Jump to content

காணி அபகரிப்புக்கு எதிராக- முல்லைத்தீவில் மாபெரும் பேரணி!!


Recommended Posts

முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

 

Mullaithivu-300x200.jpgமகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மகாவலி எல் வலயத் திட்டத்தின் கீழ், 2000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, வெளியிடங்களைச் சேர்ந்த 6000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மகாவலி எல் வலயத் திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு ஒருவர் கூட இந்தத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படவில்லை.

மகாவலி எல் வலயத் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியே இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்தப் போராட்டத்தில பெருமளவில் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

http://www.puthinappalakai.net/2018/08/28/news/32575

Link to comment
Share on other sites

காணி அபகரிப்புக்கு எதிராக- முல்லைத்தீவில் மாபெரும் பேரணி!!

 
 

5-1-780x405.jpg

 

 
 

மகா­வலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தைத் தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.

முல்­லைத்­தீவு பிட­பிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

4-5.jpg3-4.jpg

https://newuthayan.com/story/11/காணி-அபகரிப்புக்கு-எதிராக-முல்லைத்தீவில்-மாபெரும்-பேரணி.html

Link to comment
Share on other sites

மகாவலியின் ஊடான, தமிழரின் நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் திரண்டனர்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Mullai-mahavali6.jpg?resize=800%2C600Mullai-mahavali5.jpg?resize=800%2C600Mullai-mahavali4.jpg?resize=800%2C600Mullai-mahavali3.jpg?resize=800%2C600Mullai-mahavali2.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/93093/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

மகாவலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தை தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.

முல்­லைத்­தீவு பி.டபிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

 

சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் போது மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்குமாறு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

 

 

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்த இணைத்தலைவர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

கோரிக்கைகள்..

 

  1. மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  2. கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி கடற்கரையில் சட்டவிரொதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.
  3. 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.
  4. தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாக செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
  5. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேங்ஙந்களை உடன் நிறுத்த தவறும் பட்டசத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிககும்.
  6. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

புகைப்படங்கள் - யது

 

https://www.tamilwin.com/community/01/191900?ref=imp-news

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோகும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

 

 
 

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தான்  தமிழ் இன அழிப்பினை செய்ததார். அவருடைய ஆட்சியனை வீழ்த்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும். என தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

kajendhirakumar.jpg

ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாற்றியதன் பின் இன்று இந்த நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும் இன அழிப்பின் முக்கியமான அங்கம் நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இருந்தால் எம்மக்கள் ஆழமாக சிந்திக்க தொடங்கவேண்டும் இது ஒரு ஆட்சி சம்மந்தப்பட்ட விடயமா? அல்லது இன அழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இது ஒரு இனஅழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியனை விழுத்தினால் புதிய ஆட்சி வந்தால் இனஅழிப்பினை தடுக்கலாமா என்று நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு  நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.

அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இனஅழிப்பிற்கு பின்னால் இருக்க்கூடிய தத்துவத்தை அந்த கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்  சிங்களவர்களை பொறுத்தமட்டில் இந்த இலங்கை தீவு சிங்களபௌத்த நாடு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நிகைக்கின்றார்கள்.

இன்று வடகிழக்கில் தமிழர் ஒரு தேசமாக வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.இது ஆட்சி சம்மந்தப்பட்ட விடயம் அல்ல அவர்கள் இனம் சார்ந்த அடிப்படைக்கொள்கை எந்த நபர் மாறினாலும் அந்த கொள்கை ஒன்று தமிழ் தேசத்தினை பொறுத்தமட்டில் நாங்கள் போராடினால் எங்கள் உரிமைகளை பெறலாம் எதோ 16 இல தீர்வு 17 இல தீர்வு 18இல தீர்வு என்றும் இப்போது 19 இல தீர்வு வரும் என்று கூறு தமிழர்களை ஏமாற்றக்கூடாது நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.

மணலாறு மண் பறிபோனல் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் தென்தமிழ் தேசத்தினை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் அது முடிவிற்கு வர இருக்கின்றது அந்த தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாறு நிலத்தொடர்பை சிதைக்க அது நிச்சயமாக உறுதிபடுத்தப்படும்.

தமிழ் இனத்தினையும் தமிழ்தேசத்தினையும் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணை சார்ந்த பிரச்சனை அல்ல தமிழ்தேசத்தினை சார்ந்த பிரச்சனை தமிழரின் இருப்பு சார்ந்த பிரச்சனை இந்த இடத்தில் தமிழர்களின் ஆழத்தினை புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும். 

முல்லைத்தீவு மண் பறிபோனல் மணலாறு மண் பறிபோனல் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு போராடுகின்ற அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இனஅழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் நாங்கள் செயற்படாமல் இருக்கும் வரைக்கும் இந்த இனம் அழியும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அந்த தடுப்பிற்கு முதல் புள்ளியாக இது அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39298

Link to comment
Share on other sites

வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்; சித்தார்த்தன்

 

 
 

பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும்  நோக்கில்  செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின்  தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் .

sitharthan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி  திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிரான  மாபெரும்  போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாடு சுதந்திரமடைந்த நாள்தொடக்கம் பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்து சுதந்திரம் அடைந்தவுடன் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.செனனாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்ந்து 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த வெலிஓயா திட்டம் மூலம் எங்கள் தாயகபூமியை இரண்டு கூறாக ஆக்கிவிடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் நடவடிக்கையினை எடுத்துவருகின்றது இந்தபேரணியில் உள்ள மக்களை கண்டால் அவர்கள் நினைப்பினை மாற்றிக்கொள்வார்கள்.

இவ்வளவு பெருந்திரளான மக்கள் எங்கள் நிலங்களை பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாக தமிழர்கள் கூறுகின்றார்கள் என்பதை அரசிற்கு மாத்திரம் அல்ல உலகிற்கும் காட்டியுள்ளோம்.

இதனை இந்த அரசு உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும் என்ற இந்த அமைப்பின் கோரிக்கையுடன் நாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி செய்யாததை, அகிம்சை செய்யும்....

செய்ய முடியும்... ?

Link to comment
Share on other sites

தன்னெழுச்சியான போராட்டம் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும் சிவசக்தி ஆனந்தன் 

 

அரசியல் கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும்  என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

sivasakthi_anandhan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சிகாலத்தில்  இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல்  வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தமாதம் 6ஆம் திகதி 8 சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கான ஆதாரம் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று சவால் விட்டு பேசியுள்ளார். 

அங்கே கலந்து கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப்பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறுமாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியனை அங்கு சொல்லாமல் 

கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகலவளிகளிலும் அரசினை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது பிரதிநிதிகள் இவ்வாறு இருந்தால் மக்களின் காணிப்பிரச்சனை காணாமல் போன பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல்கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39308

Link to comment
Share on other sites

மகாவலி அதிகாரசபைக்கு மக்களை மீளக்குடியேற்றவோ புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

 

 
 

மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

 

மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான்  அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது. ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடம்பத்திற்கும் கொடுக்கும் திட்டம் அந்த நாட்களில் எங்கள் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் பேச்சுக்களினால் அந்த நாட்களில் மூவாயிரம் குடும்பங்களுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. அல்லது இந்த பிரதேசம் முழுக்கசிங்கள தேசமாக மாறி இருக்கும் .

இப்போது ஆறாயிரம் சிங்கள மக்கள் குடியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் சம்மந்தனும் நானும் திட்டவட்டமாக சொன்னோம். நீர்பாசனத்திற்காக நீரினை வழங்குவது பிரச்சனை இல்லை அதோடு தென்னிலங்கை மக்களை நீங்கள் குடியேற்றக்கூடாது என்று வாதாடி இருக்கின்றோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்னாள் மகாவலியினை பற்றி நான் பேசினேன். நேற்றும் ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் பேசினோம் .நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என்று பேசினோம். அவர் உடனடியாக மகாவலி சபை தலைவருடம் தொலைபேசியில் பேசினார். எங்களிடம் சொல்லி இருக்கின்றார் தான் நேரடியாகவே வந்து மகாவலி அபிவிருத்தி தலைவர்கள் சொல்லுவது சரியா அல்லது கூட்டமைப்பு நாங்கள் சொல்லுவது சரியா என்று பார்ப்பேன் அப்படி தவறுகள் இடம்பெற்று  வெளியில் இருந்து 

குடியேற்றப்படுபவர்களை நான் தடுத்து நிறுத்துவேன் என்று நேற்றும் வாக்குறுதி தந்துள்ளார் அவர் இங்க வந்து பார்த்தால் பார்க்கட்டும் 

இன்று வடக்கில் படையினரால் மட்டுமல்ல பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அமைப்புக்கள் வந்து தங்களுக்கு சொந்தமானது என்று அறிக்கை விடுகின்றார்கள். இதனை மாற்றி அமைக்கவேண்டும் மகாவலி சபைக்கு நீர்வளங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் திட்டவட்டமாக சொல்லி வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39304

 

 

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம்; சிவமோகன்

 

நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் தெரிவித்தார்.

sivamohan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இங்கு மேற்கொள்ளப்படும்  ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கூரிக்கொண்டிருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக தமிழ்மக்களின் காணிகள் அபகரித்துக்கொண்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை அண்மையில் கடற்தொழில் பிரச்சனை வந்தபோது விமல் வீரவன்சவுடன் வாக்குவாதாத்தில் ஈடுபட்டு எமது உரிமையினை நிலைநாட்டியுள்ளோம்.

நேற்றையதினம் ஜனாதிபதியிடம் இந்த கருத்தினை தெரிவித்த போது அதாவது எட்டுபேருக்கு அண்மையில் மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டு  கொடுக்ப்பட்டுள்ளது என்று சொன்னோம். 

அவர் நேரடியாக தொலைபேசியில் மகாவலி சபையிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை என்று அப்போது நாங்கள் சொன்னோம் இல்லை காணிகள் கொடுக்ப்பட்டது உண்மை என்றுசொன்னோம் எங்களுக்கு முன்னாலே அறிவித்தல் கொடுத்திருந்தார்.

அதுகொடுத்திருந்தாலோ கொடுக்காமல் விட்டிருந்தாலோ இத்துடன் நிறுத்திவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார் சந்தித்து கதைத்த பின்னர்தான் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை அடுத்த சந்திப்பு ஒக்டோபர் 3 ஆம் திகதி கிடைக்க இருக்கின்றது புதுக்குடியிருப்பு படையினரின் ஆக்கிரமிப்பு, வட்டுவாகல் காணிப்பிரச்சனை சொல்லி இருக்கின்றோம் எனவே ஒன்டோபர் மாதம் ஜனாதிபதியுடன் கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்டுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39312

 

 

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் ; சீண்டிப் பார்க்காதீர்கள் - ரவிகரன்

 

 
 

தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

RAVIKARAN.jpg

தமிழர்களின் பூர்வீக நிலங்களை பல வடிவங்களினூடாக இன்று அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், சட்டவிரோத மீன்பிடியாளர்கள் என்ற வகையிலே அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தையும் ஜனாதிபதி அறிந்தும் அறியாதது போல் இருக்கிறார்.

எங்களுடைய மண் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருவாயில் எங்களுடைய இளைஞர்கள் புத்திஜீவிகள் இணைந்து இந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றீர்கள். மேலும் ஏற்கனவே மீனவர்களுடைய போராட்டம் இதற்கு ஆரம்ப புள்ளியிட்டது என்பதனை யாரும் மறுக்கமுடியாது சுமார் அந்த போராட்டத்திலும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மீனவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய எதிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து எங்களுடைய தலைவர்களுடன் சேர்ந்து  அமைச்சர் ஒருவர்  இங்கு வந்து அதற்கான  ஒரு தீர்வை வழங்கிவிட்டு சென்றாரே தவிர அதற்கான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் கூட எங்களுடைய இளைஞர்களுடன் திரண்டு நாயாற்று பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம் அந்த இளைஞர்கள் நின்ற நேரம் காணி அளவிட வந்திருந்தால் கட்டி வைத்திருப்போம் என்று சொல்லுகிறேன் ஏனென்றால் இது எங்களுடைய நிலங்கள்.

எங்களுடைய இடத்தை அபகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தினுடைய தலைவர்கள் தயவு செய்து என்ன வேண்டாம் எங்களுடைய மண்ணை நாங்கள் காப்பதற்காகவே இப்படியான ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.  

ஆகவே தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/39309

 

 

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது ; சாந்தி 

 

 

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிழையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார் .

sandhi.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஆக்கிரமிக்கப்படுகின்ற இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் 1984 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டு வித்தியானந்தா கல்லூரியில் வந்தபோது அன்றில் இருந்து இன்று வரை இந்த மக்களுடன் நாங்கள் இரத்த உறவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்த மண்ணை அபிவிருத்தி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கவேண்டுமே தவிர மக்களுக்கு வலியாக மிகவும் மகா பெரிய வலியாக அமைந்த இந்த திட்டம் எதிர்க்கப்படவேண்டியது.

இவ்வாறான ஆக்கிரமிப்பு எங்களுக்கு தேவையில்லை நில விடுவிப்பிற்காகத்தான் எவ்வளவோ உயிர்களை சொத்துக்களை இழந்துள்ளோம் எனவே இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அரசிற்கு குரல் கொடுத்து திட்டத்தினை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம்.

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிளையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39310

Link to comment
Share on other sites

இனி பிரபாகரன் இல்லை! முல்லைத்தீவில் தாய் ஒருவரின் குமுறல்

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சிவம் அக்கா என்னும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை மீண்டும் நம்புகின்றோம், எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி அதிகார சபைக்கு எதிராக முல்லைத்தீவில் இன்றைய தினம் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கேட்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் நாங்களும் நிலங்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கொக்குத்தொடுவாய் எனது சொந்த கிராமம். அங்கு தான் நான் பிறந்து வளர்ந்தேன். எமக்கு சொந்தமான ஒரு காணி கொக்குத் தொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காணி கோட்டைக்கேணி பகுதியில், 2 ஏக்கர் காணி 30 வருடங்கள் நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் பராமரிக்க முடியாமல் காடாக மாறியுள்ள நிலையில் அது வனவள திணைக்களத்திற்குரிய காணியாக அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எரிஞ்சகாடு பகுதியில் எமக்கு கொடுக்கப்பட்ட நீர்ப்பாசனக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக எமக்கு காணிகளைக் கொடுத்தார்கள் அந்தக் காணிகள் வெறும் உவர்க் காணிகள் அங்கு ஒரு போகத்தில் கூட நெல்லை அறுவடை செய்யவில்லை.

ஆனால் எங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருக்கும் சிங்கள மக்கள் குளத்திலிருந்து நீரைப் பெற்று வருடத்தில் 2 போகம் விவசாயம் செய்கிறார்கள்.

நாங்கள் அவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்கிறோம். தொழில் செய்வதற்கு வசதியும் இல்லை. நிவாரணம், சமுர்த்தி போன்ற அரச உதவிகளும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் எதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம்? எங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பீர்கள் என நம்பியே அனுப்பினோம்.

ஆனால் நாங்கள் நம்பி வாக்களித்த வீடு இன்று பிரிந்து கிடக்கிறது. இனிமேலாவது எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். நாங்கள் நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை. உங்களைத்தான் இப்போதும் நம்பியிருக்கிறோம். இனிமேலாவது தீர்வினை பெற்றுக்கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/community/01/191949?ref=imp-news

Link to comment
Share on other sites

 

நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்…

http://globaltamilnews.net/2018/93185/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் தமிழர்களுக்காக போராடிய சிங்கள அருட்தந்தை

 

தமிழ் மக்களின் வாழ்விட பூமியான வடக்கு, கிழக்கு மகாவலி திட்டம் என்ற பெயரில் பறிக்கப்படுவதாக தென் பகுதியை சேர்ந்த கத்தோலிக்க மத குருவான அருட்தந்தை ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

மகாவலி எல் வலயத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்திட்டத்தை எதிர்த்து நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

 

இந்த அழிவை தடுத்து நிறுத்த வேண்டும். தென் பகுதி மக்கள் மகாவலி எல் வலயத்தின் குடியேற்றம் தொடர்பான அழிவின் உண்மையை அறியாதிருக்கலாம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

எனினும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மகாவலி எல் வயலத்தின் ஊடாக குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு என்ற தமிழர்கள் வாழ்விட பூமி அவர்களுக்கு இல்லாமல் போகும் அனர்த்தத்திற்கு எதிராக தென் பகுதி மக்களும் வடக்கு பகுதி மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

மகாவலி எதிர்ப்பு தமிழ் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தில் தமிழ், சிங்களம் என அனைத்து வறிய மக்களும் ஒன்றாக இணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருத முடியும்.

மகாவலி எல் வலயத்தில் பல வருடங்களுக்கு முன்னர் 6 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 1988ஆம் ஆண்டு முதல் சட்டமாக அமுலுக்கு வந்த இந்த மகாவலி வலயத்தில், வெலி ஓயா பிரதேசம் சிங்கள குடியேற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் சிங்கள குடியேற்றத்திற்கு மாத்திரமே செலவிடப்பட்டுள்ளமை மிகவும் பயங்கரமானது.

தமிழ் மக்களின் வாழ்விட பூமியான வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய இந்த 3ஆயிரம் மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்பதை வெலிஓயாவை அண்மித்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் மூலம் எம்மால் காணமுடிகிறது.

இதனால், மகாவலி எல் வலய திட்டத்தை மக்கள் விரோத திட்டம் என பெயரிடுவது மட்டுமல்லாது, அதனை திரும்ப பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கருநாட்டுகேணி, கொக்குதொடுவாய், கொக்கிளாய் போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் மீனவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் வாழ்விட பூமி பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், மகாவலி எல் வலயம் அதற்கு பின் நடைமுறைப்படுத்தப்பட உள்ள கே வலயம் ஜெ வலயங்களில் குடியேற்றங்கள் மூலம், வடக்கு மற்றும் அதனை அண்மித்த தீவுகள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்திலேயே அனைத்து மக்களும் இணைந்து இதனை இடைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் எனவும் அருட் தந்தை ஜிவேந்திர தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/community/01/192020?ref=home-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.