Jump to content

மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம்


Recommended Posts

மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம்

 

 
99f54abfP1478772mrjpg

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது மதுரையில் உள்ள தனது வீடு அருகே சிலருடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி.படம்: எஸ்.ஜேம்ஸ்

சென்னையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் வீடு வெறிச் சோடிக் காணப்பட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து வதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

 

சென்னையில் திமுக தலைவ ராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதேநேரம், மதுரையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வெளியூர்களில் இருந்து ஆதர வாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந் ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கூறியதா வது: அழகிரி எதிர்பார்த்தவாறு திமுகவின் தற்போதைய நிர்வாகி கள் உட்பட முக்கியமானோர் யாரும் வரவில்லை. சென்னை பேரணி குறித்து அழகிரியிடம் கட்சியினர் உறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். திட்டமிட்டவாறு வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வரு வார்களா?, அழைத்து வரக் கூடியவர்கள் யாராக இருப்பார் கள்?, அவர்களின் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை யார் செய்வது? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அழகிரி தரப்பிலோ, அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலோ செலவுத் தொகை வழங்குவது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. ஏற்பாடு களில் உள்ள தேக்கநிலை அழகிரிக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. இன்னும் 3 நாட்களில், செப். முதல் தேதிக்கு பிறகே ஏற்பாடுகள் தொடர்பான உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

ஆர்வம் காட்டாத அழகிரி

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் காலை 10.30 மணியளவில் மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு பந்தலில் காத்திருந்த ஆதரவாளர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பொதுக்குழு வின் எந்த நிகழ்வையும் டிவியில் பார்ப்பதற்குக்கூட அழகிரி ஆர்வம் காட்டவில்லை. ஸ்டாலின் பேசி முடித்து பொதுக்குழு கலைந்த பிறகே, பிற்பகல் 2 மணியளவில் அழகிரி மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24806570.ece

Link to comment
Share on other sites

செய்தியாளர்களை விரட்டியடித்த அழகிரியின் ஆதரவாளர்கள்: அமைதிப்பேரணி என்ன ஆகும்?

1535530253-749.jpg
 
 
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியின் வீட்டில் ஆதரவாளர்கள் வரும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தனது வீட்டின் முன்னே செய்தி சேகரிக்க நின்றிருந்த செய்தியாளர்களை விரட்டினர்.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ள அழகிரி, இந்த பேரணி மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற எண்ணம் கூட இல்லாம செய்தியாளர்களை விரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 
1535530347-1914.jpg
மேலும் அமைதிப்பேரணி குறித்த ஆலோசனையில் அழகிரி ஈடுபட்டிருக்கும்போது பத்துக்கும் குறைவான ஆதரவாளர்களே இருந்தனர் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் அமைதிப்பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் என்று அழகிரி கூறியது எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/azhagiri-supporters-says-get-out-to-press-reporters-118082900028_1.html

 

Link to comment
Share on other sites

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்! ஆனால்... அழகிரி வைக்கும் கோரிக்கை

 

'தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார்' என்று மு.க.அழகிரி அதிரடியாகக் கூறினார்.

அழகிரி

சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணி தொடர்பாக 7-வது நாளாகத் தனது ஆதரவாளர்களுடன் மதுரை டி.வி.எஸ் காலனி வீட்டில் மு.க.அழகிரி ஆலோசனை  நடத்தி வருகிறார். அதிக அளவு தொண்டர்கள் வரவில்லை. முக்கிய நிர்வாகிகள் ஆதரவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் குறையாத எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்பர். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்குப் பெரிதாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

தி.மு.க-வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்களை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார். தி.மு.க-வின் பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர் என்பதை நினைவுகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/135442-azhagiri-ready-to-accept-stalin-as-dmk-head.html

Link to comment
Share on other sites

ஸ்டாலினை ஏற்கிறேன் : மனம் மாறிய அழகிரி : பின்னணி என்ன?

Alagiri
 
 
திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்கிறேன் என அழகிரி கூறிய விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அழகிரியை திமுகவில் சேர்த்துக்கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
 
அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல வருடங்களாக கட்சியில் இருந்தும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரி தரப்பு குறிவைத்துள்ளது.
 
இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் தற்போது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட பலரையும் வரவழைத்து அவர்களுக்கு பதவி கொடுத்து வருகிறாராம். ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை அழகிரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதவி பெறாதவர்கள் கூட அழகிரி தொடர்பு கொள்ளும் போது ‘ உங்க மேல மரியாதை இருக்கு.. ஆனா அதுக்காக தளபதிக்கு எதிரா எங்களால செயல்பட முடியாது. கடைசி வரைக்கும் திமுக தொண்டர்களாக இருந்து விட்டு போகிறோம். மன்னித்து விடுங்கள்’ எனக்கூறி போனை கட் செய்து விடுகிறார்களாம். இது அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த்தியது.
1534319055-5724.jpg

 
அதுபோக, செப் 5ம் தேதி நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள அறிவுநிதி, மற்றும் ஸ்டாலினின் சகோதரி செல்வி உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களை அழகிரி அழைத்தாரம். ஆனால், நீங்களும், ஸ்டாலின் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம். ஆனால், அது நடக்கவில்லை. நீங்கள் நடத்தும் பேரணியில் நாங்கள் கலந்து கொண்டால் ஸ்டாலின் வருத்தப்படுவார். அவரை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. குடும்ப விழா என்றால் அழையுங்கள். உடனே வருகிறோம். ஆனால், உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான அரசியலில் எங்களை இழுக்காதீர்கள் எனக்கூறி விட்டார்களாம்.
 
இப்படி அனைவரும் நழுவியதால் அழகிரி கலக்கம் அடைந்துள்ளார். அதனால்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் திமுகவில் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பவில்லை. என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால் அவரை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன்” என அவர் இறங்கி வந்தார் எனக்கூறப்படுகிறது. 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/reason-for-algari-mind-change-118083100013_1.html

Link to comment
Share on other sites

நான் தலைவர் கருணாநிதியின் மகன்; சொன்னதைச் செய்வேன்: அழகிரி பதில்

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி: கோப்புப்படம்

நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன் என்று மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். தான் நடத்தும் பேரணியால் திமுகவுக்கு நிச்சயம் ஆபத்து இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

 

அதனையடுத்து தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அழகிரி கடந்த மாதம் 30-ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை'' என்றார்.

மேலும், ''உண்மையான கட்சித் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அமைதிப் பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றும் அழகிரி கூறினார்.

இந்நிலையில் இன்று மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் அமைதிப் பேரணி குறித்து அழகிரி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அழகிரியிடம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அழகிரி, நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன் என்றார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் திமுகவில் சேர உங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து கூற விரும்பவில்லை என அழகிரி பதில் அளித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24847336.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி

103261820ed6a198c-ebb5-4a64-a35e-db14fa5

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி

"தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். 5-ந்தேதி நடக்கும் அமைதி பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே அது இருக்கும்" என்று ஹலோ எப்.எம். பேட்டி ஒன்றில் துரை தயாநிதி அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"தி.மு.க.வில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி அழகிரி தனது குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தவில்லையா? என கேட்டபோது, கருணாநிதி இருந்தபோது அவரிடம் மட்டும் பேசியதாகவும், மற்ற யாரிடமும் தனது தந்தை தொடர்பு கொண்டதில்லை எனவும் துரை தயாநிதி கூறினார்.

தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதே தங்களது ஆசை என கூறிய அவர் இதற்கு சித்தப்பாவிடம்(மு.க.ஸ்டாலின்) இருந்து சாதகமான பதில் வரும் என தெரிவித்தார்" என்கிறது தினத்தந்தி.

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் என அவர் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

https://tamil.thehindu.com/bbc-tamil/article24846752.ece

Link to comment
Share on other sites

”அமைதிப் பேரணியில் ஆரவாரம் வேண்டாம்” -அறிக்கை மூலம் அழகிரி வேண்டுகோள்

 

அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வரும் உடன்பிறப்புகள் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழகிரி அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அழகிரி

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கட்சியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தன் பலத்தைக் காட்டும் வகையிலும் சென்னையில் வரும் 5ம் தேதி பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருகிறார் அழகிரி. இது தொடர்பாக தொடர்ந்து அவர் ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் தலைவரின் பிள்ளை. சொன்னதைச் செய்வேன். சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தலைவர் கருணாநிதியின் 30 -ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு எனது தலைமையில் மாபெரும் அமைதிப் பேரணி வரும் 5 -ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணசிலை அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளோம். 

 

 

அழகிரி

இதில் பங்கேற்கவுள்ள உடன்பிறப்புகள் காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகே திரண்டிட வேண்டுகிறேன்.  அமைதிப் பேரணியில் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும், நடந்து கொள்ள வேண்டும். சென்னை நகருக்குக் காலை 8 மணிக்குள் வந்து சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பேரணியில் கலந்துகொள்ள வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ளப் பாசத்துடன் வேண்டுகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/india/135742-alagiri-requested-his-supporters-to-stay-cal-during-rally.html

Link to comment
Share on other sites

ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை:  சென்னையில் மு.க.அழகிரி தகவல்

 
a71255ecP1491343mrjpg

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது முடிவை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 30 நாட்கள் ஆவதையொட்டி, சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி 5-ம் தேதி (நாளை) அமைதி பேரணி நடத்தக்கவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

 

இதை முன்னிட்டு மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தி வந்தார். பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

சென்னையில் நீங்கள் நடத்த உள்ள அமைதி பேரணியில் எத்தனை பேர் கலந்துகொள் வார்கள்?

நான் ஏற்கெனவே சொன்னது போல, ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் கலந்துகொள்வார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா?

தற்போது அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை.

திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலை வராக ஏற்கத் தயார் என்று கூறினீர்கள். அதற்கான அறிகுறி கள் தெரியவில்லையே?

செய்தியாளர்களை 5-ம் தேதி (நாளை) சந்திக்கிறேன். அப்போது என் முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24860667.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி

 
 

இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார் அழகிரி.

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி
 

மு.க.அழகிரியை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி, கட்சியை விட்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ' இந்தக் கட்சியைக் காப்பாற்றத்தான் நான் உழைக்கிறேன். என்னை வந்து பார்த்ததுக்கே நடவடிக்கை எடுக்கிறார்களா?' என ஆதரவாளர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அழகிரி. 

சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில், நாளை அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் மு.க.அழகிரி. இந்தப் பேரணியில் ஒரு லட்சம் பேர் வரையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்காக போலீஸ் அனுமதியையும் வாங்கிவிட்டனர். இந்த நிலையில், அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி ரவியைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார் பொதுச் செயலாளர் அன்பழகன். இது அழகிரி தரப்பினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 

மு.க.ஸ்டாலின்அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். `` மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதற்காக மிகவும் கீழே இறங்கிப் போய் பேட்டி அளித்தார் அழகிரி. ` கட்சியில் சேர்த்தால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என்றார். இருப்பினும், ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இன்று வேளச்சேரி பகுதிக் கழக நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்ட தகவலைக் கேட்டு இன்னும் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார். அவர் எங்களிடம் பேசும்போது, ` நம்மை வந்து ஒரு நிர்வாகி பார்த்ததுக்கே கட்சியை விட்டு நீக்குகிறார். இவர் (ஸ்டாலின்) எப்படி நம்மைக் கட்சியில் சேர்க்க நினைப்பார். அவர் மாறப் போவதில்லை. இந்தத் தொண்டர்களைக் காப்பாற்றத்தான் நான் இருக்கிறேன். நாளை பேரணி முடிந்ததும் மற்ற விஷயங்களை முடிவு செய்கிறேன். இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தினோம். 

 

 

இதன்பிறகு, தனியார் ஓட்டலில் தங்கியிருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார் அழகிரி. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 50 வாகனங்கள் வர இருக்கின்றன. கோவையில் இருந்து மட்டும் 100 வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகின்றனர். மதுரையில் இருந்து 500 வாகனங்கள் கிளம்புகின்றன. இதற்கான செலவுகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நபர்களே செய்கின்றனர். கல்யாண மண்டபம், தனியார் ஓட்டல்கள் என அனைத்தையும் முன்னரே புக்கிங் செய்துவிட்டோம். காவல்துறையிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ' நாளை எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால், பேரணியை நடத்துவதில் சிரமம் இல்லை' என அவர்கள் கூறிவிட்டனர். இந்தப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுதியாகக் கலந்துகொள்வார்கள். நாளை பத்து மணிக்குத் தொடங்கும் பேரணி 12 மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறார் அழகிரி" என்றார் விரிவாக. 

 

 

`` அழகிரி நடத்தப் போகும் பேரணியை தி.மு.க நிர்வாகிகள் சிலரும் குடும்ப உறுப்பினர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பேரணிக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்து, அவர்களில் சிலர் மனமாற்றம் அடையவும் வாய்ப்பிருக்கிறது" என விவரித்த முக்கிய நிர்வாகி ஒருவர், ``அழகிரியோடு எந்தவிதத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். இதில் கட்சிப் பதவி கேட்டு ஏமாற்றம் அடைந்த நிர்வாகிகளும் குடும்ப ஆள்களும் அழகிரியின் ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதன்மூலம், ஸ்டாலினிடம் பதவி வாங்கிவிட முடியும் எனவும் நம்புகின்றனர். `பேரணி முடியட்டும். அதன்பிறகு முடிவெடுப்போம்' என அவர்கள் விவாதம் நடத்தியுள்ளனர். பேரணி குறித்த விவரங்களையும் அறிவாலய நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர்" என்றார் நிதானமாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/135889-dmks-decision-irritates-azhagiri-to-the-core.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.