Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழர் சமூக வாழ்வு கிபி 250 - கிபி 600 வரை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...

தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார்.

போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இல்லாததாலேயே இருண்டகாலம் எனும் இத்தகு சொல்லாடலானது தொடர்ந்து இருந்து வருகிறது.

வேள்விக்குடி செப்பேடு பதிப்பிக்கப்பட்ட பின்பும் கூட அது குறித்து எதிர்மறையாக பொருள் கொள்ளப்பட்டதே அன்றி சரியான அர்த்தத்தில் அது வெளிக்கொணரப் படவில்லை.

இருண்டகாலம், இருண்ட குலம், சூரையாடும் கூட்டம் என பலவாறாக கருத்து சொல்லப்பட்ட அந்தக் காலத்தைக் குறித்துதான் 1975 ம் ஆண்டு, பெரும் வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும்  பெருமைமிகுந்த நூலை எழுதினார். அவர் தனது நூலின் முன்னுரையில் "களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் 'விடியற்காலம்' ஆகிறது" என பொருள்படச் சொன்னார்.

கிடைத்த சொர்ப்ப வரலாற்றுத் தகவல்களையும் பதினெண் கீழ்கணக்கு நூல்களையும் மிகுந்த கவனத்தோடு ஆய்வு செய்து கூர்மையான சில மதிப்பீடுகளை அவர் முன்வைக்கிறார். அவையாவன..

 1. களப்பிரர்கள் தமிழர் அல்லர்.
 2. அவர்கள் திராவிட இனத்தவரே குறிப்பாக கன்னடர்.

3.இவர்களது காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கி வளர்ந்தன.சைவம் உள்ளிட்ட  சிலமதங்கள் ஔிமங்கியே காணப்பட்டன.

 1. களப்பிரரின் படையெடுப்பு, வெற்றிக்கு காரணம் சமூக தேக்கநிலை, பேரரசு அற்ற நிலை. எனக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

மேற்படி அறிஞரின் நூல் வெளிவந்த(1975) பிற்பாடு குறிப்பட்ட இந்தக் காலம் குறித்து பல ஆய்வாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பல முனைவர் பட்ட ஆய்வுகளும் இந்த காலம் குறித்து தயாரிக்கப்பட்டன.

இந்த நூல் வெளிவந்த பின்னால் அவர்கூறிய 'விடியற்காலம்' என்பதற்கு  பின்னால் உள்ள சில துணிபுகளும், ஐயங்களும் பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகு கவனத்தின் ஒருபகுதியாக அந்தக் காலத்தை ஒரு 'பொற்காலம்' எனும் அளவுக்கு சில ஆய்வுகள் உயர்த்திக் கொண்டு போயின. வேள்விக்குடி செப்பேட்டை மையமாகவைத்து  கருத்து சொல்லவந்த பலரும், களப்பிரர்கள் ஏதோ சமண, பௌத்த மதங்களை வரித்துக்கொண்டவர்கள்  என்பதுபோலவும், திட்டமிட்டு அவர்கள் பிராமணர்களையும், அவர்கள் அனுபவித்துவந்த தேவதானங்களையும் ஒடுக்கினார்கள் என்பதுபோலவும் எண்ணி அவர்கள் சாதிய படிநிலைகளுக்கு பெருத்த அடி கொடுத்தார்கள் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவு செய்தனர். "காலம் பறையர் என்பதே களப்பிரர்கள் என மருவியது ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரையினர்தான்" சில அறிவுஜீவிகள்  கொண்டாடுவதும், ஆளாளுக்கு நாங்களே களப்பிரர் என உரிமை கோருவதாகவுமே இங்கே வரலாற்று ஆய்வுகள் முன்வைக்கப் படுகின்றன.

உண்மையில் களப்பிரர்கள் சைவம் உள்ளிட்ட பிற மதங்களை வதைத்தவர்கள் என்றோ, அவர்களின் சடங்கு முறைகளை தடைசெய்தனர் என்றோ மயிலை சீனி வேங்கடசாமியாகட்டும், பர்ட்டன் ஸ்டெய்னாகட்டும் யாருமே குறிப்பிடவில்லை.

"களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்றுசெப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன்காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணர்க்குப் பகைவர் அல்லர். அவர்கள் பிராமணர்களுக்கு தானம் கொடுத்ததை 'அகலிடமும் அமலரும்' எனத் தொடங்கும் பாடல்  சுட்டுகிறது" எனக் குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. அவரின் ஆய்வுகளுக்கு  பிறகு கண்டு பிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டுகளும் களப்பிரர்கள் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளித்து ஆதரித்து உள்ளதை குறிப்பிடுகிறது.

இதேபோல், களப்பிரரின் ஆட்சி வீழ்ந்தது குறித்தும் கூட ஆய்வாளர்களிடம் இருந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு 'நாட்டில் அரசியல் ஆதரவு இல்லை' என வேங்கடசாமி கூற, 'புதிய நிலப்பிரபுகளின் எழுச்சி' அவர்களை பலகீனப்படுத்தியதாக பேரா. சிவதம்பி எழுதுகிறார். பர்ட்டன் ஸ்டெய்னோ 'பிரதான உற்பத்தி சக்தியான விவசாய அமைப்புமுறையோடு அவர்கள் ஒன்று கலக்காமல் போனதே அவர்களின் விழ்ச்சிக்கு காரணம்' என குறிப்பிடுகிறார். அறிஞர் போ.வேல்சாமியும் கூட மேற்படி ஸ்டெய்னின் கருத்தை தனது பொற்காலங்களும், இருண்டகாலங்களும் கட்டுரையில் வழியுறுத்துகிறார்.

தொகுப்பாக, களப்பரரின் காலம் இருண்டகாலம் என மொழியப்பட்டதற்கான காரணம், அவர்களின்  வரலாற்றுத் தடயங்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் துடைத்து அழிக்கப்பட்டதற்கான காரணம், சமண பௌத்த செல்வாக்குகளே அன்றி களப்பிரர்களின் சாதி சமத்துவத்துக்கான செயல்பாடுகள் இல்லை. குறிப்பாக சொல்வதானால் இதில் அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. நிலைமை இவ்வாறு இருக்க களப்பிரர்களை சாதி சமத்துவப் போராளிகள் என்பதும், பார்ப்பனர்களின் எதிரிகள் என்பதும் வரலாற்றை திரிக்கும் மோசமான முன்னுதாரணங்களாகும்.

                     2

நமது இந்தப் புரிதலில் இருந்தே இந்த மேற்கண்ட நூலை நாம் அனுகுகிறோம். சங்கம் மருவிய காலத்தில் இருந்து  தொடங்குகின்ற முனைவர் ஆலால சுந்தரத்தின் இந்த ஆய்வானது,  சங்ககால மற்றும் பதினெண்கீழ்கணக்கு  நூல்களிலும், பிற்பாடான பக்தி பணுவல்களிலும்  ஆழமாக வேர்பரப்பி, ஒரு பெரும் விருட்சமாக நம் கண்முன்னே நிற்கிறது. அதேசமயம் கிடைக்கின்ற ஒருசில தொல்லியல் தகவல்களையும் பண்டைய  இலக்கியங்களின் ஔியில் அலசி சரியான வரலாற்றை கட்டமைக்க முயலுகிறது.

பொதுவாக தரவுகளை உள்வாங்கி ஊகித்து வலாற்றைச் சொல்வது என்பது ஒருவகை. இலக்கியங்களையும் தொல்லியல் தரவுகளையும் திரட்டி ஒருமாலைபோல் நமக்கு வரலாற்றை உய்த்தறிய பின்னித்தருவது இரண்டாவது வகை. இரண்டாவது வகையை நூல் கையாளுகிறது. இதில் ஆய்வாளரின் உழைப்பு நம்மை நெகிழ்வுகொள்ளச் செய்கிறது.

சங்ககால சமூகத்துக்கும், பின் சங்ககாலத்துக்கும் இடையில் இருந்த உறவையும், முரண்பாடுகளையும் நுணுக்கமாகச் சொல்லும் இந்த ஆய்வு,  சுவாரஸ்யமான சில தகவல்களை நமக்குத் தருகிறது. அரசனையும், வீரத்தையும் புகழ்ந்துபேசிய சங்ககால இலக்கியங்களுக்கு மாற்றாக அற நெறிகளையும், அரசனது கடமைகளை வழியுறுத்துவதையும் ஒப்பிட்டு இத்தகு வேறுபாடுகளின் காரணங்குறித்து ஆழமாக நூல் பேசுகிறது. பின்சங்க காலத்து  இலக்கியங்களின் முக்கியக் கூறாக மத சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஒருபுறம் சமண, பௌத்தத்தின் முன்னணி பாத்திரங்களை விவரிக்கும் நூல், மறுபுறம் பார்பனர்களின் செல்வாக்கையும், வணிகர்களின் அபரிமிதமான வளர்ச்சியையும் (கிரீடம் தவிர மன்னனுக்கு உரித்தான  அனைத்தையும் வைத்துக்ககொள்ள வணிகனுக்கு அதிகாரம் இருந்தது. படை உட்பட..) குறிப்பிடுகிறார். அதேபோல் வேளாளர்களில் தோன்றிய 'உழுவித்துண்போர்' எனப்படும் புதிய வர்க்கப் பிரிவையும் விளக்குகிறார்.  குறிப்பாக தமிழகத்தில் வருணாசிரம முறை நீடிக்கவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு சாதிகளுக்குமான பணிகளை வேறுபடுத்தி அவற்றின் மூலம் அவைகளின் சமூக அந்தஸ்தை நுணுக்கமாக ஆராய்கிறார்.

நிலக் கொடைகள் இருந்ததையும், நிலத்தில் தனியுடைமை இருந்ததையும் சுட்டிக்காட்டும் நூலானது நிலம் தொடர்பான எந்த முடிவுகளிலும் அரசனே இறுதியானவன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பிற்காலத்தில் சைவத்தின் எழுச்சியை கூடுதலான வார்த்தைகளில் சொல்லும் ஆய்வு, சைவத்தில் தொடக்ககாலங்களில் மேலோங்கியிருந்த சாதி சமத்துவ கருத்துகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஆதி சைவர்களான  சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைப்பற்றி குறிப்பிடும்போது, இருவரும் "பெருமளவிலான பிராமணர்களல்லாத தமிழ் மக்களின் துணையின்றி சமண பௌத்தக் கட்டுக்களை களையமுடியாது" என்கின்றனர் என்றும், சைவ நாயன்மார்களில் 63 பேர்களில் 16 பேர் அந்தனர், 6 பேர் வணிகர், 13 பேர் வேளாளர்கள், 10 பேர் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது. ஆனால்  சைவர்களின் நோக்கம் நிறைவடைந்தவுடன் (சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டவுடன்) அது தமது சாதி சமத்துவ கருத்தை கைவிட்டது என சரியாகவே குறிப்பிடுகிறது.

பல்லவர்கள் கி.பி.250 வாக்கில் காஞ்சியை கைப்பற்றியதாக குறிப்பிடும் நூல், பல்லவர்களுக்கும் களப்பிரர்களுக்கும் இடையிலான உறவு குறித்தோ, இருவர் பிரதேசங்களின் எல்லைகள் குறித்தோ எதையும் சொல்லாமல் விடுவது என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. மேலும் சைவ, வைணவ பிரிவுகளின் உருவாக்கம் குறித்தும், முரண்பாடுகளுக்கான அடிப்படை அம்சங்கள் குறித்தும் கூடுதலாக சொல்லியிருக்க வேண்டும். என்றாலும் கிடைக்கின்ற சொற்ப தரவுகளை வைத்துக்கொண்டு இதையெல்லாம் துள்ளியமாக எதிர்பார்ப்பது பேராசைதான்.

என்றாலும் நிச்சயம்  பலவகையிலும் நமது புரிதலை செழுமை படுத்திக் கொள்வதற்கான முக்கியமான நூல் இது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

முனைவர். இர. ஆலால சுந்தரத்தின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. 1990ல் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்த அவர் 1995 ம் ஆண்டில் தனது ஆங்கில முதல் பதிப்பை (Tamil social life,c.250to 700 AD) வெளியிட்டார். இந்த நூல் சமீபத்தில்தான் (2016 ல்தான்) முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ளது.

பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் பலரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது என்றால் அது மிகையில்லை.‌‌

- பாவெல் இன்பன், தருமபுரி

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35402-250-600

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தேரர்கள்... சிலருக்கும், கொரோனா! ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1230220
  • கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா அரசாங்கத்தின் சார்பாக தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு ஆயுதமோதல் முடிவடைந்த நிலையில் நாட்டில் அனைவருக்கும் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைய நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயன்முறை தேவைப்படுகிறது என்றும் அதற்கு கனடா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1230326
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  • 1983 இனப்படுகொலை நாளான கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக இன்று பிரித்தானியாவில் ஒன்றிணைந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர், பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 38 ஆண்டுகளாகியும் கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் நிலையில் தமிழ் இளையோராகிய நாங்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதாக பிரித்தானியா கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துக்காட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களில் சவேந்திர சில்வா தொடர்புபட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் அடிப்படையில் கடந்த வருடம் சவேந்திரசில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மீது அமெரிக்கா பயணத்தடை விதித்திருந்தது. கடந்த ஏப்ரல் 2021 இல், சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP, சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்களுக்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து, அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது. இதுபோல, மே 2021 இல் ICPPG என்ற அமைப்பு, இலங்கையில் மிக அண்மையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசால் தடைசெய்யப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும், தமிழ் இளையோரின் முயற்சியால், கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய நாடாளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதுடன் ,சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த போராட்டத்தை முழுமையாக தங்கள் கையில் எடுத்துள்ள இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி, பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் வழங்கும் படியும் குறித்த முன்பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து இடும்படி கோரி வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 29 நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரவாக திரட்டியுள்ளனர். அண்மையில் தொழிற்கட்சியின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான நிழல் அமைச்சர் கௌரவ ஸ்ரிபன் கினோக் (Rt Hon. Stephen Kinnock) அவர்களுடனும் இந்த இளையோர் நடாத்திய சந்திப்பின் விளைவாக அவரும் சவேந்திரசில்வா மீது GSR இன் கீழ் பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க கோரியிருந்தார். இவ்வாறு இந்த இளந்தலைமுறையினர் தாமாக முன்வந்து, முன்னெடுத்து செல்லும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாகவே பிரித்தானிய பிரதமருக்கு இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தினை தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களின் ஆதரவினைக் கோருமாறு ICPPG யின் ஊடக இணைப்பாளர் கிறிஸ்ரி நிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் மக்கள் அனைவரும் அமைப்பு பேதங்கள் இன்றி ஒன்று திரண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நடைமுறைச்சாத்தியமான இலக்கு மட்டுமன்றி எங்கள் ஒற்றுமையின் பலத்தை மீண்டும் நிரூபிக்கவும் சோர்ந்து போன எமது சமூகத்தை உற்சாகமூட்டவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்துடன் இளையோராகிய தங்களால் ஆரம்பிக்கப்பட்ட கீழே உள்ள, இணைய வழி கையெழுத்துப் போராட்டத்திற்கும் தங்களின் ஆதரவினை வழங்குமாறும் கோரியுள்ளார்கள்.  https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva https://tamilwin.com/article/magajar-to-the-british-prime-minister-1627067289  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.