Sign in to follow this  
nunavilan

பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்

Recommended Posts

 

பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்

 

 

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பாடகர் செந்தூரன. அழகையாவின் ஆதங்கம் சரியானதே.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், தமிழகத்தின் திரையுலகம் புலம் பெயர் தமிழர்களின் பணத்தைக் குறிவைத்து நீண்ட வருடங்கள் ஆகி இருப்பது புரியும்.

தமிழகத் தொலைக்காட்சிகள், சினிமா... என்ற மாயைகளுக்குள் இருந்து மீள முடியாத நிலையிலேயே புலம் பெயர் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும்  கனடா, இலண்டன் தமிழர்கள் கொஞ்சம் தீவிரம். பொத்தம் பொதுவாக சொல்வதாயின் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களே இந்த மாயைகளுக்குள் அதிகம் உழலுகிறார்கள்.

ஒருபக்கம் ஆன்மீகம், மறுபக்கம் சினிமா, தொலைக்காட்சிகள் என்று  புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து   தாயக விடுதலை, போரில் ஏற்பட்ட வலிகள், தாயகத்தின் தேவைகள் எல்லாம், இன்று அந்நியப்பட்டுப் போய் விட்டன.

‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயல்என்று  சொல்லி, எங்களது மூத்தவர்கள் அன்று எங்களை கலைகளின் பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் பலன் இப்பொழுது தெரிகிறது.

சிங்களப் பொலீஸார் தமிழர் பகுதிகளில் விடுமுறைக்கு வந்தவர்கள் போல் உல்லாசமாக உலாவந்து கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இப்பொழுது என்னவாம்? என்று கேட்டு விடாதீர்கள்அந்தக் காலகட்டத்தில் ஏதாவது செய்ய வேண்டும் போல அவர்களுக்கு உறுத்தினால் சைக்கிளில் டபுள் போகிறவர்களையும், இரவில் லைற் இல்லாமல் சைக்கிள் ஓட்டுபவர்களையும் பிடித்துக் கொள்வார்கள். அநேகமாக அப்படி மாட்டுப்படுபவர்கள் சினிமா இரண்டாம் காட்சி பார்த்து விட்டு வருபவர்களாகவே இருப்பார்கள்.

அப்படியான நிகழ்வுகளை வைத்து முன்பு சிரித்திரன் இதழில் வந்த ஒரு நகைச்சுவை.

இரவில் ஒருவர் சைக்கிளில்லைற்இல்லாமல் பயணிக்கும் போது பொலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்

பொலீஸ் : லைற்றில்லாமல் பயணிக்கிறது?

நம்மாள் : இண்டைக்கு பெளர்ணமி நாள். நிலா வெளிச்சம்தான் எல்லா இடமும் பரவி இருக்கே. எதுக்கு சைக்கிளுக்கு எக்ஸ்ரா லைற்றெண்டு கழட்டி வைச்சிட்டன்.

பொலீஸ் : எல்லா இடமும்தானே காத்து இருக்குபின்ன எதுக்கு எக்ஸ்ராவா சைக்கிளுக்கு காத்து?

சைக்கிளில் இருந்து பொலீஸ்காரர் வால்வ் ரியூப்பை கழட்டி எடுத்து விடுகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த மதுரை முத்துவின் நிகழ்ச்சி ஒன்று  நியூசிலாந்தில் நடந்திருந்தது. அதை  இணையத்தில் பார்க்க முடிந்தது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் மேற் குறிப்பிட்ட நகைச்சுவையும் இடம் பெற்றிருந்தது. எங்களது நகைச்சுவையை எங்களுக்கே சொல்லி பணம் பார்க்க அவரிடம் திறமை இருக்கிறது.

எங்களிடம் என்னதான் இருக்கிறது?

 

                                              

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, Kavi arunasalam said:

...

எங்களிடம் என்னதான் இருக்கிறது?                                            

திறமை இருக்கிறது, தமிழ் பற்றுதல் இருக்கிறது.. sgentil.gif

ஆனால் அதைவிட சற்று தலைக்கனமும், அலட்சியமும், ஒற்றுமையின்மையும் இருப்பதால், ஆறடி ஏறினால் பத்தடி சறுக்குகிறது..! vil-modeste.gif

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, ராசவன்னியன் said:

திறமை இருக்கிறது, தமிழ் பற்றுதல் இருக்கிறது..

திறமையும், தமிழ்பற்றும் இருந்தால் மட்டும் போதுமா ராசவன்னியன்?

போட்டி, பொறாமை, தலைக்கனம், ஒற்றுமையின்மை என்று தென்னிந்தியக் கலைஞர்களிடமும்  நிறைய இருக்கின்றன.

ஆனால் இதை எலாவற்றையும் விட ஏதோ ஒன்று எங்களிடம் இல்லை.

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, Kavi arunasalam said:

...தென்னிந்தியக் கலைஞர்களிடமும்  நிறைய இருக்கின்றன.

ஆனால் இதை எலாவற்றையும் விட ஏதோ ஒன்று எங்களிடம் இல்லை.

அது யாருங்க தென்னிந்திய கலைஞர்கள்..? சிரஞ்சீவி, வெங்கடேஷ்..??

ஒருவேளை உங்களுக்கென்று ஒரு பரந்தவெளி, ஊக்குவிற்கும் ரசிகர்கள் இல்லையோ என்னவோ..?

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரஜனிகாந், அர்ஜுன், விசால்,ஆர்யா,அதர்வா, நயன்தாரா, லக்சுமி மேனன், பிரகாஷ்ராஜ்.....

கொஞ்சம் எனது இளமைக்காலத்துக்குப் போனால்

எம்ஜிஆர், நம்பியார், கல்யாணக்குமார், சி.எல்.ஆனந்தன், சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டாரிபாய், மீனாகுமாரி, பானுமதி, சௌகார ஜானகி, ல  லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா.......

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, Kavi arunasalam said:

...

எம்ஜிஆர், நம்பியார், கல்யாணக்குமார், சி.எல்.ஆனந்தன், சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டாரிபாய், மீனாகுமாரி, பானுமதி, சௌகார ஜானகி, ல  லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா.......

என்ன சார், 'ரொம்ப பழசா' இருக்கீங்களே..? :)

 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites


இவர் சொல்ற்து உண்மை என்டாலும்,இவர் தன்னை பாடவிடவில்லை என்ட கவலையில் தான் இந்த குற்றாச்சாட்டை வைக்கிறார் என்னும் போது சிரிப்பாகவும்? இருக்குது....உண்மையில் நல்லாப் பாடக் கூடியவர்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கினம் தான்

Share this post


Link to post
Share on other sites
On 9/2/2018 at 12:06 PM, ரதி said:

 உண்மையில் நல்லாப் பாடக் கூடியவர்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கினம் தான்

அட எங்கண்ட அம்மானோட பாட்டையும் கேளுங்கோவன்.

Share this post


Link to post
Share on other sites
On 8/29/2018 at 7:44 PM, Kavi arunasalam said:

 

அப்படியான நிகழ்வுகளை வைத்து முன்பு சிரித்திரன் இதழில் வந்த ஒரு நகைச்சுவை.

இரவில் ஒருவர் சைக்கிளில்லைற்இல்லாமல் பயணிக்கும் போது பொலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்

பொலீஸ் : லைற்றில்லாமல் பயணிக்கிறது?

நம்மாள் : இண்டைக்கு பெளர்ணமி நாள். நிலா வெளிச்சம்தான் எல்லா இடமும் பரவி இருக்கே. எதுக்கு சைக்கிளுக்கு எக்ஸ்ரா லைற்றெண்டு கழட்டி வைச்சிட்டன்.

பொலீஸ் : எல்லா இடமும்தானே காத்து இருக்குபின்ன எதுக்கு எக்ஸ்ராவா சைக்கிளுக்கு காத்து?

சைக்கிளில் இருந்து பொலீஸ்காரர் வால்வ் ரியூப்பை கழட்டி எடுத்து விடுகிறார்.                                              

அப்படி இல்லையையா அந்த உரையாடல்.

தமிழ் தெரியாத சிங்கள பொலீஸ்காரர்; அடேய்ங், ஸ்ரொப்...ஸ்ரொப்... நைற் ரைம்.... லைற் இல்லே... சைக்கிள் போறதிங்...

நம்மாளு; றாலாமி அய்யா, பல்ப் சுட்டுட்டுது, ஊரெல்லாம் நல்ல நிலவு.... அதால தான்...

பொலீஸ்காரர்; அடேய்ங், ஊரெல்லாம்  நல்லே காத்தே.... ரயரில எதுக்க...

காத்தை திறந்து விட்டவாறே.... நெலவில சைக்கிள உறுட்டீட்டு யண்ட..(போ)

Edited by Nathamuni
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

அட எங்கண்ட அம்மானோட பாட்டையும் கேளுங்கோவன்.

அட்ரா....அட்ரா...அட்ரா........

அடிடா சக்கையெண்டானாம்  அம்மன் கோயில் புக்கையெண்டானாம்...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this