• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

குப்பை வண்டி விதி !

Recommended Posts


v78jl1.jpg

GarbageTruck.gif&w=893&h=502


ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி ஓட்டுனர் , உடனே பிரேக்கை மிதித்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை 'கன்னா பின்னா'வென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல், ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர, தவறாக வண்டி ஒட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை.

“ஏன் அவனை சும்மா விட்டீங்க..? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல…? அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிறுகிறான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுனரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி ஓட்டுனர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. 

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். “இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்..! பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும், அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க, அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அவற்றை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அவற்றை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும்..! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய், நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்..! நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பை வண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்' என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது, ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது..!

வாழ்க்கை என்பது, 10% நாம் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை பொறுத்தது மட்டுமில்லாமல், மீதி 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொறுத்தது.

 

-'வாட்ஸ்அப்'பில் வந்தது

 • Like 4
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ம்ம் கேட்க நல்லாத் தான் இருக்கு அந்த நேரம் நடைமுறைக்கு வரணுமே?

அனுபவமே மனிதனை பக்குவப்படுத்துகிறது..!

நான் அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், பழைய தமிழக அரசாங்க அதிகாரி மனநிலையில்தான் தான் இருந்தேன்.

இங்கு பல நாட்டு மக்களுடன் வேலை செய்து, குறுகிய காலத்தில் என் இருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயம்.. அதிலும் எம் அலுவலகத்தில் நான் ஒருவன்தான் தமிழன், மற்ற அனைவரும் மல்லுகள், அலுவலக இயக்குநர் ஓர் அரபி.. அலுவலக அரசியல் எப்படி ஓடியிருக்கும்? என யோசித்துப் பார்த்தால் மண்டை விறைத்துவிடும்..!

இருபது வருடம் ஓடிவிட்டது..!!

எப்படி..? பொறுமை, வலு அவதானம், டேக் இட் ஈஸி பாலிஸி  சொந்த திறமையை மேம்படுத்துதல், அதில் ஆளுமை..!:innocent:

Share this post


Link to post
Share on other sites

சிந்திக்க வேண்டிய, நல்ல ஒரு பதிவு.

Share this post


Link to post
Share on other sites
On 8/28/2018 at 4:27 AM, ராசவன்னியன் said:

அனுபவமே மனிதனை பக்குவப்படுத்துகிறது..!

நான் அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், பழைய தமிழக அரசாங்க அதிகாரி மனநிலையில்தான் தான் இருந்தேன்.

இங்கு பல நாட்டு மக்களுடன் வேலை செய்து, குறுகிய காலத்தில் என் இருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயம்.. அதிலும் எம் அலுவலகத்தில் நான் ஒருவன்தான் தமிழன், மற்ற அனைவரும் மல்லுகள், அலுவலக இயக்குநர் ஓர் அரபி.. அலுவலக அரசியல் எப்படி ஓடியிருக்கும்? என யோசித்துப் பார்த்தால் மண்டை விறைத்துவிடும்..!

இருபது வருடம் ஓடிவிட்டது..!!

எப்படி..? பொறுமை, வலு அவதானம், டேக் இட் ஈஸி பாலிஸி  சொந்த திறமையை மேம்படுத்துதல், அதில் ஆளுமை..!:innocent:

எனது அனுபவத்திலிருந்து நான் படித்துக் கொண்டதும்....இவ்வாறு தான்!

ஒரு நாட்டுப் புறத்துக்குக் குடும்பமாக விடுமுறையில் போகின்ற வேளை...!

மகள் தான்...காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்!

இடையில் ஒரு சீனாக் காரன்......ஒரு வளைவில்...எமது காரை வேகமாக ஓவர்டேக்....செய்து சென்று கொண்டிருந்தான்!

என்னையறியாமலே....ஸ்டுபிட் சைனீஸ் என்ற வார்த்தைகள்..எனது வாயிலிருந்து விழுந்து விட்டன!

 

மகள்...அமைதியாக ...காரை ஒட்டிக்கொண்டு சொன்னாள்!

அப்பா....அடுத்த தடவை...இவ்வாறு செய்தால்....காரை விட்டு...அந்த இடத்திலேயே....இறக்கிவிட்டுப் போய் விடுவேன் என்று!

 

அதன் பின்னர்....எவ்வளவு ஆத்திரம் வந்தாலும்....இனத்தின் பெயரைச் சொல்லி....யாரையும்...திட்டுவதில்லை!

அப்படியே விழுங்கிக் கொள்வேன்!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அம்பனை நல்ல தகவல்களை இணைக்கிறார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களை கவருவது என்ன என்றால் என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்ததும் பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்
  • இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினருக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று சொல்லலாம். விற்பனை குறைவினால் அவதிப்பட்ட பெரிய நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைக்கு சில நாள்கள் விடுமுறை விட, பல சிறிய நிறுவனங்கள் சத்தமில்லாமல் நஷ்டத்தால் பூட்டப்பட்டன. ஆட்டோமொபைல் துறையின் இந்த டெக்டானிக் அதிர்வில் அதிகம் பாதிக்கப்பட்டது ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள். இப்போது, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல தொழிலாளர்கள் வேலையை இழந்துவருகிறார்கள். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட டேட்டாவின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெய்ம்லர் மற்றும் ஆடி நிறுவனங்கள் 20,000 ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளன. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் 80,000 பேர் வரை வேலையிலிருந்து நீக்கவுள்ளன. இதனால் ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படும், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் இதனால் சிறிதளவு பாதிக்கப்படலாம். வேலை இழப்புகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமில்லை... ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் தொடர்கின்றன. எலெக்ட்ரிக், தானியங்கி மற்றும் ஆப் சார்ந்த கார் சேவைகளின் வளர்ச்சியால் தற்போது அனைத்து நிறுவனங்களும் வேலையாட்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்றிவருகின்றன. சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திசெய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான NIO Inc, பல கோடி ரூபாயை இந்த ஆண்டு இழந்துள்ளது. நியூயார்க் ஸ்டாக் மார்க்கெட்டில் இதன் பங்குகள் சரிவதால், இந்த நிறுவனம், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 20 சதவிகித தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. இதனால், 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.   "தானியங்கி மற்றும் எலெக்டரிக் கார்களுக்காக, ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை தங்களது ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளன. இதனால், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் இருந்த நிறுவனங்களுக்கு விற்பனை குறைவு என்பது இன்னும் நெருக்கடியைக் கொடுக்கும் விஷயாக இருக்கிறது" என்கிறார், ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அனலிஸ்ட் கில்லியன் டேவிஸ். இதனால், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தை மிச்சம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிஸான் நிறுவனம்கூட, அதன் தலைவர் கார்லோஸ் கோன் கைதுக்குப் பிறகு கொஞ்சம் சரிந்துள்ளது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உலகில் பல இடங்களில் இருக்கும்   தங்களது தொழிற்சாலைகளிலிருந்து 12,500 வேலையாட்களைக் குறைக்கப்போவதாக, இந்த ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. வேலை குறைப்பு மற்றும் தொழிற்சாலைகள் மூடுவதை எதிர்த்து, ஜெனரல் மோட்டார்ஸின் 46,000 ஊழியர்கள் அமெரிக்காவில் 40 நாள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 22 அன்று, ஜெர்மனியின் ஸ்டுக்கார்ட் நகரில் 15,000 ஊழியர்கள் தொழிலாளர் வேலை இழப்புக்கு எதிராகப் பேரணி நடத்தியுள்ளார்கள். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜெர்மனியின் பெரிய தொழிற்சங்க அமைப்பான IG Metall, தற்போது ஜெர்மனியில் 1,50,000 தொழிலாளர்களின் வேலை, ஆபத்தில் உள்ளதாகக் கூறுகிறது.   ஃபோர்டு நிறுவனம், தன்னுடைய தொழிலை மாற்றியமைக்கப்போவதாகக் கூறி, 10 சதவிகித சம்பள ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. 6 தொழிற்சாலையை மூடியுள்ளது. இதனால், 17,000 பேர் வேலை இழந்துள்ளார்கள். இதில் 12,000 பேர் ஐரோப்பிய ஊழியர்கள். இப்போது, நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி, அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகள், இந்தியாவில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான்.   https://www.vikatan.com/technology/motor/carmakers-announced-20000-layoffs-in-a-week    
  • வரைபடத்தில் பார்த்தால் மேற்கில் இருப்பதாகத் தெரியும். ஆனால் தொண்டமானாறு கடற்கரையை ஒட்டி இருப்பதால் வடமராட்சி வடக்கு அதிகாரத்திற்குள் வரும். வடமராட்சி தெற்கு- மேற்கு கரவெட்டிப் பிரதேச சபையைக் குறிக்கும். இந்தப் பகுதியில் அல்வாய், அத்தாய், இமையாணன், கட்டைவேலி, கப்பூது, கரணவாய், கரவெட்டி, மாத்தோணி, நெல்லியடி, சமரபாகு, இலக்கிணாவத்தை, துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி ஆகிய ஊர்கள் இருக்கின்றன.  
  • தமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.     இந்நிலையில், விரிவாக்க பணிகளுக்காக அங்கிருந்த 120 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த ஆலமரத்தை வேருடன் பெயர்த்து, வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு, கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை வெட்டினர். பின்னர், மரத்தை சுற்றி 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, வேருடன் மரத்தை கீழே சாய்த்தனர். தொடர்ந்து, கிளைகள் மற்றும் விழுதுகள் இல்லாத மரத்தை இரண்டு கிரேன்களின் உதவியுடன் 1000 அடி தொலைவிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்திற்கு கொண்டு சென்று, மாற்று இடத்தில் நட்டனர். இதுகுறித்து, 'ஓசை' நிர்வாகி கே.சையது தெரிவித்ததாவது, “இதுவரை 200க்கும் அதிகமான மரங்களை வேறு இடத்தில் நட்டு, அவைகளுக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளோம். மரங்கள்தான் நம் மூச்சுக் காற்று அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற மரங்கள் என்றால், நுாறு ஆண்டுகள் ஆகும். மரங்களை பாதுகாக்க வேண்டும். எந்த பகுதியிலும் மரங்களை மாற்று இடத்தில் வைக்க சேவை மனப்பான்மையுடன் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை, 70103 50066 மற்றும் 84288 59911 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70591  
  • பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாத நிலையில் தாயகம் உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடுகளில் இதை யாரும் பிரச்சனையாகவே பார்க்காத துர்ப்பாக்கிய நிலை உள்ளது.    ஒரு ஒரு மனிதாபிமான பிரச்சனையா இல்லை சமூக பிரச்னையா இல்லை பொருளாதார பிரச்சனையா இல்லை அரசியல் பிரச்சனையா என பார்த்தால் எல்லாமும் சேர்ந்த கலந்த ஒரு சிக்கலான பிரச்சனை. சகல தரப்புக்களும் இணைந்தே தீர்வை நோக்கி நகரவேண்டும்.  ஆககுறைந்தது பாடசாலைகளில் இந்த சமூகம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஊட்டி, ஒரு சிறந்த சமூகத்தை வளப்படுத்தலாம்.