யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

60 வயது மாநிறம் திரை விமர்சனம்

Recommended Posts

60 வயது மாநிறம் திரை விமர்சனம்

 

60 வயது மாநிறம் திரை விமர்சனம்
 
 

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.

அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.

பிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.

இதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.

பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.

சமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.

படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.

ஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

படத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.

பிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.

இளையராஜா பின்னணி இசை.

பல்ப்ஸ்

மிக மெதுவாக நகரும் திரைக்கதை.

சமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...

மொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.

https://www.cineulagam.com/films/05/100960?ref=reviews-feed

Share this post


Link to post
Share on other sites

`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்

 
`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்
 

குழந்தைகளை தொலைத்துவிட்டு தேடும் தந்தைகள் பற்றி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன் பற்றிய கதைதான் இந்த '60 வயது மாநிறம்.'

பிரகாஷ்ராஜ்

ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர் நோய். மனைவியை ஏற்கெனவே புற்றுநோய்க்குப் பறிகொடுத்த அவருக்கு மகன் விக்ரம் பிரபு மட்டுமே ஒரே ஆறுதல். ஆனால், விக்ரம் பிரபுவுக்கு வேறு ஊரில் வேலை கிடைக்க, தந்தையை ஒரு கேர் சென்டரில் இந்துஜா கண்காணிப்பின் கீழ் விட்டுச் செல்கிறார். ஓராண்டுக்குப் பின் அப்பாவை பார்க்க வரும் விக்ரம் பிரபு அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். அப்போது கவனக்குறைவால் பிரகாஷ்ராஜை தொலைத்துவிடுகிறார். இன்னொரு பக்கம் ரவுடியான சமுத்திரக்கனி ஒரு கொலை முயற்சியில் இறங்குகிறார். பார்க்கும் எல்லாரையும் மகன் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். விக்ரம் பிரபு, தன் தந்தையைத் தேடும் படலமே மீதிக்கதை.

 

 

60 வயது மாநிறம்

60 வயது மாநிறத்தவராகப் பிரகாஷ்ராஜ். நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெள்ளை கறுப்பு நாய்க் கதை, தன் மனைவியுடனான காதல் கதை என்று வசனங்களோடு கண்களாலும் கதை சொல்கிறார். தனியனாய் அலையும்  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் இத்தனை கால அனுபவம் பேசுகிறது. 

 

 

முழுநீள சென்டிமென்ட் படத்தில் விக்ரம்பிரபு நடிப்பது இதுவே முதல்முறை. பிரகாஷ் ராஜோடு இருக்கும் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் மற்ற காட்சிகளில் நன்றாகவே சமாளித்திருக்கிறார். 'மேயாத மான்' இந்துஜா டாக்டர் ரோலுக்கு பளிச் பொருத்தம். மேக்கப் மட்டுமே இயல்பைத் தாண்டி உறுத்துகிறது. பெரிதாக ஸ்கோப் இல்லாததால் சமுத்திரக்கனிக்கு இது மற்றுமொரு படம். குமரவேல், விஜய் டிவி புகழ் சரத் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்

வசனங்கள் ஓரிரு இடங்கள் விஜி பெயர் சொல்கிறது. ராதாமோகன் படத்தில் இயல்பான நகைச்சுவை அதிகமிருக்கும். ஏனோ இந்தப் படத்தில் ஒருசில இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் வலிந்து திணித்த காமெடிகள்தான் அதிகமிருக்கின்றன. இசை இளையராஜா என்பது பின்னணி இசையில் ஒலிக்கும் அவர் குரலை வைத்துமட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் 'இது ராஜா இல்லையே' என்று நினைக்க வைக்கிற பின்னணி இசை. என்ன ஆச்சு ராஜா சார்?

'Life is Beautiful' என்ற நெகிழ்ச்சியான குறும்படம், ராம் - மரியா - ஜானி மூவருக்குள் இருக்கும் வித்தியாச உறவு, பிரகாஷ் ராஜின் காதல் கதை என ஒருசில இடங்கள் நிஜமாகவே பியூட்டிஃபுல். ஆனால், அதுமட்டுமே போதாதே? அன்பை பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டிருப்பது ஒருகட்டத்தில் ஓவர்டோஸாகிறது. படத்துக்கும் செயற்கை சாயம் பூசுகிறது.  

indhuja

மனித மனங்களைப் பற்றி பேசும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தொடர்புபடுத்திக்கொள்ள அவகாசம் தராமல் சட்சட்டென கடந்து செல்லும் காட்சிகள் உணர்வுகளைக் கடத்துவதில் தோல்வி காண்கின்றன. இதனாலேயே ஒளிப்பதிவுக்கும் படத்தொகுப்புக்கும் பெரிய வேலையில்லை. முக்கியமாக வில்லனும் அவரின் சகாவும் போகிறபோக்கில் 'இந்தா செவப்பு சட்டை போறான் பாரு அவனை முடிச்சுடு, அந்தா ஒருத்தன் இட்லி சாப்பிடுறான் பாரு, அவனை முடிச்சுடு' எனப் பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத்தள்ளச் சொல்கிறார்கள். நானோ அளவுக்குக்கூட பதற்றம் இந்தச் செயற்கைத்தனத்தால் வரமாட்டேன் என்கிறது.

 

 

'கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது! அதை எடுக்க நினைத்ததெல்லாம் சரி, ஆனால், எடுத்தவிதம்தான் 60 வயது மாநிறம் கொண்ட பெரியவரை பதற்றமில்லாமல் நம்மைத் தேட வைக்கிறது. 

https://cinema.vikatan.com/movie-review/135593-60-vayathu-maaniram-movie-review.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  
  • ( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..!  தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?    கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )   Empfehlung an Parimalam:    "அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?  கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! " 
  • ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா   2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன. கடைசி 180 ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில்  வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.   http://www.puthinappalakai.net/2019/04/19/news/37409
  • அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance  என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket  என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்றும் சமுத்ர ஆகிய போர்க்கப்பல்களுடன் இணைந்து அமெரிக்க போர்க்கப்பல்கள், கரையோர மற்றும் ஆழ்கடல் பயிற்சிகள் என, இரண்டு கட்டங்களாக CARAT-2019 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியின் அடிப்படை நோக்கம், கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதாகும். சிறிய படகுகளை கையாளுதல்,  சுழியோடும் பயிற்சிகள், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சமூக நலன்புரி செயற்பாடுகள், விளையாட்டு, போன்றவற்றின் மூலம், இருதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. 103 மீற்றர் நீளம் கொண்ட USNS Millinocket என்ற, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிவேக போக்குவரத்துக் கப்பல், 2362 தொன் எடையுள்ளது. Arleigh Burke வகையைச் சேர்ந்த நாசகாரி போர்க்கப்பலான, USS Spruance  ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 தொன் எடையும் கொண்ட இந்த நாசகாரியில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளனர். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37415
  • கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். ”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார்.  அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37411