Jump to content

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம்  அம்பலம் ..

 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான்.

தமிழகம் வளர்ந்திருக்கும் கேரளா மட்டும் முரண்டு பிடிக்காமல் இருந்திருந்தால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தென் மாவட்டங்கள், முல்லைப் பெரியாறு அணையில் கிடைக்கும், கூடுதல் தண்ணீரை பயன்படுத்தி செழிப்படைந்து நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறி இருக்கும்.

ஆனால் தண்ணீரைக் கொண்டு சென்று வீணாக அரபிக் கடலில் கலப்போமே தவிர, தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் கொடுக்க மாட்டோம் என்று மனிதாபிமானமற்ற போக்கை கடைபிடித்து வருகிறது கேரள அரசு. அங்கு, எந்த அரசு அமைந்தாலும் இதுதான் தமிழர்களின் சாபக்கேடாக உள்ளது.

142 அடி தேக்கலாம் இடுக்கி அணைக்கு கூடுதல் தண்ணீர் தேவை என்பதற்காக 155 அடி வரை தேக்கி வைக்க வாய்ப்பு உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி என்ற அளவிற்கு கொண்டு வந்துவிட்டது கேரளா. இந்த 142 அடியை கூட சட்டப் போராட்டத்தின் மூலமே பெற்றது தமிழகம்.

ஆனால் ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விட்டு, அணையில் நீரை குறைத்துவிட மெனக்கெடுகிறது கேரள அரசு. எத்தனை பொய்கள், புரளிகள் பூகம்பத்தால் அணை உடைந்துவிடும், மழை வெள்ளத்தால் அணை உடைந்து விடும்.. இப்படி எதற்கெடுத்தாலும், மனசாட்சியற்ற புரளிகள் அங்கே இருந்து கிளப்பி விடப்படுகின்றன. உச்சநீதிமன்ற குழுவே, ஆராய்ந்து அணை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறிய பிறகும் கேரளாவின் கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை.

சுயநலம் அது ஒன்றே அங்குள்ள அரசுகளின் தாரக மந்திரம். புது தந்திரம் தங்கள் தந்திரம் எதுவும் பலிக்கவில்லை என்று தெரிந்ததும், இப்பொழுது அணையின் கட்டுப்பாட்டை காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு நடுநிலை அமைப்புக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கிறது கேரளா.

இதுவரை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கேரளா மதித்து செயல்படுத்தியதாக வரலாறு கிடையாது. நீர் பிடிப்பு பகுதிகளில் கூட வாகன பார்க்கிங் அமைக்க மனசாட்சியில்லாமல் திட்டமிட்டது கேரளா. ஆனால் இப்பொழுது மேற்பார்வைக் குழுவை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் அணையை கொடுக்க வேண்டும் என்று கேரளா கூறுவது, தாங்கள் நினைத்தபடி தண்ணீரின் இருப்பையும், திறப்பையும் முடிவு செய்து கொள்ளலாம் என்ற மறைமுக தந்திரத்தின் ஒரு வெளிப்பாடுதான்.

மேற்பார்வை குழு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் இவ்வாறு ஒரு யோசனையை தெரிவித்துள்ளது கேரளா. இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத் துறை செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும், பெரிய வெள்ளம் ஏற்படும்போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை இந்த குழு எடுக்க வேண்டும், இந்த குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர் வரத்து, நீர் இருப்பு, நீர் திறப்பு ஆகியவற்றை இந்த குழு கண்காணிக்க வேண்டும்.. என்றெல்லாம் புதுப்புது நிபந்தனைகளை தனது கோரிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது கேரளா.

பதிலடி தர வேண்டும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போன்ற செயல் தான் இந்த புது யோசனை. வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் பதிலுக்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது.

அப்போது கேரளாவின் இந்த அனைத்து தந்திரங்களுக்கும் சரியான சட்ட பதிலடி கொடுத்து முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும், என்பது தமிழக தென் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை."

https://tamil.oneindia.com/news/tamilnadu/kerala-plays-dirty-politics-mullaiperiyar-dam-issue-328189.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத்தவர்கள்.... என்றுமே, தமிழர்களை வெறுப்பவர்கள் என்பதனை....  எமது ஈழப் போரின் போது  நன்கு அறிந்து கொண்டோம்.
கொஞ்சம் பெரிய வரலாறு தான்....  இந்தத் தலைப்புக்கு,  யாழ். கருத்துக் களத்தில்  இதனை பதிவு செய்ய வேண்டியது   அவசியம்.   

இந்திரா காந்தி, இந்தியப்  பிரதமராக  காலத்தில்....  அவரது வெளியுறவுச்  செயலாளராக  பார்த்த சாரதி  என்ற தமிழர்  இருந்தார். அது வரை.. சுமூகமாக  முன்னேறிக் கொண்டிருந்த போராட்டம்,    அவரின் மறைவிற்கு பின் வந்த  இந்தியப்  பிரதமரான  ராஜீவ் காந்தி  வந்த போது... வெளியுறவுச்  செயலாளர்காளாக... மேனன்,  நாராயணன்... என்று தொடர்ந்து மூன்று மலையாளத்தவர்கள் அந்தப் பதவியில் அமர்ந்தார்கள்.

அவர்கள்...  மெல்ல, மெல்ல... தமிழனை  கருவறுக்கும் திட்டத்தில்  ஈழப் போராட்டம்  சோகத்தின் முடிவிற்கு வந்தது.

இவ்வளவிற்கும்  இந்தியாவின்  அதி முக்கிய பதவிலிருந்த  நாராயணன் என்ற வெளியுறவுச்  செயலாளரை... 
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக  இருந்த போது...  கொழும்பு  பண்டாரநாயக்க சர்வ தேச மண்டபத்தில் நடந்த கூட்டம்  ஒன்றிற்கு...   அவரை அவர்  இருந்த விடுதியில் இருந்து, பாதுகாப்பு படை சகிதமாக  அழைத்து வரப்பட்டு....  கூட்டம்   முடிந்த பின், அவரை மீண்டும் அவரின் விடுதிக்கு கொண்டு போய் விடாமல், அவராக  தேடிப்  பிடித்த ஒரு வாடகை வாகனத்தில் (ரக்சி / ஆட்டோ)  இராணுவ  பாதுகாப்பு வலயத்திற்குள்   இருந்த  விடுதியின்  அரை கிலோ மீற்றர் முன்பாக செருப்புடன் நடக்க வைத்து.. அழகு பார்த்தது, ஸ்ரீ லங்கா.

அப்படி...  பல செயல்களை செய்தும், மலையாளத்தவர்கள்... சிங்களவனுக்கு சார்பாகவே நடந்து கொண்டார்கள்.

இந்த ஆத்திரத்தில் தான்...   இந்து ராம் தலைமையில்....  சென்னையில்,  நடந்த கூட்டம் ஒன்றிற்கு,
ஒய்வு பெற்ற  நாரயணன் வந்த போது...   ஒரு தமிழக இளைஞன், தனது  செருப்பை கழட்டி அவர் முகத்தில்  வீசினான். 

ஈழத்து  தமிழர்களுக்கும், தமிழகத்து தமிழர்களுக்கும்.... எப்பவும் மற்ற இனத்தைப் பார்த்து இரக்கம் காட்டி, உதவி செய்யும் குணத்தால்... பல இடங்களில்,  அவமானப் பட்டு  கூனிக்  குறுகி நிற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா,

தலைவர் பிரபாகரன் கூட மலையாளிதான் என்று ஆதாரங்களுடன் செய்தி முன்னர் வந்தது பார்க்கவில்லையா!

p

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி.

அன்று மலையாளத்தவர்கள் இல்லாமல் வேறு யாரு இந்திருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது.  ஏன் தமிழக தமிழர்கள் அந்த நேரத்தில் அதிகாரிகளாக இருந்திருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும். ஏனெனில் அதிகாரிகளுக்கான உத்தரவு அனைத்தையும் இட்டு யுத்தத்தை நடாத்திய இந்திய மத்திய அரசும் பார்ப்பனியமும்.. 

பார்த்தசாரதி இருந்த காலம் இந்திரா காந்தி அம்மையாரின் காலம். இந்திரா காந்தி எம் மக்கள் மீது அன்பு கொண்டு எமக்காக ஆதரவு கொடுக்கவில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்ந்தமையால் (வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையத்தை இலங்கையில் நிறுவும் அளவுக்கு...) இலங்கையை வழிக்கு கொண்டு வர இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவு காட்டியது.

நாங்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொள்ளாமல், அதன் தமிழ் தேசிய தீவிர எதிர்ப்பை விளங்கி கொள்ளாமல் தனி நபர்களையும் அவர்கள் சார்ந்த இனத்தையும் கரிச்சுக் கொட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா,

தலைவர் பிரபாகரன் கூட மலையாளிதான் என்று ஆதாரங்களுடன் செய்தி முன்னர் வந்தது பார்க்கவில்லையா!

கிருபன் ஜீ....   தமிழில் இருந்து பிறந்தது தானே.... மலையாளம்.
இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர்கள், மலையாள கலப்பு உள்ளவர்கள்.
மலையாளம் என்ற மொழி தோன்றி.. 700 வருடம் அளவில் தான் இருக்கும்.

அத்துடன்.. தெலுங்கு, கர்நாடகம் எல்லாவற்றுக்கும், தாய்.... தமிழ் தான்.  
அதனைத்தான்.. திராவிடம் என்று அழைப்பார்கள்.
(தமிழ்நாட்டில் உள்ள,  பம்மாத்து திராவிட கட்சிகளை குறிப்பிடவில்லை.) 
தென் நாட்டு  மொழி எல்லாவற்றுக்கும், மூலமானது தமிழ் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி.

அன்று மலையாளத்தவர்கள் இல்லாமல் வேறு யாரு இந்திருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது.  ஏன் தமிழக தமிழர்கள் அந்த நேரத்தில் அதிகாரிகளாக இருந்திருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும். ஏனெனில் அதிகாரிகளுக்கான உத்தரவு அனைத்தையும் இட்டு யுத்தத்தை நடாத்திய இந்திய மத்திய அரசும் பார்ப்பனியமும்.. 

பார்த்தசாரதி இருந்த காலம் இந்திரா காந்தி அம்மையாரின் காலம். இந்திரா காந்தி எம் மக்கள் மீது அன்பு கொண்டு எமக்காக ஆதரவு கொடுக்கவில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்ந்தமையால் (வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையத்தை இலங்கையில் நிறுவும் அளவுக்கு...) இலங்கையை வழிக்கு கொண்டு வர இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவு காட்டியது.

நாங்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொள்ளாமல், அதன் தமிழ் தேசிய தீவிர எதிர்ப்பை விளங்கி கொள்ளாமல் தனி நபர்களையும் அவர்கள் சார்ந்த இனத்தையும் கரிச்சுக் கொட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

நிழலி,

உங்கள் பதிவின் முதல் பந்தியில்.... இதுதான்,  நடந்து இருக்கும்....  
என்ற  எதிர்வு  கூறலை  அல்லது  உங்களின் சிந்தனையை... கிரகிப்பதற்கு சிறிது நேரம் எடுத்தது.

பார்ப்பனியம்  இந்திய அரசியலில்.... இந்திய  அரசியல் உயர் கட்டமைப்புக்குள், ஆணி வேராக  உள்ளமை  பிரபல தமிழக அரசியல் வாதிகளுக்கும்  தெரியாத விடயம் அல்ல. 
இவர்கள்...  திராவிட கும்பல்களுக்கு...   பூணுலை, போட்டுக்  கொண்டு..  பெரிய ஊழலை செய்ய விட்டு விட்டு....  
இனத்தையே....  அழித்து  விடுவதை, கண் முன்னே காண்கின்றோம்.  
அது தான்... வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் தென் மாநில வறட்சியை போக்க அடுத்த மாநிலத்தின்   நீர் பிடிப்பு பகுதிகளுக்கு குத்தகை செலுத்தி மேற்க்கே போகும் நதியின் ஒரு பகுதியை அணையை அமைத்து   மலையை குடைந்து பாரிய குழாய்கள் ஊடாக கிழக்கே திருப்பி விட்டுள்ளார்கள் அப்படி திருப்பி பெறும் நீரை தமிழ்நாடு ஏன் குறைத்து கொள்கிறது என்பது கேரளாவின் கேள்வி .ஆற்று மணல் கொள்ளைக்காரன் முதல்வர் ஆனால் என்ன நடக்கும் ? அத்துடன் அங்குள்ள மீத்தேன் எடுக்கும் திட்டம்களுக்கு நிலக்கீல் நீரால் பாரிய சிலவு ஏற்படுவதை தவிர்க்கவுமே திட்டமிட்டு காவிரி அரசியல் இங்கு இறைவன் வேறு விதமாக நினைத்துகொண்டான் .அப்படியும் கடைமடை (நீர் செல்லும் கடைசி இடம் ) போன்ற இடங்கள் திட்டமிடபட்டே தண்ணியை போக விடவில்லை காரணம் மீத்தேன் .

தமிழ் நாடு சூறையாடபடுகின்றது ஒரு பக்கம் நீருக்கு அடிபாடு ஒருபக்கம் நீரை எடுத்து கொள்ளுங்கள் என்று கொள்ளுப்பாடு இங்கு கேரளாவின் வாதம் ஒழுங்கு மரியாதையா தமிழ்நாட்டு பக்கம் எடுக்கவேண்டிய நீரை ஏன் எடுக்கவில்லை எடுத்து இருந்தால் அனர்த்தம் குறைந்து இருக்கும் என்பது வாதம்  அதுவும் குழாய்கள் ஊடாக பெறப்படும் நீர் மின் 140 மெகாவாட் இருந்தும், மீடியா மணல் கொள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டில்  இருந்து அவர்களுக்கு பாட்டு பாடுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்குதான் கேரளாவின் வஞ்சக தந்திரம் உள்ளது. முதலில் வரலாற்றை சரியாக புரிந்து கொள்வது நல்லது..

முல்லைப் பெரியார் அமைந்துள்ள நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும், இடுக்கி மாவட்டம் முழுவதும் 60 ஆண்டுகள் முன்பு வரை தமிழகத்தின் பாரம்பரிய பகுதியாகும்.  தமிழகத்தின் துரதிஷ்டம் பதவிக்கு வரும் அனைத்து முதல்வர்களுமே ரொம்ப யோக்கிய சிகாமணிகள் போல நடந்துகொள்வார்கள். அப்படியே அப்போதைய முதல்வர் காமராஜரும் தமிழக எதிர்கட்சிகள் எச்சரித்தும் இடுக்கி மாவட்டத்தை கேரளாவிற்கு நேருவின் வேண்டுகோளுக்கிணங்க தாரை வார்த்தார். (இந்த நேருவின் அலுவலகம், வீடு அனைத்திலுமே அப்போது இடுக்கியில் எஸ்டேட் வைத்திருந்த எம்.ஜே பணிக்கர் முதல், மல்லுகள் பணியில் இருந்தனர்.)

இன்றும் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களின் மக்கட்தொகையே பெரும்பான்மை. இப்பெரும்பான்மையை குறைக்க முயற்சித்து சிறைக்கைதிகள், குண்டர்களுக்கு இலவச நிலமும், ஊக்கத்தொகை பணமும், கொடுத்து இடுக்கி மாவட்டத்தில் மலையாளிகளை குடியேற்றியவர், அப்போதைய கேரள முதல்வர், 'பட்டம்' தாணுப்பிள்ளை அவர்கள்.

இந்திய சுதந்திரதிற்கு முன்பு ஆங்கிலேயர்களால் போடப்பட்டது நதிநீர் பங்கீடு பற்றிய முல்லைப்பெரியார் ஒப்பத்தம். இது 999 வருடங்களுக்கானது.. அதை மாற்ற வேண்டுமெனில் இரு மாநிலங்களின் சம்மதம் தேவை. (உண்மையில் இந்த ஒப்பந்தம் மதுரை அரசாங்கத்திடமே ஆங்கிலேயர்கள் போட்டிருக்க வேண்டும், ஏனெனில் இடுக்கியை ஆண்ட பூஞ்ஞார் குறுநில மன்னன் மதுரையின் ஆளுகைக்கு உட்பட்டவன். ஆனால் அம்மன்னன், குத்தகைக்கு அந்நிலங்களை திருவிதாங்கூர் அரசிற்கு விட்டுவந்துள்ளான். அதில் தெளிவில்லாமல், ஆங்கிலேயர்கள் இந்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசுவிடம் 999 வருடங்களுக்கு போட்டுக்கொண்டது.)

இன்றும் இந்த ஒப்பந்தம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அணையின் நீர் மட்டத்தை உடன்படிக்கையில் உள்ளதுபடி 152 அடியாக, அணைக்கு மேலதிக பாதுகாப்பு பொறிமுறைகள், ஸ்திரதன்மைக்கு ஏற்பாடுகள் முடிந்தவுடன் உயர்த்திக்கொள்ளலாம் எனவும், அதுவரை 142 அடிவரை நீரை தேக்கிவைத்துக்கொள்ளலாமெனவும் தீர்ப்பளித்துவிட்டது.

இது கேரளாவிற்கு பெருத்த ஏமாற்றம்..

இந்த முல்லைப்பெரியார் அணையின் பின் முக்கிய பொருளாதார அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. அது புரியாமல், கேரள மக்களை பயமுறுத்தி, 'அணை உடைந்துவிடும்' என்ற உணர்ச்சியில் ஏப்போதும் வைத்திருக்க அம்மாநில அரசாங்கம் விரும்புகிறது. ஏனெனில் கீழேயுள்ள இடுக்கி அணையின் கொள்ளளவு வடிவமைப்பும், எதிர்பார்த்த அளவு நீர் வராததுவும் ஆகும். பின் எப்படி இடுக்கி அணையின் கீழ்  ஏற்கனவே நிறுவியுள்ள நீர் மின்சார உற்பத்தியை மேற்கொள்வது..? அணையின் நீர்ப்பிடிப்பு தாழ்வான பகுதிகளில் பகுதிகளில்  அமைக்கப்படுள்ள அரசியல்வாதிகளின் உல்லாச விடுதிகள்..கட்டமைப்புகள், 152 அடிவரை நீரை தேக்கினால் மூழ்கிவிடும் என்ற அச்சம்.

இன்னொரு மாநிலத்தின் ஆதிக்கம், ஆளுமை தன் மண்ணில் இருப்பதை கேரளாவின் கண்ணை உறுத்துகிறது. ஏனெனில் எற்கனவே போட்டுள்ள ஒப்பந்தப்படி அணையின் கட்டுப்பாடும், அதன் நீர் பிடிப்பு பகுதிகளை பராமரிப்பதும், இன்றும் தமிழகத்தின் உரிமை.

கேரளாவில் மழையினால் வெள்ளம் அடித்துச் சென்ற பிறகுதான் முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டமே 142 அடியை தொட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தற்போதைக்கு 142 அடியும், அணைக்கு மேலதிக பாதுகாப்பு முறைகள், முடிந்தவுடன் 152 அடியும் வைத்துக்கொள்ளலாம், அணை பாதுகாப்பாக உள்ளது என கூறிய பின்னர், எப்படி இவற்றை கவிழ்ப்பது என்ற உத்தியில்தான் துயரத்திலும், வஞ்சம் தீர்க்கும் வகையில் கேரளா மீண்டும் வழக்கை தூசி தட்டி மனுத்தாக்கல் செய்துள்ளது.

இவ்வெள்ளத்தின் பின் முல்லைப்பெரியார் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவும் தோராயமாக 2.5 டி.எம்சி தண்ணீர் மட்டுமே..இதானல்தான் 'வெள்ளம் வந்தது' என்பது கேலிக்கூத்து.

கேரளாவை பொறுத்தவரை, 'முல்லைப்பெரியார் அணையை காலி செய்யவேண்டும்' அதற்கு எந்த கீழ்த்தர வேலையையும் செய்யத் தயார் என்ற நிலையில் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.