Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

எகேலுவின் கதை


Recommended Posts

எகேலுவின் கதை - சிறுகதை

 

p26a_1534850357.jpg

ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம்.

p26b_1534850301.jpg

ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாமல், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட குட்டி நாடு. ஃபிரெடரிக்கின் மனைவி அமெரிக்கக்காரி, பெயர் மார்த்தா. சோமாலிலாண்டில் குடிவகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஃபிரெடரிக் ரகசியமாக வீட்டிலேயே சோளத்திலிருந்து பீர் தயாரித்து இரவு நேரத்தில் அருந்துவார். ஒரு வருடமாக வாழ்க்கை நிம்மதியாகப் போனது. ஒருநாள் போலீஸ் எப்படியோ இதைக் கண்டுபிடித்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

ஃபிரெடரிக் தம்பதியின் வேலைக்காரி, அதிகாலை சந்தைக்குப் போனவள் அலறிக்கொண்டு திரும்பி வந்தாள். அழுதபடியே மார்த்தாவிடம் ஏதோ சொன்னாள். மார்த்தாவும் அவளுடன் சந்தைக்கு ஓடினாள். அங்கே வழக்கத்திலும் பார்க்க ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. 100, 200 பேர் சுற்றிவர நின்றார்கள். மார்த்தா இடித்து முன்னேறி எட்டிப்பார்த்தார். அவர் இதயத்தை யாரோ பிய்த்துப் போட்டதுபோல இருந்தது. சாக்குத்துணியில் சுற்றி அப்போதுதான் பிறந்த சிசு ஒன்று வீதியிலே வீசப்பட்டிருந்தது. எறும்புகளும் ஈக்களும் மொய்த்தன. கண்கள் மூடியிருந்தாலும் குழந்தை முனகும் சத்தம் கேட்டது. மூன்று குட்டி விரல்கள் வெளியே நீட்டி இருந்தன. பார்ப்பவர்கள் மனதை உருக்கும் காட்சி அது. ஊர்த்தலைவர் கட்டளையிட்டிருந்த படியால், ஒருவராலும் சிசுவை அணுக முடியவில்லை.p26c_1534850378.jpg

மார்த்தாவிடம் டெலிபோன் வசதி கிடையாது. ரேடியோவில் கணவரைத் தொடர்புகொண்டார். நீண்ட தாடி இருந்ததால் ஊர்த் தலைவருக்கு அவரிடம் மரியாதை இருந்தது. ஆனால், சிசுவை ஒருவரும் தொடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஃபிரெடரிக்கின் மேலதிகாரிகள் ஜெனீவாவைத் தொடர்புகொண்டு, அவர்கள் மூலம் அரசாட்சியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ரோட்டில் கிடந்த குழந்தையை மார்த்தா மீட்டபோது பின்மதியம் 3 மணி. ஊர்த்தலைவரும் மக்களும் அவரை வெறுப்புடன் பார்த்தார்கள். வீடு வரை தொடர்ந்து மிரட்டினார்கள். அவர் பொருட்படுத்தவில்லை; பயந்ததாகக் காட்டிக்கொள்ளவுமில்லை. வீடு வந்த பிறகுதான் குழந்தை ஆண் என்பதைக் கண்டுபிடித்தார். ‘எகேலு’ என்று பெயர் சூட்டினார். ஹாவாய் மொழியில் அதன் பொருள் மூன்று. கணவர் கேட்டதற்குச் சொன்னார், ``இன்று தேதி மூன்று. நேரமும் மூன்று. குழந்தை மூன்று விரல்களைக் காட்டி என்னை அழைத்தது.’’

குழந்தையின் சுவாசப்பை மெள்ள மெள்ள மூச்சுவிட தானாகவே கற்றுக்கொண்டது. எகேலு திடீரென விக்கி, ஒரு கணம் விழித்தான். அந்தக் கணத்தில் மார்த்தாவுக்கு அந்த விழிகள் நன்றி சொன்னதுபோலப் பட்டது. ஆரம்பத்தில் இருந்தே எகேலு வித்தியாசமானவன் என்ற நினைப்பு மார்த்தாவுக்கு இருந்தது. அவன் சிரிப்பது கிடையாது. பசிக்கு அழுவதும் இல்லை. பலவந்தமாகப் பாலை ஊட்டினால்தான் உண்டு. அவன் பார்வை, எதையும் பார்க்காத பார்வை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல இருக்கும். நடுச்சாமத்தில் சிலவேளை மார்த்தா விழித்துக்கொண்டு குழந்தையைப் பார்ப்பார். அது தூங்காமல் நெடுநேரம் கிடக்கும். அந்தக் கண்கள் எங்கோ தூரத்தில் நிலைத்திருக்கும்.

p26d_1534850412.jpg

தவழத் தொடங்கியதும் குழந்தை வீடு முழுக்க நகர்ந்து ஆராய்ந்தது. ஃபிரெடரிக்கிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. எகேலு, புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்துப் பார்ப்பான். கிழிக்காமல், கசக்காமல் பக்குவமாக ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத் தேவையேயில்லை. ஒரு புத்தகத்தைக் கொடுத்தால் போதும். அதனுடனேயே அன்று முழுவதும் கழிப்பான்.

ஒன்றரை வயது வரை அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. சோமாலிலாண்டின் தலைநகரமான ஹர்கீசாவுக்குச் சென்று அங்கே அவனை மருத்துவரிடம் காட்டலாமா எனக் கணவனும் மனைவியும் ஆலோசித்தார்கள். ஆனால், அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஒருநாள் இரவு, வழக்கம்போல மூவரும் மேசையில் அமர்ந்து உணவருந்தினார்கள். உயரமான நாற்காலியில் உட்கார்ந்த எகேலு, கரண்டியால் உணவை எடுத்து வாயில் வைத்தான். அவன் கண்கள் மட்டும் எங்கோ தூரத்தில் சஞ்சரித்தன. ஃபிரெடரிக் நெஞ்சுவரை வளர்ந்துவிட்ட தாடியைத் தன் மேல் சட்டைக்குள் நுழைத்துவிட்டு, மாட்டிறைச்சியை வெட்டி வாயில் வைத்தார். பிறகு வாழைப்பழத்தைக் கடித்துக்கொண்டு மேசையில் தாளம்போட்டு மகனுக்கு விளையாட்டு காட்டினார். ``நிறுத்து. நான் சிந்திக்கிறேன் அல்லவா?’’ என்று சுத்தமான ஜேர்மன் மொழியில் எகேலு வாயைத் திறந்து பேசினான். ஃபிரெடரிக்கின் கை அரை அடி உயரத்தில் மேசைக்குமேல் அப்படியே நின்றது. மார்த்தா, தன்  வாயில் வைத்த உணவை விழுங்கவில்லை. ``என்ன சொன்னாய் மகனே?’’ என்று அதிர்ச்சி நீங்காமல் ஃபிரெடரிக் கேட்டார். மறுபடியும் எகேலு அதையே சொன்னான்.

அன்று மார்த்தாவும் ஃபிரெடரிக்கும் நீண்ட நேரம் எகேலு பற்றி விவாதித்தார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று மட்டும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாளில் ஜேர்மன் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் அவன் தடங்கல் இல்லாமல் பேசுவது தெரியவந்தது. மற்ற குழந்தைகள்போல வார்த்தை வார்த்தையாக அவன் பேசவில்லை. வசனங்களை இலக்கணச் சுத்தமாக அமைத்து நிதானமாகப் பேசினான். இவன் அபூர்வமான குழந்தை என்று உணர்ந்தபிறகு, ஃபிரெடரிக் இன்னும் அதிக கவனம் எடுத்தார். எழுத்துகளையும் அவற்றின் உச்சரிப்பையும் சொல்லிக்கொடுத்தபோது முதல் தடவையாக எகேலுவின் முகத்தில் மகிழ்ச்சி விளையாடியது. புத்தகப் பக்கங்களை சும்மா திருப்புவதுபோய், எழுத்துக்கூட்டித் தானாகவே அவற்றைப் படிக்க ஆரம்பித்தான்.

p26e_1534850436.jpgஅவனுக்குப் பேச்சு வந்தாலும் அவன் தொடர்ந்து பேசுவது கிடையாது. நீண்ட மௌனம்தான். இன்னது செய்வான், இன்னது செய்ய மாட்டான் என்றும் சொல்ல முடியாது. தினம் தினம் ஆச்சர்யப்படுத்தினான். ஒருநாள் மதியம் அகாசியா மரத்தின் கீழ் நின்றபோது ``அம்மா’’ என்றான். மார்த்தாவுக்கு திக்கென்றது. ``புறப்படு. மழையைப் பார்க்கப் போவோம்.’’ ``மழையா, அது என்ன?’’ என்றார் மார்த்தா.

``அதற்கு, உருவம் கிடையாது; நிறம் கிடையாது; எல்லை கிடையாது; திசை கிடையாது. தொடலாம். ஆனால், பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் இருக்கும்.’’ ``அப்படியா?’’ என்றார் மார்த்தா. அவரால் வேறு பதில் தயாரிக்க முடியவில்லை.

இன்னொரு நாள் ``அம்மா’’ என்றான். மார்த்தா அதிர்ச்சியை ஏற்பதற்குத் தயாராக முகத்தை மாற்றிக்கொண்டு நின்றார். ``ஒருமுறை நீ எனக்கு சூடான பால் தந்தாய். எனக்கு வாய் வெந்துவிட்டது. நான் கதறிக் கதறி அழுதேன்’’ என்றான்.

``ஆமாம். தவறுதலாய்ச் செய்துவிட்டேன். உனக்கு அப்போது மூன்று மாதம். எப்படித் தெரியும்?’’ என்றார். ``எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனால், அப்போது என்னால் பேச முடியவில்லை. நீ பாலைப் புகட்ட வரும்போது நான் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுவது அதனால்தான். எங்கே சூடான பாலைத் தந்துவிடுவாயோ என்ற பயம்தான்.’’ ``மன்னித்துவிடு எகேலு’’ என்றாள் மார்த்தா. அவன் பார்வை, பல மைல்கள் தூரத்துக்குப் போய்விட்டது.

ஒருநாள் எகேலுவை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அவர் சோதனைகள் செய்து முடித்த பிறகு கூறினார், ``இவன் அபூர்வமான குழந்தை மேதை. அதுதான் இவன் மனம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையின் வசம் இருக்கிறது. அதைக் கெடுக்கும்விதமாக ஏதாவது செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றுமே கற்பிக்கத் தேவையில்லை. அவனாகவே கற்றுக்கொள்வான். வசதிகளை மட்டும் செய்துகொடுங்கள். இசைமேதை மோஸார்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் காலத்தில் பிரபல இசை மேதையாக இருந்தவர் பெயர் கிரிகோரியோ. அவர் அபூர்வமான இசைக்கோவை ஒன்று தயாரித்து அதை போப்பாண்டவர் முன்னிலையில் இசைத்துக்காட்டினார். அந்தக் கூட்டத்தில் சிறுவன் மோஸார்ட்டும் இருந்தான். அன்று வீட்டுக்குத் திரும்பிய மோஸார்ட்டால் இரவு தூங்கவே முடியவில்லை. அவன் கேட்ட இசை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த இசையின் குறிப்புகளை ஞாபகத்திலிருந்து அப்படியே மீட்டு இரவிரவாக எழுதினான். காலை ஆனபோது அந்த அற்புதமான இசைக்கோவை முழுவதையும் திரும்பவும் படைத்துவிட்டான். உங்கள் மகனும் பெரிய மேதை. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவன் வழியிலேயே விடுங்கள்’’ என்றார்.

ஒவ்வொரு நாளையும் எகேலு புதிய நாளாக மாற்றினான். ஒரு விடுமுறை நாள் வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து மூவரும் வேடிக்கை பார்த்தார்கள். பெற்றோரின் சம்பாஷணையில் அவன் கலந்துகொள்வதில்லை. வழக்கம்போல புத்தகம் ஒன்றின் பக்கங்களைத் திருப்பியபடி இருந்தான். வீட்டிலே உள்ள புத்தகங்கள் முடிந்துவிட்டதால், வெளிநாட்டிலிருந்து நூல்களை வரவழைத்துக் கொடுத்தார் ஃபிரெடரிக். எதைப் படித்தாலும் அதை அவன் மறப்பதில்லை. இன்ன புத்தகம் வேண்டும் என்று அவன் கேட்பதுமில்லை. அன்றும் அப்படித்தான் ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் வைத்து, பக்கம் பக்கமாகப் புரட்டிக்கொண்டிருந்தான்.

மஃரிப் தொழுகைக்கான அழைப்பு, காற்றில் வந்தது. ஓர் அம்பு எய்தால் அது விழும் இடம் தெரியவேண்டும். அதுதான் மஃரிப் தொழுகைக்கான நேரம். பகல் முடியவில்லை, இரவு தொடங்கவில்லை. பிரமாண்டமான பறவை ஒன்று சத்தமிட்டபடி மேலே பறந்துபோனது. எகேலு ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு ``அது கோரிபஸ்டார்ட் பறவை. எங்கேயோ பக்கத்தில் நிலத்திலே குழிபறித்து முட்டை இடப்போகிறது. உலகிலேயே அதிக எடைகொண்ட பறவை இதுதான்’’ என்றான். இத்தனைக்கும் அவன் அந்தப் பறவையை இதற்கு முன்னர் கண்டது கிடையாது. எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் படித்தவைதான்.

அடுத்து நடந்த சம்பவத்துக்குப் பிறகுதான் நைரோபிக்கு மாற்றல் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தம்பதிக்குத் தோன்றியது. வருமானவரிக் கணக்கு சம்பந்தமாக ஃபிரெடரிக் ஏதோ எழுதியவர் பாதியில் மார்த்தாவை அழைத்து ``எங்கள் கூட்டு வருமானத்தில் 23 சதவிகிதம் எவ்வளவு?’’ என்று கேட்டார். மார்த்தா கேல்குலேட்டரைத் தேடியபோது ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்ட எகேலு, சரியான விடையைச் சொன்னான். அவனுக்கு 1, 2, 3 என எண்களை யாரும் கற்றுக்கொடுத்தது கிடையாது. தானாகவே எங்கேயோ படித்து, கணித அறிவை வளர்த்திருந்தான். ‘எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் கேட்க முடியாது. ‘எப்படியோ தெரியும்’ என்றுதான் பதில் வரும்.

அவர்கள் மாற்றல் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ‘ஒரு மாதம் முன்னர் நைரோபியில் அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். சில அமெரிக்கர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். அங்கே தொண்டு நிறுவனத்துக்கு ஆள்கள் தேவை. உங்களுக்கு அங்கே போகச் சம்மதமா?’ என மேலதிகாரி எழுதிய கடிதம் வந்தது. உடனேயே சம்மதம் தெரிவித்து ஃபிரெடரிக் எழுதினார். நைரோபி வந்ததும் முதல் வேலையாக தாடியை மழித்தார். எகேலுவுக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடிய சில நாளில் பிரபலமான மனநல மருத்துவர் ஒருவரைப் போய்ப் பார்த்தார்கள். சோமாலிலாண்ட் மருத்துவரைப்போலவே அவரும் ``ஒன்றுமே செய்யவேண்டாம். பையன் அவன் வழியிலேயே வளரட்டும். அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு’’ என்று நம்பிக்கையூட்டினார்.p26f_1534850455.jpg

மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்கி வரவேற்பறையைத் தாண்டியபோது பெரும்சத்தம் கேட்டது. அந்தக் காட்சியைக் கண்டு மூவரும் செய்வதறியாது உறைந்துபோனார்கள். தரையிலே ஒரு பெண் உருண்டுகொண்டிருந்தாள். நீள முரட்டுத் துணியால் உடம்பைச் சுற்றியிருந்ததால் அவள் ஒரு சோமாலியப் பெண் என யூகிக்க முடிந்தது. அவள் ஏன் கத்துகிறாள், என்ன மொழியில் பிதற்றுகிறாள் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக் காவலாளி,  ``சத்தமிட வேண்டாம்’’ என அவளை அதட்டினான். அவளுடைய ஓலம், ஆஸ்பத்திரியை நிறைத்தது.

மார்த்தாவின் கையை உதறிவிட்டு, அந்தப் பெண்ணிடம் ஓடினான் எகேலு. அவளிடம் ஏதோ கேட்டான். அவள் பதில் சொன்னாள். மீண்டும் ஏதோ கேட்டான். அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது. காவலாளி அதைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றான். எகேலு வரவேற்பறைப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் அந்தப் பெண் சொன்னதை விவரமாகச் சொன்னான். ``அந்த அம்மாவின் கணவர் ரோட்டிலே வலியில் துடித்து மயங்கிக் கிடக்கிறார். உடனே உதவி கிடைக்கா விட்டால் அவர் உயிர் போய்விடும். அவசர கவனிப்பு தேவை.’’

அடுத்த நிமிடம் ஆஸ்பத்திரி பரபரவென இயங்கியது. மனிதரை உள்ளே கொண்டுவந்து அவசர சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர் சொன்னார் ``இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கவே முடியாது.’’ அடுத்த நாள் பத்திரிகைகள், அந்தச் சம்பவம் பற்றி எழுதின. சில பத்திரிகையாளர்களும், டிவி சேனல்களும் எகேலுவைப் பேட்டிகண்டன. எகேலு ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஸ்வாஹிலியிலும் எந்தவிதத் தயக்கமுமின்றிப் பேட்டி அளித்தான். ஒரே நாளில் எகேலு நாட்டில் மிகப் பிரலமாகிவிட்டான்.

எகேலுவுக்குப் பள்ளிக்கூடம் தேவையில்லை, அவன் வீட்டிலேயே படிக்கலாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார் மார்த்தா. அவன் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவனுக்கு எழுத்து வராது. தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது. வீட்டிலேயே எழுதப் படிப்பிக்கலாம் என மார்த்தா நினைத்தார். மனநல மருத்துவர் வேறு மாதிரி அபிப்பிராயப்பட்டார். ``அவன் சமுதாயத்தில் வளர வேண்டியவன். பள்ளிக்கூடத்தில் அவன் புதிதாக ஒன்றையுமே கற்கப்போவதில்லை. ஏற்கெனவே கற்றுக்கொண்டதைத்தான் கற்பிப்பார்கள். ஆனாலும் வகுப்பிலே மற்ற மாணவர்களோடு பழகுவது அவனுக்கு உலகத்தைக் கற்றுக்கொடுக்கும்’’ என்றார்.

மார்த்தா மழலையர் பள்ளிக்கூடத்தை நோக்கி எகேலுவுடன் நடந்தார். விண்ணப்பப்படிவத்தை ஏற்கெனவே நிரப்பியிருந்தார். அனுமதி பொறுப்பாளர், எகேலுவைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்திருந்தார். ``வருக, வருக’’ என்று வரவேற்றார். ``எகேலு என்றால் பொருள் மூன்று அல்லவா? இப்போது உனக்கு மூன்று வயது நடக்கிறது. அப்ப சரி. நான்கு வயது நடக்கும்போது உன் பெயரை ‘நான்கு’ என்று மாற்றுவாயா?’’ ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார். மார்த்தாவுக்கு எரிச்சலாக வந்தது, ``இதுவா பள்ளிக்கூடம்? குழந்தையிடம் ஒரு ஆசிரியர் இப்படியா பேசுவது?’’ நிலத்தைப் பார்த்துக்கொண்டு எகேலு பேசினான், ``உங்களுடைய பெயர் பாட்ரு என்று வெளியே கதவில் எழுதியிருக்கிறது. பாட்ரு என்பது ஸ்வாஹிலி அல்ல, அரபு வார்த்தை. பூரணச்சந்திரன் என்று பொருள். உங்கள் முகம் சந்திரன்போலவும் இல்லை. பிரகாசமும் கிடையாது. வெறும் இருட்டுதான்’’ என்றான். யாரோ ‘கெக்’ எனச் சிரித்தார்கள். எகேலு கையைப் பறித்துக்கொண்டு வெளியே ஓட, மார்த்தா அவனைத் தொடர்ந்தார்.

வீடு திரும்பும் வழியில் எகேலு பேசினான். ``அம்மா, சாக்கிலே சுற்றி வீதியிலே வீசப்பட்டு கவனிப்பாரின்றிக் கிடந்த என்னை எடுத்து நீ வளர்த்தாய்.’’

``உனக்கு அது தெரியுமா?’’

``தெரியும் அம்மா. முழுக் கிராமமும் என்னைக் கொல்ல நினைத்தது. நீ தன்னந்தனியாக எதிர்த்து நின்று காப்பாற்றினாய். நீ எனக்குக் கொடுத்த அந்தப் பெரிய அன்பை, என்னால் திருப்பித் தரவே முடியாது. நான் எத்தனை ஆயிரம் புத்தகம் படித்து அறிவைப் பெருக்கினாலும் என்ன பிரயோஜனம்? அன்புக்கு நிகர் ஒன்றுமே கிடையாது. இந்த உலகத்தில் ஆகப்பெரியது அன்புதான். அது உன்னிடம் இருக்கிறது’’ என்றான்.

``மகனே, நாளைக்கு நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம், தத்துவவாதி ஆகலாம், படைப்பாளி ஆகலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஓர் ஏழை சோமாலிப் பெண்ணின் கணவரை, சாவிலிருந்து காப்பாற்றினாய். அதுதான் பெரிது. அந்த நேயம் உன்னிடம் இருக்கிறதே. நான் பெருமைப்படுகிறேன்’’ என்றார் மார்த்தா.

உருவம் இல்லாத, நிறம் இல்லாத, எல்லை இல்லாத, திசை இல்லாத, தொட மிருதுவான, ஆனால் பிடிக்க முடியாத ஆகாய மணம்கொண்ட மழையை,  எகேலுவின் கண்கள் முதன்முறையாகக் கண்டன.

அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: ஸ்யாம் 

https://www.vikatan.com

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
   “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

   “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

   “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

   ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

   ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 

   ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

   அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 
    
   **********
   இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

   “லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

   “சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

   “நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

   வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

   “ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

   “ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
   “என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

   “தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

   சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

   ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

   “உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

   மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

   கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

   சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

   ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

   நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

   மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

   ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

   எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

   என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள், 

   “அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

   “என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

   “இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

   “அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

   “என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

   “அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
   ❀ ❀ ❀ ❀ ❀
   (நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

   படம்: நன்றி ஓவியர் இளையராஜா  - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
  • By மல்லிகை வாசம்
   விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம்  கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. 
   இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை "ஊர்ல  உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு" என்று பரிகாசித்தாள் கல்யாணி. "சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு" என்று சொன்னவனை, "என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி.
   "இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ?, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ?, வேறு ஏதும் சொத்தோ?. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே?" என்றவனை "ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினாள் கல்யாணி. 
   குளிக்கும் போதும் மீண்டும், மீண்டும் அந்தக் கனவு பற்றியே சிந்தித்த அவன் மனம் அவனைச் சிட்னியை விட்டுத் தாயகத்தில் யாழ்ப்பாணத்துக்கு - கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது.
   (புதையலுக்கான தேடல் தொடரும்...)
    
  • By மல்லிகை வாசம்
   அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக  நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரையாடும்போதும் 'எந்த ஆபிசில...' என்று ஆரம்பித்து தான் அலுவலகத்தில் வேலை செய்வதைக் காட்டிக்கொள்வார்). இதனால் தான் இவருக்கு மிஸ்டர் ஆபீசர் என்ற பட்டப்பெயர் கிடைத்தது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவரது வீம்புப் பேச்சினாலேயே இவரது அலுவலகத்தில் சில ஊழியருடன் இவருக்குக் கருத்துவேறுபாடு முற்றி நிம்மதி இழந்து இன்று அறுபதாவது வயதில் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். 
   அலுவலக நினைவுகளில் இருந்து மீண்டவருக்கு 'ஒய்வு பெற்றுவிட்டோம், இனி மேல் என்ன செய்யலாம்?. என்ன தான் இருந்தாலும் அலுவலகம் சென்று போது நேரம் போவது தெரியவில்லை. இனிமேல் வாழ்க்கை வெறுமையாக இருக்கப்போகிறதே. பொழுதுபோக்குக்காவது எதாவது வேலை செய்தாக வேண்டுமே' என ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது  உமாவும், கவிதாவும் வருவதைக் கண்டார். அவர்கள் வந்தவுடனே இருப்புக்கொள்ளாமல் தனது மனதில் வந்த குழப்பத்தை அவர்களிடம் இவ்வாறு பகிர்ந்தார்: "உமா, கவிதா இஞ்ச வாங்கோ. ஓய்வு பெற்று ஒரே விசராய்க்கிடக்கு. அலுவலக வேலைபோல, ஆனால்  அழுத்தம் (stress) இல்லாமல், ஆனால் ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலை ஏதும் தேடுவம் என்று நினைக்கிறன். சம்பளம் பற்றிக் கவலை இல்லை. ஏதாவது செய்தாக வேணும்' என்றார்.
   உடனே மகள் கவிதா சொன்னாள் "அதுக்கு முகநூலில் (Facebookல்) இணைந்தாலே போதும். நீங்க விரும்பினமாதிரி வேலை பார்க்கலாம்". 
   அதற்கு ஆபீசர் சொன்னார்: "முகநூலா? என்ர அலுவலகத்திலும் அதைப்பற்றி எல்லாரும் சொல்லி இருக்கினம். உள்ள சோலியோட அதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்கேல. இருக்கிற வேலையையே ஒழுங்கா கம்ப்யூட்டர்ல செய்யக் காணேல. அப்படி முகநூலில் என்ன தான் விஷேஷம் இருக்கு?"
   அதன் அருமை பெருமைகளை மனைவியும், மகளும் எடுத்துச் சொல்லலாயினர்; கவிதா சொன்னாள் 'இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைப் பார்க்கலாம்!'
   "ஒரு சத்தமும் இல்லாமல் கொசிப் அடிக்கலாம்!" என்று உமா அடித்துவிட, 
   "24 மணி நேரமும் திறந்து இருக்கும் - விரும்பிய நேரத்துக்கு வேலைக்குப் போய் வரலாம்!,
   கிட்டத்தட்ட உங்கட சொந்த பிஸ்னசை மனேஜ் பண்ற மாதிரி!" என்று டெலிமார்க்கெற்றர் போல எடுத்து விட்டாள் கவிதா.
   "பக்கத்து வீட்டுப் பெடியனிட்ட ஏதும் உதவி தேவை எண்டா உதில call பண்ணியும் கதைக்கலாம் - அவன் எங்க நிக்கிறானோ இல்லையோ முகநூலில் மட்டும் 24 மணி நேரமும் இருப்பான்!" என்று உமா சொல்லவும் இறுதியாக மிஸ்டர் ஆபீசர் முகநூலில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். முகநூலில் அவருக்கு Profile ஒன்று open பண்ணி, மகளும், மனைவியும் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை அவருக்கு நண்பர்களாக இணைத்து விட்டனர்.
   ஆபீசர் விதம் விதமான படங்களை எடுத்துப் போட்டார்; அலுவலகத்தில் ரை கட்டியபடி எடுத்த ஒரு போட்டோ, பார்க்கில, பீச்சில மனைவி, மகளுடன் ஒரு செல்பி என குளியலறை, பள்ளியறை தவிர்த்து எல்லா இடங்களிலும் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தார். அநீதிக்கு எதிராகப் போராடினார், முகநூலில் வீராவேசமான கருத்தெழுதி. மனித உறவுகளின் உன்னதத்தைப் பற்றி நிலைத் தகவலில் சிலாகித்து எழுதினார், இங்கே மனைவி, மகளுடன் நேரத்தைச் செலவிட நேரமின்றி. லைக்குகளும் ('Like's), வாழ்த்துக்களும் இன்ன பிற கமெண்ட்ஸ்ம் (comments) குவிந்தன. பசித்திரு-தனித்திரு-விழித்திரு என ராமலிங்க அடிகளார் ஆன்மிகத்தில் உபதேசித்ததை முகநூல் வாழ்வில் கடைப்பிடித்தார் ஆபீசர். 
   போதாக்குறைக்கு அவரது பிறந்த நாளன்று வெளியே dinnerக்கு போக உமாவும், கவிதாவும் கேட்ட போது, "வெளி உலகத்திலை என்ன இருக்கு? இவ்வளவு காலமும் ஆபிஸ் ஆபிஸ் என காலத்தை வெறுமனே ஓட்டிட்டன்.  இங்க தான் (முகநூலில்) சுவாரசியமான உலகமே இருக்கு. இப்ப தானே இதுக்குள்ள இறங்கினனான். ஒரு கை பார்த்திட்டு தான் மற்ற வேலை" என்று சொல்லிவிட்டு பிறந்த நாளுக்கு வாழ்தியவர்களுக்கு நன்றி சொல்ல ஆயத்தமானார், முகநூலில். 
   "இந்த முகநூலில் இவரை இணைத்தது பிழையாப் போச்சு" எனக் கவிதா சலித்துக்கொள்ள, "ஓமோம், நீ தானே எல்லாத்துக்கும் காரணம்; இந்த மனுசன் ஓய்வு பெற்றால் சமையல், தோய்சல் எண்டு எனக்கு உதவியா இருக்கும் எண்டு கனவு கண்டுகொண்டிருந்தன்..." என உமா பெருமூச்சு விட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றார். 
   நாட்கள் சில சென்றன. ஒருநாள் வைகறைப் பொழுதில் மிஸ்டர் ஆபீசரின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த உமாவும், கவிதாவும் திடுக்கிட்டு விழித்தெழும்பி அவரது அறையை நோக்கி ஓடினர். அங்கே ஆபீசர் தனது தலையில் கைவைத்தபடி தன் கொம்ப்யூட்டரின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 
   "என்னப்பா உங்கட முகநூலை யாராவது ஹக் (hack) பண்ணிட்டாங்களா?" என்ற படி அவரருகே உமா சென்றாள், அப்படியாவது மனுசன் முகநூல் போதையை விட்டிடும் என்ற நப்பாசையில். "இல்லைப் பாரும், இந்த மூண்டு பேரும் எனக்கு நட்புக்கு அழைப்புக் (friend request) கொடுத்திருக்கிறாங்கள்" என்று அலறினார் ஆபீசர். 
   "யாரப்பா அது?" என்று கவிதா கேட்க, "என்ர அலுவலகத்தில என்னோட வேலை செய்தவங்கள். இவங்களால எப்போதும் எனக்கு வேலையில் நிம்மதி இருக்கவில்லை. என்னை எப்பவும் மனேஜரிட்ட மாட்ட வைத்துக்கொண்டே இருப்பாங்கள். இவங்கட கரைச்சல் தாங்காமல் தான் நான் கொஞ்சம் வெள்ளனவே ஓய்வெடுத்திட்டன் (retired) எண்டு சொன்னனான் தானே. இப்ப முகநூலிலையும் வந்து கரைச்சல் குடுக்கிறாங்கள். ராகு, கேது, சனி மூன்றும் வந்து friend request குடுக்கிறது போல இருக்கு" ஒரே மூச்சில் சொன்னவர் "கட்டாயம் இந்த நட்பு அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள(accept) வேண்டுமோ?" என கவிதாவைப் பார்த்து அப்பாவித்தனமாகக் கேட்டார். அவள் தான் இந்த விசயத்தில் அவருடைய ஆலோசகர். 
   கவிதா யோசித்துவிட்டுச் சொன்னாள் "ஏற்றுக்கொண்டால் அவங்கள் உங்களுக்கு முகநூலிலும் கரைச்சல் கொடுப்பாங்கள். ஏற்காமல் மறுத்தால் (reject) அதுவும் அவங்களுக்குத் தெரியும்" என்று சொல்ல ஆபீசர் குறுக்கிட்டு "இப்ப என்ன தான் செய்ய பிள்ளை?" என்று ஏக்கத்துடன் கேட்டார். "நீங்கள் ஒண்டுமே பண்ண வேண்டாம். அப்படியே விட்டிடுங்க. அப்படியே விட்டாலும் எப்படியாவது நோண்டப் பார்ப்பாங்கள். ஆகவே இனி முகநூலைப் பாவிக்கிறதைக் குறைத்துக் கொள்ளுங்கோ" என்று கவிதா கூற உமாவும் அதை ஆமோதித்தாள். 
   இது ஆபீசருக்குச் சற்று அதிர்ச்சியாக இருத்தாலும், சற்று நேரம் யோசித்துவிட்டு நடிகர் திலகம் அழுகையை அடக்கிப் பேசும் தொனியில் சொன்னார் "எனது முகநூல் நான் கடந்த மூன்று மாத காலமாகக் கட்டியெழுப்பிய அறிவு சார்ந்த சொத்து (intellectual property). அதை இலகுவாக விட்டுவிட முடியாது. எனினும் இந்த இக்கட்டான நிலையில் அதில் அதிக நேரம் செலவிடாது, ஏதாவது ஓர் தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாகத் தொண்டரா (voulnteer)  வேலை செய்தாலும் நல்லது தானே".
   உமாவும், கவிதாவும் இதை ஆமோதித்தனர். "இப்ப தான் உங்களைப் பிடித்த சனி (முகநூல் போதை) விலகியிருக்கு" என உமா சொல்ல, "எல்லாம் அந்த ராகு, கேது, சனியால் தான்" என ஆபீசர் குறும்பாகச் சொல்ல எல்லோரும் கலகலப்பாகச் சிரித்தனர்.
   "இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.
   (பின் குறிப்பு: இக்கதை  முழுக்க முழுக்கக் கற்பனையே. யாரையும் தனிப்படக் குறிப்பிடும் நோக்கிலோ அல்லது, நோகடிக்கும் நோக்கத்திற்காகவோ சித்தரிக்க முனையவில்லை. எனினும், மிஸ்டர் ஆபீசர் போன்றோரை நாம் நம் வாழ்வில் பல இடங்களில் பார்த்திருக்கலாம். மிக முக்கியமாக நமக்குள்ளேயே பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! நன்றி 😊)
  • By நவீனன்
   அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார்
      
       ராஜேஷ்குமார் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவள் பெயர் தமிழச்சி ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவளுக்கு என்றைக்குமே அலுப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால், இன்றைக்கு அந்தக் காட்சியை அவளுடைய கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தாலும், மனத் திரையில் ஒட்டாமல் வழுக்கிவழுக்கி விழுந்துகொண்டு இருந்தது. உடம்புக்குள் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக வெந்நீர் ஓடுவது போன்ற உணர்வு. நிமிடத்துக்கு ஒரு முறை அவளையும் அறியாமல் அனலாகப் பெருமூச்சு வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது.

   ஹாலில் இருந்து கயல்விழியின் மாமியார் சொர்ணமும் மாமனார் சதாசிவமும் வெளிப்பட்டு அவளை நோக்கி வந்தார்கள். ''நீ ஏம்மா சாயந்தரத்தில் இருந்து கொஞ்சம் டல்லாவே இருக்கே? உடம்புக்கு ஏதும் முடியலையா?''
   ''அது ஒண்ணும் இல்ல மாமா... இன்னிக்கு ஆபீஸ்ல கொஞ்சம் அதிகப்படி வேலை. அதான் கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்றேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தாப் போதும்!''
   ''நீ இப்படி டல்லா இருந்து நான் என்னிக்கும் பார்த்தது இல்லை. அதான் கேட்டேம்மா. பத்தரை மணிக்குள்ளே திவாகர் வரலைன்னா நீ சாப்பிட்டுப் படுத்துக்கோ.''
   ''சரி மாமா.''
   கயல்விழி மறுபடியும் ஜன்னலுக்கு வந்தாள். வெளியே மின்னிசோட்டா இப்போது குறைந்த வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது. 'காலம் இப்படியா... அசுரத்தனமாக நாலு கால் பாய்ச்சலில் ஓடும்? ஏதோ... நேற்றைக்குத்தான் திவாகரோடு ஃப்ளைட்டில் வந்து இறங்கின மாதிரி இருக்கிறது. மகள் மித்ராவுக்கு இப்போது 11 வயது முடியப்போகிறது. அடுத்த வருடம் வயதுக்கு வந்துவிடுவாள்!'
   ஏதேதோ யோசனைகளில் நிமிடங்கள் கரைந்துகொண்டு இருக்க... திடுமென்று வெளியே காரின் ஹாரன் சத்தம் கேட்டது. திவாகர்தான்!
   கயல்விழி வேகவேகமாகப் போய் முன் பக்க வீட்டுக் கதவைத் திறந்துவைக்க, திவாகர் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான். 40 வயது. ஆறடி உயரம். இளம் வழுக்கை. ஸ்டோன் வாஷ் பேன்ட், டி-ஷர்ட்.
     ''ஸாரி கயல்... கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மித்ரா தூங்கிட்டாளா?''
   ''ம்...''
   ''அப்பா, அம்மா?''
   ''11 மணி ஆகப்போகுதே. இன்னமுமா முழிச்சிட்டு இருப்பாங்க?''
   டைனிங் டேபிளுக்குப் போய் இரண்டு தட்டுக்களை எடுத்துவைத்தாள் கயல்விழி. வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக்கொண்டு எதிரில் வந்து உட்கார்ந்தான் திவாகர்.
   ஹாட் பேக்கைத் திறந்துகொண்டே கயல்விழி சொன்னாள், ''சாப்பிட்டு முடிச்சதும் 'லேப்டாப்'பை எடுத்து மடியில் வெச்சுக்காதீங்க. நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்.''
   ''இப்பவே பேசேன்.''
   ''வேண்டாம். மொதல்ல சாப்பிடுங்க.''
   ''ஏதாவது பிரச்னையா?''
   ''நீங்களும் நானும் பேசும்போதுதான் அது பிரச்னையா இல்லையான்னு தெரியும்.''
   ''நான் வந்ததுமே நோட் பண்ணினேன். இன்னிக்கு உன்னோட முகமே சரி இல்லை.''
   ''அதுகூட என்னோட மனசையும் சேர்த்துக்குங்க.''
   ''என்ன ஒரே சஸ்பென்ஸா இருக்கு?''
   ''சாப்பிடுங்க பேசுவோம். அந்த விஷயத்தைப் பத்திப் பேசறதுக்கு எனக்கும் சக்தி வேணும். அதைக் கேக்கிறதுக்கு உங்களுக்கும் சக்தி வேணும். சாப்பிடுங்க...''
   ''நீ இன்னிக்கு என்னோட கயல் மாதிரியே இல்லை. ஏதோ வேற ஒரு வீட்டுக்குள்ளே வந்துட்ட மாதிரி இருக்கு.''
   கயல்விழி பதில் ஒன்றும் பேசாமல் பரிமாற ஆரம்பித்தாள். அதற்குப் பிறகான நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன. திவாகர் சாப்பிட்டு முடிக்க, டைனிங் டேபிளைக் க்ளீன் செய்துவிட்டு, கயல்விழி படுக்கை அறைக்குள் நுழைந்தாள். டி.வி-யில் நியூஸ் சேனல் பார்த்துக்கொண்டு இருந்த திவாகர்... ரிமோட் மூலம் ம்யூட் செய்துவிட்டு, ஒரு புன்முறுவலோடு கயல்விழியை ஏறிட்டான்.
   ''என்ன விஷயம் சொல்லு?''
   ''மொதல்ல நான் கேக்குற சின்னச் சின்னக் கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லிட்டே வாங்க.''
   ''கேளுங்க மகாராணி.''
   ''நமக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் ஆச்சு?''
   ''12 வருஷம்.''
   ''அப்பா, அம்மா இல்லாத என்னை என்னோட அண்ணன்தான் பாசமா வளர்த்தார். படிக்கவெச்சார். இருந்தாலும் நம்ம காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிச்சதைப் பொருட்படுத்தாம உங்களை நான் கல்யாணம் பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணிட்ட அடுத்த வாரமே மின்னிசோட்டா வந்துட்டோம். இல்லையா?''
   ''ஆமா.''
   ''அடுத்த வருஷமே மித்ரா பொறந்துட்டா?''
   ''இல்லேன்னு யார் சொன்னது?''
   ''உங்களுக்கும் நல்ல வேலை; எனக்கும் நல்ல வேலை. நமக்குள்ளே இதுவரைக்கும் பொருளாதார ரீதியா ஏதாச்சும் பிரச்னை வந்திருக்கா?''
   ''இல்லை.''
   ''இந்த 12 வருஷ காலத்துல என்னிக்காவது ஒருநாள், 'ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?'னு நீங்க அலுத்துக்கிட்டது உண்டா?''
   ''சேச்சே! அப்படியரு நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது.''
   ''ஸோ... நான் உங்களுடைய அன்பான மனைவி?''
   ''சென்ட் பர்சென்ட்!''
   ''இப்படி ஓர் அன்பான மனைவி இருக்கும்போது உங்களுக்கு எதுக்காக அந்த சில்வியா?''
   ''சில்வியா?''
   ''ம்... உங்க ஐ.டி. பார்க்கில் ரிசப்ஷனிஸ்ட்டா வேலை பார்க்கிற சில்வியா!''
   ''அவளுக்கும் எனக்கும் என்ன?''
   ''அதை நீங்கதான் சொல்லணும்.''
   ''கயல், நீ பேசறது சரி இல்லை.''
   ''நான் பேசறது சரி இல்லையா? அவகூட ஒரு ரெஸ்டாரென்ட்டில் 'கேண்டில் லைட்' டின்னர் சாப்பிடற அளவுக்கு நீங்க நடந்துக்குறது சரி இல்லையா?''
   ''கயல்! போன வாரம் சாட்டர்டே நைட் ரெஸ்டா ரென்ட்டுக்கு அவளோடு டின்னர் சாப்பிடப் போனது உண்மை. பட், நான் மட்டும் போகலை. என்னோட புராஜெக்ட் சீஃப், அப்புறம் ஏ.வி.பி, வந்து இருந்தாங்க. சில்வியாவுக்கு கன்ஸ்யூமர் கோர்ட் மூலமா ஒரு பெரிய தொகை வந்தது. அதை செலிபரேட் பண்ண ட்ரீட் கொடுத்தா.''
   ''இதை நான் நம்பணும்?''
   ''நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. சில்வியாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு நீ நினைக்கிறே... அப்படித்தானே?''
   ''அப்படித்தான்!''
   ''அப்படியே வெச்சுக்க...'' - சொன்ன திவாகர் ஸ்விட்ச்சைத் தேய்த்து விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தான்.
   ''குட் நைட்!''
   அரை நிமிட நேரம் அங்கேயே நின்று திவாகரை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்த கயல்விழி பின், விருட்டென்று அறையைவிட்டு வெளியேறி, மித்ராவின் அறைக்குள் நுழைந்து அவள் அருகே படுத்துக்கொண்டாள்.
   நேரம் நள்ளிரவைத் தாண்டி இருக்க, யாரோ தன்னை உசுப்பும் உணர்வில் சட்டென்று விழித்துக் கொண்டாள் கயல்விழி.
   மித்ராவின் குரல். ''அம்மா!''
   ''எ... எ... என்ன மித்ரா!''
   ''ஏம்மா... இங்கே வந்து படுத்துட்டிருக்கே?''
   ''அப்பா ரூம்ல ஏ.சி. சரியா கூலிங் இல்லை. அதான் இங்கே வந்துட்டேன்.''
   மித்ரா குரலைத் தாழ்த்தினாள். ''அப்பா... ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்துகிட்டு என்னமோ மாதிரி இருமிட்டு இருக்கார்.''
   கயல்விழி எரிச்சலாக மகளைப் பார்த்தாள். ''நீ போய்ப் பார்த்து, என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அப்படியே 'காஃப் சிரப்'பை எடுத் துக் குடுத்துட்டு வா.''
   மித்ரா எழுந்து போனாள். இரண்டு நிமிஷம் கரைந்து இருந்தபோது மித்ராவிடம் இருந்து அலற லாக ஒரு சத்தம் வெளிப்பட்டது. ''அம்மா! இங்கே வந்து அப்பாவைப் பாரேன்...''
   கயல்விழி போர்வையை உதறிவிட்டு எழுந்து ஓடினாள். ஹால் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த திவாகர், இரண்டு கைகளாலும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நெளிந்தான்.
   ''க... க... கயல்! டா... டாக்டருக்குப் போன் பண்ணு''- திவாகரைப் பார்த்து அதிர்ந்துபோன கயல்விழி, பக்கத்து அவென்யூவில் இருக்கும் டாக்டர் ஹென்றிக்குப் பதற்றத்தோடு போன் செய்து விவரம் சொல்ல... அவரும் நைட் கவுனில் காரில் பறந்து வந்தார். திவாகரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, முகம் முழுவதும் பரவிக்கொண்ட கவலையோடு, உதட்டைப் பிதுக்கினார் ஹென்றி. ''சடன் மாஸிவ் அட்டாக். ஐ ம் ஹெல்ப்லெஸ்!''
   அன்றைக்கு ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்த கயல்விழி மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வார காலம் பிடித்தது. மாமியார் சொர்ணமும் மாமனார் சதாசிவமும் அழுது அழுது களைத்துப்போய் உடம்பு பாதியாக இளைத்துத் தெரிந்தார்கள்.
   துபாயில் இருந்து வந்திருந்த கயல்விழியின் அண்ணன் சம்பத்தும் அவனுடைய மனைவி அருணாவும் அதே வீட்டில் தங்கி, துக்கம் விசாரிக்க வருபவர்களைச் சந்தித்துப் பேசி... திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.
   அன்றைக்கு இரவு 11 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பிறகு சம்பத்தும் அருணாவும், தூங்காமல் விழித்துக்கொண்டு இருந்த கயல்விழியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்கள். ''கயல், திவாகர் திடீர்னு ஹார்ட் அட்டாக்கில் போனது ஓர் அதிர்ச்சியான விஷயம்தான். ஆனா, திவாகர் உயிரோடு இருந்திருந்தா, இன்னும் பல அதிர்ச்சியான விஷயங்கள் நடந்து இருக்கும். நான் அவருடைய கம்பெனிக்குப் போய் விசாரிச்சுப் பார்த்த அளவில் சில்வியாவுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்திருக்கு. ஒவ்வொரு சனிக்கிழமையும் மத்தியானத்துக்கு மேல் ரெண்டு பேரும் புறப்பட்டுப் போய், ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்துத் தங்கி இருக்காங்க. இன்னும் ஆறு மாசத்துக்குள்ளே உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு சில்வியாவைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்துல திவாகர் இருந்திருக்கார். அது விஷயமா ரெண்டு பேரும் டவுன் ஸ்கொயர் பக்கத்தில் இருக்கிற ஒரு லாயரைப் பார்த்து கன்சல்ட் பண்ணிட்டு வந்திருக்காங்க. அது தவிர...'' மேற்கொண்டு பேச முயன்ற சம்பத்தைப் பெருமூச்சோடு கை அமர்த்தினாள் கயல்விழி.
   ''இது எல்லாம் எனக்கும் தெரியும்ணா! அந்த கம்பெனியில் வேலை பார்க்கிற ஒரு செக்யூரிட்டி ஆபீஸர் தமிழ்நாட்டுக்காரர். அவர் எல்லா விஷயங்களையும் சொல்லப் போகத்தான் நான் அவர்கூட சண்டை போட்டேன். நான் சண்டை போடுவேன்னு அவர் எதிர்பார்க்கலை. டென்ஷன் ஆயிட்டார். ஏற்கெனவே அவருக்கு பி.பி. இருக்கிறதால சடன் அட்டாக். நான் இந்த சில்வியா மேட்டரை இன்னும் கொஞ்சம் நிதானத்தோடு டீல் பண்ணி இருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்.''
   அண்ணி அருணா குறுக்கிட்டாள், ''கயல், இனிமே நடக்கப் போறதைப்பத்தி யோசிப்போம். இனிமே நீயும் மித்ராவும் இந்த மின்னிசோட்டாவில் இருக்கக் கூடாது. துபாய்க்குப் போயிடுவோம். எல்லாரும் ஒண்ணா இருப்போம். நீ படிச்சிருக்கிற கம்ப்யூட்டர் 'ஸ்கில் செட்'டுக்கு ஏத்த மாதிரி துபாய்ல ஒரு நல்ல வேலை கிடைக்கும்.''
   கயல்விழி மௌனமாக இருந்தாள்.
   ''ஆனா, என்னோட மாமியார், மாமனார்?''
   ''அவங்களைப்பத்தி நீ ஏன் கவலைப்படறே? கோயம்புத்தூருக்குப் பக்கத்துல ஏதோ ஒரு கிராமத்துல அவங்களுக்குத்தான் வீடு இருக்கே. அவங்க அங்கே போகட்டும். இல்லேன்னா, மும்பையில் இருக்கிற அவங்க பொண்ணு வீட்டுக்குப் போகட்டுமே.''
   ''ஆமா கயல்! அண்ணி சொல்றதுதான் சரி. நீயும் மித்ராவும் எங்களோடு வந்துடுங்க. எல்லாரும் ஒண்ணா இருப்போம். என்னோட பொண்ணு ஸ்ருதியும் மித்ராவும் சேர்ந்து ஸ்கூலுக்குப் போகட்டும்! நீ எங்களோடு வரப் போற முடிவை உன்னோட மாமியார், மாமனார்கிட்டே நாளைக்கே சொல்லிடு. அப்பதான் அவங்களும் எங்கே போறதுன்னு யோசனை பண்ணி முடிவு எடுக்க முடியும்!''
   ''அண்ணா! மொதல்ல என் கணவரோட பதினோராம் நாள்காரியங் கள் முடியட்டும். நான் நிதானமா அவங்ககிட்டே சொல்லிக்கிறேன்.''
   ''ஏர் டிக்கெட் புக் பண்ணணும் கயல்.''
   ''ரெண்டு நாள்தானே... பொறுங்கண்ணா.''
   ''சரி...'' சம்பத்தும் அருணாவும் எழுந்துகொண்டார்கள்.
   மறுநாள். காலை ஆறு மணி.
   அமெரிக்கன் டைம்ஸ் பேப்பரைப் புரட்டிக்கொண்டு இருந்த தன் அண்ணன் சம்பத்தை நெருங்கி நின்றாள் கயல்விழி.
   ''அண்ணா!''
   அவன் பேப்பரிலிருந்து நிமிர்ந்தான். ''என்ன கயல்?''
   ''என்னோட மாமாவும் அத்தையும் தூங்கிட்டு இருக்காங்க. அண்ணி குளியல் அறையில் இருந்து திரும்ப எப்படியும் இருபது நிமிஷமாகும். அதுக்குள்ளே உன் கிட்டே கொஞ்சம் பேசணும்.''
   ''என்ன விஷயம் சொல்லு?''
   ''என் கணவரோட காரியங்கள் முடிஞ்ச தும் நீங்களும் அண்ணியும் மட்டும் துபாய் புறப்படுங்க.''
   ''நீ?''
   ''நான் வரலை?''
   சம்பத் அதிர்ந்து போனவனாக பேப்பரை மடித்துவைத்தான். ''ஏன்... நேத்திக்கு ராத்திரி பேசும்போது எங்ககூட வர்றதாச் சம்மதிச்சியே! இப்ப ஏன் வரலைன்னு சொல்றே?''
   ''நான் என்னோட அம்மாவையும் அப்பாவையும் விட்டுட்டு வர முடியாது!''
   ''என்னது! அம்மா-அப்பாவா... அது யாரு?''
   ''என்னோட அத்தையும் மாமாவையும்தான் சொல்றேன்! நேத்து அண்ணிகூட இருந்ததுனால நான் சில விஷயங்களைப் பேச முடியலை. நம்ம அப்பா-அம்மாவை நான் போட்டோவில்தான் பார்த்திருக்கேன். என்னை வளர்த்தது நீதான்! எனக்குக் கல்யாணமான பிறகுதான் ஒரு தாயோட அன்பு எப்படி இருக்கும்கிறதையும், ஒரு தந்தையோட பாசம் எப்படி இருக்கும்கிறதையும் என்னோட அத்தை, மாமா மூலம் தெரிஞ்சுக் கிட்டேன். அவங்களைப் பொறுத்தவரை நான்தான் மகள். திவாகர் மருமகன். என்னோட முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும் ரெண்டு பேருமே துடிச்சுப்போயிடுவாங்க. நான் காலையில் விழிக்கும்போது அத்தை காபியோடு நிப்பாங்க. நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே டிபன் ரெடியா இருக்கும். ஆபீஸ் போறதுக்குள்ள மாமா என்னோட சேலையை அயர்ன் பண்ணிக் கொடுப்பார். இந்த வேலை எல்லாம் நீங்க ஏன் மாமா பண்றீங்கன்னு கேட்டா... நீ என் பொண்ணும்மா. உனக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்றதுன்னு சொல்வார். இவ்வளவு அன்பையும் பாசத்தையும் என் மேல் பொழியற இவங்களை விட்டுட்டு, நான் எப்படி உங்ககூட வர முடியும், சொல்லு? என் கணவர் திவாகர் ஒருவழியில் எனக்குத் துரோகம் பண்ணினாலும் இன்னொரு வழியில் எனக்கு ஒரு நல்ல அம்மாவையும் அப்பாவையும் கொடுத்துட்டுப் போயிருக்கார்.
   உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமாண்ணா? என்னோட கணவர் இறந்ததுக்கு அவரோட சிஸ்டர் புவனாவும் புவனா வோட கணவரும் மும்பையிலிருந்து வரலை. காரணம், ஆறு மாதங்களுக்கு முன்னாடி புவனா என் அத்தைகிட்டே போன்ல பேசும்போது என்னை மரியாதைக் குறைவா பேசி இருக்கா. அண்ணியை அப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு அத்தை சொல்லி இருக்காங்க. புவனா கேட்கலை. தொடர்ந்து பேசி இருக்கா. அத்தைக்குக் கோபம் வந்து, 'இனிமேல் என்கூட பேசாதே!'ன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டாங்க. இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாசமாச்சு. அத்தை புவனாவுக்கு போன் பண்ணவே இல்லை. புவனாவும் போன் பண்ணலை. புவனா போன் பண்ணாததைப் பத்தி அத்தையோ மாமாவோ துளிகூட கவலைப்பட்டதாத் தெரியலை.''
   சம்பத் அயர்ந்து போய் நிற்க... கயல்விழி தொடர்ந்தாள், ''இப்ப சொல்லுண்ணா... இப்படிப்பட்ட பாசத்தைப் புறங்கையால் தள்ளிட்டு உன்கூட நான் எப்படி வர்றது? அண்ணியும் நீயும் என்னை உங்களோடு இருக்கக் கூப்பிட்டீங்க. அது நடைமுறைக்குச் சரியா வரும்னு எனக்குத் தோணலை. ஏன்னா, அண்ணி... அண்ணிதான்! எனக்கு அம்மாவாக முடியாது. உன்னோட வீட்ல நான் இருக்க நேர்ந்தா, நாட்கள் செல்லச் செல்ல, அண்ணிக்கு மெள்ள ஒரு ஒரு அலுப்பு எட்டிப் பார்க்கும். நானும் மித்ராவும் பண்ற சின்னத் தப்புக்கள் விஸ்வரூபம் எடுத்து பெரிசாத் தெரியும். தான் விரும்பற டி.வி.சேனலை மித்ரா போடும்போது உன்னோட பொண்ணு ஸ்ருதிக்கு அது பிடிக்காது. அவ சேனலை மாத்தச் சொல்லும்போது, அண்ணியும் நானும் மனசளவில் எதிரிகளா மாறி இருப்போம். இப்படி ஒரு சூழ்நிலை உன் வீட்டில் உருவாகணுமா? நல்லா யோசனை பண்ணிப்பாரு! இது என்னோட வீடு. இங்கே நானும் மித்ராவும் இருந்தா சந்தோஷமா இருப்போம்னு நினைக்கிறேன்.''
   ''நானும் அதையேதான் நினைக்கிறேன்!''
   தனக்குப் பின்னால் எழுந்த பெண் குரல் கேட்டு கயல்விழி திரும்பிப் பார்த்தாள். நீர் சொட்டும் ஈரத் தலையை டவலால் துடைத்தபடி அருணா தெரிந்தாள். உதட்டில் ஒரு மெகா புன்னகை!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை
         ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன்  

   மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்தில் யார் வீட்டு மாடோ போனால்கூட, செவலையாக இருக்குமோ என்று ஏங்கித் தவிக்கிறார்.

   எதிரில், யார் கண்ணில் பட்டாலும், ‘ஐயா, ஒத்த செத்தயில பசுமாடு போனதை எங்கயாது பாத்தேளாய்யா, ஒரு செவலை?’ என்று கேட்டுவிடுகிறார். அவரைப் பரிதாபமாகப் பார்த்தபடி, ‘இல்லையே’ என்று சொல்கிறார்கள் அவர்களும்.

   ஊருக்கு வரும் வழியில், ரெண்டாத்து முக்கின் ஓரத்தில், புன்னை மரத்தின் அடியில் சைக்கிளை ஸ்டாண்டு போட்டார். கடனாநதியும் ராமநதியும் சேரும் இடமான இங்கு, ஓர் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் மட்டும், கால் நனைய ஓடுகிறது. மற்றோர் ஆறான ராமநதி வறண்டு கிடக்கிறது. நடந்து போய், முகத்தைக் கழுவினார். தண்ணீர் பளிங்கு மாதிரி தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. கைகளால் அள்ளிக்குடித்தார். இன்னும் குடிக்க வேண்டும் போல் இருந்தது. நான்கைந்து முறை அள்ளியள்ளிக் குடித்தார். தாகம் தீர்ந்து வயிறு முட்டியது.

    சைக்கிளை நிறுத்திய புன்னைமரத்தின் அடியில் உட்கார்ந்தார். மரங்களின் நிழல், இருள்போலப் படர்ந்து கிடந்தது. இதன் அருகில் ஆலமரம் ஒன்று பெரிதாகக் கிளைபரப்பி நின்றிருந்தது. கடந்த பேய்மழைப் புயலில் அடியோடு சாய்ந்துவிட்டது. அந்த மரமும் நின்றிருந்தால் நிழல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.  இந்த மத்தியான நேரத்திலும் காற்று இதமாக வீசிக்கொண்டிருக்கிறது. வெயில் இன்று அதிகம்தான். அப்படியே படுக்கலாம்போல் தோன்றியது அவருக்கு. கண்கள் இழுத்தது. படுத்தால் எப்போது எழுந்துகொள்வார் என்று அவருக்கே தெரியாது. உடலில் அவ்வளவு அசதி. இடுப்பில் இருந்த வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்தார். பச்சைப் பாக்கை ஏற்கெனவே சிறுதுண்டுகளாக வெட்டி வைத்திருந்தார். இரண்டு இளம் வெற்றிலைகளில் லேசாகச் சுண்ணாம்பைத் தடவி வாய்க்குள்  திணித்தார். அவருக்கு, அப்பாடா என்றிருந்தது.

    ஆற்றின் கரைக்குக் கீழ்ப்பக்கத் தோப்பிலும் மேல்பக்க வயக்காட்டிலும் வேலி அமைத்திருக்கிறார்கள். வேலிக்குள் ஆட்கள் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. அவர்களிடம் `இப்படியொரு மாட்டைப் பாத்தேளா?’ என்று போகும்போது விசாரிக்க வேண்டும்.

   செவலையை அவர் நான்கு வருடத்துக்கு முன் கன்றுக்குட்டியாகத்தான் வாங்கிவந்தார், கீழக் கடையத்திலிருந்து. மூக்கும் முழியுமாக அழகாக இருந்தது செவலை. அப்போது அதற்குப் பெரிய கொம்பு இல்லை. உடலெல்லாம் செந்நிறத்தில் இருக்க, முகத்தில் மட்டும் சுண்ணாம்பை இழுவிய மாதிரி பழுப்பு வெள்ளை. அதைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது, புனமாலைக்கு.

   வளர்ந்த வீட்டிலிருந்து வர மறுத்துவிட்டது, முதலில். அதைப் பிடித்து இழுத்துக்கொண்டே, முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி வழியாக நடத்திக் கொண்டு வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிட்டது. முதலியார்பட்டி வரை, பசுவுக்குச் சொந்தக்காரி கூடவே வந்தாள். அங்கு நின்று, `என் செல்லத்தைப் பத்திரமா கூட்டிட்டுப் போங்கய்யா?’ என்று சொல்லிவிட்டு அவள் திரும்பியதும், கயிற்றை இழுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே கிறுக்குப் பிடித்த மாதிரி ஓடியது செவலை. கயிற்றை இழுத்த இழுப்பில், கீழே விழந்துவிட்டார் புனமாலை. இந்தச் சின்னக் கன்னுக்குட்டிக்கு இவ்வளவு பலமா? என்கிற வியப்பு அவருக்கு. ஆனால், அது பாச ஓட்டம். ஓடிப்போய் அவளின் முன்னும் பின்னும் துள்ளித் துள்ளி நின்று, தலையை அங்கும் இங்கும் ஆட்டியதை இன்னும் மறக்க முடியாது புனமாலையால். பிறகு அவள் கண்கலங்கிவிட்டு, ‘உன்னைய வித்துட்டேன். இனும எங்கூட வரக்கூடாது, போம்மா, ஐயாவோட’ என்று கன்றிடம் பேசினாள். அதற்கு என்ன புரிந்ததோ? பிறகு புனமாலை இழுத்ததும் அலட்டாமல் வந்துவிட்டது. 

   தொழுவில் அவருடைய மற்ற மாடுகளைவிட அதிக செல்லம், இதற்குத்தான். செவலை வந்த பிறகுதான் அவர் பெரியவாய்க்கால் பாசானத்தில் வயல் ஒன்றை வாங்கினார். அந்தப் பகுதியில் வயல் வாங்க வேண்டும் என்பது பல வருட ஆசை. அதை நிறைவேற்றியது செவலை என்று நம்பினார் முழுமையாக. அது வீட்டுக்கு வந்த ராசி என்றும் நினைத்துக்கொண்டார்.

    அதன் காரணமாக லட்சுமண நம்பியார் கடையில் அதிகம் கனிந்த வாழைப் பழங்களை வாங்கிவிட்டு வந்து ஒவ்வொன்றாக ஊட்டுவார் அதற்கு. சின்னப் பிள்ளைபோல நன்றாக முழுங்கும். தின்று முடித்துவிட்டு இன்னும் இல்லையா என்பதுபோல அவர் கையை நக்கிக்கொண்டு, மூஞ்சைப் பார்க்கும். `எவ்வளவு பழம் தின்னாலும் உனக்கு இன்னும் கேக்கும். கள்ளாலிப் பய பசு?’ என்பார், அதன் முகத்தைச் செல்லமாகக் கிள்ளியபடி.

    அவர் மனைவி இருளாச்சியும் இதற்கு மட்டும் சிறப்புக் கவனிப்பைக் கொடுத்தாள். மாடுகளுக்கு எப்போதும் வைக்கோல்களை மட்டுமே பிடுங்கி வைக்கிற அவள், செவலைக்காகப் புல்லறுக்கச் சென்றாள் வயக்காட்டுக்கு. மற்ற மாடுகளுக்குப் பெயருக்கு வைத்துவிட்டு இதற்கு மட்டும் அதிகமாக வைப்பாள்.

   செவலை ஈன்ற பிறகு, பால் துட்டுப் புழக்கம் பஞ்சமில்லாமல் இருந்தது. ஏற்கெனவே இரண்டு எருமைகளின் மூலம் பால் வருமானம் கிடைத்தாலும் செவலையின் பாலுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாகச் செவலைக்குச் செல்லம் இன்னும் அதிகமானது.

    புனமாலையின் பிராயத்தில், அவர் வீட்டுத்தொழுவு நிறைந்திருந்தது ஆடுகளும் மாடுகளும். வீட்டுக்குப் பின்பக்கம் மாடுகளுக்கும் எதிரில் ஆடுகளுக்கும் தொழுவு. சாணம் மற்றும் மூத்திர வாசனையில் வாழப் பழகிக்கொண்ட அவர் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிட்டி நவுண்டு போகும் வேலை பார்த்து. தொழுவைத் தூத்து, சாணம் அள்ளி, புண்ணாக்கு வைத்து, தண்ணீர் காட்டி, பால் கறந்து... போதும் போதும் என்றிருக்கும். ஆனாலும் அதைக் கடமையாகவே செய்துவந்தார்கள். அப்பா, அண்ணன் தம்பிகளோடு மேய்ச்சலுக்குச் செல்வதுதான் புனமாலைக்கு வேலை.

    காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஊரில் யாரிடமும் அதிக மாடுகள் இல்லை. ஊர் மாடுகள் திரண்டு மேலத் தெருவின் வழியே பெருங்கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் காட்சி, புனமாலையின் கண்க ளுக்குள் இன்னும் அப்படியே இருக்கிறது. புழுதிப் பறக்கத் தெருவில் நடக்கும் மாடுகள் நடந்து செல்லும் காட்சியை இப்போது பார்க்க முடியவில்லை.  பிள்ளைகள் வளர வளர மாடுகளை விற்றுவிட்டார்கள், தெருக் காரர்கள். படித்துவிட்டுப் பிழைப்புக்குப் பெருநகரம் செல்வது வாடிக் கையாகிவிட்டது.  அப்படியே மாடுகள் வைத்திருந்தாலும் இப்போதெல்லாம் எங்கு போய் மேய்க்க? மேய்ச்சல் நிலங்கள் மனைகளாகி, நாள்களாகிவிட்டன.

   விரிந்து கிடந்த புறம்போக்கு இடங்களில் மாடுகள் மேய்ந்த இடங்கள் வேலிகளுக்குள் இருக்கின்றன, இப்போது. யாரோ வெளியூர்க்காரர் அங்கு தோட்டம் அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் புறம்போக்கு இடங்கள் எப்படி விற்கப்பட்டன என்கிற ஆச்சர்யம் புனமாலைக்கு இப்போதும் இருக்கிறது. சாலையில் வந்து மோதும் தண்ணீரைக் கொண்ட குளத்துக்கரைகள் எல்லாம் சுருங்கிவிட்டன.

   புனமாலைக்கு இரண்டு மகன்கள். ஒருவன் ஓசுரில் ஏதோ வேலை பார்க்கிறான். இரண்டாவது மகன், திருநெல்வேலியில் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்குச் செல்லக் காத்திருக்கிறான். அவர்களுக்கு மாடுகள் மேய்ப்பது கேவலமாக இருக்கிறது. கூடப் படித்தவர்கள் வீட்டுக்கு வரும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பது அவமானமாக இருக்கிறது.

    ‘இந்த மாடுகளை கெட்டிட்டு அழுததை என்னைக்குத்தாம் விடப் போறேளோ?’ என்றான்  பெரிய மகன்.

    ‘ஏம்டே. அதுவோ உன்னைய என்ன பண்ணுச்சு?’

   `எனக்கு கேவலமா இருக்கு? இதுக்காவவே நான் வெளியூரு போறேன், பாத்துக்கிடுங்க?’ என்றான் ஒரு நாள். புனமாலைக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. இந்த மாடுகள்தான் சோறு போட்டிருக்கிறது, பால் மாடுகளின் காசுகளில்தான் அவன் படித்தான் என்பதையெல்லாம் இப்போது அறிய மாட்டான் என்று நினைத்துக்கொண்டார். சின்ன மகனும் ஒரு நாள் அதையே சொன்னான். சிரித்துக்கொண்டார் அவர். `உங்களுக்கெல்லாம் என்னடா தெரியும், அதுவொள பத்தி. மாடு வளக்கது கேவலமா இருக்காம்? என்னத்த உருப்படப்போறானுவோ?’ என்று நினைத்துக் கொள்வார்.

    ‘என்ன அண்ணாச்சோ, உட்கார்ந்தாச்சு?’ என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தார் புனமாலை. உள்ளூர்ப் பள்ளிக்கூட சார்வாள். தோப்புக்குச் சென்றுவிட்டு வருகிறார்  போலிருக்கிறது. அவரைப் பார்த்துச் சிரித்தார்.

    ‘மாட்டைக் காங்கலைன்னு கேள்விப்பட்டேன். கிடைச்சுட்டா?’ என்று கேட்டார் .

   ‘இல்ல. எங்க போச்சுன்னு தெரியல?’ என்ற புனமாலை, கவலையில் மூழ்கினார். அவரிடம் இருந்து இரண்டு வெற்றிலையை வாங்கிக்கொண்ட சார்வாள், ‘கேள்விப்பட்டதுல இருந்து நானும் இங்ஙன எல்லாப் பக்கமும் கண்ணுல ஏதும் படுதான்னு பாத்துட்டுதாம் இருக்கேன்…’ என்றார்.

   ‘ஆங்… மிஞ்சிப் போனா, சுப்பையா தோப்புக்குள்ளதாம் நிய்க்கும். என்னைக்காது சாயந்தரத்துல வரலைன்னு வையுங்களேன், தேடிப் போனா, அவரு தோப்புக்குள்ள இருந்துதாம் வரும்… அங்க எல்லாப் பக்கமும் பாத்தாச்சு. காங்கலை…’

   ‘மாட்டைப் புடிச்சு, எவ்வளவு வருஷமாச்சு?’

    ‘ஒரு நாலு வருஷம் இருக்கும்?’

    ‘புடிச்சுட்டு வந்த வீட்டுல, விசாரிச்சுப் பாத்தேளா?’

    `ச்சே… இவ்வளவு வருஷத்துக்குப் பெறவா, அந்த வீட்டைத் தேடிப் போவப் போது?’

   ‘அப்படியில்லலா. நம்ம பிச்சாண்டி பய, கப்பை கொம்பு எருமை, அஞ்சு வருஷத்துக்குப் பெறவு, கன்னுக்குட்டியா கெடந்த வீட்டைத் தேடிப் போயிருக்குன்னா பாருமே?’

   ‘இது என்ன புதுக்கதையா இருக்கு?’

    `பெறவு, நான் என்ன சொல்லுதேன்? ஆய்க்குடியில இருந்து வாங்கிட்டு வந்தாம் அதை. இங்கயிருந்து இருவது இருவத்தஞ்சு மைலு இருக்குமா? ஒத்தையில தேடிப் போயிருக்குன்னா, பாருமே. அதனால பழைய வீட்டைத் தேடிப் போவுமா, போவாதாங்கது நமக்கெப்படித் தெரியும்? ஒரு எட்டு, எட்டிப் பாத்துட்டு வந்துரும்யா. இதுல என்ன கொறச்சலு ஒமக்கு?’ என்றார் சார்வாள்.

   ‘சரிதாம். போயிட்டு வந்துர வேண்டியதாம்’

   ’பால் மாடா?’

   ‘ஆமா. காலைல மட்டும் ரெண்டரை, மூணு லிட்டரு கறக்கும். புல்லு அதிகமா போட்டா, நிறைய கறக்கும். அக்ரஹாரத்துல எல்லா வீட்டுக்கும் நம்ம பாலுதான். மூணு நாளா பசும்பாலை, வேற ஆளுட்ட வாங்கிக் கொடுத்து சமாளிக்கேன். அதுக்குள்ள, ஏன் புனமாலை, பாலு தண்ணியா இருக்குன்னு ஆவலாதி வந்தாச்சு…’

   `அது வந்திரும்லா. நீரு வேண்டிய ஆளுன்னு தண்ணிய கொஞ்சமா சேப்பேரு. மத்தவோ அப்படி இருப்பாகளா?’

    ‘ரொம்ப வேசடையா இருக்கு, பாத்துக்கிடுங்க. என்ன பண்ணன்னு தெரியல. பாசமா வேற வளத்துட்டனா? அதாம் ஒண்ணும் ஓட மாட்டேங்கு. எனக்கு மட்டும் ஏம் இப்படி நடக்குன்னு தெரியல’ என்ற புனமலை, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

    ‘ஒண்ணும் கவலைப்படாதேரும், கிடைச்சுரும்’ என்ற சார்வாள், `இதுக்கு முன்னால இப்படி ஏதும் காணாமப்போயிருக்கா?’ என்று கேட்டார், வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு.

    ‘ரெண்டு வருஷத்துக்கு முன்னால, வழக்கமா மேய்க்கப் போற இடத்தை விட்டுட்டு, ரயிலு பாலத்துக்குக் கீழே மேய்ச்சிட்டு நின்னேன். சாயங்காலம் போல, கெளம்புவோம்னு மாடுவொள பத்தினேன். கீழ்ப்பக்கத் தென்னந்தோப்புல ரெண்டு, மூணு தேங்காய் நெத்து, தன்னால விழுந்த சத்தம் கேட்டது. தோப்புக்குள்ள ஆளு வேற இல்லையா? சும்மா விட்டுட்டுப் போவ மனசு வரலை. வேலிக்குள்ள ஏறி, உள்ள போயிட்டேன். நாலஞ்சு காயிவோ கெடந்தது. கொஞ்சம் காய்ஞ்ச தென்னமட்டை, சில்லாட்டையும் கிடந்தது. தேங்காயை உள்ளவச்சு தென்னமட்டைகளை விறகு மாதிரி கெட்டிட்டு வெளிய வந்து பாக்கேன், ஒரு மாடுவளையும் காங்கலை. `அதுக்குள்ள எங்க போயி தொலைஞ்சுதுவோன்னு தேடுனா, கிழக்க வீட்டைப் பாத்து வரவேண்டிய மாடுக எல்லாம், லெக்கு தெரியாம, மேற்கப் பாத்து போயிட்டிருக்குவோ. பெறவு அதுகளைப் புடிச்சு, கிழக்க திருப்பிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்த பிறகு பாத்தா, செவலை மட்டும் இல்லை. தேடு தேடுனு தேடுனோம். மறுநாளு காலையில, ரயிலு பாலத்துக்கிட்ட தேடிட்டு விசாரிச்சேன். `மேக்க பறம்பு இருக்குல்லா, அங்க ஒரு தூர்ந்துபோன கெணத்துல, மாடு ஒண்ணு விழுந்து கெடக்கு. ஊரே கூடி நின்னு அதைத் தூக்கிட்டு இருக்காவோ. அது உங்க மாடான்னு வேணா பாரும்’ன்னு ஒருத்தன் சொன்னான். நான் வேர்த்து, விறுவிறுத்துப் போய் நிய்க்கேன், கூட்டத்துக்குள்ள. `ரெண்டு இளந்தாரி பயலுவோ தைரியமா கெணத்துக்குள்ள இறங்கி, மாட்டோட வயித்துக்கு முன்னால ஒரு கயிற்றையும் பின்கால்கள் கிட்ட ஒரு கயிற்றையும் போட்டுக் கெட்டிட்டானுவோ. பெறவு ஆளுவோ பூரா சேர்ந்து கயிற்றை இழுத்து மேல கொண்டு வாந்தாச்சு, மாட்டை. இழுக்கும்போது கெணத்துல இருந்த கல்லுல அங்க இங்கன்னு முட்டி, உடம்புல ரத்தக் காயம். அந்த ஊரு பெரிய மனுஷன் டேனியலு நமக்குத் தெரிஞ்சவரு தான். அது எம்மாடுதாம்யான்னு சொன்னேன். சொல்லிட்டு, பேசிட்டுதாம் இருக்கேன், பாத்துக்கிடும். இந்தச் செவலை எப்படித்தாம் என்னைய பார்த்ததுன்னு தெரியல, அங்கயிருந்து வேகமா வந்தது. பின்னால இருந்து ஒரு கணைப்பு கணைச்சுட்டு வந்து முகத்தை என் இடுப்புல தேய்ச்சுது. பெறவு, என் மூஞ்சை ஏக்கமா பார்த்தது பாரும், பொல பொலன்னு கண்ணீரு வந்துட்டு எனக்கு. இப்பம்கூட பாருமே, சொல்லும்போதே புல்லரிக்கு. அப்பம்தான் ஒரு தடவை காணாமப்போயி மீட்டுட்டு வந்தேன். இப்பமும் அப்படி எங்கயாது போயி விழுந்திருக்குமோன்னு நினைச்சுதான் தேடிட்டு இருக்கேன். நம்ம பட்றையன் சாமிதான் கருணை காட்ட ணும்’ என்று சொல்லிவிட்டுக் கண்ணைத் துடைத்தார் புனமாலை.

    ‘ச்சே என்ன நீரு, சின்னப்புள்ள மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு… இங்க எங்கயோதாம் நிய்க்கும். எங்க போயிரப் போவுது? கிடைச்சுரும், கவலைப்படாதீரும்’ என்று நம்பிக்கையளித்தார் வாத்தியார்.

    `கெழக்க மன்னார்கோயிலு, காக்கநல்லூருன்னு போயி தேடியாச்சு. அங்குள்ள ஆளுவோட்ட எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். நேத்து மேக்க, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம்னு அலைஞ்சாச்சு. இன்னைக்குப் பாப்பான்குளத்துக்குப் போயிட்டு வந்தாச்சு. சாய்ந்தரம் நீங்க சொன்ன மாதிரி மாட்டைப் புடிச்சுட்டு வந்த வீட்டுல போயி கேக்கணும்.’

    ‘ஏம் அலையுதேரு, போனைப் போட்டுக் கேளும்.’

    ‘இந்த மாதிரி வெவாரத்தை போன்ல சொன்னா நல்லாருக்குமா? நேர்ல போயி விளக்குனாதான் சரியாயிருக்கும். அதுக்குத்தான் அலையுதேன்.’

   ‘சரி வீட்டுக்குத்தான போறேரு, வாரும் பேசிட்டே நடப்போம்’ என்றார், சார்வாள்.

   புனமாலையின் முகத்தைப் பார்த்தே மாடு பற்றித் துப்புக் கிடைக்கவில்லை என்பதைக் கணித்துவிட்டாள், அவர் மனைவி இருளாச்சி. துண்டால் தட்டி, திண்ணையைத் துடைத்துவிட்டு சோர்ந்து உட்கார்ந்திருந்தார் அவர். இவரைக் கண்டதும் வீட்டிலிருந்து வெளியே போனான் மகன். மாடு தொலைந்தது பற்றியோ, அதைத் தேடுவது பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. நண்பனின் அழைப்புக்காகக் காத்திருப்பவன் அவன். என்றைக்கு அழைப்பு வருகிறதோ, அன்று சென்னைக்கு பஸ் ஏறிவிடுவான். அதனால் மாடுமாச்சு, அவர்களுமாச்சு என்று அலைந்து கொண்டிருக்கிறான். மூன்று நாள்களாக மேய்ச்சலுக்கும் செல்லவில்லை. மேலத்தெரு மணியின் மாடுகளோடு இவர் மாடுகளையும் சேர்த்து அனுப்பிவிட்டிருக்கிறார். தொழுவு அமைதியாக இருந்தது.

   இருளாச்சி, ஒரு சட்டியில் கஞ்சித் தண்ணியை வைத்து, இன்னொரு சிறு தட்டில், காணத்துவையலையும் நான்கைந்து ஈராய்ங்கத்தை உரித்தும் கொண்டு வந்து அவர் முன் வைத்தாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பசிக்கவில்லை அவருக்கு. இருந்தாலும் அனிச்சையாகச் சட்டியைத் தூக்கிக் குடித்தார். கொஞ்சம் மிச்சமிருந்தது. துவையலைக் கையோடு அள்ளி நாக்கில் வைத்துவிட்டுக் கையைக் கழுவினார்.

   மாடுகளுக்கான தண்ணீர்த் தொட்டியில் கழனித் தண்ணீர் நிரம்பி, புளிச்ச வாடை வீசிக்கொண்டிருந்தது. மிச்சமிருந்த கஞ்சித்தண்ணியை அதில் ஊற்றிய புனமாலை, ‘ஊருல எத்தனை பய மாடுவொள தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருப்பேன். எம்மாட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுக்க ஒரு நாதியில்லையே’ என்று சொல்லிக்கொண்டு, திண்ணைக்கு வந்தார். இருளாச்சியால் அவர் முகத்தை இப்படிப் பார்க்க முடியவில்லை. வீட்டுக்குள் போனாள். ‘பயமாடு தொலைஞ்சு நம்மளையும் இந்தா பாடுபடுத்துதே’ என்று நினைத்துக்கொண்டாள்.

    ‘சின்னவன் எங்க போறாம்?’

   ‘தெரியல?’ என்றாள் அவள்.

   ‘தாட்டாம்பட்டி, கோட்டாளப்பட்டின்னு இந்த மாட்டைத் தேடச் சொல்லலாம்லா?’

   ‘நீங்க சொல்லியே கேக்க மாட்டான். நான் சொன்னா கேட்டுருவானா?’

   வெயில் கொதித்துக்கொண்டிருந்தது. ‘மாடு எங்க போயிருக்கும்?’ என்ற சிந்தனை அவரை மொத்தமாக அலைக்கழித்துக்கொண்டிருந்தது. செவலையின் கன்னுக்குட்டி தொழுவில் இருந்து மெதுவாகக் கத்தியது. அதன் அம்மாவைப் போலவே தோற்றம் கொண்ட கன்றுக்குட்டி. அதைப்போலவே இதற்கும் முகத்தில் செந்நிறத்தில் சுண்ணாம்பை இழுவிய மாதிரி, பழுப்பு வெள்ளை. இதுவும் செவலையைப் போலவே ராசியான கன்னுக்குட்டி என்று நம்பினார், புனமாலை. இந்தக் கன்று பிறந்ததும்தான் பெரியவனுக்கு ஓசூரில் வேலை கிடைத்தது என்பது அவர் எண்ணம்.

   ‘இந்தா அதுக்குத் தண்ணி காட்டு’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்தார்.

    `எவன் பயித்துலயும் விழுந்து, புடிச்சு கெட்டிப் போட்டுருப்பானுவளான்னு தெரியலயே?’ என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்படியிருக்க வாய்ப்பும் இல்லை. ஊரில் தோப்பும் வயக்காடும் வைத்திருப்பவர்கள் தெரிந்தவர்கள்தான். அப்படியே வயலில் மாடு, வாயை வைத்தாலும் வந்து ஏசிவிட்டுதான் போவார்கள்.

   ஒரே ஒரு முறை அப்படியொரு சம்பவமும் நடந்திருக்கிறது. முகத்துக்கு, முன்னோக்கி நீட்டியபடி இருக்கும் கொம்புகளைக் கொண்ட, நீட்டிக் கொம்பு எருமை செய்த காரியம் அது. பெரிய வாய்க்கால் விதைப்பாட்டில் குத்தா லிங்கத்தின் உளுந்து வயலில் பயிரைத் தின்று நாசம் பண்ணிவிட்டது. நிலையாக நின்றான் குத்தாலிங்கம். வீட்டு வாசலில் நின்று மானங்கெட்ட கேள்வி கேட்டான்.

   ‘ரெண்டு பயித்துல, மாடு வாயை வச்சுட்டுன்னாடே இப்படி ஏசுத?’

   `ரெண்டு பயிரா? நீ மொதல்ல வயலை வந்து பாரு, பாதி வயலை நாசம் பண்ணியிருக்கு, உம்மாடு?’

    `மாடுவோ வாயை வச்சா, விளைச்சலு நல்லாதான்டே இருக்கும். அதுக்குப் போயி இப்படி ஏசுத?’

    ‘இந்தக் கதையெல்லாம் இங்க சொல்லாத. போன பூவு, ஒரு விளைச்சலு இல்ல. தண்ணியில்லாம எல்லாம் மண்ணாப்போச்சு. மாசானத்துக்கிட்ட வட்டிக்கு வாங்கியாங்கும் இப்பம் உளுந்து போட்டிருக்கேன். இதும் போச்சுன்னா, நானும் என் பொண்டாட்டி புள்ளேலும் ரோட்டுலதாம் நிய்க்கணும்’

   - அக்கம் பக்கத்து வயல்காரர்களும் ஊர்க்காரர்களும் வந்து சொன்ன பிறகு மறுக்கமுடியவில்லை, புனமாலையால். ஒரு தொகையைத் தெண்டமாக கொடுக்கச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு வந்தார்.  மாடு வயலில் விழுந்ததற்காக, அவர் தெண்டம் கட்டியது அதுதான் முதன் முறை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வயற்காட்டுப் பக்கம் அதிகமாக மாடுகளை மேய்ப்பதில்லை. வாய்க்கால் மற்றும் ஆற்றங்கரைகளில் மேய்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

    வீட்டில் இருக்க முடியவில்லை அவருக்கு. தாட்டம்பட்டி வாக்கில் போய்த் தேடிவிட்டு தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டு வரலாம் என எழுந்து சைக்கிளை எடுத்தார். சின்ன மகனின் பைக், அவர் முன் வந்து நின்றது. அவரைக் கவனிக்காத மாதிரி இறங்கி வீட்டுக்குள் போனான், தலையில் கொண்டை வைத்திருக்கிற அவன். ‘எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குவோ?’ என்று நினைத்துக்கொண்டு சைக்கிளை அழுத்தினார் புனமாலை.

   பஞ்சாயத்து போர்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாட்டுக்கு லாடம் அடிக்கும் சுப்பையா, பார்த்துவிட்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.

   ‘மாடு கிடைச்சுட்டா..?’

    ‘தேடிட்டிருக்கேன்’

    ‘எத்தனை நாளாச்சு?’

   ‘மூணு.’

   ‘மேயப்போன இடத்துல இருந்தா காணாமப்போச்சு?’

    ‘ஆத்து மண்டபத்துக்கு மேல, முதல் விதைப்பாடு இருக்குல்லா…’

     ‘வரப்புல பலா மரம் நிய்க்குமே?’

    ‘ஆமா’

   ‘அது பல்லு நீண்டவன் வயல்லா… சரி’

    `அங்க வரப்புல நின்னு மேச்சுட்டு இருந்தேன். அங்கயிருந்து அவயம் போட்டுட்டே வந்தான், பல்லு நீண்டவன். `யோவ் மாடு உள்ள இறங்குச்சுன்னா, காலை வெட்டிருவம்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துட்டு. ’வயல்ல விழுந்தா வெட்டிருவியோல?’ன்னு கேட்டேன். `ஆமா’ன்னு சொன்னான், திமிரா. `வெட்டுல பாப்போம்’னு சொன்னேன். பெறவு, வார்த்தைத தடிச்சுப் போச்சு ரெண்டு பேருக்கும். கொஞ்ச நேரத்துல, அவன் போயிட்டாம். நான் மாடுவள பத்திட்டு வந்துட்டேன், வீட்டுக்கு. வழக்கமா, சாயந்தரம் பால் கறக்கணும்லா, கன்னுக்குட்டி தேடுமேன்னு, அந்த நேரத்துக்குச் சரியா அதுவாவே வீட்டுக்குப் போயிரும் செவலை. நானும் அப்படித்தாம் வீட்டுக்குப் போயிருக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்து பாத்தா, மாடு வரலைங்கா, வீட்டுக்காரி. அப்ப போனதுதாம்… எங்க போச்சுன்னு தெரியாம, தேடிட்டிருக்கேன்.’

    ‘சரியாப்போச்சு, போ. நீ அந்த சண்டாளன்ட போயா, வாயைக் கொடுப்பே? இப்பம்லா ஞாவத்துக்கு வருது. இது அவன் வேலையாதாம் இருக்கும். பேதில போவாம், திருட்டு மாட்டை அடிமாட்டுக்கு விய்க்குத பயல்லா…’

    `என்னடே சொல்லுத?’

    ‘பெறவு. ஒனக்கு அவனைத் தெரியாம எப்படி இருக்கும்?’

    ‘நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?’

   ‘அவன் ஆக்கங்கெட்டவம்லா. பேரு நரைச்சாம். எந்தூர்ல இருந்தோ ஆழ்வாரிச்சுக்கு வந்திருக்காம்னு சொல்லுதாவோ. கடையம் சந்தையில வித்தா தெரிஞ்சிரும்னு நயினாரம் சந்தையில போயில்லா, கள்ள மாடுவள விய்க்காம், கேரளாக்காரனுவளுக்கு. எல்லாம் அடி மாட்டுக்குப் போவுது. நீ ஒண்ணு செய்யி. நேரா அவன் வீட்டுக்குப் போயி, தொழுவுல நோட்டம் போடு. வீடு எங்கன்னு சொல்லுதேன். அங்ஙனதாம் நிய்க்கும் மாடு. அதைத் தெரிஞ்சுகிட்டு, வீட்டுக்குள்ள போ. அவன்ட்ட நயஞ்சு பேசு. இல்லனா கால்ல, கையில விழுந்தாது மாட்டைப் புடிச்சுட்டு வந்துரு. கண்டிப்பா இது, அவன் வேலைதாம் பாத்துக்க. நல்லவேளை எங்கிட்ட சொன்ன, இல்லைன்னா ஊர் ஊரா தேடிட்டுதாம் இருக்கணும். உடனே கெளம்பு. நாளைக்கு, நயினாரம் சந்தை. அவன் இன்னைக்கு ராத்திரி மாடுவள பத்திட்டுப் போனாலும் போவாம்...’

   புனமாலைக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியெல்லாம் பண்ணுவார்களா என்று.

   ‘மாட்டைக் களவாண்டிருக்கது அந்தப் பய. ஏன் அவன்ட்ட நயஞ்சு பேசணும். நாலு மிதி மிதிச்சாதான மனசு நிம்மதியா இருக்கும். பெறவு போலீஸுக்குப் போய்க்கிடுவோம்’

    `இங்கரு, நீ நினைக்கது சரிதாம். ஆனா, அவன் ஆளு, வேற மாதிரி. தப்பே பண்ணியிருந்தாலும் அவனுக்கு ஏண்டுகிட்டுப் பேசத்தான் ஆளுவோ இருக்கு, அவன் ஊர்ல. அதுக்கு ஏத்தாப்ல பேசுவான். விவாரத்தை உம்மேலயே திருப்புனாலும் திருப்பிருவாம். கூட கரிவேலையும் (மந்திர, தந்திரம்)பாப்பானாம். அதனால அவனை எதுரா யாரும் பேசமாட்டாவோ.. காரியம் ஆவணும்னா டொப்புன்னு கால்லயும் விழுந்துரு வாம். இன்னொரு விஷயம் கேளு, அடிமாட்டுக்கு விய்க்கப் போறவன் தொழுவுல எந்த மாடு காலு வைக்கோ, அந்த மாடு விளங்காதுன்னும் சொல்வாவோ. ஊரு அப்படித்தாம் நம்புது. அங்கருந்து பத்திட்டு வந்தா, ஒண்ணு நோயில சாவும். இல்லன்னா, வீட்டு ஆளுவொள கொணக்கிரும். இதை நான் சொல்லலை. அக்கம் பக்கத்து ஊருல சொல்லிக் கேள்விப்பட்டது, கேட்டியா? நம்ம சிவசைலத்துலயும் கருத்தப்பிள்ளையூர்ல அப்படி சம்பவம் நடந்திருக்கு. மாட்டுக்கு லாடம் அடிக்க வாரவங்க பேசிக்கிட்டது, இது. நீ உடனே போயி மாட்டைப் பாரு. அவன் தொழுவுலதாம் கண்டிப்பா நிய்க்கும். வெளிய கொண்டாந்து, வித்திரு’ என்றார் சுப்பையா.

    புனமாலை, முதலில் மாடு தேவை என்று நினைத்துக்கொண்டார். பிறகு, ‘நீயும் வாயன்டே’ என்றார்,  சுப்பையாவிடம்.

   ‘நானுமா? அப்பம் என் வண்டியில போயிரும்.’ டிவிஎஸ் 50-ல் இருவரும் கிளம்பிச் சென்றார்கள், ஆழ்வார்குறிச்சிக்கு. போகும் வழியெங்கும் செவலை பற்றிய நினைவுதான் அவருக்கு.

   சுப்பையா சொன்னதுபோலவே அவன் தொழுவில்தான் நின்றது செவலை.

   நரைச்சான் சொன்னான், ‘இது ஒம்ம மாடுன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. என் வீட்டுக்குப் பின்னால வந்து நின்னுகிட்டு, அரை நாளா மாடு அவயம் போட்டுது. யாரு மாடுன்னு தெரியலை. பசிக்கு அவயம் போடுதுன்னு நினைச்சு, தொழுவுக்கு இழுத்துட்டு வந்து வைக்கோலைப் புடுங்கிப் போட்டேன். தின்னுட்டு இங்கயே நின்னுகிட்டு. விரட்டுனாலும் போவலைன்னா பாருமே. எங்கூரு ஆளுவோ, பூரா பேர்ட்டயும் சொன்னேன் பார்த்துக்குங்க. `இப்படியொரு செவலை, என் வீட்டுல வந்து நிய்க்கு. யாரும் விசாரிச்சு வந்தா சொல்லுங்க’ன்னு. ஒரு துப்பும் கெடைக்கலை. வாயில்லா ஜீவனை அப்படி ரோட்டுல விட்டுர முடியுமா? எவனும் சந்தைக்குக் கொண்டு போயி வித்தாலும் வித்துப் போடுவாம். அதாம் யாரும் விசாரிச்சு வந்தா கொடுப்போம்னு தொழுவுல கெட்டிப் போட் டேன். இப்பம்தான் என் வீட்டுக்காரி, மாடுவளுக்குத் தண்ணிகாட்டிட்டு நிய்க்கா. இன்னா, நீங்க வந்திருக்கியோ? தெரிஞ்ச ஆளுவோ வேற. நான் கட்டிப் போட்டது நல்லதாப்போச்சுல்லா. அன்னைக்கு வேற நாம சண்டை போட்டிருக்கோம். அதுக்காவ மாட்டைப் புடிச்சுட்டு வந்து கெட்டிப் போட்டிருக்கேன்னு நினைச்சுராதீரும். அது கோவத்துல பேசிக்கிட்டது. அதை மனசுல வச்சிக்கிடாதீங்க’ என்ற நரைச்சான், தான் அகப்பட்டுக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து தப்பிக்க நிறைய பேசினான்.

    புனமாலைக்கு மாடு கிடைத்ததில் சந்தோஷம். கண்டதுமே முகத்தை அவர் மேல் இழுவிக் கொண்டு, கைகளை நக்கியது செவலை. அதன் கண்களிலிருந்து கீழ்நோக்கி நீர்க் கோடுகள் தெரிந்தன. மூன்று நாள்களாகப் பட்டினி போட்டிருப்பான் போலிருக்கிறது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. உடல் வற்றிப்போயிருந்தது. முதுகெலும்புகள் லேசாகத் தெரியத் தொடங்கின. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தது. புனமாலைக்குக் கோபம். அவரை அடக்கினார் சுப்பையா.

   செவலையின் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அது செல்லமாகக் கத்தியது. அந்தக் கத்தலில் தெரிந்த பாசத்தை, ஏக்கத்தை, வலியை அவர் உணர்ந்தார். அவர் அதன் முகத்தை மீண்டும் தடவினார். இருவரும் ஏதோ பேசிக்கொள்வது போல, இருவருக்குமான மௌன உரையாடல் போல, அது இருந்தது. திடீரென அழுதுவிடுபவர் போல ஆனார். சுப்பையா, அமைதி என்கிற விதமாக அவர் தொடையைத் தட்டினார். சுதாரித்துக்கொண்டார் புனமாலை. அவனது தொழுவில் இன்னும் சில மாடுகள்  எலும்பும் தோலுமாக இருந்தன. யார் மாடுகளோ?

    சுப்பையா வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு போக, மாட்டைப் பத்திக்கொண்டு வந்தார் புனமாலை. ஆழ்வார்குறிச்சிக் குளத்தில் தண்ணீர் குட்டை போலத்தான் இருந்தது. செவலை, அதைக் கண்டதும் வேகமாகப் போய்க் குடித்தது. நீண்ட நேரமாக நின்று குடித்துக்கொண்டே இருந்தது.

    ‘பேதில போவாம். மூணு நாளா தண்ணிகூட வைக்காம இருந்திருக்கானே, இவம்லாம் உருப்புடுவானா? வாயில்லா ஜீவனை இப்படி போட்டு வச்சிருக்கானே, நல்லாருப்பானாடே?’ என்று சொல்லிவிட்டு, `அந்தப் பயலை இறுக்கிட்டு வந்திரட்டா?’ என்று திரும்பினார் கோபமாக.

   ‘கோவத்தைக் குறையும். அதாம்  சொன்ன மாதிரி மாடு கிடைச்சுட்டுல்லா’ என்ற சுப்பையா, ‘உடனடியா மாட்டை யார்ட்டயாது தள்ளி விட்டிரும், கேட்டேரா? இல்லனா சிக்கலுதாம். ஏம்னா, அந்த ஆக்கங்கெட்டவன் தொழுவு லெட்சணம் அப்படி! என்னதாம் ஒமக்கு ராசியான மாடா இருந்தாலும் ஆளுவோ உடம்புக்கு ஒண்ணுன்னா, யாரு பார்க்கது?’ என்று சொல்லிவிட்டுப் புனமாலையைப் பார்த்தார் சுப்பையா.

    அவருக்கு பயம் தொற்றிக்கொண்டது. வெற்றிலையை எடுத்து சுப்பையாவிடம் இரண்டைக் கொடுத்துவிட்டு, தானும் போட்டுக் கொண்டார். செவலை இன்னும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ’நீ சொல்லுததும் சரிதாம் சுப்பையா. திடுதிப்புன்னு கெடையில கெடந்துட்டோம்னு வையேன், பெத்த பிள்ளையோகூடப் பாக்காது’ என்றார் புனமாலை.

   செவலை, தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து, அவர் வலது கையின் அருகில் நின்றது. அதன் முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தபடி வீட்டுக்குப் பத்திக்கொண்டு வந்தார். வந்ததுமே தரகரிடம் சொல்லிவிட்டார்.

    தரகரும் அதையே சொன்னார். `அடிமாட்டுக்கு விய்க்கவன் தொழுவுக்கு மாடு போய்ச்சுன்னா, அது சுணங்கும். இல்லன்னா, ஆளுவொள கொணக்கிரும். அதனால அதை விய்க்கதுதாம் சரி’ என்றார். இரண்டே நாள்களில், கிடைத்த தொகைக்கு விற்றுவிட்டார், செவலையை.

   செவலை இல்லாத தொழுவு அவருக்கு வெறுமையாக இருந்தது. திடீரென்று தூக்கத்தில் எழுந்து, `செவலை கத்துன மாதிரி இருந்துச்சுல்லா?’ என்று கேட்கிறார் மனைவியிடம். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராக, ‘செவலைக்குப் புல்லைப் போட்டியா?’ என்கிறார். அவருக்குள் பெருங்கவலை வந்து குடிகொண்டது. ‘ச்சே பாசமா வளர்த்த மாட்டை, இப்படி வித்துத் தொலைச்சுட்டேனே?’ என்று எதையோ இழந்த மாதிரி அலைந்துகொண்டிருந்தார். எப்போதும் செவலை பற்றிய சிந்தனை. முன்பெல்லாம் எடுத்தெறிந்து பேசாதவர், இப்போது எதற்கெடுத்தாலும் எரிந்து விழத் தொடங்கினார்.

    மாட்டை விற்ற நான்கு நாள்களுக்குப் பின், ஒரு காலையில் அவர் சின்ன மகன், பெரிய மகனுக்கு போன் பண்ணிச் சொன்னான். ‘ஏல, நீ சீக்கிரம் கெளம்பி வா. அப்பாவுக்கு ஒரு கையும் காலும் இழுத்துக்கிட்டு’ என்று.
   https://www.vikatan.com
 • Topics

 • Posts

  • பொருத்தமான நேரத்தில்(May) இந்தக் ஒரு கட்டுரை வெளிவருகிறது.  தமிழர் தங்களுக்கென்று சுயாதீனமான வெளியுறவுக் கொள்கை ஒன்றை கொண்டிருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.   
  • உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு இல்லை வெளியே இவை கொண்டு செல்லப்படணும் என்பதில் தான் எங்கள் எல்லோரது உழைப்பும் நேரமும் இருக்கணும். ஆனால் மனதில் ஒரு கேள்வி வருவது இயற்கை.  ஒரு அநியாயமாக கொல்லப்பட்ட செத்த வீட்டில் வந்து ஆறுதல் சொல்ல முடியாதவர்கள் அல்லது இவர்களின் தவறால் இது நடந்தது என்பவர்கள் எப்படி அதை வெளியே எடுத்து செல்வர்????
  • விடிய எழும்ப பிந்தியிருக்கும், தண்ணி ஊத்தி எழுப்பியிருப்பார்கள்
  • அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்     அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில்  2021 ஆம் ஆண்டு  நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன்  http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால்  உயிரிழந்தார். நடிகர் விவேக் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_84d4314cb5.jpg சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர்  விவேக்கின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.  கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்தநாளான ஏப்ரல் 17ஆம் திகதி விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் தாமிரா http://static2.tamilmirror.lk/assets/uploads/image_7801b6444e.jpg இரட்டைசுழி திரைப்படத்தில் அறிமுகமான எழுத்தாளர் தாமிரா கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானார். 52 வயதே ஆன தாமிரா ஏப்ரல் 27ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். நடிகர் பாண்டு  http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0c6ccfec51.jpg ஜெய்,கம்பீரம்,கில்லி உள்ளிட்ட ஏராளமான தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பாண்டு கடந்த மே மாதம் 6 ஆம் திகதி   காலமானர். 74 வயதான அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.வி.ஆனந்த் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0876bbc5d7.jpg பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் திகதி மறைந்தார். பத்திரிகையாளராக பயணத்தைத் தொடங்கிய அவர், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு பின்னர் கொரோனா உறுதியானதால் அவரின் உடலை கடைசியில் யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கொரோனாவின் கோரமுகத்தின் உச்சம். குணச்சித்திர நடிகர் செல்லத்துரை ஐயா http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1c08fb3761.jpg தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் குணச்சித்திர நடிகர் செல்லதுரை. 84 வயதான இவர் கடந்த 30 ஆம் திகதி   மாரடைப்பால் உயிரிழந்தார்.  தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_b199a7a5f6.jpg கஜினி, சுள்ளான் உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மே 10ம் திகதி கொரோனாவால் உயிரிழந்தார். சூர்யா, தனுஷ் ஆகியோரின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர், இவரின் மறைவு தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா http://static2.tamilmirror.lk/assets/uploads/image_cd507d2691.jpg தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக மே 11ம் திகதி நெல்லையில் உயிரிழந்தார். சிவாவின் மறைவு, திரைத்துறையில் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.   நடிகர் மாறன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_45bbd79ab4.jpg கில்லி, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மாறன் கொரோனாத் தொற்றினால் கடந்த 11 ஆம் திகதி  காலமானார். Tamilmirror Online || அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்
  • ஜேர்மன் தந்தையருக்கு வாழ்த்துக்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.