யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
நவீனன்

எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி

Recommended Posts

எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி

 
 

“சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம். சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.”

– இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமஷ்டி தேவையில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என வெளியாகியிருக்கும் கருத்துக்கள் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அவ்வாறு நீங்கள் கூறிய கருத்து உங்களது தனிப்பட்ட கருத்து என்று பங்காளிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனரே? என ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

“இது சம்பந்தமாகத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகம் எங்கள் பங்களிக் கட்சித் தவைர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், என்னிடம் இது குறித்து கேட்கவில்லை. நான் மறுப்பறிக்கை வெளியிட்ட பின்னர் கூட என்னிடம் கேட்கவில்லை. இது மிகவும் துரதிஷ்டவசமான விடயம். அதனைத் தெரிந்துகொண்டு தான் என்னிடம் கேட்வில்லை. ஏனெனில் அதனை என்னிடம் கேட்டால் அதற்கான சரியான விளக்கத்தை நான் கொடுத்து விடுவேன் என்ற காரணத்தால் குழப்பகரமான செய்திகளைப் பிரசுரிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள்.

ஆனாலும், இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக எமது கட்சி அலுவலகத்தில் நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். தெளிவுபடுத்தலை தவறாகப் பிரசுரித்த பத்திரிகைகள் அந்த தெளிவுபடுத்தலை இன்னும் பிரசுரிக்கவில்லை. மாறாக அந்தத் தவறான கருத்தை இன்னமும் வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாத பலர் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது விளக்கத்தில் தெட்டத்தெளிவாகப் பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். சமஷ்டிக் குணாதிசயங்கள் அடங்கிய அரசமைப்புச் சட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்பது எங்கள் நிலையான கொள்கை. சமஷ்டிக் கட்டமைப்பிலான என்று எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

சமஷ்டிப் பெயருள்ள அரசமைப்பு என்று நாங்கள் எங்கேயும் சொன்னது கிடையாது. சமஷ்டி பெயர் இருக்கவேண்டுமா? இல்லையா? என்பது பற்றித் தெட்டத் தெளிவாக எங்கள் மக்களக்குப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களும் இருந்த பல கூட்டங்களிலேயே நாங்கள் இதைச் சொல்லியிருக்கின்றோம்.

முதல் தடவையாக சமஷ்டியைப் பற்றி நான் சொன்ன விடயமல்ல இது. நான் நூறு தடவை பல இடங்களில் பெயர்ப்பலகை தேவையில்லை என்றும், உள்ளடக்கம் தேவை என்றும், சமஷ்டிக் குணாதிசயம் என்ன என்றும் சொல்லயிருக்கின்றேன்.

அப்படியிருக்கையில் பங்காளிக் கட்சித் தலைவர்களோ அல்லது வேறு எவரோ இதை விமர்சிக்கின்றவர்களுக்கு சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உண்டா என்பது எனக்குத் தெரியாது. இடைக்கால அறிக்கையிலே எந்தெந்தப் பக்ககங்களில் அவை முன்மொழியப்பட்டிருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

அந்த இடைக்கால அறிக்கையில் இருக்கிற விடயங்கள் தான் இன்றைக்கு ஒரு வரைவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு குணாம்சங்கள் அந்த வரைவில் இருக்கின்றன. சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது சொன்னால் அதற்குப் பதில் நான் சொல்லாம். ஆனால், சந்தர்ப்பவாதிகளாகத் திடீரென்று யாரோ ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார்கள் என்பதற்காகச் சுமந்திரன் சொன்னால் அது நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுபவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சுமந்திரன் இப்படிச் சொன்னது எழுபது ஆண்டுகளுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்சி வீதி வீதியாக இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொடுத்துக் கொலை செய்த காலங்களில் அப்படிப் பிடிபடாமல் கொழும்புக்கு வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பாராமரித்து வந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் எந்த வேளையிலும் எந்தச் சந்தியிலும் முகமூடி அணிந்து கொண்டு எவரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் இப்போது எனக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவதற்குத் துணிந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் நான் எவரையும் துரோகி என்ற வார்த்தையால் இதுவரை வர்ணித்தது இல்லை. ஆகையால் அவர் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/04/எனது-கருத்தை-விமர்சிப்பவ/

Share this post


Link to post
Share on other sites

 

தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று தனக்குத் துரோகி பட்டம் சூட்டுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

அதானே? யாழில் யாருக்காவது சமஸ்டி பற்றிய முழு அறிவு உண்டா ?

Share this post


Link to post
Share on other sites

முதல்ல உந்த சும்முக்கு அறிவிருக்கா என்பதே கேள்வி. இதில சும் மற்றவர்களைப் பார்த்து கேட்பது வேடிக்கையாக உள்ளது.

அதுசரி... சொய்சாபுரவில்.. அக்கா குடும்பத்துக்கு வீடு வாங்க எங்க இருந்து காசு வந்தது என்பதை முதலில் விளக்கனும்.. உந்தச் சும்மர். 

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, nedukkalapoovan said:

முதல்ல உந்த சும்முக்கு அறிவிருக்கா என்பதே கேள்வி. இதில சும் மற்றவர்களைப் பார்த்து கேட்பது வேடிக்கையாக உள்ளது.

அதுசரி... சொய்சாபுரவில்.. அக்கா குடும்பத்துக்கு வீடு வாங்க எங்க இருந்து காசு வந்தது என்பதை முதலில் விளக்கனும்.. உந்தச் சும்மர். 

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ரதி said:

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

நாங்கள் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றிட்டம். அதை மறிதலித்து.. சமஷ்டி.. நல்லாட்சி.. புரிந்துணர்வு.. பேசிக் கொண்டிருக்கும்.. சும்மிடமே முதலில் அதுக்குரிய விளக்கத்தை வாங்கிக் கொண்டு வரவும்.

அவரின்ட பேர்சனல் கிடையாது. தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து.. தமிழ் மக்களின் உரிமையை விற்று வாங்கின கூலி தான் இப்ப குடும்பச் செழிப்பாகி நிற்கிறது. அதுதான் கேள்வி முளைக்கிறது.?

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றிட்டம். அதை மறிதலித்து.. சமஷ்டி.. நல்லாட்சி.. புரிந்துணர்வு.. பேசிக் கொண்டிருக்கும்.. சும்மிடமே முதலில் அதுக்குரிய விளக்கத்தை வாங்கிக் கொண்டு வரவும்.

அவரின்ட பேர்சனல் கிடையாது. தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து.. தமிழ் மக்களின் உரிமையை விற்று வாங்கின கூலி தான் இப்ப குடும்பச் செழிப்பாகி நிற்கிறது. அதுதான் கேள்வி முளைக்கிறது.?

 

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, ரதி said:

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

முதலில் சமஷ்டி பற்றி முழு அறிவும் உள்ள சும் தான் அதனைப் பற்றி சொல்லனும். அதை முதலில் அவரிடம் விரிவாகக் கேட்டு வந்து சொல்லுங்க. நாங்க அதுக்குப் பதில் சொல்லலாம். இல்லாது.. நமக்கு அவசியமில்லாத ஒன்றுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்.

தமிழீழம் தான் எங்கள் முடிவு. 

தமிழீழம் குறித்து விளக்கம் தேவை என்றால்.. சும் எங்களிடம் கேட்டு அறிவு பெற்றுக் கொள்ளலாம். 

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, நவீனன் said:

 

தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று தனக்குத் துரோகி பட்டம் சூட்டுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி கட்டமைப்பு 
சமஷ்டி பெயர் உள்ள கட்டமைப்பு
சமஷ்டி குணாதிசயங்கள் பற்றிய அறிவு.....இதை வைச்சே இன்னுமொரு 50 வருசத்தை கடத்திடுவியள் மகாபிரபுக்களே.....

தபால்காரன் செய்யுற வேலை இருக்கட்டும்......தமிழனுக்கு நீதி வேணுமெண்டால் கோட்டுச்சூட்டு போட்டுக்கொண்டு கோட்டுக்கு போகோணுமோ....இல்லாட்டி வெள்ளை வேட்டியோடை பாராளுமன்றம் போணுமோ.......இல்லாட்டி முதல்லை பாராளுமன்றம் அதுக்குப்பிறகு கோட்டோ....
எல்லாம் ரூ இன் வண் சிஷ்டம் பாத்தியளோ.....

எல்லாம் காசு...காசு....காசு....காசு....காசு 

Share this post


Link to post
Share on other sites

சம்சும் கும்பலின் அரைவேக்காட்டு அறிவிற்கேற்ப சமஷ்டி என்றால் ஜனநாயக விரோதமாகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்டு, படுகொலைகாரர்களின் கைக்கூலிகளாகவும் இருந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் அழிப்பதற்கும் படுகொலைகாரர்களைக் காப்பாற்றுவதற்கு துணை போவது தான்.

இதைத் தான் தமிழரசுக் கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்ற ஈனப் பிறவிகள் செய்துவருகின்றன. 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

 

Quote

 

பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.


கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி

 

இவ்வாறுதான் இணையத்தில் வரைவிலக்கணம் இருக்கின்றது. 

சிங்களப் பேரினவாதத்துக்கு முன்னால் இவ்வாறான அதிகாரப் பகிர்வு எதிர்பார்ப்புகள் எல்லாம் நடமுறைச் சாத்தியமற்றது. 

Quote

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ரதி said:

 

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 
தேசமுள்ளே நாடு இருந்தால் அது தேசம், ஒற்றையாட்சிக்கு பங்கம் வராமல் அதிகாரம் 
எப்படி என்றால் எதிர்க்கட்சி தலீவர் ,ஜனாதிபதி சட்டத்தரணி, பிராடோ V8, உத்தியோகபூர்வ வாசஸ்தலம் 
இது அனைத்திற்கும் பெயர் தான் சமஷ்ட்டி.  கேட்டுப்பாருங்கோ  உங்கடை சட்டம்பிமார்களிடம் இன்னும் நன்றாக குனியவச்சி குதிரை ஏறுவினம் 
    

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 
தேசமுள்ளே நாடு இருந்தால் அது தேசம், ஒற்றையாட்சிக்கு பங்கம் வராமல் அதிகாரம் 
எப்படி என்றால் எதிர்க்கட்சி தலீவர் ,ஜனாதிபதி சட்டத்தரணி, பிராடோ V8, உத்தியோகபூர்வ வாசஸ்தலம் 
இது அனைத்திற்கும் பெயர் தான் சமஷ்ட்டி.  கேட்டுப்பாருங்கோ  உங்கடை சட்டம்பிமார்களிடம் இன்னும் நன்றாக குனியவச்சி குதிரை ஏறுவினம் 
    

அப்பிடி போடுங்கோ அரிவாளை! ☺️

Share this post


Link to post
Share on other sites
On 9/4/2018 at 5:06 PM, போல் said:

சம்சும் கும்பலின் அரைவேக்காட்டு அறிவிற்கேற்ப சமஷ்டி என்றால் ஜனநாயக விரோதமாகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்டு, படுகொலைகாரர்களின் கைக்கூலிகளாகவும் இருந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் அழிப்பதற்கும் படுகொலைகாரர்களைக் காப்பாற்றுவதற்கு துணை போவது தான்.

 

On 9/4/2018 at 5:53 PM, சண்டமாருதன் said:

சிங்களப் பேரினவாதத்துக்கு முன்னால் இவ்வாறான அதிகாரப் பகிர்வு எதிர்பார்ப்புகள் எல்லாம் நடமுறைச் சாத்தியமற்றது. 

 

On 9/4/2018 at 10:28 PM, அக்னியஷ்த்ரா said:

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 

 

On 9/4/2018 at 12:11 PM, nedukkalapoovan said:

தமிழீழம் தான் எங்கள் முடிவு. 

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

நக்கலும், நளினமும் செய்யும் நீங்கள் சொல்லும் தீர்வான தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது ஏன் இன்னமும் புரியவில்லை உங்களுக்கு?

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம் இல்லை. வேறு தீர்வு வேண்டும் அல்லது மீதம் உள்ள தமிழர் புலம் பெயர்ந்த நாங்கள் கனேடியர், பிரான்சியர், ஜெர்மானியர், அமெரிக்கர் ஆனது போல அங்கே சிங்களவர், முஸ்லிம்கள் ஆகி விடுவார்கள். கனவு காண்பவர்களின் தலைமுறை போக அங்கே கனவும் இல்லை, நனவும் இல்லை என்று ஆகிவிடும். சிங்கள இனமே இப்படி வேறு இனங்களின் கூட்டால் உருவான இனம். அதில் தமிழர் குறிப்படத்தக்க பாகம். ஆகவே மீதம் உள்ள தமிழரை சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆக்க சிறப்பான வழி நெடுக்கரின் கனவு வழி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Jude said:

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

தமிழீழம் என்பது ஈழம் வாழ் தமிழர்களின் தேசிய விருப்பு. அந்த விருப்புக்கு அவர்கள் வரலாற்று ரீதியான உரித்துடையவர்களும் கூட. அதனை கேட்டு பலரும் பல வடிவங்களில் காலனித்துவம் உருவாக்கி கையளித்த.. சிங்கள தேசத்திடம் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. இருந்தார்கள்.

அதில் தேசிய தலைவர் பிரபாகரன்.. பிரதானமாக இருந்தார். அவர் பெற்றுத் தந்த தமிழீழத்தை காப்பாற்றாமல் விட்டதில்.. நீங்களும் எல்லோரும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். ஏன் சம் சும் கும்பல் கூட.

தமிழீழம் இன்றும் இருக்கிறது. ஆனால் அது அடுத்தவரின் கையில் இருக்கிறது. அது எமது கைக்கு வரவேண்டின்.. காலத்தேவைக்கு ஏற்ப வடிவங்களை மாற்றி எமது குரலை சர்வதேச அரங்கில் ஓங்கச் செய்வதன் ஊடாகத்தான் விடுவிக்க முடியும். அதற்கு பரந்தபட்ட ராஜதந்திர நகர்வுகளும் விடா முயற்சியும்.. சோர்ந்து விடும் தன்மைகள் அற்ற உறுதியும் தேவை.

சம் சும் கும்பல் போல.. துகில் உரியும்..நாட்டியக்காரிகள் ஆடைகளைவது போல.. ஒவ்வொன்றாய் அவிழ்த்தெறிந்துவிட்டு.. அதாவது விட்டுக்கொடுத்துவிட்டு.. இறுதியில் அம்மணமாய் நிற்க தமிழர்கள் எனியும் தயார் இல்லை. 

பிரபாகரன் ஆயுத்தால் பெற முயன்றதை எனி அரசியலால்.. முயன்று வெல்ல வேண்டும். அதற்கான களம் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. அதை.. இனங்காணத் தவறவது உங்கட பிரச்சனையே தவிர..

சம் சும் கும்பலால்.. தமிழ் மக்களுக்கு சிங்களவனிடம் இருந்து.. ஒரு பிடி மண்ணைக் கூட சுதந்திரமாக வாங்கித்தர முடியாது. அவர்கள் அரசியல் எப்பவோ தோற்றுப் போய்விட்டது. ஆனால்.. பிரபாகரனின் ஆயுதங்கள் ஆதிக்க சக்திகளால் மெளனிக்கப்பட்டிருக்கலாம்..  அதற்காக தமிழீழம் என்ற தமிழ் மக்களின் நியாயமான தார்மீகமுள்ள.. வரலாற்று நில உரிமையை.. அரசியலை யாரும் கைவிட முடியாது. கைவிட்டதாகவும் தெரியவில்லை.

உங்களைப் போன்ற சிலர் காலத்துக்கு காலம் சூழ்நிலைக்கு சூழ்நிலை எழும்.. துகில் உரியும் நாட்டியக்காரிகளுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருப்பது போல.. தமிழீழம் என்பது கிடையாது. அது பிரபாகரனின் கோரிக்கை மட்டுமானதல்ல. மொத்த தமிழினத்தினதும் பெரு விருப்பாகும். அது கைவிடப் பட முடியாத ஒன்று. ☺️

Edited by nedukkalapoovan
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தந்தை செல்வா காலத்திலும் தமிழீழம் அவரின் கனவு.. என்று தான் சொல்லி உங்களின் மூதாதைகள் சில எள்ளி நகையாடின. இறுதியில் அவர்களே.. இரத்தத்திலகம் இட்டு அதனை கோரிக்கையாக்கி தமிழ் மக்களின் முன் வட்டுக்கோட்டைப் பிரகடனமாக்கி.. தேர்தல் அரசியலாக்கினர். அதையே பின் பிரபாகரன்.. தமிழீழத்தில் அந்நியரின்.. ஆக்கிரமிப்பை ஆயுதம் மூலம் அகற்றி.. அதற்கான விடுதலையை சாத்தியப்படுத்த முனைந்தார். அதில் அவர் நிழல் தமிழீழ அரசையும் உருவாக்கிக் காட்டினார்.. இந்த உலகின் முன்.

ஆனால் அதை காப்பாற்றத் தவறியதில்.. எம்மவரின் காட்டிக்கொடுப்புகளும் சுயநலமும் பிரதானமாக இருந்ததே தவிர.. எல்லோரும் ஒற்றுமையாக தேசிய தலைவரின் பின்னால் நின்றிருந்தால்.. இன்று சர்வதேசமே அதை முன்மொழிந்து.. பெற்றுத்தந்திருக்கும். அந்தச் சந்தர்ப்பங்களை தவற விட்டத்தில் சம்பந்தன் முதலான சந்தர்ப்பவாத.. எஜமான விசுவாச.. சுயநல தோற்றுப் போன அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் முதன்மையானவர்கள்.  இன்று தமிழ் மக்கள் அந்த வியாதிகளை நம்பி வாக்குப் போடும் நிலை இருப்பது தான் கேவலமாக உள்ளது. இன்றும் அந்த வியாதிகள் திருந்தவில்லை.. மாறாக வியாதி முத்தி திரியுதுங்கள். நீங்கள் சிலர் அதுகளின் வியாதி பெருக.. ஊதிக் கொடுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.. அவ்வளவே. ?

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

தமிழீழத்தையும், புலிகளையும் தமிழன் கைவிட்டாலும் சிங்களவன் கைவிடமாட்டான். தமிழனுக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது எனப் போராடிய ஒரு போராட்டத்தில் தமிழீழச் சின்னம் கொண்ட உடைகளை அணிந்தே போராடினார்கள். 

Share this post


Link to post
Share on other sites

அறிவாளி சுமந்திரன் வாழ்க சிங்களனின் அல்லக்கை சுமந்திரன் வாழ்க

இவர் என்ன சொல்லுறார் எண்டால் கொழும்பு இந்துக்கல்லூரியில் பொடியளை வைத்துப்பராமரித்தவராம் யார் இதயெல்லாம் காணப்போகிறார்கள் அப்படிச்செய்தார இல்லைய என்பதற்கு எதாவது சாட்சி என்ன என யாரும் கேதமாட்டார்கள் ஆனால் சுமந்திரன் சொன்னால் நம்புங்கோ

நானும்தான் தேசியத்தலைவர் குடும்பத்தை சுவீடன் பின்லாந்து எல்லையிலுள்ள ஒரு கிராமத்தில் அகதி முகாமில் பராமரித்தேன் என ஒருத்தரும் நம்புகினமில்லை. இதுக்குத்தான் நாலு ஆங்கிலம் தெரியவேணுமெண்டுறது. 

Share this post


Link to post
Share on other sites

   அதானே சட்டம் , அரசியல் யாப்பு .. நன்கு கரைத்து குடித்த லோயர்மாரை மட்டுமே தேர்தலில் நிறுத்தவேணும் . ?மக்களுக்கு சேவை செய்ய எண் ணம் கொண்ட  மீதம் உள்ளோர்  பின்வாசல் ( back door ) வழிவர வேண்டும் ?

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ் எனக்கு உங்கள் மேல் அதீத கோபம் என்று வைத்துக் கொள்வோம்...ஆனாலும்,நீங்கள் சொல்கிறீர்கள் ஒரு நாளைக்கு  இரு தடவை பல் தீட்டுவது நல்லது  என்று? ...உங்கள் மேல் கோபம் என்பதற்காக நான் நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு தரம் பல்லு தீட்டாமல் இருப்பதா ?

யார் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை...அவர்கள் என்ன சொல்கிறார்கள்/செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்...நீங்கள்,நான்  உட்பட இங்கு யாழில் எழுதும் ஒருத்தருக்கும் கூட சமஸ்டி என்டால் என்னவென்று தெரியவில்லை...சுமத்திரன் சொல்கிறார் என்பதற்காக எதிர்க்கிறீர்கள்...ஒன்றை ஆதரிப்பதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ அது பற்றி நன்கு விடயம் தெரிந்திருக்க வேண்டும்.

சுமாத்திரனோ அல்லது கூட்டமைப்போ தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை...ஆனால் அவர்கள் தங்கள் திட்டத்தை முன் வைக்கும் முன்னரே தமிழராகிய நீங்கள் எதிர்த்தால் அவர்கள் தப்பிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாய் போய் விடும்.


அவர்களால் முடிந்த சமஸ்டி மூலம் தீர்வு பெற்றுத் தருகிறோம் என்கிறார்கள்...அவர்கள் அதற்கு முயற்சி செய்யட்டும்...தமிழராகிய நீங்கள் இங்கேயிருந்து கொண்டு தமிழீழம் பெற்றுக் கொடுங்கள்.

 

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, nunavilan said:

 

"நான் அரசியல்வாதியாக வருவதற்கு என்ன செய்யவேண்டும்" என்று  பிரிட்டன் பிரதமரான தலைசிறந்த இராசதந்திரி வின்சன் சர்ச்சில் அவர்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டபொழுது "நீ தவறாகப் பேசியவற்றை, செய்தவற்றை சரி என்று நிறுவிவிடக்கூடிய திறமை உன்னிடம் இருக்குமானால் நீ அரசியல்வாதி" என்று கூறினாராம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரதி, உங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால், இங்கே வாசிப்பவர்கள் கொஞ்சம் புரிந்துகொள்ள இதனை எழுதுகிறேன்.

சமஷ்ட்டி அமைப்பிலான அரசியல் என்பது, இரு தன்னாட்சி அதிகாரமுள்ள அரசுகளுக்கிடையே பங்குபோடப்படும் அரசியல் அதிகாரமாகும். இந்த இரு தன்னாட்சி அதிகாரமுள்ள அரசுகளில் ஒன்று தேசிய அளவில் செயற்பட, மற்றைய தன்னாட்சி அதிகாரமுள்ள அரசு மாநில அளவில் செயற்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பிற்கு அமைவாக பகிரப்படும் அதிகாரங்கள், தேசிய அரசுக்கு நாடு முழுவதற்குமான அதிகாரத்தை வழங்கும் அதேவேளை, மாநில அரசு தனது மாநிலத்தில் சுதந்திரமாக தனது அதிகாரத்தைச் செலுத்த வகை செய்யும்.

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Jude said:

 

 

 

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

நக்கலும், நளினமும் செய்யும் நீங்கள் சொல்லும் தீர்வான தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது ஏன் இன்னமும் புரியவில்லை உங்களுக்கு?

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம் இல்லை. வேறு தீர்வு வேண்டும் அல்லது மீதம் உள்ள தமிழர் புலம் பெயர்ந்த நாங்கள் கனேடியர், பிரான்சியர், ஜெர்மானியர், அமெரிக்கர் ஆனது போல அங்கே சிங்களவர், முஸ்லிம்கள் ஆகி விடுவார்கள். கனவு காண்பவர்களின் தலைமுறை போக அங்கே கனவும் இல்லை, நனவும் இல்லை என்று ஆகிவிடும். சிங்கள இனமே இப்படி வேறு இனங்களின் கூட்டால் உருவான இனம். அதில் தமிழர் குறிப்படத்தக்க பாகம். ஆகவே மீதம் உள்ள தமிழரை சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆக்க சிறப்பான வழி நெடுக்கரின் கனவு வழி.

 

இதுவரைக்குமான வரலாற்றில் சிங்களப் பேரினவாதம் பஞ்சாயத்து அதிகாரமளவுக்கு கூட தமிழர்களுக்கு தர மறுக்கின்றது. தர விரும்பவும் இல்லை. அதனாலேயே இவைகளை நடமுறையில் சாத்தியமற்றது என்கின்றோம்.

பிரபாகரனால் தமிழீழம்  முடியாமல் போனதற்கு பிரபாகரன் பொறுப்பல்ல. பிரபாகரன் மேல் பழிபோட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியமாக முடியாது. 

நேற்றய அமிர்தலிங்கம் வகையறாக்கள் இன்றய சம்மந்தன் விக்கி சுமந்திரன் வகையறாக்கள் ஒட்டுமொத்த இனத்துக்குமான பொதுத் தலமைகள் இல்லை. இவர்கள் இந்த இனத்தின் வரக்க ஆதிக்கத்தில் இருந்து முளைப்பவர்கள். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போன்று சிங்களப்பேரினவாதத்துக்கும் தமிழ்தேசியவாதத்துக்கும் இடையில்  அரசியல் நடத்துபவர்கள். இவர்களால் உறுதியாக ஒன்றை சிங்களத்திடம் கேட்கவும் முடியாது கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணத்திற்கு சமஷ்டி அதிகாரத்தை கோரி மக்களை திரட்டி ஒரு பேரணி, உண்ணாவிரதம் அல்லது ஏதாவது ஒரு முயற்சி செய்ய முடியாது. தீர்வு கிடக்கட்டும், போரால் பாதிக்கப் பட்ட பல்வேறு பட்ட மக்களின் தேவைக்காக, காணாமல் போனவர்களுக்கா ஒரு அடயாள எழுச்சியை செய்யவும் முடியாது. இவர்கள் மக்களை விட்டு தாங்கள தனித்தனியாக கதைத்துபேசி ஏதோ ஒரு அதிகாரத்தை பெறப்போவதாக சொல்வார்கள் அல்லது அடுத்தாண்டுக்குள் தீர்வு அல்லது இரண்டு ஆண்டுகளில் தீர்வு என்று அறிக்கை விடுவார்கள். சுருக்கமாக இவர்களின் முயற்சி மக்களில் இருந்து தொடர்பின்றி தனிமனிதர்களினதாக இருக்கும். அதில் வலுவும் இருக்காது சிங்களமும் சரி உலகும் சரி அதை பொருட்படுத்தவும் மாட்டாது.. 

கசந்தாலும் இவர்கள் எம்மினத்தின் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. எம்மினத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். அடயாள அந்தஸ்த்து தேடுபவர்கள் அல்லது தக்கவைக்க முனைபவர்கள். புலம்பெயர் நாடுகளிலும் இவற்றை அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபட முனைகின்றார்கள். இவர்களது அரசியலும் அணுகுமுறையும் வேறு மக்கள் விடுதலையும் அதற்கான முயற்சி அணுகுமுறையும் வேறானது. இவர்களது போன தலமுறையும் சரி இந்த தலமுறையும் சரி இனிவரும் தலமுறைகளும் சரி மாநில சுயாட்சி சமஸ்டி வடகிழக்கு இணைப்பு.. அதிகாரப்பகிர்வு என்பவற்றைப் பற்றி கதைத்துக்கொண்டே இருப்பார்கள்... அதுவே இவர்களது அரசியல் எல்லை. 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு