்ஸ் கதைகளை PDF ல படிக்க கூடியதாய் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் எனது வாசிப்பு பழக்கத்தையும் அர்வத்தையும் துன்டிய முழுப்பங்கும் அம்புலிமாமாவை த்தான் சேரும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அம்புலிமாமாவிற்கு இப்படியொரு நிலையோ ....? 
ஒருகாலத்தில் ஒரு அம்புலிமாமா புத்தகம் இருந்தால் போதும் ஒரு மாதத்திற்கு வண்டி ஓடும் ...கதைகளையும் பாடமாக்கி ஒப்பிப்பதுண்டு,
ராணி காமிக்சும் இப்படியே நின்றுபோய்விட்டது ...ஆனால் மிக மகிழ்ச்சி தற்போது முத்து ,லயன் காமிக்ஸ்கள் புதுமெருகுடன் புதிய ஹீரோ வகையறாக்களுடன் வெளிவருவதுதான் .. நின்று போய்விட்ட எனது வாசிப்புபழக்கத்தை  மீண்டும் கேப்டன் டைகர் ,டெக்ஸ் வில்லர் போன்ற 
ஆதர்ச ஹீரோக்களுடன் உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். விலை சற்றேஅதிகமானாலும்  மீண்டும் பழைய நாயகர்களை புதிய மிடுக்குடன் பார்க்கும் போது அந்த புல்லரிப்பிட்க்கு ஈடில்லை.

கேப்டன் டைகர்   lieutenant blueberry என்னும் பெயரில் ஒருகலக்கு கலக்குபவர் இவரது தங்கக்கல்லறை என்னும் கதைக்கு நான் இன்னும் அடிமை  , டெக்ஸ் 70 ஆண்டுகளாக இத்தாலிய காமிக்ஸ் உலகின்  முடிசூடா மன்னன் 
புதிதாக தோர்கல் ,லார்கோ விஞ்ச் , டிடெக்டிவ் ஜெரோம் என்று பட்டாளங்கள் அறிமுகமாகி மிரட்டுகிறார்கள் ,  பதிவுத்தபால் மூலம் புத்தகங்களை அனுப்பும் ஒரு நாணயமான விநியோகஸ்தரை 
கண்டுபிடித்து மீண்டும் பழைய நினைவுகள் அசைபோடப்படுகின்றன எனக்கு இரும்புக்கை மாயாவி அவ்வளவாக பிடிப்பதில்லை அவரது சில கதைகள் அதீத கற்பனையாக தெரிவதாலோ என்னவோ ,

தற்போது வரிசையில் வாசிப்புவேட்டைக்கு  காத்துக்கொண்டிருக்கும் கதைகள் சில 

O3mK1lD.jpg

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 8/22/2018 at 9:17 PM, சுவைப்பிரியன் said:

எனக்கும் எனது வாசிப்பு பழக்கத்தையும் அர்வத்தையும் துன்டிய முழுப்பங்கும் அம்புலிமாமாவை த்தான் சேரும்.

 

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்புலிமாமாவிற்கு இப்படியொரு நிலையோ ....? 
ஒருகாலத்தில் ஒரு அம்புலிமாமா புத்தகம் இருந்தால் போதும் ஒரு மாதத்திற்கு வண்டி ஓடும் ...கதைகளையும் பாடமாக்கி ஒப்பிப்பதுண்டு,
ராணி காமிக்சும் இப்படியே நின்றுபோய்விட்டது ...ஆனால் மிக மகிழ்ச்சி தற்போது முத்து ,லயன் காமிக்ஸ்கள் புதுமெருகுடன் புதிய ஹீரோ வகையறாக்களுடன் வெளிவருவதுதான் .. நின்று போய்விட்ட எனது வாசிப்புபழக்கத்தை  மீண்டும் கேப்டன் டைகர் ,டெக்ஸ் வில்லர் போன்ற 
ஆதர்ச ஹீரோக்களுடன் உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். விலை சற்றேஅதிகமானாலும்  மீண்டும் பழைய நாயகர்களை புதிய மிடுக்குடன் பார்க்கும் போது அந்த புல்லரிப்பிட்க்கு ஈடில்லை.

கேப்டன் டைகர்   lieutenant blueberry என்னும் பெயரில் ஒருகலக்கு கலக்குபவர் இவரது தங்கக்கல்லறை என்னும் கதைக்கு நான் இன்னும் அடிமை  , டெக்ஸ் 70 ஆண்டுகளாக இத்தாலிய காமிக்ஸ் உலகின்  முடிசூடா மன்னன் 
புதிதாக தோர்கல் ,லார்கோ விஞ்ச் , டிடெக்டிவ் ஜெரோம் என்று பட்டாளங்கள் அறிமுகமாகி மிரட்டுகிறார்கள் ,  பதிவுத்தபால் மூலம் புத்தகங்களை அனுப்பும் ஒரு நாணயமான விநியோகஸ்தரை 
கண்டுபிடித்து மீண்டும் பழைய நினைவுகள் அசைபோடப்படுகின்றன எனக்கு இரும்புக்கை மாயாவி அவ்வளவாக பிடிப்பதில்லை அவரது சில கதைகள் அதீத கற்பனையாக தெரிவதாலோ என்னவோ ,

தற்போது வரிசையில் வாசிப்புவேட்டைக்கு  காத்துக்கொண்டிருக்கும் கதைகள் சில 

O3mK1lD.jpg

 

 

வருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றிகள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.