Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019


Recommended Posts

ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட்

 

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார்.

ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட்
 

ரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெய்ன்), சீரி - ஏ (இத்தாலி), புண்டஸ்லிகா (ஜெர்மனி), லீக் 1 (ஃபிரான்ஸ்) தொடர்களின் சம்மரி...

மான்செஸ்டர் சிட்டி - வோல்ஸ்பெர்க்

பிரீமியர் லீக் (இங்கிலாந்து)

 

 

பிரீமியர் லீக் எப்போதும்போல் இப்போதே ஆச்சர்யங்களை அடுக்கத் தொடங்கிவிட்டது. அட்டகாசமான 2017/18 சீசனுக்குப் பிறகு அதே உத்வேகத்தில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, இரண்டு அசத்தல் வெற்றிகளுக்குப் பிறகு இந்த வாரம் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சீசன் ப்ரமோட் ஆன வோல்ஸ்பெர்க் அணியுடன் மோதிய சிட்டி, எதிரணியின் அரணை உடைக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ டி ப்ருய்னே காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருகட்டத்தில் 1-0 என பின்னிலையில் இருந்த அந்த அணி, டிஃபண்டர் ஆய்மரிக் லபோர்ட் போட்ட அசத்தல் ஹெட்டரால் டிரா செய்தது. 

மற்ற முன்னணி க்ளப்களான லிவர்பூல், செல்சீ தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தன. அந்த இரண்டு அணிகளும்கூட பலம் குறைந்த எதிரணிகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறவே செய்தன. லிவர்பூல் அணி முகம்மது சலா அடித்த ஒற்றை கோலின் உதவியால் ப்ரிட்டன் அண்ட் ஹோவால்பியான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த சீசன் வரை மிக மோசமான டிஃபன்ஸ் கொண்டிருந்த லிவர்பூல் இந்த சீசனில் இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை! செல்சீ 2-1 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் யுனைடட் அணியைப் போராடி வென்றது. 

வாட்ஃபோர்ட்

பிரீமியர் லீகின் இன்னொரு ஆச்சர்யம் வாட்ஃபோர்ட்! கடந்த சீசனில் 14-ம் இடம் பிடித்திருந்த வாட்ஃபோர்ட் அணி, இந்த முறை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்த சீசனைத் தொடங்கியுள்ளது. கிறிஸ்டல் பேல்ஸ் அணியுடனான போட்டியில் 2-1 என வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் அமர்ந்துள்ளது. மற்றொரு முன்னணி அணியான அர்செனல் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. புதிய பயிற்சியாளர் யுனாய் எமரி தலைமையில் ஆரம்பத்தில் சொதப்பியவர்கள், அவர்களைவிட மோசமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியை 3-1 என வீழ்த்தினர். இந்த வாரத்தின் மிகப்பெரிய போட்டியான மான்செஸ்டர் யுனைடட் vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆட்டம் செவ்வாய் அதிகாலை நடக்கவுள்ளது.

லா லிகா (ஸ்பெய்ன்)

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். அதேபோல் அவர்களின் இள ரத்தங்கள் அஸேன்சியோ, இஸ்கோ இருவரும் மிகச் சிறப்பாக 'Post - Ronaldo' சீசனுக்கு பங்களிக்கின்றனர். பென்சிமா 2 கோல்களும், ரமோஸ், பேல் இருவரும் தலா 1 கோல் அடிக்க மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. 

கேரத் பேல்

ரியல் வலோலாய்ட் அணியுடன் மோதிய நடப்பு லா லிகா சாம்பியன் பார்சிலோனா 1-0 என போராடி வென்றது. மெஸ்ஸி, சுவார்ஸ், டெம்பளே, ரகிடிச், கொடினியோ என முழு பலத்துடன் களமிறங்கியபோதும் எதிரணியின் டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. 57-வது நிமிடத்தில் ஓஸ்மான் டெம்பளே அடித்த கோல் அந்த அணியி வெற்றி பெறச் செய்தது. மற்றொரு முன்னணி அணியான அத்லெடிகோ மாட்ரிட் 1-0 என ரியல் வலோசேனோ அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட், பார்சிலோனா இரண்டு அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தில் இருக்கிறது. 

சீரி - ஏ (இத்தாலி)

யுவன்டஸ் அணிக்காக விசித்திரமான முறையில் அசிஸ்ட் செய்து கணக்கைத் தொடங்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வலது விங்கில் இருந்த கோல் போஸ்ட் நோக்கி கிராஸ் வர, அதை கோலாக்க விரைந்தார் சி.ஆர்.7. லேஸியோ கோல்கீப்பரின் கையில் பட்டுவிட, அவரக்கு சரியாக சிக்காமல் காலின் பின்புறம் பட்டு பந்து எழும்பியது. அதை மாண்ட்சுகிச் கோலாக்கினார். யுவன்டஸ் அணிக்காக தன் இரண்டாவது போட்டியில் ஆடும் ரொனால்டோ, கோலுக்கு செய்த முதல் பங்களிப்பு இது. அதற்கு முன்பு மிரேலம் ஜேனிக் கோலடிக்க, 2-0 என வெற்றி பெற்றது யுவன்டஸ்.

ரொனால்டோ

நெபோலி அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ள கார்லோ ஆன்சலோட்டி, தான் முன்பு பயிற்சியாளராக இருந்த ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான 'எமோஷனல்' ஆட்டத்தில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். இந்த ஆட்டத்தில் நெபோலி 3-2 என வெற்றி பெற்றது. நெபோலி அணியின் ஜீலின்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்தார். டொரினோ, இன்டர் மிலன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. ஃபியோரன்டினா அணி சீவோவை 6-1 எனப் போட்டுத் தள்ளியது. அந்த அணியின் ஆறு வீரர்கள் தலா 1 கோல் அடித்தனர்.

புண்டஸ்லிகா (ஜெர்மனி)

ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடர் சனிக்கிழமை ஆரவாரத்தோடு தொடங்கியது. நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச்,  ஹோஃபன்ஹேம் அணியை 3-1 என வீழ்த்தி,புதிய பயிற்சியாளர் நிகோ கோவக் தலைமையிலான சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து, ஜெர்மனியின் முன்னணி வீரர்கள் புத்துணர்ச்சியோடு சீசனைத் தொடங்கினார்கள். அந்த அணியின் முதல் கோலை தாமஸ் முல்லர் அடித்தார். ராபர்ட் லெவண்டோஸ்கி, அயன் ராபன் ஆகியோரும் தங்கள் கோல் கணக்கைத் தொடங்கினர். 

ரியூஸ்

பேயர்ன் மூனிச் அணியைவிட ஒரு கோல் அதிகமாக அடித்ததால், கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடம் பிடித்தது பொருஷியா டார்ட்மண்ட். ஆர்.பி.லீப்சிக் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 4-1 என வெற்றி பெற்றது. ஜீன் கெவின் அகஸ்டின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து டார்ட்மண்ட் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அதன்பிறகு சுதாரித்து ஆடிய 'பி.வி.பி' அணியினர் முதல் பாதியிலேயே 3 கோல்கள் திருப்பினர். இரண்டாவது பாதியில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தாலும் லீப்சிக் அணியால் பதில் கோல் போட முடியவில்லை. ஆட்டம் முடியும் நேரத்தில் டார்ட்மண்ட் கேப்டன் ரியூஸ் கோலடித்து அணியின் கணக்கைக் கூட்டினார். 

லீக் - 1 (ஃபிரான்ஸ்)

பி.எஸ்.ஜி அணியின் ஆதிக்கம் லீக் - 1 தொடரில் கொஞ்சமும் குறையவில்லை. தாமஸ் டக்கல் தலைமையில் அந்த அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கவானி, நெய்மர், எம்பாப்பே அடங்கிய முன்களத்தை எந்த அணியாலும் சமாளிக்க முடியவில்லை. சனிக்கிழமை ஏங்கர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் இவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. மூன்று பேருமே ஆளுக்கொரு கோல் அடித்து பி.எஸ்.ஜி அணியை வெற்றிபெறவைத்தனர். உலகக் கோப்பை நாயகன் கிலியன் எம்பாப்பே இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார். 

நெய்மர், எம்பாப்பே, கவானி

கடந்த சீசனில் 11-வது இடம் பெற்றிருந்த டிஜோன் அணி இந்த முறை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. நைஸ் அணியை 4-0 எனத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜூலியஸ் கீட்டா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 2016/17 சீசனின் சாம்பியன் மொனாகோ, பார்டியாக்ஸ் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. 

https://www.vikatan.com/news/sports/135238-updates-of-europes-top-five-football-leagues.html

Link to comment
Share on other sites

பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் வென்றன
 

image_7c113a78c0.jpg

ஸ்பானிய லா லிகா தொடரில், பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றன.

றியல் வல்லடோலிட் அணியின் மைதானத்தில் இன்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை உஸ்மான் டெம்பிலி பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றிருந்தார்.

 
 
பிறைட்டனை வென்றது லிவர்பூல்
 

image_ae505ff565.jpg

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியுடனான போட்டியில் லிவர்பூல் வென்றிருந்தது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் 23ஆவது நிமிடத்தில், சாடியோ மனேயிடமிருந்து பெற்ற பந்தை மொஹமட் சாலா கோலாக்கியதோடு இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை லிவர்பூல் வென்றிருந்தது.

மொஹமட் சாலா பெற்ற கோல் தவிர, சாடியோ மனேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியில் சென்றிருந்ததுடன், றொபேர்ட்டோ பெர்மினோவின் உதையை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் கோல் காப்பாளர் மற் றயன் தடுத்திருந்ததுடன், ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் பிறீ கிக் கோல் கம்பத்தில் முட்டியமை உள்ளிட்ட கோல் பெறும் வாய்ப்புகளை லிவர்பூல் கொண்டிருந்தது.

இதேவேளை, வோல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்சஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. மன்சஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை அய்மரிக் லபோர்ட்டே பெற்றிருந்ததுடன், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை விலி போலி பெற்றிருந்தார். விலி போலி பெற்ற கோலானது, ஜோவா மோட்டின்யோவின் பிறீ கிக் அவரது கையில் பட்டே கோலாகியிருந்தபோதும் அதை மத்தியஸ்தர் கண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, நாச்சோ மொன்றியல், டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னோவிச் பெற்றிருந்தார்.

குறித்த போட்டிக்கான குழாமில் மெசுட் ஏஸில் இடம்பெற்றிருக்காத நிலையில், விளையாடும் ஆரம்ப 11 பேர் அணியில் இல்லாததைக் கண்ணுற்ற அவர் மாற்று வீரராக இடம்பெற்றமையைத் தொடர்ந்து முகாமையாளர் உனய் எம்ரேயுடன் முரண்பட்ட பின்னரே குழாமில் இடம்பெறவில்லை என்பதை மறுத்துள்ள எம்ரே, அவருக்கு உபாதையெனக் கூறியுள்ளார்.

 
 
ஜுவன்டஸ், நாப்போலி வென்றன
 

image_47db7bcee9.jpg

இத்தாலிய சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் ஜுவன்டஸும் நாப்போலியும் வென்றுள்ளன.

தமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் வென்றிருந்தது. ஜுவன்டஸ் சார்பாக, மிரலம் பிஜானிக், மரியோ மண்டூஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, பியோத்தர் ஜினீஸ்கி இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாக, ஜாகோமோ பொனவெந்துரா, டாவிடே கலாப்ரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

கால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்

genoa-fans-696x391.jpg Image courtesy - BBC
 

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் ஜியனோ மற்றும் எம்பொலி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 43 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து போட்டிகளை பொருத்தவரையில், ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த விடயம். அதுவும் இத்தாலியில் நடைபெறும் சீரி கால்பந்தாட்ட தொடரானது, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினில் நடைபெறும் லா லீகா போன்ற மிகப்பெரிய தொடர்களுடன் சம பலம் பொருந்திய தொடராகும்.

இப்படியான ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய தொடரொன்றில் ரசிகர்கள் அமைதியாக இருப்பதென்பது, அதுவும் போட்டியின் கிட்டத்தட்ட பாதி நேரம் (43 நிமிடங்கள்) அமைதியாக இருப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கமுடியாத வழக்கத்துக்கு மாறான செயல்தான்.

இதற்கான காரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பிராதான வழிகளை இணைக்கும் மொராண்டி பாலத்தின் அதிகமான பகுதி, அந்நாட்டில் பெய்துவந்த கடும் மழையின் காரணமாக உடைந்து விழுந்தது. இந்த அனர்த்தத்தில் பாலத்தில் சென்ற வாகனங்கள் குடைசாய்ந்ததுடன், 43 பேர் உயரிழந்திருந்தனர். அதுமாத்திரமின்றி பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

 

 

இந்த நிலையில் உயிரிழந்த 43 பேரையும் நினைவு கூறும் வகையில் ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில், ரசிகர்கள் 43 நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர். ஜியனோவில் நடைபெற்ற இந்த போட்டியில், சொந்த அணி கோலடித்த போதிலும் ரசிகர்கள் எந்த ஆரவாரத்தையும் வெளிக்காட்டவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

போட்டியின் 6ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் சொந்த அணியான ஜியனோ, இரண்டு கோல்களை அடித்தது. எனினும் ரசிகர்கள் எவரும் இதற்கான மகிழச்சியை வெளிப்படுத்தவில்லை. போட்டியின் 43 நிமிடங்கள் நிறைவடைந்த பின்னரே ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். குறித்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மைதானத்திலிருந்த திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஜியனோ அணி, எம்பொலி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, இந்த பருவகாலத்தின் முதலாவது வெற்றியை சுவைத்தது.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்

2018-08-27-696x464.jpg
 

லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் வார நிறைவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் தொடராக பெற்ற வெற்றிகளின் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. எதிரணியினரின் அரங்கில் நடைபெற்ற இவ்வார போட்டியில் இரு அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ரியல் வெலாடோலிட் எதிர் பார்சிலோனா

ரியல் வெலாடோலிட் அணியின் அரங்கமான ஸ்டாடியோ ஜோஸே ஸோரில்லா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

போட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 5 ஆம் நிமிடத்திலே எதிரணிக்கு சவால் விடுத்தது. இதன்போது ஓஸ்மானே டேம்பளே கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கெதிராக ரியல் வெலாடோலிட் அணி பல முயற்சிகளை எடுத்த போதும் பார்சிலோனா அணியின் கோல் காப்பாளரான டெர் ஸ்டேர்ஐன் அவற்றை சிறப்பாக தடுத்தாடினார்.

தொடர்ந்து போட்டியை ஆக்கிரமித்த பார்சிலோனா அணிக்கு 42 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் போது லியொனல் மெஸ்ஸி உதைந்த பந்து கோலுக்கு அருகாமையால் சென்றது. இதனால், இரு அணிகளும் எந்த வித கோல்களும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: ரியல் வெலாடோலிட் 0 – 0 பார்சிலோனா

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களின் பின்னர் பார்சிலோனா அணியின் முன்களத்தில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் அவ்வணிக்கு ஒஸ்மானே டேம்பளே மூலம் முதல் கோல் பெறப்பட்டது.

 

 

போட்டியை சமப்படுத்த முயன்ற ரியல் வெலாடோலிட் அணியினர் சிறந்த பந்து பரிமாற்றங்களை எதிரணியின் எல்லையில் நிகழ்த்திய போதும் அவை சிறப்பாக பார்சிலோனா அணியினரால் தடுத்தாடப்பட்டன. போட்டியின் 76 ஆம் நிமிடத்தில் ரியல் வெலாடோலிட் அணியினருக்கு கோலிற்கான சிறந்த வாய்ப்பு ஓன்று கிட்டிய போதும் கோல் நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.

இறுதியாக பார்சிலோனா அணியினர் பெற்ற ஒரு கோலின் மூலம் ரியல் வெலாடோலிட் அணி போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ரியல் வெலாடோலிட் 0 –  1பார்சிலோனா

ஜிரோனா எதிர் ரியல் மட்ரிட்

கடந்த பருவகால இறுதியில் ஜிரோனா அணியின் அரங்கில் இரு அணிகளும் சந்தித்த இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் அணி தோல்வியுற்ற நிலையில் இப்பருவகாலத்திற்கான லா லிகா சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலே மீண்டும் இவர்கள் பலப்பரீட்சை நடாத்தினர்.

ரியல் மட்ரிட் அணியின் மத்திய களத்தில் நிலவிய முறையற்ற பந்து பரிமாற்றத்தின் பின்னர் ஜிரோனா அணியின் முன்கள வீரரான பொர்ஹா கார்ஸியா மூலம் அவ்வணிக்கான முதல் கோல் போட்டியின் 16 ஆம் நிமிடத்தில் பெறப்பட்டது.

ரியல் மட்ரிட் அணியினர் சற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் எதிரணி வீரர்கள் விடும் தவறை பயன்படுத்தி ஜிரோனா அணியினர் ரியல் மட்ரிட் அணிக்கு சவால் விடுக்கும் வண்ணம் விளையாட ஆரம்பித்தனர். எனினும், அவற்றை ரியல் மட்ரிட் அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் சிறப்பாக தடுத்தாடினார்.

 

ஆட்டத்தின் 39ஆம் நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியினருக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பின் போது அணித் தலைவர் ஸர்ஜியோ ராமோஸ் மூலம் ஒரு கோல் பெறப்பட்டது. அத்துடன் போட்டி சமனுற்ற நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி ஜிரோனா 1 – 1 ரியல் மட்ரிட்

இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்குள் கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ரியல் மட்ரிட் அணியின் முன்கள வீரரான கரீம் பென்ஸிமா அவ்வணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து இஸ்கோ மற்றும் க்ரேத் பேலுக்கு இடையில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் போட்டியின் 59 ஆம் நிமிடத்தில் க்ரேத் பேல் மூலம் மூன்றாவது கோலும் மட்ரிட் அணிக்கு பெறப்பட்டது.

தொடராக இரண்டு கோல்கள் பெறப்பட்ட நிலையிலும் சளைக்காது பல முயற்சிகளை எதிரணியின் எல்லையில் இருந்து ஜிரோனா அணி வீரர்கள் மேற்கொண்டனர். எனினும், கெய்லர் நவாஸின் வேகமான பந்துத் தடுப்பாட்டத்தை தாண்டி எந்த வித கோலையும் அவ்வணி வீரர்களால் பெற முடியவில்லை.

நிறைவில் கரீம் பென்ஸமா மூலம் பெறப்பட்ட நான்காவது கோலின் காரணமாக ஜிரோனா அணி ரியல் மட்ரிட் அணியிடம் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ஜிரோனா 1 – 4 ரியல் மட்ரிட்

மேலும் சில போட்டி முடிவுகள்

கெடாவெய் 2 – 2 ஏய்பர்   

லெகனேஸ் 2 – 2 ரியல் ஸொஸிடட்

அலவெஸ் 0 – 0 ரியல் பெடிஸ்

அட். மட்ரிட் 1 – 0 ராயோ வெலக்கேனோ

ஸ்பான்யோல் 2 – 0 வெலன்ஸியா

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு

Ronaldo-6-696x391.jpg
 

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கழகமான ஜுவண்டஸுக்கு எதிராக ரியல் மெட்ரிட் சார்பில் அதிர்ச்சியூட்டும் வகையில் தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகல் கிக்’ ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) பருவத்தின் சிறந்த கோலாக வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

 

டியூரினில் நடைபெற்ற கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் முதல் கட்ட காலிறுதிப் போட்டியிலேயே ரொனால்டோ அந்த அபார கோலை போட்டார். இதன்மூலம் பருவத்தின் சிறந்த கோலுக்கான போட்டியில் 11 பரிந்துரைகளில் இருந்து முன்னாள் ரியல் மெட்ரிட் வீரர் ரொனால்டோவின் கோல் தேர்வாகியுள்ளது.  

‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். அந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், குறிப்பாக அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை மறக்க மாட்டேன்’ என்று 33 வயதான ரொனால்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  

சிறந்த கோலுக்காக மொத்தம் 346,915 வாக்குகள் பதிவாகி இருப்பதோடு இதில் ரொனால்டோ மாத்திரம் கிட்டத்தட்ட 200,000 வாக்குகளை வென்றுள்ளார்.  

அந்த சம்பியன்ஸ் லீக் போட்டியில், ரொனால்டோவின் கோலால் இத்தாலி சம்பியன் அணியான ஜுவண்டஸுக்கு எதிராக, ரியல் மெட்ரிட் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்தபோதே 64 ஆவது நிமிடத்தில் டானி கர்வஜால் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரொனால்டோ அந்த கோலை புகுத்தினார்.

 

இதனை தனது கால்பந்து வாழ்வில் சிறந்த கோல் என்று ரொனால்டோ குறிப்பிட்டிருந்தார். ரொனால்டோவின் கோல்கள் மூலம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது. கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியனானது.

அந்த அபார கோலுக்கு எதிர்வினையாற்றிய ரசிகர்கள் குறித்து ரொனால்டோ குறிப்பிடும்போது, ”ஜுவண்டஸ் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்” என்றார். இது 100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கடந்த மாதம் ஜுவண்டஸுக்குச் செல்ல முக்கிய காரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

ஐந்து முறை பல்லோன் டி ஓர் விருதை வென்றிருக்கும் ரொனால்டோ சம்பியன்ஸ் லீக்கில் 120 கோல்களை பெற்று அதிக கோல்களை பெற்றவராகவும் சாதனை படைத்துள்ளார்.  

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

லா லிகா- பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றி

 
அ-அ+

லா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema

 
 
 
 
லா லிகா- பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றி
 
லா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

201809021917582860_1_romos-s._L_styvpf.jpg

2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/02191758/1188434/La-Liga-Bezema-gareth-bale-goals-Real-Madrid-Won.vpf

 

 

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்- செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி

 
அ-அ+

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் இன்றைய வார ஆட்டங்களில் செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன. #EPL2018 #Chelsea #MachesterCity

 
 
 
 
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்- செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி
செல்சி வீரர் ஈடன் ஹசார்டு
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று பல ஆட்டங்கள் நடைபெற்றன. ஒன்றில் செல்சி - பவுர்ன்மவுத் அணிகள் மோதின. இதில் செல்சி அணி 2-0 என வெற்றி பெற்றது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.

201809021852575430_1_sterling-s._L_styvpf.jpg
மான்செஸ்டர் சிட்டி வீரர்  ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/02185257/1188430/English-Premier-League-chelsea-manchester-city-won.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

Untitled-1-185-696x464.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. ஒருவார இடைவெளிக்கு பின்னர் ஆரம்பமான பிரீமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து கொண்டதோடு, மன்செஸ்டர் யுனைடெட், மன்செஸ்டர் சிட்டி மற்றும் நியூகாஸில் அணிகளும் வெற்றியீட்டிக் கொண்டன.

  • லிவர்பூல் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்

போட்டியின் கடைசி நிமிடங்கள் வரை முன்னிலை பெற்று 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் டொட்டன்ஹாம் அணியை வீழ்த்திய லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் போட்டியில் இதுவரை 100 வீத வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

லவர்பூல் அணி 1990க்கு பின்னரே முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளது.

கடந்த பருவத்தில் டொட்டன்ஹாமிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் லண்டன், வொம்ப்லே அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் முதல் லிவர்பூல் அணி வேகம் காட்ட ஆரம்பித்தது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஜியோர்ஜினியோ விஜ்லண்டும் பிரிமீயர் லீக்கில் வெளி மைதானத்தில் தனது முதல் கோலை புகுத்த லிவர்பூல் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே 54 ஆவது நிமிடத்தில் ரொபர்டோ பிர்மிலோ, லிவர்பூலுக்காக 2ஆவது கோலையும் புகுத்தினார்.  

போட்டி முடியும் நேரத்தில் எரிக் லமேலா கீழ் இடது மூலையில் கடினமான இடத்தில் இருந்து தனது இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் டொட்டன்ஹாம் கோல் ஒன்றை பெற்றபோதும் லிவர்பூலின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை.        

இதன்படி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் டொட்டன்ஹாம் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது.   

  • செல்சி எதிர் காடிப் சிட்டி

பெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஈடன் ஹசார்டின் ஹட்ரிக் கோல் மூலம் காடிப் சிட்டிக்கு எதிரான போட்டியின் 4-1 என வெற்றியீட்டிய செல்சி பிரீமியர் லீக் பருவத்தில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று கோல் வித்தியாசத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்டான்போர்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சோல் பம்பா உயரப் பாய்ந்து பந்தை வலைக்குள் தட்டிவிட காடிப் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனினும் ஹாசார்ட் முதல் பாதியில் இரு பதில் கோல்கள் திருப்ப செல்சி ஆதிக்கம் செலுத்தியது.

காடிப் சிட்டியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து 37ஆவது நிமிடத்தில் தாழ்வாக உதைத்து முதல் கோலை பெற்ற ஹசார்ட் தொடர்ந்து 44ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

வில்லியனை பெனால்டி எல்லைக்குள் பம்பா கீழே வீழ்த்த 81 ஆவது நிமிடத்தில் ஹசார்ட் நிதானமான பெனால்டி உதை மூலம் ஹட்ரிக் கோலை பெற்றார். தொடர்ந்து வில்லியன் 83 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் செல்சி அணி பிரீமியர் லீக்கில் கோல் வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேற உதவியது.  

இதனால் லிவர்பூல் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 15 புள்ளிகளை பெற்றுள்ளன.

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் புல்ஹாம்

நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் புல்ஹாமுக்கு எதிராக உறுதியான வெற்றி ஒன்றை பெற்று இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எடிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் சிட்டி அணிக்கு திரும்பிய ஜெர்மனியின் லெரோய் சேன் இரண்டு நிமிடங்களுக்குள்ளே நெருங்கிய இடைவெளியில் பந்தை வலைக்குள் செலுத்தினார்.  

இதனால் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்ட புல்ஹாம் 21 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு மற்றொரு கோலை விட்டுக் கொடுத்தது. டேவிட் சில்வா வேகமாக உதைத்து சிட்டி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

ரஹிம் ஸ்டார்லிங் 47ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

  • நியூகாஸில் யுனைடெட் எதிர் ஆர்சனல்

மத்தியகள வீரர் கிரனிட் ஷன்காவின் அபார பிரீ கிக் மற்றும் மெசுட் ஒசிலின் கோலின் மூலம் ஆர்சனல் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் நியூகாசிலை வீழ்த்தியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பெனால்டி எல்லையின் விளிம்பில் நியூகாஸிலின் பெட்ரிகோ பெர்னாண்டஸ் எதிரணி வீரர் பீர்ரே எம்ரிக் அபமயங்கை கீழே வீழ்த்தினார். இதனால் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கொண்டு ஷங்கா மேல் வலது மூலையில் இருந்து உதைத்து அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றார்.     

49ஆவது நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டு ஒன்பது நிமிடங்களின் பின் ஒசில் ஆர்சனல் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

மேலதிக வீரராக வந்த நியூகாஸிலின் சியரான் கிளார்க் பெர்னாண்டஸ் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றியபோதும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. நியூகாஸில் இம்முறை பருவத்தில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் சந்திக்கும் நான்பாவது தோல்வி இதுவாகும்.   

  • மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வட்போர்ட்

இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து பெற்ற கோல்கள் மூலம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், வட்போர்ட்டின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இதில் இரண்டாவது தவறிழைத்த யுனைடெட் அணியின் நெமன்ஜா மடிக் மேலதிக நேரத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் 35ஆவது நிமிடத்தில் ஆஷ்லி யங் உதைத்த பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் நெஞ்சால் கட்டுப்படுத்தி கோலாக மாற்றினார் ரமாலு லுகாகு. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கிறிஸ் ஸ்மல்லிங் யுனைடெட் அணிக்கு மற்றொரு கோலை பெற்று அந்த அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற உதவினார்.   

வட்போர்ட் அணிக்காக 65ஆவது நிமிடத்தில் அன்ட்ரே கிரே கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணி இம்முறை பிரீமியர் லீக்கில் முதல் தோல்வியை சந்தித்தது.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

லா லிகா: வென்றது பார்சிலோனா
 

image_47de459c81.jpg

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் சொஸைடட் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அரிட்ஸ் எலுஸ்டான்டோ பெற்றார்.

இதேவேளை, அத்லெட்டிக் பில்பாவோ அணியின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/லா-லிகா-வென்றது-பார்சிலோனா/44-221896

இன்டர் தோற்றது; நாப்போலி வென்றது
 
 

image_532b8994dc.jpg

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இன்டர் மிலன் தோற்றிருந்த நிலையில், நாப்போலி வென்றது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற பர்மா அணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றிருந்தது. இப்போட்டியில் பர்மா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை, இன்டர் மிலன் அணியால் கடனாக வழங்கப்பட்டிருந்த பெடெரிக்கோ டிமார்கோ பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற பியொன்ரென்டினா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இன்டர்-தோற்றது-நாப்போலி-வென்றது/44-221895

 
 
புண்டெலிஸ்கா: வென்றது பெயார்ண் மியூனிச்
 

image_f6f7401bc6.jpg

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற பெயார் லெவர்குஸன் அணிக்கெதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது.

பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, ஆர்ஜன் ரொபின், ஜேம்ஸ் றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பெயார் லெவர்குஸன் சார்பாகப் பெறப்பட்ட கோலை வென்டெல் பெற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/புண்டெலிஸ்கா-வென்றது-பெயார்ண்-மியூனிச்/44-221894

Link to comment
Share on other sites

லிவர்பூல் அணிக்கு அடுத்தடுத்து 6ஆவது வெற்றி

 

 

EPL-696x460.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் முக்கிய நான்கு போட்டிகள் சனிக்கிழமை (22) நடைபெற்றன. இதில் லிவர்பூல் அணி இந்த பருவத்தில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்தது. தவிர, மன்செஸ்டர் சிட்டி, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணிகள் வெற்றியீட்டியதோடு மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் வொல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றது.

 

 

லிவர்பூல் எதிர் சௌதம்ப்டன்

முஹமட் சலாஹ் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பெற்ற முதல் பிரீமியர் லீக் கோலின் உதவியோடு சௌதம்ப்டன் அணிக்கு எதிரான போட்டியை லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக்கில் இதுவரை அடிய ஆறு போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த அணி கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாகவே தொடரின் முதல் ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் சௌதம்ப்டன் வீரர் வெஸ்லி ஹோட்த் பெற்ற ஓன் கோல் மூலமே லிவர்பூல் அணி முன்னிலை பெற்றது. ஷெர்டன் ஷகிரி உதைத்த பந்து ஷேன் லோங்கின் மீது பட்டு ஹோட்த்திடம் சென்றபோதே அது அவருக்கு துரதிருஷ்ட கோலாக மாறியது.

எனினும் 11 நிமிடங்கள் கழித்து அலெக்சாண்டர் ஆர்னோல் அடித்த கோனர் கிக்கை உயரப்பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஜோவேல் மடிப். இதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்ற லிவர்பூல் அணி முதல் பாதி முடிவதற்குள்ளேயே வெற்றியை உறுதி செய்யும் வகையில் மற்றொரு கோலை போட்டது.  

கடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் கோல் பெறத் தவறிய லவர்பூலின் எகிப்து முன்கள வீரர் முஹமட் சலாஹ் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ஷகிரி உதைத்த பிரீ கிக் கம்பத்தில் பட்டு வெளியே வரும்போது வேகமாக ஓடிச் சென்று வலைக்குள் புகுத்தினார். இந்த பருவகாலத்தில் இது சலாஹ்வின் மூன்றாவது கோலாக இருந்தது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் காடிப் சிட்டி

ஆர்ஜன்டீனாவின் செர்கியோ அகுவேரா மன்செஸ்டர் சிட்டிக்காக தனது 300ஆவது போட்டியில் ஆரம்ப கோலை புகுத்தி அந்த அணி காடிப் சிட்டிக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.

 

 

காடிப் சிட்டி அரங்கில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி 32ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆரம்பித்து அடுத்த 12 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களை பெற்றதோடு இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை இலகுவாக நுழைத்தது.  

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் லியோன் அணியிடம் அதிர்ச்சி தோல்வி ஒன்றை சந்தித்த நிலையில் இந்த வெற்றி மன்செஸ்டர் சிட்டியின் மீள் வருகையாக இருந்தது.

இந்நிலையில் பெர்னார்டோ சில்வா பரிமாற்றிய பந்தை நெருக்கமான தூரத்தில் வைத்து வலைக்குள் உதைத்து மன்செஸ்டர் சிட்டிக்காக அகுவேரா தனது 205 ஆவது கோலை புகுத்தினார். மூன்று நிமிடங்கள் கழித்து சில்வா தலையால் முட்டி தானும் ஒரு கோலை போட்டார்.

இந்நிலையில் இல்காய் குண்டோகன் மன்செஸ்டர் சிட்டிக்காக 44 ஆவது நிமிடத்தில் மற்றொரு அபார கோலை போட்டார்.

நடப்புச் சம்பியனின் கோல் மழையால் திக்குமுக்காடிப் போன காடிப் சிட்டி இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தடுமாற்றம் கண்டது.

இந்த பருவகாலத்தில் 78.45 மில்லியன் டொலருக்கு லெய்சஸ்டர் அணியில் இருந்து ஒப்பந்தமான ரியாத் மஹ்ரஸ் மன்செஸ்டர் அணிக்காக இரண்டாவது பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வலைக்குள் புகுத்தினார்.   

இதுவரை நடைபெற்ற ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று ஒன்றை சமன் செய்த மன்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை (18) விடவம் இரண்டு புள்ளிகள் குறைவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் காடிப் சிட்டி அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் 19ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வொல்வர்ஹம்டன் வொண்டரர்ஸ்

வொல்வ்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்த மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் எட்டுப் புள்ளிகள் பின்தள்ளப்பட்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அணிகள் ஆறு போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு ஏற்கனவே முன்னிலை வகிக்கும் விலர்பூல் மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணிகளை நெருங்குவதில் தடுமாற்றம் கண்டுள்ளது.  

 

 

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் பிரெட் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வொல்வ்ஸ் பதில் கோல் திருப்பி  போட்டியை சமன் செய்தது. போர்த்துக்கல் வீரர் ஜோஸ் மாடின்ஹோ அந்த கோலை புகுத்தினார்.

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பிரைட்டன் மற்றும் ஹோவ் அல்பியோன்

தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளுக்கு முடிவுகட்டிய டொட்டன்ஹாம் அணி பிரைட்டனுடனான பிரீமியர் லீக் போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது.

கிழக்கு எசெக்ஸில் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாமின் பல கோல் முயற்சிகளும் ஆரம்பத்தில் விணாயின. எனினும் 42 ஆவது நிமிடத்தில் ஹரி கேனின் பெனால்டி உதை மூலம் டொட்டன்ஹாம் முதல் கோலை போட்டது. எதிரணி வீரர் கிளன் முர்ரேவின் கையில் பந்து பட்டதை அடுத்தே டொட்டன்ஹாமுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் மேலதிக வீரராக வந்த எரிக் லமேலா 12 யார்ட் தூரத்தில் இருந்து டானி ரோஸ் வழங்கிய பந்தை கோலாக மாற்றினார். போட்டி முடியும் நேரத்தில் அன்தோனியோ நொகார்ட் பிரைட்டன் அணிக்காக ஒரு கோலை பெற்றபோதும் அது அந்த அணியின் தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

செல்சியின் தொடர் வெற்றிக்கு முடிவுகட்டிய வெஸ்ட் ஹாம்

Football-6-696x460.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. இதில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு, எவர்டனுடனான போட்டியில் ஆர்சனல் வெற்றியீட்டியது.

செல்சி எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடெட்

லண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியுடனான போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலை பெற்றதை அடுத்து இம்முறை பிரீமியர் லீக்கில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு முதல் முறை அவ்வணி வெற்றிக்கான புள்ளிகளை இழந்தது.

 

 

முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற செல்சி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை பின்தள்ள இரண்டு கோல்கள் தேவைப்படும் நிலையிலேயே வெஸ்ட் ஹாம் கழகத்தை எதிர்கொண்டது.

எனினும், போட்டியில் ஆதிக்கம் செலுத்திய செல்சியின் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு கடைசிவரை கைகூடவில்லை.

சொந்த மைதானத்தில் ஆடிய வெஸ்ட் ஹாம்மின் மைக்கல் அன்டோனியோ இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் இடைவேளைக்கு முன் கோல் பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்றை செல்சி தவறவிட்டது. வில்லியன் சாதுரியமாக உதைத்த பந்தை நிகோலோ கான்டே தலையால் முட்டியபோது அது வெளியே பறந்தது.     

முதல் பாதி: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்

போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து இழுபறி நீடித்தது. செல்சியின் பதில் வீரராக வந்த அல்வாரோ மொராடஸ் வலையை நோக்கி உதைத்த பந்து வெஸ்ட் ஹாம் கோல்காப்பளர் லூகாஸ் பபியன்ஸ்கியின் முகத்தில் பட்டு தடைப்பட்டது. தொடர்ந்து ரோஸ் பார்க்லே கோலை நோக்கி உதைத்த பந்தையும் பபியன்ஸ்கி தடுத்தார்.     

போட்டியின் 70 வீதத்திற்கு அதிகமான நேரம் செல்சி வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்றபோதும் இரண்டாவது பாதியிலும் எந்த கோலும் விழவில்லை.

 

 

வெஸ்ட் ஹாம் இதுவரை ஆடிய ஆறு பிரீமியர் லீக் போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்று 17 ஆவது இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி கடந்த வாரம் எவர்டன் உடனான போட்டியில் வென்றது நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

மறுபுறம் வரும் சனிக்கிழமை (29) லிவர்பூல் அணியை எதிர்கொள்ளவிருக்கும் செல்சி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.        

முழு நேரம்: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்


ஆர்சனல் எதிர் எவர்டன்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் மூன்று நிமிட இடைவேளையில் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் எவர்டன் கழகத்தை வீழ்த்திய ஆர்சனல் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்க முன்னேற்றம் கண்டது.

1996 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் முதல் முறை ஆர்சனலை வீழ்த்தும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய எவர்டன் ஆரம்பத்தில் கோல் வாய்ப்புகளை உருவாக்க கடுமையாக போராடியது.  

எவர்டன் முன்கள வீரர்களான ரிசார்லிசன் மற்றும் டொமினிக் கல்வெர்ட் லுவிஸ் பல வேகமான உதைகளை விட்டபோதும் ஆர்சனல் கோல்காப்பாளர் பெடிர் செச்சை தாண்டி வலைக்குள் செலுத்துவது கடிமான இருந்தது.  

 

 

மறுபுறம் ஆர்சனல் அணி முதல் பாதியின் பெரும்பாலான நேரம் பந்தை தம் வசம் வைத்திருந்தபோதும் நெருங்கிய கோல் வாய்ப்பொன்றை பெற தடுமாற்றம் கண்டது.

முதல் பாதி: ஆர்சனல் 0 – 0 எவர்டன்

போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்கள வீரர் அலெக்சான்ட்ரே லுகசெட் பெனால்டி எல்லைக்குள் இருந்து லாவகமாக உதைத்த பந்து வளைந்து சென்று கோலாக மாறியது. இதன்மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற ஆர்சனல் அடுத்த மூன்று நிமிடத்தில் இரண்டாவது கோலையும் போட்டது. அவுபமயாங் பெரிதாக நெருக்கடி இன்றி அந்த கோலை புகுத்தினார்.  

இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி 12 புள்ளிகளுடன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விடவும் 6 புள்ளிகள் குறைவாக உள்ளது.     

முழு நேரம்: ஆர்சனல் 2 – 0 எவர்டன்

http://www.thepapare.com

 
 
 
 
வென்றது ஜுவென்டஸ்
 

image_c014181a17.jpg

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், புரோஸினோனே கழகத்தின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியில் 72 சதவீதமான நேரம் ஜுவென்டஸே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் போட்டி முடிவடைய 9 நிமிடங்கள் இருக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலின் மூலமே முன்னிலை பெற்ற ஜுவென்டஸ் போட்டியின் இறுதி நிமிடங்களில் பெடெரிக்கோ பேர்னார்ட்டெஸ்கி பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, டொரினோ அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி அணி வென்றது. நாப்போலி சார்பாக, லொரென்ஸோ இன்சீனியா இரண்டு கோல்களையும் சிமோனே வெர்டி ஒரு கோலையும் பெற்றதோடு, டொரினோ சார்பாகப் பெறப்பட்ட அன்ட்ரியா பெலோட்டி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பொலொக்னா அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றோமா தோல்வியைத் தளுவியது. பொலொக்னா சார்பாக, பெடெரிக்கோ மட்டியெல்லோ, பெடெரிக்கோ சன்டன்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஜெனோவா அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் இரண்டு கோல்களையும் பிலிப்பி கைசெடோ, சேர்ஜெய் மிலின்கோவிக்-சவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஜெனோவா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிர்ய்ஸ்டொவ் பியடெக் பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அட்லாண்டா அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமநிலையில் முடித்துக் கொண்டது. ஏ.சி மிலன் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், ஜியகோமோ பொனவெந்துரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் அட்லாண்டா சார்பாக, அலெஜான்ட்ரோ கோமிஸ், எமிலியானோ றிகோனி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/வென்றது-ஜுவென்டஸ்/44-222525

 
 
சமநிலையில் பார்சிலோனா, ஜிரோனா போட்டி
 

image_a8529dae91.jpg

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜிரோனா அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமநிலையில் முடித்திருந்தது.

பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, ஜெராட் பிகே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், ஜிரோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியன் ஸ்டுவனி பெற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சமநிலையில்-பார்சிலோனா-ஜிரோனா-போட்டி/44-222524

 
 
 
புண்டெலிஸ்கா தொடர்: வென்றது பெயார்ண்
 

image_a62a9358e8.jpg

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், எவ்,சி ஷால்கே 04 அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வனியுடனான போட்டியில் பெயார்ண் மியூனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஜேம்ஸ் றொட்றிகாஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், 1899 ஹொபென்ஹெய்ம், பொரூசியா டொட்டமுண்ட் அணிகளுக்கிடையே 1899 ஹொபென்ஹெய்ம் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/புண்டெலிஸ்கா-தொடர்-வென்றது-பெயார்ண்/44-222425

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.