யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019   குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளார். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது. சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளார். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார்உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/118659/
  • முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019   குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர். தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.   http://globaltamilnews.net/2019/118662/
  • இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை.. April 19, 2019 இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் சி.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் பயணம்  ஒன்றை மேற்கொண்டு இரணைதீவிற்கு சென்றனர். குறித்த பயணத்தின் போது இரணை தீவு மக்களுடன் இது வரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட, பூர்த்தியாக்கப்படாத விடையங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில்  இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர், மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கிராம சேவையாளரின் சேவைகள், பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் ,சமுர்த்தி கொடுப்பணவுகள் வாழ்விடம், நீர் தேவைப்பாடு, போக்குவரத்து,தபால் சேவை,மின்சாரம், சுகாதர திணைக்களத்தின் செயற்பாடு,வைத்தியத் துறைம மத வழிபாடுகள் தொடர்பாக மக்களால் தெரிவிக்க பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தஅறிக்கையினை பூநகரி பிரதேசச் செயலாளர், கிளிநொச்சி அரசாங்க அதிபர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.   http://globaltamilnews.net/2019/118644/  
  • சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  
  • ( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..!  தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?    கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )   Empfehlung an Parimalam:    "அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?  கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! "