யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Athavan CH

தமிழர்களை கதறக்கதற கொலைசெய்து உடல்களை எரித்தார்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினரும் சிறிலங்கா ராணுவத்தினரும்

Recommended Posts

1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்:

 

https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation

Share this post


Link to post
Share on other sites

இல்லை இல்லை.. காத்தான்குடியில் நிகழ்ந்ததும்.. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றினதும் தான் குற்றம்.. பயங்கரவாதமே தவிர... தமிழர்களை கொல்வது.. அவர்களின் சொத்துக்களை சூறையாடுவது.. அவர்களின் நிலத்தை அபகரிப்பது எல்லாம்.. பயங்கரவாதமே கிடையாது.. என்று சிலர் சட்டம் இயற்றி வைச்சிருக்கிறார்கள்.

அந்த நிலையில்.. இந்த மரணங்கள் மறைக்கப்படும்.. மறக்கப்படுமே தவிர.. அவற்றின் நீதிக்கான குரல் ஒலிப்பது அரிதாகவே இருக்கும்.

ஆழ்ந்த இரங்கல்கள். 

Share this post


Link to post
Share on other sites
On 9/2/2018 at 7:22 AM, nedukkalapoovan said:

இல்லை இல்லை.. காத்தான்குடியில் நிகழ்ந்ததும்.. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றினதும் தான் குற்றம்.. பயங்கரவாதமே தவிர...

அவை பயங்கரவாதம் என்று ஏற்றுகொள்கிறீர்கள், இல்லையா?

On 9/2/2018 at 7:22 AM, nedukkalapoovan said:

தமிழர்களை கொல்வது.. அவர்களின் சொத்துக்களை சூறையாடுவது.. அவர்களின் நிலத்தை அபகரிப்பது எல்லாம்.. பயங்கரவாதமே கிடையாது.. என்று சிலர் சட்டம் இயற்றி வைச்சிருக்கிறார்கள்.

கொலை, படுகொலை, பயங்கரவாதம், போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல் என்ற ஒவ்வொரு சொற்பதத்துக்கும் வேறுவேறான அர்த்தம் உள்ளன. பெரும்பாலானவர்கள் ஒரு சொற்பதத்தை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அந்த சொற்பதம் அர்த்தம் கொள்கிறது.

தனிபட்ட நபர்களுக்கு இடையில் அரசு மற்றும் அரசியல் சம்பத்தப்படாத மரணங்கள் ஏற்படுத்தப்படுவது கொலை மற்றும் படுகொலை ஆகும்.

  1. அரசுக்கு எதிராக செய்யப்படும் நடவடிக்கைகளில் மரணங்கள் ஏற்படுத்தப்படுவது அல்லது அதற்கு முயற்சிப்பது பயங்கரவாதம்.
  2. அரசின் நடவடிக்கைகளில் மரணங்கள் ஏற்படுத்தப்படுவது மனிதஉரிமை மீறல்கள்.
  3. போரின் போது ஆயுதம் ஏந்தாத மக்களுக்கு  மரணங்கள் ஏற்படுத்தப்படுவது  போர்க்குற்றம்.

விடுதலை போராளிகளின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழர்கள் கொல்லப்பட்டது பயங்கரவாதம். உதாரணமாக மாற்று இயக்க போராளிகளை கொன்றது, அரசியல்வாதிகளை கொன்றது என்பவை பயங்கரவாதம்.

அரசபடைகளால் தமிழ் மக்கள் கொல்லபட்டது மனிதஉரிமை மீறல்கள். இவற்றை உலகநாடுகள் உண்மை என்று ஏற்றுக் கொண்ட காரணத்தால் தான் பல லட்சம் தமிழர் உலகம் முழுவதும் அகதிகளாக ஏற்றுகொள்ள பட்டனர்.

இறுதி போரில் மக்கள் கொல்லபட்டது போர்க்குற்றம். இந்த வேறுபாடுகளை புரிந்து கொண்டால் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நீங்களும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.

 

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites

 

அரசியல், சமய, கோட்பாட்டு மற்றும் சமூக அடிப்படையில் வன்முறைகளைக் கையாளுதல் அல்லது எத்தனித்தல் பயங்கரவாதம் என்று கணிப்பிடப்படுகிறது. இது, அரசுகளுக்கு, அரசு சாராத அமைப்புகளுக்கு அல்லது அரசின் முகவர்களாக செயற்படும் தனிநபர் அல்லது குழுக்களுக்கு பொருந்தும். 

ஆக, பயங்கரவாதம் என்பது அரசுகளுக்குப் பொருந்தாது என்று வாதிடுவது சரியல்ல.

போரியலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும், இனவழிப்பு, சரணாளிகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொல்லுதல் போன்ற பல்வேறு வகைப்பட்ட கொடுமைகள் அல்லது குற்றங்கள் போர்க்குற்றங்கள் ஆகும். 

Edited by ragunathan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அரச படைகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது வெறும் மனிதவுரிமை மீறல் என்பதுடன் நின்றுவிடமுடியாது.

அரச பயங்கரவாதம், இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றினுள் இது அடங்குகிறது.

Share this post


Link to post
Share on other sites

புத்தம் சரணம் கச்சாமி....

சங்கம் கரணம் கச்சாமி....
 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ragunathan said:

அரச படைகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது வெறும் மனிதவுரிமை மீறல் என்பதுடன் நின்றுவிடமுடியாது.

அரச பயங்கரவாதம், இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றினுள் இது அடங்குகிறது.

சிங்களவன் தான் படுகொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டாலும் ......

*************************  ஒப்புக்கொள்வது கஷடம். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு