• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்

Recommended Posts

'திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்.

50603.jpg

 

திருமணமான பெண்கள் வழக்கமான கணவரின் வீட்டில்தான் இருப்பார்கள். இல்லையென்றால் தனிக்குடித்தனம் இருப்பார்கள். பெரும்பாலும், திருமணமான பின்னர், பெண்கள் தனது பெற்றோர்களின் வீட்டில் வசிப்பதில்லை. கணவன் இறந்தாலோ அல்லது வேறுவொரு சிக்கலான தருணங்களில் தான் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டில் இருப்பார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பெண்கள் தங்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்கு செல்வதோ அல்லது ஹாஸ்டலில் தங்குவதோ அல்லது கணவன் வீட்டில் தங்குவதோ அவர்களின் விருப்பம் தான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

இப்ராஹிம் சித்திக்யு என்பவர் மதம் மாறி, ஆர்யன் ஆர்யா என்ற பெயருடன் அஞ்சலி ஜெயின் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது மனைவி அஞ்சலியை பெற்றோரின் பிடியில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்யன் ஆர்யா சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், பெண் விரும்பினால் விடுதிக்கோ அல்லது பெற்றோருடனோ செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் ஆர்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்த்ரசந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "உங்கள் இருவருக்கும் உண்மையில் திருமணம் நடந்ததா? ஏன் உங்கள் கணவருடன் நீங்கள் வாழ விரும்பவில்லை?" என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அஞ்சலியிடம் கேட்டனர். அதற்கு, “நான் ஒரு மேஜர். என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. ஆர்யன் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட போதிலும் நான் எனது பெற்றோருடன் வசிக்கவே விரும்புகிறேன். இது நானாக எடுத்த முடிவு” என்று அவர் கூறினார். 

பெண்ணின் கருத்தை கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண் கணவருடன் செல்ல விரும்பவில்லை. திரும்பவும் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புகிறார். அவரை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிக்கிறோம். அவர்களின் திருமணம் குறித்து எவ்வித கருத்தினையும் எங்களால் தெரிவிக்க முடியாது. அவர் மேஜர் என்பதால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு” என தெரிவித்தனர். 

 

புதிய தலைமுறை செய்திகள்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, people smiling, text

 

பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, இந்த தீர்ப்பு வலிக்கத்தான் செய்யும்.

பெண்கள் திருமணமாகமல் பெற்றோர் வீட்டிலேயே இருக்கலாம், அப்போ அண்களின் கதி..?

வாரிசுகள் இல்லாமல், பிடித்துக்கொண்டு உட்காரவேண்டியதுதான்..!

 

328376-If-A-Man-Expects-A-Woman-To-Be-An

 

Share this post


Link to post
Share on other sites
On 8/30/2018 at 7:15 AM, ராசவன்னியன் said:

 

பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, இந்த தீர்ப்பு வலிக்கத்தான் செய்யும்.

பெண்கள் திருமணமாகமல் பெற்றோர் வீட்டிலேயே இருக்கலாம், அப்போ அண்களின் கதி..?

வாரிசுகள் இல்லாமல், பிடித்துக்கொண்டு உட்காரவேண்டியதுதான்..!

என்னத்தை... பிடித்துக் கொண்டு இருப்பது, என்று சொன்னால் நல்லது... வன்னியன்  அண்ணா. 
நீங்கள், சொல்ல வந்த...  அந்த வசனத்தை... முழுமையாக முடிக்காததால், எமக்கு  "அது"  என்ன என்று  ஒரே...  குழப்பமாக இருக்கப்பா. ?
(வசமா...  மாட்டிக்  கிட்டாரு,  மதுரைக் காரன்)  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

மண்டையை..!

(ஒரு 'ஃப்லோ' வில சொல்லிவிட்டேன்.. இப்படி துருவப்படாது..! ) tw_rage:

Share this post


Link to post
Share on other sites

அப்படியே திருமணமான ஆண்களும் பக்கத்து வீட்டில்/ முன் வீட்டில் மற்றும் தோழிகளின் வீட்டில் தங்க முடியும் என்றும் தீர்ப்பு எழுதுங்கள் யுவர் ஆனர். நாங்களும் மேஜர் தான்.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே.. கண்ணா பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே.. கண்ணா( ) நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன் நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய ( ) வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும் மோன முகம் வந்து தோன்றுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் சிரித்த முகம் வந்து தோனுதே கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் கானக்குழலோசை மயக்குதே ( ) கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகிறுக்கி அமைத்த திரத்திலே கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரின கரத்திலே கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2) காளிங்கன் சிரத்திலே பதித்த பதத்திலே கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும் கனிந்துருக வரம் தருக பரங்கருணை ( )  
  • குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறையேதும் எனகேதடி சகியே  ||  அழகான மயில் ஆடவும்  மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக) காற்றில் அசைந்தாடும் கோடி போலவும்  அகமழிந்திலவும் நிலவொளி தனிலே  தனை மறந்து புல்லினம் கூவ  அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட  தகுமிகு எனஒரு படம் பாட தகிட ததுமி என நடமாட கன்று பசுவினமும் நின்று புடை சூழ என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி ) மகர குண்டலமாடவும் (கண்ணன்)  அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்  மிகவும் எழில்லாகவும் (தென்றல்) காற்றில் மிளிரும் துகில்லாடவும் (அகமழிந்திலவும்)  
  • கந்தக்காட்டில் சற்றுமுன் மேலும் 87 பேருக்கு கொரோன உறுதி! பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) மாலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை மாெத்தமாக 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://newuthayan.com/கந்தக்காட்டில்-சற்றுமுன/
  • Tholar Balan 38 mins ·    •சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால் இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது? கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார். உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது. “எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம். இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம். சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம். இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன? இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும். எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன. குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.
  • தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான்-சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத) அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான், கள்ளர்ல் மயங்குவது போலே அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத) அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத) விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில் வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத) அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில் அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)