Jump to content

சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Naam Thamilar Party arrest of Seeman by Kerala Police

சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு செல்லப்பட்டது.

நேற்று 25-08-2018 மாலை 06 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு சென்று வழங்கினார்கள். நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்தது.

இதை காரணம்காட்டி அங்கிருந்த பாஜக-வினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கேரள காவல்துறையின் இச்செயலுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/naam-thamilar-party-arrest-seeman-kerala-police-328301.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எதுக்கு தலைவர் பிரபாகரன் படம்,பதாதைகள்?

தான் வாழும் காலம்வரை தன்னை விளம்பரபடுத்தாமலே வாழ்ந்தவர் அவர்...

அவர் பெயரை எதுக்கு நீங்க கூவி கூவி விக்குறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எதுக்கு தலைவர் பிரபாகரன் படம்,பதாதைகள்?

தான் வாழும் காலம்வரை தன்னை விளம்பரபடுத்தாமலே வாழ்ந்தவர் அவர்...

அவர் பெயரை எதுக்கு நீங்க கூவி கூவி விக்குறீங்க?

அப்ப திமுக அல்லது அதிமுக அல்லது பிஜேபி அதையும் விட்டு காங்கிரஸ் அண்ணை படத்தை போட்டு கொண்டு போனால் நீங்கள் அமைதியாகுவீங்களா ?

சொல்லுங்க இன்னும் பத்து வருடம் போனால் ஈழத்தில் இப்படி ஒரு போராட்டம் நடை பெற்றதா என்பதே தமிழ்நாட்டில் கேள்வி குறி ஆகும் ஊருக்கு ஒரு பெண்டாட்டி வைத்தவர்கள் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு மட்டும் தெலுங்கனின் வாழ்க்கை வரலாறு மட்டும் தமிழ்நாட்டு பாடதிட்டத்தில் வருவது உங்களுக்கு ஓகேயா ?

2 hours ago, valavan said:

விளம்பரபடுத்தாமலே வாழ்ந்தவர் அவர்

அப்படி இருந்தபடியால்தான் இப்ப வந்ததும் கல் எறிந்து விளையாடுது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் முடிந்து முழுசாக 10 வருஷம் முடியவில்லை, புலம் பெயர்ந்த தேசத்திலும் தாயகத்திலும் நம்மவர்களே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை ஏறக்குறைய மறந்தேவிட்டார்கள்.

இன்னும் பத்து வருஷம் போனால் தமிழகம் மறந்துவிடும் என்று நீங்கள் படும் கவலை,

எங்கள்வீட்டில் நடந்ததை நாங்களே நினைவில் வைத்திருக்காத ஒரு நிலையில்... பக்கத்துவீட்டுக்காரன் அதை மறந்துபோயிடுவான் என்று நினைத்து பொங்குவது நகைச்சுவையானது.

வேறு ஒரு நாட்டின் கட்சி தலைவர்கள் ஐந்து மனைவி வைத்திருந்தால் என்ன ஐயாயிரம் மனைவிகள் வைத்திருந்தாலென்ன, சராசரி மனிதனின் வாழ்வுகாலத்தைவிட பல வருஷங்கள் அதிகமாக வாழ்ந்த அந்த மனிதனை,இனிமே அவரால் எழுந்து வர,முடியாது என்று புரிந்தும்  தலைவா எழுந்துவா என்று ஆஸ்பத்திரி வாசலில் லட்சகணக்கில் கூடி நின்று அழுகிறார்கள் புலம்புகிறார்கள்.

பல தடவை அவரை அவர்போன்ற தலைவர்களை முதல்வராக்கியிருக்கின்றார்கள், அவர்களின் நடத்தைற்றி அந்த மாநிலமக்களே கவலைபடாதபோது ,அதுபற்றி ஆராய்ச்சிகள் செய்ய கோபபட நாங்கள் யார்?

எந்த பிரபாகரனின் பெயர் சொல்லி அவர் அணியில் நின்றார்களோ அவர்களே அவர்மறைவின் ஓரிரு வருஷங்களிலேயே எதிர் இனத்துடன் கைகோர்த்தும், நிதி கையாடல்,களியாட்டங்கள்,சுற்றுலாக்கள் , இலங்கை தூதரகத்துடன்கூடவே ஒன்றுகூடல்கள் என்று திரியும் வெட்கம் கெட்ட மக்களின் இன பிரஜைகளான நாங்கள்,

தப்போ சரியோ தலைமுறை கடந்த பின்னும் தலைவா என்று தமது தலைவர்களுக்காக அழும் அவர்களைபற்றியோ அவர்கள் தலைவர்கள் பற்றியோ பேசவே தகுதியில்லாதவர்கள்.

தமிழகம் என்பது இந்திய துணைகண்டத்தின் ஒரு மாநிலம் அந்த மாநிலத்தில் சுப்பிரமணியசுவாமியின் பெயரை பாடத்திட்டத்தில் கொண்டுவந்தால்கூட நம்மால் எதுவும் செய்யமுடியாது அது அவர்கள் பிரச்சனை.

கால் நூற்றாண்டுகளுக்குமேல் சிறையில் தமது இளமையையும் வாழ்வையும் தொலத்துவிட்ட, ராஜீவ் கொலையில் நேரடியாக சம்பந்தப்படாத குற்றம் சுமத்தப்பட்டவர்களையே இன்றுவரை விடுதலை செய்ய அந்த நாட்டின் மத்திய மாநில அரசுகள் தயாரில்லை,

அவர்களை ராஜிவ் கொலையாளிகள் என்றே கூறுகிறது

சும்மா பேருக்கு மாநில அரசு முயற்சி செய்வதுபோல் காட்டினாலும் முழுதான அக்கறையாய் தெரியவில்லை,

அந்த நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அந்தநாட்டின் பாடபுத்தகங்களில் வரவேண்டும் என்றொரு ஆசை உங்களுக்கிருந்தால்.. உங்கள் நம்பிக்கைகள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது.

தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அவசியம்தான் தப்பேயில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எதுக்கு தலைவர் பிரபாகரன் படம்,பதாதைகள்?

தான் வாழும் காலம்வரை தன்னை விளம்பரபடுத்தாமலே வாழ்ந்தவர் அவர்...

அவர் பெயரை எதுக்கு நீங்க கூவி கூவி விக்குறீங்க?

உலக புகழ் பெற்ற கம்யூனிச தலைவர்களான மாவோ லெனின் போன்ற தலைவர்களின் படங்கள் பதாதைகள் இன்னமும் உலககெங்கிலும் கொண்டு திரிகிறார்கள்.அந்த வகையில் உலக புகழ் பெற்ற எம்கண் முன்னே அத்தனையோ சாகசங்கள் செய்து காட்டிய எம்தவைனின் படத்தை கொண்டு திரிவதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

வளவன் ஒன்றை மறந்து விட்டார்.தேசியத் தலைவர் தமிழ் கூறும் நல்லுலகின் முகவரி.மலையாள சேட்டன்களின் புத்தியை காட்டி விட்டார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

உலக புகழ் பெற்ற கம்யூனிச தலைவர்களான மாவோ லெனின் போன்ற தலைவர்களின் படங்கள் பதாதைகள் இன்னமும் உலககெங்கிலும் கொண்டு திரிகிறார்கள்.அந்த வகையில் உலக புகழ் பெற்ற எம்கண் முன்னே அத்தனையோ சாகசங்கள் செய்து காட்டிய எம்தவைனின் படத்தை கொண்டு திரிவதில் என்ன தவறு?

கம்யூனிச அமைப்புக்களுக்கு இந்தியாவில் தடையில்லை, விடுதலைபுலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை உண்டு...

உலக புகழ் பெற்ற எம்கண் முன்னே அத்தனையோ சாகசங்கள் செய்து காட்டிய எம்தவைனின் படத்தை கொண்டு திரிவதில் என்ன தவறு என்று கேரள காவல்துறையிடம்தான் கேள்வியை வைக்கவேண்டும், ஏனென்றால் அது தவறு என்று சொல்லி,அவர்கள் நிலத்தில் சீமானை கைது செய்தது அவர்கள்தானே...

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், இதனை முதலில் எதிர்த்தது பாஜக...

புலிகள் அமைப்பே தடை செய்யப்பட்டது காங்கிரஸின் தலைவரை கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டில்...

இந்திய அரசியலில் காங்கிரஸ் தமது ஜென்மவிரோதியாக இருந்தாலும், இந்திய தலைவர் ஒருவரை கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கட்சிபேதங்களை மறந்து கடுமையாக எதிர்க்கிறார்கள்...

தமிழகத்தில் தலைவர் படத்தினை கொண்டுதிரியலாம், எமது இனம் என்ற ரீதியில் மானசீக ஆதரவு வழங்குகிறார்கள்,

தமிழக எல்லையை கடந்துவிட்டால் பிரச்சனையேதான், அதுதான் சீமான் கைதுக்கான காரணம் என்பதே நான் சொல்லவருவது...

மற்றும்படி தலைவர் படத்தை அவர் கொண்டு திரிவது தப்பென்று சொல்லவரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

மற்றும்படி தலைவர் படத்தை அவர் கொண்டு திரிவது தப்பென்று சொல்லவரவில்லை.

நீங்கள் எழுதியதை திரும்பவும் படித்துவிட்டுத்தனா இந்த கருத்தை எழுதியது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2018 at 11:48 PM, valavan said:

பல தடவை அவரை அவர்போன்ற தலைவர்களை முதல்வராக்கியிருக்கின்றார்கள், அவர்களின் நடத்தைற்றி அந்த மாநிலமக்களே கவலைபடாதபோது ,அதுபற்றி ஆராய்ச்சிகள் செய்ய கோபபட நாங்கள் யார்?

இருக்கிற ஒரு தலைவனையே பறிகொடுத்த இனம் நாங்கள் அவர்கள் அந்த தலைவனின் படத்தை கொண்டு போனால் உங்களுக்கு ஏன்  குத்துது குடையுது . பெருமைபடவேண்டிய நேரம் இங்கு புலிக்கொடியை தூக்கினாலும் குற்றம் பிரபாகரன் படத்தை காவினாலும் நாலு சிங்களவன் இல்லை எங்கடையள் தான் கொள்ளுபடுதுகள் எங்களுடன் தமிழ்நாட்டில் சீமான் தூக்கினால் பெருமைபடனும் இல்லாட்டி அமைதியாகிடணும் அது அவர்களின் அரசியல் ஜெயிலோ சிறையோ ,தடாவோ ,உபாவோ எல்லாம் அவர்களோடு நீங்கள் ஜெயில் அவர்களுக்காக போகபோவது கிடையாது அதே நேரம் உங்களால் ஒரு பென்னி சீமானுக்கு குடுக்கபோவதும் கிடையாது பிறகேன் விசைப்பலகை வீரம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இருக்கிற ஒரு தலைவனையே பறிகொடுத்த இனம் நாங்கள் அவர்கள் அந்த தலைவனின் படத்தை கொண்டு போனால் உங்களுக்கு ஏன்  குத்துது குடையுது . பெருமைபடவேண்டிய நேரம் இங்கு புலிக்கொடியை தூக்கினாலும் குற்றம் பிரபாகரன் படத்தை காவினாலும் நாலு சிங்களவன் இல்லை எங்கடையள் தான் கொள்ளுபடுதுகள் எங்களுடன் தமிழ்நாட்டில் சீமான் தூக்கினால் பெருமைபடனும் இல்லாட்டி அமைதியாகிடணும் அது அவர்களின் அரசியல் ஜெயிலோ சிறையோ ,தடாவோ ,உபாவோ எல்லாம் அவர்களோடு நீங்கள் ஜெயில் அவர்களுக்காக போகபோவது கிடையாது அதே நேரம் உங்களால் ஒரு பென்னி சீமானுக்கு குடுக்கபோவதும் கிடையாது பிறகேன் விசைப்பலகை வீரம் ?

இங்கே இணைக்கப்பட்ட செய்தியில் சீமான் கைது செய்யப்பட்டதற்கான காரணம் பற்றியே பேசப்பட்டது,

ஒரு இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவழங்க செல்லுமிடத்தில் தலைவர் படத்தை காவி திரியவேண்டிய அவசியமேயில்ல, ஏதாவது அரசியல் நிகழ்வுகளுக்கு அதனை பாவித்திருந்தால் அதன் பிரச்சார யுக்தி ஏற்புடையது என்பதே கருப்பொருளாக சொல்லப்பட்டது.

மற்றும்படி அவரை புலிகொடி தூக்கவேண்டாமென்றோ, தலைவர் படத்தை காவி திரியவேண்டாமென்றோ சொல்லப்படவில்லை.

அவர்களுக்காக எப்படி நான் ஜெயிலுக்கு போகபோவது கிடையாதோ, அதேபோல அவர்கள் உள்ளே போனால் உணர்ச்சி பிழம்பாய் நிற்கும் நீங்களும் அவர்களை வெளியில் எடுத்துவிடபோவதும் கிடையாது.

நான் ஒரு சதம் சீமானுக்கு குடுக்கபோவது கிடையாது  என்று , சீமானுக்கு கோடி கணக்கில் கொடுத்துவிட்டு மூச்சுவாங்கும் உங்களுக்கு கூற அனைத்து உரிமையும் இருக்கிறது அதை வரவேற்கிறேன்.

 விசைபலகை வீரம் என்றால் என்ன என்பதற்கு போதிய விளக்கமில்லாமல் குழம்பி போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், மூடிய அறைக்குள் இருந்தபடி கொடியை தூக்கவேண்டும், படத்தை பிடிக்கவேண்டும் கொந்தளிப்பதற்கு பெயர்தான் விசை பலகை வீரம்,.

கருத்துக்கு கருத்து எழுதாது கருத்து எழுதுபவரின்மீது  அநாவசியமாக வார்த்தைகளை தெறிக்கவிடுவது உங்களுக்கு பழகிபோனதொன்றுபோலும்,அதுதான் அடிக்கடி என்னுடன் அப்படி நடந்துகொள்கிறீர்கள்.

இதற்கு முன்பும் சில தடவைகள் அப்படி.

உங்களின் கட்டுப்படுத்தமுடியாத கோபத்திற்கு மதிப்பு கொடுத்து

இனிமேல் இந்த களத்தில் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ளும் கடைசி கருத்தாக இதுவே இருக்கும் என்பதை ஒரு மகிழ்ச்சியான செய்தியாக தங்களுக்கு அறிய தருகிறேன். தங்களின் கெளரவம்தான் எனக்கு முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நாகரீகம் தெரியாத
ங்கோத்தா... ங்கொம்மா...
என்றெல்லாம் படு கேவலமாக
பேசுகின்ற
கடலாமை ஓடு, ஆமைக் கறி
என்று பம்மாத்து விடுகின்ற
இந்த செபஸ்டியன் சைமன்
ஒழுக்கமும் பண்பும்
நிறைந்த
தலைவரின் படங்களை
பயன்படுத்தும் ஒவ்வொரு
தடவையும்
தலைவர் அவமதிப்புக்குள்ளாகின்றார்

செபஸ்டியன் சைமனால்
தலைவரை வெறுக்கும்
ஆட்கள் தான் தமிழகத்தில்
இந்தியாவில் அதிகரிக்கின்றனர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வைரவன் said:

அரசியல் நாகரீகம் தெரியாத
ங்கோத்தா... ங்கொம்மா...
என்றெல்லாம் படு கேவலமாக
பேசுகின்ற
கடலாமை ஓடு, ஆமைக் கறி
என்று பம்மாத்து விடுகின்ற
இந்த செபஸ்டியன் சைமன்
ஒழுக்கமும் பண்பும்
நிறைந்த
தலைவரின் படங்களை
பயன்படுத்தும் ஒவ்வொரு
தடவையும்
தலைவர் அவமதிப்புக்குள்ளாகின்றார்

செபஸ்டியன் சைமனால்
தலைவரை வெறுக்கும்
ஆட்கள் தான் தமிழகத்தில்
இந்தியாவில் அதிகரிக்கின்றனர்

 

யாழ் தளம், தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறது. 

உறுதிப்படுத்தப்படாத, தேவையில்லாத அலம்பறைகளை  தவிர்ப்பது நல்லது. செபாஸ்டியன் சைமன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமாயின் மட்டும் அதை இங்கே பதியவும்.

உங்கள் தனிப்பட்ட விருப்புகளை இங்கே பதிவதை தவிருங்கள். 

கடலூரில் போட்டியிடட போது... தனது சொந்த பெயரில் தான் போட்டி இட்டார். செபாஸ்டியன் சைமன் என்ற பெயரில் அல்ல. அதனை மீடியா மிக ஆர்வமாக ஆய்வு செய்தது என்பதை அறிவீர்களா?

மக்களை முட்டாள்கள் ஆக்கும் தமிழகத்தின் மூன்றாம் தர அரசியல் வாதிகள் சொல்வதை இங்கே, சொல்ல வேண்டாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாழ் தளம், தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறது. 

உறுதிப்படுத்தப்படாத, தேவையில்லாத அலம்பறைகளை  தவிர்ப்பது நல்லது. செபாஸ்டியன் சைமன் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமாயின் மட்டும் அதை இங்கே பதியவும்.

 

அவரல் உலகம் முழுதும்
தன் பெயரை சீமான் என்று
ஏமாத்த முடியாது

கனடாவில் இருந்து
நாடு கடத்தப்பட்ட போது
நாடு கடத்தல் டொக்குமன்ற்
இல் அவர் பாஸ்போர்ட் பெயரைத் தான்
குறிப்பிட்டு இருந்தார்கள்

அந்தப் பெயர்
செபஸ்டியன் சீமான் / செபஸ்டியன் சைமன்
என்றுதான் போட்டு இருந்தார்கள்

பார்க்க:

https://www.theglobeandmail.com/news/national/champion-of-tamil-tigers-booted-out-of-canada/article1347721/

Government site:

http://immigrationwatchcanada.org/2009/11/27/indian-tamil-tiger-supporter-deported/


அதன் பின்னரே
தமிழக அரசியலுக்கு
ஏற்ப அண்ணாச்சி
பெயரை மற்றினார்

அது சரி,
அவர் பெயர் உங்கள்
ஆசைக்கு சீமானாகவே
இருந்து விட்டு போகட்டும்

ஆனால் மேடைகளில்
பேட்டிகளில்
ஆபாசமாக
படு கேவலமாக சொற்களில்
ஒருமையில் மற்றவர்களை,
மற்ற அரசியல் தலைவர்களை
திட்டும் ஒரு நபர்

தன் தொம்பிகளையும்
அப்படியே வளர்த்தெடுத்த
ஒரு நொண்ணன்

தான் அப்படி பேசும்
கூட்டங்களிளிலும்
போகின்ற இடங்களிலும்
தான் மட்டுமன்றி
தன் போராளிகளை
கூட ஒழுக்கத்தின்
சிகரங்களாக வளர்த்த
தலைவரை காவி திரிவது
அந்த தலைவருக்கு செய்யும்
அவமரியாதை
என்பதை தாங்கள்
உணரவில்லையா?

 

1 hour ago, Nathamuni said:

மக்களை முட்டாள்கள் ஆக்கும் தமிழகத்தின் மூன்றாம் தர அரசியல் வாதிகள் சொல்வதை இங்கே, சொல்ல வேண்டாமே...

உங்கள் செபயஸ்டியன்
அவர்களை எல்லாம்
தூக்கிச் சாப்பிடும் அளவுள்ள
ஆமைக்கறி கதாசிரியரான
நாலாம் தர ஏமாற்று அரசியல்வாதி
அல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வைரவன் said:

அந்தப் பெயர்
செபஸ்டியன் சீமான் / செபஸ்டியன் சைமன்
என்றுதான் போட்டு இருந்தார்கள்

சீமான் செபஸ்தியானை இருக்கட்டும் அதனால் என்ன?

அவரது கொள்கைகள் தான் அவரோடு உறவாடச் செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சீமான் செபஸ்தியானை இருக்கட்டும் அதனால் என்ன?

 

அண்ணாச்சி,

அவர் செபஸ்டியனா இல்லையா
என்பதல்ல இங்கு
பிரச்சனை

ஆபாசமாக கெட்ட வார்த்தைகளாக
கொட்டும் ஒருவர்
அப்படி கொட்டும்
இடங்களில் எல்லாம்
தலைவரின் படத்தை
பாவிப்பது சரியா பிழையா என்பது
தான்

உங்களை போன்ற
நாதமுனியாரை போன்றவர்கள்
இப்படியான கேள்விகளுக்கு
நேரடியாக பதில் சொல்ல
மாட்டீர்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வைரவன் said:

ஆபாசமாக கெட்ட வார்த்தைகளாக
கொட்டும் ஒருவர்
அப்படி கொட்டும்
இடங்களில் எல்லாம்
தலைவரின் படத்தை
பாவிப்பது சரியா பிழையா என்பது
தான்

சீமான் இப்போதான் அரசியலில் தவள்கிறார்.ஆரம்பத்தில் அவரது உரைக்கும் இப்போது அவர் பேசுவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.நீங்கள் சொல்வதை நானும் அவதானித்துள்ளேன்.காலப்போக்கில் நிறையவே மாற்றங்கள் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீமானின் வார்த்தைகள் சகலதும் சரியென வாதாட வரவில்லை. அதே நேரம் சீமான் மீது மட்டும் ஏறிப்பாயும் வல்லவர்கள் கருணாநிதியின் அநாகரீக வார்த்தைகளை மறந்து போவது ஏன்?
 


 à®à®°à¯-à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- à®à®°à¯à®µà®¾à®¤à®¿à®à®¾à®°à®¿, à®à®¾à®¨à¯à®¤à®¾à®°à®¿.....

 "இந்திராவே...காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...?" என்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.  

à®à®°à¯-à®à®®à¯à®à®¿à®¯à®¾à®°à¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- à®à®¿à®´à®µà®©à¯, à®à¯à®¤à¯à®¤à®¾à®à®¿

 "பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்" என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி. 

à®à®°à¯-à®à®¾à®®à®°à®¾à®à®°à¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯-à®à®¾à®£à¯à®à®à¯à®à®¾à®à¯à®à®¾, மரமà¯à®±à®¿, à®à®à¯à®à®ªà¯à®ªà¯à®à®¿

 

à®à®°à¯-à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- மாத விà®à®¾à®¯à¯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நான் சீமானின் வார்த்தைகள் சகலதும் சரியென வாதாட வரவில்லை. அதே நேரம் சீமான் மீது மட்டும் ஏறிப்பாயும் வல்லவர்கள் கருணாநிதியின் அநாகரீக வார்த்தைகளை மறந்து போவது ஏன்?
 


 à®à®°à¯-à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- à®à®°à¯à®µà®¾à®¤à®¿à®à®¾à®°à®¿, à®à®¾à®¨à¯à®¤à®¾à®°à®¿.....

 "இந்திராவே...காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...?" என்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.  

à®à®°à¯-à®à®®à¯à®à®¿à®¯à®¾à®°à¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- à®à®¿à®´à®µà®©à¯, à®à¯à®¤à¯à®¤à®¾à®à®¿

 "பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்" என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி. 

à®à®°à¯-à®à®¾à®®à®°à®¾à®à®°à¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯-à®à®¾à®£à¯à®à®à¯à®à®¾à®à¯à®à®¾, மரமà¯à®±à®¿, à®à®à¯à®à®ªà¯à®ªà¯à®à®¿

 

à®à®°à¯-à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà¯ வà®à¯ பாà®à®¿à®¯à®¤à¯- மாத விà®à®¾à®¯à¯

 

தமிழக அரசியலில்
அநாரீக வார்த்தைகளை
சொல்ல ஆரம்பித்ததே
கருணானிதி தான்.

கருணாநிதி அரசியல்
அநாகரீகத்தை தமிழகத்தில்
விதைத்தவர்

ஆனால் கருணாநிதி
கெட்ட வார்த்தை பேசினார்
என்றால் அதை சைமனும்
அதுவும் தமிழக விடிவெள்ளி
நீங்களும் தமிழகத்தின் 4 வீத
மக்களும் போற்றும்
சைமனும் பேச வேண்டுமா?

ஒருவரை குற்றம் சொல்லும்
போது 'ஏன் அவனும் கெட்டவந்தானே'
என்று வாதிடுவது
கருத்து வங்குரோத்தனம்

நிற்க,
கருணானிதி தலைவரின்
படத்தை வைத்து
கெட்ட வார்த்தை பேசியதாக
ஒரு தகவலும்
இல்லை.

அத்துடன்
நீங்கள் இணைத்துள்ள
அனைத்தும் தரம் கெட்ட
நாலாம் தரமான
நாம் தமிழர் தொம்பிகளால்
உருவாக்கப்ட்ட
அருவருப்பான மீம்ஸ்கள்

இப்படியானதை
தேடி வாசிக்கவும்
பொறுக்கி வைத்திருக்கவும்
ஆதாரமாக காட்டவும்
அவற்றை ரசிப்பவர்களால்
மட்டுமே முடியும்

 

42 minutes ago, ஈழப்பிரியன் said:

சீமான் இப்போதான் அரசியலில் தவள்கிறார்.ஆரம்பத்தில் அவரது உரைக்கும் இப்போது அவர் பேசுவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.நீங்கள் சொல்வதை நானும் அவதானித்துள்ளேன்.காலப்போக்கில் நிறையவே மாற்றங்கள் வரலாம்.

2016 /2017 / 2018 இல் சைமனும்
கருணானிதியார் இறந்தபின்
அவரின் தொம்பிகளும்
கெட்ட வார்த்தைகள்
நிறைய பேசிய
வீடியோக்கள் ஏராளம்
இருக்கு அண்ணாச்சி

சைமன் காலம் பூரா
அரசியலில்
தவள வேண்டியதுதான்
அடுத்த தேர்தலிலும்
டெபாசிட் இழப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வைரவன் said:

ஒருவரை குற்றம் சொல்லும்
போது 'ஏன் அவனும் கெட்டவந்தானே'
என்று வாதிடுவது
கருத்து வங்குரோத்தனம்

வங்குரோத்துத்தனம் இல்லை....

உலக அரசியலில் அநாகரீக வார்த்தைகள் தவழ்ந்து விளையாடுவது சாதாரணம் என்பதை சொல்ல வந்தேன்.

சர்வ உலகத்தின் மூத்த அண்ணன் அமெரிக்க முன்னாள் சனாதிபதி புஷ்.அவர்களின் செந்தேன் வசனங்களை கேட்கவில்லையா?

அல்லது ......

தீராத விளையாட்டுப்பிள்ளை ரம்ப் அவர்களின் செல்ல விளையாட்டுக்களை/வார்த்தைகளை கவனிக்கவில்லையா?

முட்டையில் மயிர்புடுங்க நினைத்தால்.நாமெல்லாம் களிமண்ணை அரைத்துத்தான் சாப்பிடவேண்டிய நிலை வரும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

அவரல் உலகம் முழுதும்
தன் பெயரை சீமான் என்று
ஏமாத்த முடியாது

கனடாவில் இருந்து
நாடு கடத்தப்பட்ட போது
நாடு கடத்தல் டொக்குமன்ற்
இல் அவர் பாஸ்போர்ட் பெயரைத் தான்
குறிப்பிட்டு இருந்தார்கள்

அந்தப் பெயர்
செபஸ்டியன் சீமான் / செபஸ்டியன் சைமன்
என்றுதான் போட்டு இருந்தார்கள்

பார்க்க:

https://www.theglobeandmail.com/news/national/champion-of-tamil-tigers-booted-out-of-canada/article1347721/

Government site:

http://immigrationwatchcanada.org/2009/11/27/indian-tamil-tiger-supporter-deported/


அதன் பின்னரே
தமிழக அரசியலுக்கு
ஏற்ப அண்ணாச்சி
பெயரை மற்றினார்

அது சரி,
அவர் பெயர் உங்கள்
ஆசைக்கு சீமானாகவே
இருந்து விட்டு போகட்டும்

ஆனால் மேடைகளில்
பேட்டிகளில்
ஆபாசமாக
படு கேவலமாக சொற்களில்
ஒருமையில் மற்றவர்களை,
மற்ற அரசியல் தலைவர்களை
திட்டும் ஒரு நபர்

தன் தொம்பிகளையும்
அப்படியே வளர்த்தெடுத்த
ஒரு நொண்ணன்

தான் அப்படி பேசும்
கூட்டங்களிளிலும்
போகின்ற இடங்களிலும்
தான் மட்டுமன்றி
தன் போராளிகளை
கூட ஒழுக்கத்தின்
சிகரங்களாக வளர்த்த
தலைவரை காவி திரிவது
அந்த தலைவருக்கு செய்யும்
அவமரியாதை
என்பதை தாங்கள்
உணரவில்லையா?

 

உங்கள் செபயஸ்டியன்
அவர்களை எல்லாம்
தூக்கிச் சாப்பிடும் அளவுள்ள
ஆமைக்கறி கதாசிரியரான
நாலாம் தர ஏமாற்று அரசியல்வாதி
அல்லவா?

 

குளோப் அண்ட் மெயில் பத்திரிகை தானா உங்கள் மேற்க்கோள்?

இலங்கை அரசு, யுத்த காலத்தில் மிக லாவகமாக, இந்தியா முதல் மேலை நாடுகள் வரை, வெளி நாட்டுப் பத்திரிகையாளர்களை கையாண்டது. பெரும் பணம் செலவளித்தது.

தமிழரான பத்திரிகையாளர் டிபிஸ் ஜெயராஜ் தான் அந்த தவறான தகவல்களை தந்தார். இவர், இலங்கை தூதரக சார்பில், புலிகள் எதிர்ப்பு பரப்புரையினரின் பிரதான ஊடகவியாளராக இருந்தார்.

கனேடிய பத்திரிகைகள் கவலைப்படுமளவுக்கு சீமான் பெரிய ஆள் இல்லை. இருந்தாலும், இந்த இலங்கை அரச பரப்புரையினரின், பயங்கரவாதி ஒருவரை திருப்பி அனுப்பியது போல வெளியிட்ட செய்தி குறிப்பால் ... ..கனேடிய பத்திரிகைகள் அதை பிரசுரித்தன..

திருப்பி அனுப்பப்படும் தனிநபர் தகவல்களை அரசு வெளியிடுவதில்லை. சட்டபூர்வமற்றது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். 

முக்கியமாக, நான் கவனித்தது, புலிகளை முன்னர் விரும்பாத, ஏணைய இயக்கத்தினருக்கு சீமானை, அவர் புலிகளை, அதன் தலைவரை தூக்கிப் பிடிப்பதால், பிடிப்பதில்லை.

தமிழகத்தின் சாபக்கேடு.... தம்மில் ஒருவரை தலைவராக  ஏற்றுக் கொள்வதில்லை. வெளியில் இருந்து வருபவர்களை தலைவராக  ஏற்றுக் கொள்கின்றனர்.

அந்தவகையில் வெளி நாட்டினை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக பிரபாகரனை முன்னிறுத்துகின்றனர், சீமானின் நாம் தமிழர் கடசியினர். சாதி பேதம் இன்றி ஒரு கூட்டம் பின்னால் செல்கிறது.

இதனால் என்ன குறைவு நமக்கு?

இலங்கை வன்னியில், உடும்பு, தொங்கு மான் என்னும் குரங்கு, ஆமை, போன்றவைகளின் இறைச்சி சிலரால் உண்ணப்படுபவை. 

தமிழ் இயக்கங்களில் இருந்தவர்களுக்கு இவை தவிர, தவளை, பாம்பு போன்ற மேலும் பல ஜந்துக்களை உண்ண பழக வேண்டும் என்பது இராணுவ பயிற்ச்சி.

சீமானும் புலிகள் என்னும் ராணுவ அமைப்பில், ஆமை இறைச்சி உண்டதாக சொன்னதில் என்ன பொய் இருக்க முடியும்?

வைரவர், பிரபாகரனை விரும்புவராக காட்டிக் கொண்டு சீமானை எதிர்கிறார். அது உங்கள் விருப்பம்.

ஆனாலும் சீமானின், தாய், தந்தை, சகோதரர், படித்த பாடசாலை தோழர்கள், கல்லாரி தோழர்கள்அவரது சினிமா உலகத் தோழர்கள் எல்லோரும் 'செபஸ்டியன் சைமன்' உண்மையாய் இருந்தால் மறைக்க வேண்டிய ஒட்டுமொத்த தேவை இல்லை. 

நடிகர் விஜய், ஜோசப் விஜய் என்ற தனது அடையாளத்தினை மறைக்க வேண்டிய தேவை இருக்க வில்லை. இசையமைப்பாளர் ரகுமான், முன்னர் திலீப் என்னும் பெயரில் இந்துவாக இருந்தார் என்ற உண்மையை மறைக்க முயலவில்லை. மறைக்கவும் முடியாது. 

அரசியலுக்கு வர முன்னரே, ஒரு கிறிஸ்தவர் ஆக இருந்தால் அதே பெயரில், வர முடியாமல் இருக்க வேண்டிய தேவை என்ன? 

இதனால் தான் உங்கள் பார்வை சிறுபிள்ளை தனமானது. மேலும் துவேசம் மிக்கது என்கிறேன். 

அது மட்டுமல்ல... சீமான் குறித்த பதிவுகள் என்றதும், குபீரென பாய்ந்து தாங்கள் வருவதன் ரகசியம் என்ன?

யாராவது தகவல் தருகிறார்களா? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

சைமன் காலம் பூரா
அரசியலில்
தவள வேண்டியதுதான்
அடுத்த தேர்தலிலும்
டெபாசிட் இழப்பார்

அடுத்ததல்ல, அதற்கு அடுத்ததும் தோல்வி தான் ஐயா.

இதைத்தான் இம்ரான் கானுக்கும் சொன்னார்கள். சீமான் சொன்னது போலவே... எனது MP க்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார் 27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த அவர்.

8 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த சீமானும் அதையே தான் சொல்கிறார். எனது MLA க்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

வெற்றியாளர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதில்லை. வெளியேறுவோர் ஆட்டத்தில் ஜெயிப்பதில்லை.   Winners never quit and quitters never win.

Link to comment
Share on other sites

நாதமுனி 

தான் பேசியவற்றை வைத்து ட்ரோல் பண்ணுகிறார்கள் என்றால் ஆக்க்குறைந்தது அடுத்தமுறை பேசும் போதாவது கவனமாக இருக்க வேண்டும், முந்திய காலங்கள் போல் இல்லை இப்போது. ஆமை இறைச்சி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்..அதற்காக 28கிலோ ஆமை .. ஆமை ஓட்டில கடல் பயணம்..அரிசி கப்பலில் தனக்கு பிரபாகரனே நேரடியாக சூட்டு பயிற்சி வழங்கினார்..60ஆயிரம் யானைகளை ஒரு கப்பலில் ஏற்றிய சோழ மன்னன்...இப்படி எல்லாமா அடித்து விடுவது..எங்கே தவறாக பேசுவார் அதை வைத்து ஓட்டலாம் என ஒரு கூட்டமே காத்திருக்கிறது வெளியில்.. அவர்களிற்கு தீனி போடுகிறார் சுற்றி இருக்கிறவர்களாவது எச்சரிக்கை செய்யலாம்..

 

அவரின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.. ஆனால் அவரினதும் அவரின் தம்பிகளினதும் பேச்சு மற்றும் நடவடிக்கை வெறுப்பரசியலை வளர்க்கிறது.. ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய பலர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அபராஜிதன் said:

நாதமுனி 

தான் பேசியவற்றை வைத்து ட்ரோல் பண்ணுகிறார்கள் என்றால் ஆக்க்குறைந்தது அடுத்தமுறை பேசும் போதாவது கவனமாக இருக்க வேண்டும், முந்திய காலங்கள் போல் இல்லை இப்போது. ஆமை இறைச்சி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்..அதற்காக 28கிலோ ஆமை .. ஆமை ஓட்டில கடல் பயணம்..அரிசி கப்பலில் தனக்கு பிரபாகரனே நேரடியாக சூட்டு பயிற்சி வழங்கினார்..60ஆயிரம் யானைகளை ஒரு கப்பலில் ஏற்றிய சோழ மன்னன்...இப்படி எல்லாமா அடித்து விடுவது..எங்கே தவறாக பேசுவார் அதை வைத்து ஓட்டலாம் என ஒரு கூட்டமே காத்திருக்கிறது வெளியில்.. அவர்களிற்கு தீனி போடுகிறார் சுற்றி இருக்கிறவர்களாவது எச்சரிக்கை செய்யலாம்..

 

அவரின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.. ஆனால் அவரினதும் அவரின் தம்பிகளினதும் பேச்சு மற்றும் நடவடிக்கை வெறுப்பரசியலை வளர்க்கிறது.. ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய பலர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள்..

60,000 யானைகள் கப்பலில்.... என்றுதானே சொன்னார்... ஒரு கப்பலில் என்று சொல்லவில்லையே...

அது தவிர... சில விடயங்கள் தமிழக அடிநிலை வாக்காளர்களுக்கு மட்டும் சொல்லப்படுவது... அதை கண்டு கொள்ளாமல் விடுவது எமக்கு நல்லது. மேலே கருணாநிதி அவர்களின் மதிப்பு இல்லாத சொல்பிரயோகம் பார்த்தோம். ஸ்டாலின் கல்லூரிக் காலத்தில் செய்த அட்டகாசங்கள் சொல்லும் தரம் இல்லை. தமிழகம் அதை மறந்து வாக்களிக்க வில்லையா?

உதாரணமாக ஈழத்து தமிழர்கள் பூர்வீக குடிகள். இந்திய தமிழர்கள், மத்திய இலங்கையில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வாழபவர்கள் என்பதை புரிய வைக்க வைக்கோ முதல் நெடுஞ்செழியன் வரை எப்படி எல்லாம் கதை சொல்ல வேண்டி இருந்தது என்பது தனி கதை. 

அதைக் கேட்டால் நமக்கு மண்டை வெடிக்கும்.

திமுகவுக்கு, பா ஜ க யில் இருந்து வந்த யுவராஜ் என்னும் ஒருவர் வந்த ஒரு மாதத்தில் , புரியாணிக்கு சண்டை போட்டு நாறப் பண்ணினார். நாம் தமிழர் கட்சிக்கும், வந்து சேர்ந்த ஒருமாதத்தில், போலீசை தாக்கினார் என்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுபோல பலர் அடுத்த கட்சியில் இருந்து ஒரு திட்டத்துடன் கட்சி பெயரைக் கெடுக்க 
வேறு எதிர் கட்சிக்கு உறுப்பினராக வந்து சேர்க்கிறார்கள். மேலும் சிலர், கட்சி பெயரை உள்ளிருந்தே கெடுக்க, விலைக்கு வாங்கப் படுகின்றனர். தவிர சிலர் உளவு அமைப்புகளில் இருந்து வந்து... முதன்மைத் தொண்டராக வேலைகள் செய்து கொண்டே... உள்வீட்டு தகவல்களை அனுப்புவார்கள்.

திமுகவுக்கும் இப்படி நடந்த பின்னர் தான், எல்லோரும் அலெர்ட் ஆகின்றனர். மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை, வேறு கட்சிகளின் முகவர்கள், பணத்தினை வாங்கிக் கொண்டு, இன்னோரு கட்சியின் தொண்டர்களாக செய்கின்றனர்.

சமூக தளங்களில் நன்மை இருந்தாலும், இவை தவிர்க்க முடியாத தீமை.

இவையின் ஊடாக கட்சியினை வளர்ப்பது மிகவும் கடினம். ஆயினும் தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில்.... நின்று பிடிப்பவர்களே வெல்வார்கள். 

அதற்கு சான்று ஜெயலலிதா என்னும் பெண்மணி.

நமது ஊரில் கடைசி வரை தாக்குப் பிடித்தவர் பிரபாகரன். அவர் பார்க்காத நம்பிக்கைத் துரோகங்களும்.... வெற்றி தோல்விகளுமா?

இன்று பெரிய தலைமைகள் இல்லாத நிலையில், அடுத்த மாபெரும் தலைவராக இருந்திருக்க வேண்டிய வைகோ.... உறுதி இல்லாத தளம்பல் நிலைபாடினால் எங்கே இருக்கிறார் இப்போது?  ஸ்டாலினை, திமுகவை எதிர்த்து.... எதிர்க்கடசிகள் அனைத்தையுமே தலைமை தாங்கி இருக்க வேண்டிய ஒருவர், தி மு க கோரிக்கையில், சீமானை எதிர்க்கிறார்.

சீமானை விட்டு விலக்கியவர்களில் சுபவீ, கொளத்தூர் மணி என லிஸ்ட் பெரியது. யாரையும் நம்பி கட்சி தொடங்கவில்லை என்ற நிலைப்பாடு இல்லாதவர்கள் நீண்ட தூரம் செல்ல முடியாது.

கவலைப் படாதீர்கள்... சீமான் உறுதியாக நின்றால்... காலம் கை கொடுக்கும். உறுதி இல்லாவிடில் தூக்கி வீசப் படுவார்.
 

Link to comment
Share on other sites

6 hours ago, வைரவன் said:

அதன் பின்னரே
தமிழக அரசியலுக்கு
ஏற்ப அண்ணாச்சி
பெயரை மற்றினார்

 

5 hours ago, Nathamuni said:

அது மட்டுமல்ல... சீமான் குறித்த பதிவுகள் என்றதும், குபீரென பாய்ந்து தாங்கள் வருவதன் ரகசியம் என்ன?

யாராவது தகவல் தருகிறார்களா? ?

 

இந்த களத்தில் இவர் சீமானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கவே வருகின்றார். இது ஒரு தனிப்பட்ட காழ்புணர்வு சார்ந்தது. 

1996 ல் சீமான் தயாரித்த  பாஞ்சாலம் குறிச்சி படத்தில் சீமான் என்றே பெயர் உள்ளது. ஏதோ ஒன்றை இழுத்து சொட்டை நொட்டை சொல்வதே நோக்கமாக உள்ளது. கிறித்தவ பெயர் இஸ்லாமியப்பெயர் இந்து பெயர் என எதுவாக இருந்தால் தான் என்ன பிரச்சனை ?

------

தமிழக அரசியலை பெறுத்தவரை தேமுதிக மதிமுக போன்ற கட்சிகள் வலைத்தளங்களில் கேலிகளுக்கு உள்ளாகி பெரும் பின்னடைவை சந்தித்தது. ஒருவகையில் குறிவைத்து தக்கப்பட்டது என்ற செல்ல முடியும். இவ்வாறு நடக்கும் போது வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் திமுக அதிமுக மீளவும் பலம்பெறுகின்றது. அரசியல் வாதியை விமர்சனம் செய்கின்றேன் என்ற போர்வையில் தன்தலையில் தானே மண்ணள்ளி போடும் கதைதான் நடக்கின்றது. புலிகள் இருக்கும் வரை அவர்களை விமர்சிப்பதையே ஒரு வேலையாக செய்துகொண்டிருந்த தளங்கள் கடசியாக கண்டது ஒன்றும் இல்லை. புலிகளின் முடிவுக்கு பின்னர் அவர்கள் வலைத்தளங்களை கூட காப்பாற்ற முடியவில்லை. 

தமிழ்த்தேசீயம் - இனம் சர்ந்த உணர்வு எங்கெல்லாம் துளிர்விடுகின்றதோ அவைகள் தமிழர்களாலேயே கிள்ளி எறியப்படும். சாதியச் சமூகங்களின் சிந்தனை முறை ஒரு போதும் நேர்த்தியாகவோ தூரநோக்கிலோ இருக்காது. இனத் தேசீய எழுச்சிக்கு எதிராகவே அது இயங்கும். அதை புரிந்துகொள்வது கடினம். இன்றய தமிழகத்தின் "கலாய்த்தல்" என்ற பகிடி கலாச்சாரம் நேற்றய சாதிய நையப்புடைப்புகளின் நீட்சியோடு தொடர்புடையது. அரசியல் விமர்சனங்களிலும் இவை கலந்தே உள்ளது.  சாண் ஏற முழம் சறுக்கும். 

நாம் சாதி மத பிரதேசவாத முரண்பாடுகளை கடந்து ஒரு இனமாக மாற முற்படுகின்றோம் தவிர நாம் ஒரு பலமான தேசீய இனத்தை சார்ந்தவர்கள் இல்லை.  தமிழர்களது அரசியல் என்பது எப்போதும் தனது இனத்தை கட்டமைப்பதும் பிற இனங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொளவதும் என்ற  இரண்டு நிலை இயக்கத்தில் இருக்கும் அதனடிப்படையில் எமக்கு நாமே எதிரிகள் மற்றது புறநிலை எதிரிகள். எமது வார்த்தைகள் கருத்துக்கள் நாம் எதிர்பார்ப்பதை விட  நூறுமடங்கு இனமென்ற அடிப்படையில் எமக்கே எதிரானவை. அழிவுகளை ஏற்படுத்துபவை. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.