Jump to content

கண்முன்னே திரிக்கப்படும் வரலாறுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதன்மைத் தமிழ் இராஜதந்திரப் போராளி- போன போக்காளி அன்ரன் பாலசிங்கம்

எழுதியவர் -பஸீர் சேகுதாவூத் முன்னாள் பாராளு மஎன்ற உறுப்பினர் ***********************
2006 இல் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையில் போர் மீண்டும் உக்கிரமாகத் தொடங்கிய நிலையில்,  வன்னியில் நின்ற அன்ரன் பாலசிங்கம் ஐயாவுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து அவை இயங்கா நிலையை அடைந்தன. அவருக்கு உடனடியாக அவசர உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. வன்னியில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கவில்லை. ஆகவே,புலிகள் கொழும்பு விமான நிலையம் ஊடாக பாலசிங்கத்தை லண்டன் அனுப்புவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கோரினர்.ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை.

அனுமதி மறுக்கப்பட்ட சில நாட்களில் அன்ரன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் காணப்பட்டார். அங்கே அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்து.பின்னர் இன்னும் சில நாட்களில் அவர் லண்டனில் சிறந்த வைத்தியத்தைப் பெற்ற வண்ணம் அங்குள்ள தனது வீட்டில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.

அன்ரன் பாலசிங்கம் வன்னியில் இருந்து எப்படி நோர்வேக்குத் தப்பிச் சென்றார் என்பது மிக முக்கிய வினாவாகும்.

பாலசிங்கம், உலகில் பரவலாக அறியப்பட்ட ஒரு தத்துவவியலாளராக இருந்தமை, சிறந்த இராஜதந்திரியாக நீண்ட காலம் செயற்பட்டமை, அவர் ஓர் எழுத்தாழுமையாக கவனிக்கப்பட்டமை மேலும் இடதுசாரியாக இருந்தாலும் கிறிஸ்தவராக அடையாளம் காணப்பட்டமை,இலங்கைக்கான சர்வதேசப் பங்களிப்புடனான சமாதானப் பேச்சுக்களில் புலிகளின் தலைமைப் பிரதிநிதியாகப் பங்கு கொண்டமை போன்ற காரணங்களால் உலகப் பிரசித்தமானவராய்த் திகழ்ந்தார்.

ஆகவே, இவரைக் காப்பாற்றுவது என்ற தீர்மானத்துக்கு உலகப் பெரும் சக்திகள் வந்தன.

சர்வதேச வான் எல்லைப் பரப்பைத் தாண்டி ஒரு முறை இலங்கையின் அநுமதியின்றி அதன் வான்பரப்புக்குள் இந்தியா நுழைந்த அனுபவத்தை உலகு அவதானித்திருந்தது.

எனவே, அன்ரனைக் காப்பாற்றும் நோக்கோடு மேற்குலகின் நேட்டோ அமைப்பு தனது போர்க்  கப்பல் ஒன்றை இலங்கையின் கடல் எல்லையில் கொணர்ந்து நிறுத்திற்று. கப்பலின் மேலே நேட்டோ அமைப்பில் அங்கம் வகித்த நோர்வேயின் அதிவேக உலங்கு வானூர்தி ஒன்று தரித்திருந்தது. வன்னிக் கரையில் இருந்து அன்ரனையும் அவரது மனைவியையும் ஏற்றிக்கொண்டு விரைந்த கடற்புலிகளின் படகு அவர்களை நேட்டோவின் கப்பலில் இருந்தவர்களிடம் ஒப்படைத்தது. நோர்வேயின் வானூர்தி அன்ரன் தம்பதிகளை ஏற்றிக்கொண்டு சென்று அமெரிக்கத் தளமான டியாகோகார்சியாவில் இறக்கிவிட்டது. இதன் பின்னர் சட்டபூர்வமாக, தம்பதியினர் நோர்வையை அடைந்தனர். இதுதான் அன்ரன் பாலசிங்கம் தப்பிச் சென்ற கதையாகும்.

2002 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பியப் புலி ஆதரவாளர்களில் ஒரு தொகுதியினர் அன்ரனை ஓரங்கட்டும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். வன்னியில் இருந்த புலித் தலைமைக்கு அன்ரனைப் பற்றிய பொய்களையும், புனைவுகளையும் கூறினர்,போட்டுக் கொடுத்தனர், அள்ளியும் வைத்தனர். இந்நடவடிக்கைகளினால் தமிழர்களின் பெரும் இராஜதந்திரி சோர்வடைந்திருந்தார்.இந்தக் கூர் குறை கூறலில் ஏதாவதொரு சர்வதேசப் புலனாய்வுத்துறை சம்மந்தப்பட்டிருந்ததா என்பதை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

ஒரு மாபெரும் உண்மையை இங்கு கூறியாகவேண்டும். அதாவது,சந்திரிக்காவின் காலத்தில் வெளிநாட்டமைச்சராக இருந்த கதிர்காமர் என்ற தமிழரின் கெட்டித்தனத்தினால்தான் புலிகள் உலகெங்கும் தடை செய்யப்பட்டார்கள் என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் இதுவல்ல உண்மை, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் புலிகளின் ஒரு பகுதியினரால் ஒதுக்கப்பட்டமையே சர்வதேசம் புலிகளைத் தடை செய்தமைக்கான உண்மைக் காரணமாகும்.

"தம்பியின் பாலா அண்ணன்" வன்னியில் இருந்து தப்பிச் சென்று நோர்வேயில் வாழ்ந்த போது நோயில் இருந்து தப்பிப் பிழைத்தார். ஆயினும்- தான் ஒதுக்கப்பட்டதனால்,மேலும் உயிர் வாழ்ந்தாலும் தனது மக்களுக்கான போராட்டத்திற்குச் சரியான பங்களிப்பை என்னால் செய்ய முடியாது என்று அன்ரன் நம்பினார்.ஆகவே இனிமேலும் உயிர் வாழ்தல் பிரயோசனமில்லை என்று எடுத்த உறுதியான தீர்மானத்தினால் அவர் மருந்துகளை உட்கொள்ள மறுத்தார் என்று ஒரு தகவல் கிடைத்தது. 

அன்ரன் பாலசிங்கத்தின் மரணம் சயனைட் அருந்தாத சுய விடுதலைக்கான ஒருவகைத் தற்கொலை எனக் கொள்வது பொருத்தம்தானே?

 

 

உண்மைச்சம்பவம் 

எம் காலத்தில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொருவரின் எழுத்தின் மூலம் எவ்வாறு திரிபுக்குள்ளாகின்றன என்பதற்கு நல்ல உதாரணம் .....
##########################
1990 களின் பிற்பகுதிகளில் சந்திரிகா அரசாங்கத்தின் காலப்பகுதி அது அன்ரன் பாலசிங்கம் வன்னியில் தங்கியிருந்தார்.. அப்போது அவரிற்கு சிறுநீரக கோளாறு..ஏற்பட்டிருந்தது .. வன்னியில் அதற்கேற்ற மருத்துவ வசதிகள் இருக்கவில்லை எப்படியாயினும் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பியே ஆகவேண்டிய நிலமை ..நோர்வே மூலம் சந்திரிகா அரசாங்கத்தை தொடர்பு கொண்டபோது சந்திரிகாவும் கதிர்காமரும் ஏற்றுகொள்ள முடியாத பல  நிபந்தனைகளை விதித்தனர்.. தான் இறந்தாலும் பரவாயில்லை போராட்டத்தை மழுங்கடிக்க கூடிய எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டமென அன்ரன் தன்னை பார்க்க வந்த தலைவரிடம் சொல்லிவிட்டார்.. நோய்காரணமாக தாங்கமுடியா வயிற்று வலியால் அவர் வதை படுவதை பார்த்த தலைவர் என்ன விலை கொடுத்தாவது அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அடேலிடம் உறுதியளித்தார்.. அதற்கு அடுத்த நாள் கடற்புலிகளின்  கப்பல் ஒன்று முல்லைத்தீவு சர்வதேச கடல்பரப்பில் காத்து இருந்தது.. முக்கிய தளபதிகள் மற்றும் தலைவரின் குடும்பம் விடை கொடுக்க அன்ரன் மற்றும் அடேலை சுமந்து கொண்டு கடற்புலிகளின் படகு கப்பலை நோக்கி சென்றது..படகின் அணியத்தில்  தளபதி சூசை...அடுத்த சில நாட்களில் கப்பல் தாய்லாந்து சென்றடைந்திருந்த்து.. அப்படியே (நோர்வே/ பிரித்தானியா?) சென்று மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது..2002 ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையை அடுத்து VIP அந்தஸ்துடன் கடல்விமானம் மூலம்.. இரணைமடு குளத்தில் வந்திறங்கினார்..

சுதந்திரவேட்கை நூலில் அடேல் பாலசிங்கம்....

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.