Jump to content

குப்பை வண்டி விதி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


v78jl1.jpg

GarbageTruck.gif&w=893&h=502


ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி ஓட்டுனர் , உடனே பிரேக்கை மிதித்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை 'கன்னா பின்னா'வென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல், ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர, தவறாக வண்டி ஒட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை.

“ஏன் அவனை சும்மா விட்டீங்க..? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல…? அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிறுகிறான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுனரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி ஓட்டுனர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. 

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். “இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்..! பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும், அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க, அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அவற்றை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அவற்றை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும்..! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய், நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்..! நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பை வண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்' என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது, ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது..!

வாழ்க்கை என்பது, 10% நாம் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை பொறுத்தது மட்டுமில்லாமல், மீதி 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொறுத்தது.

 

-'வாட்ஸ்அப்'பில் வந்தது

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் கேட்க நல்லாத் தான் இருக்கு அந்த நேரம் நடைமுறைக்கு வரணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ம்ம் கேட்க நல்லாத் தான் இருக்கு அந்த நேரம் நடைமுறைக்கு வரணுமே?

அனுபவமே மனிதனை பக்குவப்படுத்துகிறது..!

நான் அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், பழைய தமிழக அரசாங்க அதிகாரி மனநிலையில்தான் தான் இருந்தேன்.

இங்கு பல நாட்டு மக்களுடன் வேலை செய்து, குறுகிய காலத்தில் என் இருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயம்.. அதிலும் எம் அலுவலகத்தில் நான் ஒருவன்தான் தமிழன், மற்ற அனைவரும் மல்லுகள், அலுவலக இயக்குநர் ஓர் அரபி.. அலுவலக அரசியல் எப்படி ஓடியிருக்கும்? என யோசித்துப் பார்த்தால் மண்டை விறைத்துவிடும்..!

இருபது வருடம் ஓடிவிட்டது..!!

எப்படி..? பொறுமை, வலு அவதானம், டேக் இட் ஈஸி பாலிஸி  சொந்த திறமையை மேம்படுத்துதல், அதில் ஆளுமை..!:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய, நல்ல ஒரு பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/28/2018 at 4:27 AM, ராசவன்னியன் said:

அனுபவமே மனிதனை பக்குவப்படுத்துகிறது..!

நான் அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், பழைய தமிழக அரசாங்க அதிகாரி மனநிலையில்தான் தான் இருந்தேன்.

இங்கு பல நாட்டு மக்களுடன் வேலை செய்து, குறுகிய காலத்தில் என் இருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயம்.. அதிலும் எம் அலுவலகத்தில் நான் ஒருவன்தான் தமிழன், மற்ற அனைவரும் மல்லுகள், அலுவலக இயக்குநர் ஓர் அரபி.. அலுவலக அரசியல் எப்படி ஓடியிருக்கும்? என யோசித்துப் பார்த்தால் மண்டை விறைத்துவிடும்..!

இருபது வருடம் ஓடிவிட்டது..!!

எப்படி..? பொறுமை, வலு அவதானம், டேக் இட் ஈஸி பாலிஸி  சொந்த திறமையை மேம்படுத்துதல், அதில் ஆளுமை..!:innocent:

எனது அனுபவத்திலிருந்து நான் படித்துக் கொண்டதும்....இவ்வாறு தான்!

ஒரு நாட்டுப் புறத்துக்குக் குடும்பமாக விடுமுறையில் போகின்ற வேளை...!

மகள் தான்...காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்!

இடையில் ஒரு சீனாக் காரன்......ஒரு வளைவில்...எமது காரை வேகமாக ஓவர்டேக்....செய்து சென்று கொண்டிருந்தான்!

என்னையறியாமலே....ஸ்டுபிட் சைனீஸ் என்ற வார்த்தைகள்..எனது வாயிலிருந்து விழுந்து விட்டன!

 

மகள்...அமைதியாக ...காரை ஒட்டிக்கொண்டு சொன்னாள்!

அப்பா....அடுத்த தடவை...இவ்வாறு செய்தால்....காரை விட்டு...அந்த இடத்திலேயே....இறக்கிவிட்டுப் போய் விடுவேன் என்று!

 

அதன் பின்னர்....எவ்வளவு ஆத்திரம் வந்தாலும்....இனத்தின் பெயரைச் சொல்லி....யாரையும்...திட்டுவதில்லை!

அப்படியே விழுங்கிக் கொள்வேன்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.