Sign in to follow this  
ராசவன்னியன்

'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்

Recommended Posts

'திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்.

50603.jpg

 

திருமணமான பெண்கள் வழக்கமான கணவரின் வீட்டில்தான் இருப்பார்கள். இல்லையென்றால் தனிக்குடித்தனம் இருப்பார்கள். பெரும்பாலும், திருமணமான பின்னர், பெண்கள் தனது பெற்றோர்களின் வீட்டில் வசிப்பதில்லை. கணவன் இறந்தாலோ அல்லது வேறுவொரு சிக்கலான தருணங்களில் தான் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டில் இருப்பார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பெண்கள் தங்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்கு செல்வதோ அல்லது ஹாஸ்டலில் தங்குவதோ அல்லது கணவன் வீட்டில் தங்குவதோ அவர்களின் விருப்பம் தான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

இப்ராஹிம் சித்திக்யு என்பவர் மதம் மாறி, ஆர்யன் ஆர்யா என்ற பெயருடன் அஞ்சலி ஜெயின் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது மனைவி அஞ்சலியை பெற்றோரின் பிடியில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்யன் ஆர்யா சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், பெண் விரும்பினால் விடுதிக்கோ அல்லது பெற்றோருடனோ செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் ஆர்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்த்ரசந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "உங்கள் இருவருக்கும் உண்மையில் திருமணம் நடந்ததா? ஏன் உங்கள் கணவருடன் நீங்கள் வாழ விரும்பவில்லை?" என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அஞ்சலியிடம் கேட்டனர். அதற்கு, “நான் ஒரு மேஜர். என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. ஆர்யன் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட போதிலும் நான் எனது பெற்றோருடன் வசிக்கவே விரும்புகிறேன். இது நானாக எடுத்த முடிவு” என்று அவர் கூறினார். 

பெண்ணின் கருத்தை கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண் கணவருடன் செல்ல விரும்பவில்லை. திரும்பவும் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புகிறார். அவரை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிக்கிறோம். அவர்களின் திருமணம் குறித்து எவ்வித கருத்தினையும் எங்களால் தெரிவிக்க முடியாது. அவர் மேஜர் என்பதால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு” என தெரிவித்தனர். 

 

புதிய தலைமுறை செய்திகள்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, people smiling, text

 

பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, இந்த தீர்ப்பு வலிக்கத்தான் செய்யும்.

பெண்கள் திருமணமாகமல் பெற்றோர் வீட்டிலேயே இருக்கலாம், அப்போ அண்களின் கதி..?

வாரிசுகள் இல்லாமல், பிடித்துக்கொண்டு உட்காரவேண்டியதுதான்..!

 

328376-If-A-Man-Expects-A-Woman-To-Be-An

 

Share this post


Link to post
Share on other sites
On 8/30/2018 at 7:15 AM, ராசவன்னியன் said:

 

பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, இந்த தீர்ப்பு வலிக்கத்தான் செய்யும்.

பெண்கள் திருமணமாகமல் பெற்றோர் வீட்டிலேயே இருக்கலாம், அப்போ அண்களின் கதி..?

வாரிசுகள் இல்லாமல், பிடித்துக்கொண்டு உட்காரவேண்டியதுதான்..!

என்னத்தை... பிடித்துக் கொண்டு இருப்பது, என்று சொன்னால் நல்லது... வன்னியன்  அண்ணா. 
நீங்கள், சொல்ல வந்த...  அந்த வசனத்தை... முழுமையாக முடிக்காததால், எமக்கு  "அது"  என்ன என்று  ஒரே...  குழப்பமாக இருக்கப்பா. ?
(வசமா...  மாட்டிக்  கிட்டாரு,  மதுரைக் காரன்)  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

மண்டையை..!

(ஒரு 'ஃப்லோ' வில சொல்லிவிட்டேன்.. இப்படி துருவப்படாது..! ) tw_rage:

Share this post


Link to post
Share on other sites

அப்படியே திருமணமான ஆண்களும் பக்கத்து வீட்டில்/ முன் வீட்டில் மற்றும் தோழிகளின் வீட்டில் தங்க முடியும் என்றும் தீர்ப்பு எழுதுங்கள் யுவர் ஆனர். நாங்களும் மேஜர் தான்.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர். ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.   மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள்.   நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?  
    • அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் தெரிவித்துள்ளார். கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் 46ஆவது ஜி-7 உச்சிமாநாடு மார்ச் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாடை இணைய வழியுடாக நடத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகைக்குத் தலைவர்களை நேரடியாக அழைத்து, மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் பெரும் கூட்டத்தை நடத்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார். ட்ரம்ப்பின் இந்த யோசனையின் பின்னால் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஆதரவு உள்ளது. இந்தநிலையில், ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வொஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார். எனினும், ஜி-7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிபர் நன்றி கூறுகிறார். இன்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, வொஷிங்டனுக்கான பயணத்திற்கு அவர் தனது தனிப்பட்ட பங்களிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூறினார். இதனிடையே உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை துண்டிப்பதாக அமெரிக்க எடுத்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தெரிவித்துள்ளார். இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கடும் பின்னடைவு எனவும், உலக சுகாதார அமைப்பால் எதிர்காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும், ஆனால் அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார் http://athavannews.com/அமெரிக்காவில்-நடைபெறவுள/
    • நாதம்ஸ், சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்! எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎 2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾
    • மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்! சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாசா விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹென்கென் ஆகியோரை புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுற்றுப்பாதையில் சேர்ப்பதற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், கடந்த புதன்கிழமை மோசமான காலநிலையால் நிறுத்தப்பட்டது. தற்போது இதற்கான இரண்டாவது முயற்சியை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முதல் தடவையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதால், அவர்களின் பணியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது ஒரு குழுவினரை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். http://athavannews.com/மனித-விண்வெளி-பயணத்தை-தொ/