• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

கவுண்டமணியும் நானும் - செந்தில்

Recommended Posts

கவுண்டமணியும் நானும் -- செந்தில்

நன்றி : சினிமா விகடன்

Share this post


Link to post
Share on other sites

மீம்களுக்கு பதில் அளிக்கும் செ ந்தில் ..

நன்றி : behindwoodsTV

Share this post


Link to post
Share on other sites

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

நடிகை ஷர்மிலி & பயில்வான் ரங்கநாதன்..💐

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்தப் பெண்களின் துணிவு பாராட்டப்படவேண்டியது. மூண்டு பெண்களும் சேர்ந்து ஒரு பாக்குவெட்டி அல்லது கத்திரிக்கோலால வெட்டிப்போட்டுப் போறதுக்கு. நமக்கெல்லாம் அந்தப் பெண்களின் துணிவு வராது 
    • ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி   தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124945
    • இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; 13 பேருக்கு பிணை     முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு  கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. எனினும், முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசாநாயக்க உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றில் முன்னிலையான நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்களின் மனைவிகளை பிணையாளர்களாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை பெப்ரவரி 07 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இளஞரகள-கடததல-வவகரம-13-பரகக-பண/150-244495
    • அமைதியின்மை சுமூகமாக்கப்பட்டுள்ளது     பாறுக் ஷிஹான்   ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களைப் பெற சென்றவர்கள்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால்  ஏற்பட்ட அமைதியின்மையானது, சமூகமாக்கப்பட்டுள்ளது. இன்று (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள், நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர். இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையை தொடர்ந்து  சுமூக நிலையை அடைந்தது. இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்டிவங்களை சீராக வழங்குவதற்கு,  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று மாத்திரம் ஏறத்தாழ  1500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் குறித்த விண்ணப்ப படிவங்களை நாவிதன்வெளி, அன்னமலை சவளக்கடை, சொறிக்கல்முனை, சாளம்பைக்கேணி மத்தியமுகாம்  உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அமைதியின்மை-சுமூகமாக்கப்பட்டுள்ளது/175-244499
    • கொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா? மனோவிடம் CID விசாரணை     கொழும்பில் வீடுகள் தோறும் பொலிஸார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, கொழும்பில் தமிழர் செறிந்து வாழும் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மட்டக்குளிய, முகத்துவாரம், கொள்ளுப்பிட்டி, தெகிவளை, கல்கிசை, கொகுவளை, கிருலபனை, தெமட்டகொடை, மருதானை, புறக்கோட்டை மற்றும் கொழும்புக்கு வெளியே வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் வலய பிரதேசங்களை குறிவைத்து பொலிஸார், விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை மேற்கொள்ள முயற்சிப்பது, காலம் காலமாக நடைபெறும் கைங்கரியமாகும். இதை நான் எப்போதும் எதிர்த்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இதற்கு முந்தைய மஹிந்த ஆட்சியிலும் சரி, அதற்கு பின் வந்த நமது ஆட்சியிலும் சரி, இதற்கு நான் இடம் கொடுத்ததே இல்லை. சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கோள்வது ஒன்று. ஆனால், அனைத்து வீடுகளுக்கும் சென்று விபரக்கோவை திரட்டுவதும், அதிலும் தமிழ் குடும்பங்களை குறி வைப்பதும் இன்னொன்று. பொலிஸார் திரட்டும் விபரக்கோவைகள், மூன்றாம் தரப்பு சமூக விரோதிகளிடம் சென்று சேருவதாக நான் சந்தேகப்படுகின்றேன். இதை நான் அனுமதிக்க முடியாது. இந்நிலையில், பொலிஸ் பதிவை நான் தடுத்து நிறுத்தியதால் தான், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கைது செய்ய முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டை, அவ்வேளை கொழும்பில் பிரதி பொலிஸ் அதிபராக இருந்தவர், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரித்து வரும் விசேட விசாரணை குழுவிடம், எனக்கு எதிராக தெரிவித்துள்ளார். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குற்றவியல் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமராச்சி திலகரத்ன, என்னிடம் விசாரணை வாக்குமூலம் பெறவேண்டும் என அறிவித்து நேரம் கோரி இருந்தார். அதிகாரிகளை எனது வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறும்படி நான் கூறியிருந்தேன். இதன்படி சிஐடி பிரதம பரிசோதகர் ஹெல உடகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் என் வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்தனர். எனது வாக்கு மூலத்தில், “இது மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலை. கடைசியாக கொழும்பில் தமிழ் மக்களை நோக்கிய பொலிஸ் பதிவுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது, கடந்த வருடம் ஜனவரியில் என எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அப்போது, இதுபற்றி வழமைப்போல், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதி பொலிஸ் மாதிபர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் மட்டுமல்ல, பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அமைச்சரவையில் இந்த விடயத்தை எழுப்பி, விவாதித்து இருந்தேன். சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளுங்கள். ஆனால், வீடு வீடாக, குற்றவாளிகளை போன்று, தமிழரை தேடி சென்று ஒட்டுமொத்தமாக பொலிஸ் பதிவு செய்யும் நடைமுறையை உடன் முடிவுக்கு கொண்டுவரும்படி கூறி இருந்தேன். அதன்படி அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.” “இது நடந்து, நான்கு மாதங்களுக்கு பின்னரே ஏப்ரல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்புக்கு வந்த நபர்கள் கொழும்பில் ஜனவரி மாதமே வந்து தங்கி இருந்திருப்பார்கள் என்பது நம்ப முடியாத பழிவாங்கல் சிந்தனை. உண்மையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பிலும், குண்டு வெடிப்பு பயங்கரவாதி சாஹரான் கும்பல் தொடர்பிலும், நட்பு நாடு என்ற முறையில் இந்திய புலனாய்வு துறை முன்கூட்டிய தகவல்களை இலங்கை பொலிஸ் துறைக்கு வழங்கி இருந்தது. குண்டு வெடிப்பு நிகழ சில மணிகளுக்கு முன்கூட இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை வழங்கி இருந்தது. இத்தகவல்களை இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தேடி கண்டுபிடிக்கவில்லை. இந்திய புலனாய்வு துறையே இலங்கைக்கு கொடுத்தது. இப்படி கொடுக்கப்பட்ட துல்லியமான தகவல்களைகூட சரியாக பயன்படுத்தி, குற்றங்களை தடுத்து நிறுத்தி, அப்பாவி மக்களை காப்பாற்றி, குற்றவாளிகளை கைது செய்ய, இலங்கை பொலிசாரால் முடியவில்லை. சம்பவம் நடைபெற்ற பொலிஸ் வலய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதி பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தம் கடமைகளில் இருந்து முற்றாக தவறியுள்ளனர். தமது கடமை தவறலை மறைக்கவே, நம்பி வாக்களித்த மக்களுக்காக கடமையை செய்யும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என் மீது திட்டமிட்டு பழிவாங்கும் முகமாக அபாண்டமாக இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.” எனக்கூறி, எனது வாக்குமூலத்தை எழுத வைத்து, கையெழுத்திட்டு கொடுத்தேன்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124944