Sign in to follow this  
நவீனன்

தமிழ் மக்கள் மனத்திலே ஆறாத ரணமாய்ப்போன வந்தாறுமூலைப் படுகொலை!

Recommended Posts

தமிழ் மக்கள் மனத்திலே ஆறாத ரணமாய்ப்போன வந்தாறுமூலைப் படுகொலை!

 

 
 

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. 1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர்.

பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது."ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்தவர்களை அழைத்து விசாரணைகளை மேற் கொண்டனர் அந்த விசாரணையில்,

யார் யார் இங்கு இருப்பதாக மக்களிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நாம் என மக்கள் பதிலளித்துள்ளனர். இராணுவத்தினர் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. மக்களை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 158 இளைஞர்களை தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள்.

உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அவ் வளாகத்தில் இருந்தவர்கள் சேகரித்தார்கள். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர். அதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிருஸ்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்ன, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 26 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

https://www.ibctamil.com/history/80/105620?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

ஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 28 ஆண்டுகள்!!:

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..

Vantharumoolai.jpg?resize=600%2C450

 

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது.

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

“ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”

மூடப்பட்ட அகதிமுகாம்

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள்

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 28 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/2018/94301/

Share this post


Link to post
Share on other sites

கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான்- இவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விகளை காணாமல் போனவர்களின் உறவுகள் எழுப்பியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல படுகொலைகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்திருந்த ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்பதை கடந்த காலங்களில் நடந்த பல விசாரணைகளின் மூலம் ஏற்கனவே கண்டறிந்த அரசாங்கங்கள் அந்த குற்றவரிகளை இன்றுவரை தண்டிக்கவில்லை.

இதற்கான சாட்சியாக கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் நடந்த விசாரணை அறிக்கைகளை கூறலாம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்று நடந்தது என்ன?

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேர் குறித்தும் அதன்பின்னர் கைது செய்யப்பட்ட 26 பேர் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்ட “வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்களே இம்மாவட்டத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய கைதிகளை கொண்ட குழுவாகும். இக் கைதுகள் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 மற்றம் 23 திகதிகளில் நடைபெற்றன.

முதலாம் நாள் 158 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டாம் நாள் 16 பேர் சிறையில் வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் என கருதப்பட்ட 158 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இவ்வாணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட 158 பேரில் 92 பேர் காணாமல் போனதை 83 சாட்சிகள் நிறுபித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கைதில் காணாமல் போன 16 பேரில் 10 பேருக்கான சாட்சியங்களும் கொடுக்கப்பட்டன.

சாட்சிகளின் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டு யூலை மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 45000 மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவ் அகதிமுகாமானது பேராசிரியர் மனோ சபாரெட்ணம் டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் திரு.வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அந்தக்காலப்பகுதியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஆதரவும் வழங்கப்பட்டது.

1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி காலை 6மணிக்கு கொம்மாதுரை இராணுவமுகாமில் இருந்த இராணுவத்தினர் வேறு சில முகாமில் இருந்த இராணுவத்தினருடன் இ.போ.ச பஸ்வண்டியில் கிழக்குப் பல்கலைக்கழக வளவினுள் நுழைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளைவான் வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் அகதிகள் அனைவரும் மூன்று வெவ்வேறு வரிசையில் நிற்குமாறு வேண்டப்பட்டனர்.

12 லிருந்து 25 வயதுவரையானோர் முதலாவது வரிசையிலும், 26 இல் இருந்து 40 வயதானோர் இரண்டாவது வரிசையிலும், 40 வயதிற்கு மேற்பட்டோர் மூன்றாவது வரிசையிலும் நிற்குமாறு வேண்டப்பட்டதுடன் இம் மூன்று வரிசையில் உள்ளவர்களை குறிப்பிட்ட இடம் ஒன்றை கடந்துசெல்லுமாறு வேண்டப்பட்டனர்.

அந்த இடத்தில் முகமூடி அணிந்து இராணுவ உடை அணிந்த ஐந்துபேர் கதிரையில் அமர்ந்திருந்தனர். முகமூடி அணிந்தவர்களுக்குப் பின்னால் ஏழு முஸ்லீம்கள் நின்றுகொண்டிருந்தனர். முகமூடி அணிந்தவர்கள் சைகை காட்டும் வேலையில் வரிசையில் இருந்த மக்கள் வேறொரு பக்கத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கை முடிவுற்றதும் வரிசையில் இருந்து இழுத்தெடுக்கப்பட்ட 158 பேரும் அவர்களது உறவினர்களால் காட்டப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் இராணுவத்தினரால் இழுத்துச்செல்லப்பட்டு இ.போ.ச பஸ்வண்டியில் ஏற்றி கொண்டுசெல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

“வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையானது கிழக்கப்பல்கலைகழகத்தில் நடந்த கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் என பின்வரும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இக்கைதுகள் ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த இராணுவத்தினரின் உதவிகளுடன் கொம்மாதுறை இராணுவமுகாமினால் செய்யப்பட்டதற்கும் பின்வரும் இராணுவ உத்தியோகத்தர்களே இச்செயலை புரியவைத்தார்கள் என்பதற்கும் சாட்சியம் இருந்தது.

கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான் ஆகியோரே கிழக்குப் பல்கலைகழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கைதுகள் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அதாவது 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி கிழக்குப்பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு வருகைதந்த றெஜி டீ சில்வா தமது பொறுப்பில் எடுத்துச்செல்லப்பட்ட 158 பேரும் குற்றவாளிகள் என்று அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த உத்தியோகத்தர்களிடம் கூறியதற்கு சாட்சிகள் இருந்தது. எனினும் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பதனைக் கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அத்துடன் அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை தருமாறு கேட்டதற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை என்பதற்கும் சாட்சிகள் உண்டு.

சமாதானக் குழுவின் செயற்பாடுகள்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக்காலப்பகுதியில் செயற்பட்ட சமாதானக் குழு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களை மீட்பதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்திருந்தது.

1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமாதானக் குழுவின் தலைவராகிய திரு.தளையசிங்கம் அருணகிரிநாதன் அவர்கள் அப்போதைய விமானப்படைத் தளபதியாக இருந்த திரு. ஏ.டபிள்யூ.பெர்ணான்டோ அவர்களின் ஊடாக பாதுகாப்பு படையினருக்கு காரியதர்சியாக இருந்தவரிடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றார்.

அதில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதியன்று கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் இருந்து ஆக 32 பேரே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் 24 மணிநேரத்திற்குள்ளேயே விடுவிக்கப்பட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சாட்சியத்தில் வெளியாகியுள்ளது. அக் கடிதத்தில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 32 பேரின் பெயர்பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் அதில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட எவரும் குறித்த அகதிமுகாமிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ திரும்பவில்லை என்றும் அவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்த்துப்போன உள்ளக நீதிப் பொறிமுறைகள்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உள்நாட்டுப் பொறிமுறைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன்பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரினால் உருவாக்கப்பட்ட பாலகிட்ணன் ஆனைக்குழு உட்பட மனிதவுரிமை இல்லத்தினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் அந்தக்காலப் பகுதியில் சமாதானக்குழுவுடன் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அது விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் பல சாட்சியங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில். சம்பவத்திற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீதி மன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாக குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக இந்தச் சம்பவம் குறித்து உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துவகையான விசாரணைகளும் நீதிமன்ற செயற்பாடுகளும் பொய்த்துப்போயுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இன்நிலையில் ஏற்கனவே விசாரணைகள் மூலம் உண்மைகளை கண்டறிந்த சம்பவங்கள் குறித்து காணாமல் போனோர் அலுவலகம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்பது எந்தவகையில் நியாயமானது என்பதுடன் அது எந்தவகையில் சாத்தியப்படப்போகின்றது என்ற கேள்விகளும் எழவே செய்கின்றது.

குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நடாத்துவது என்பது உண்மைகளை கண்டறிய உதவுவதற்கு பதிலாக உண்மைகள் மறைப்பதற்கே உதவும் என்பது இதற்காக உழைத்தவர்களின் வாதமாக உள்ளது.

ஏற்கனவே இதற்கு சாட்சியாக இருந்தவர்கள் பலர் இறந்துபோயுள்ளனர். இதற்கு காரணமானவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தெரியாது இன்நிலையில் இது குறித்து மீண்டும் விசாரணைகளை மேற்கொள்வதொன்பது காலத்தை வீனடித்து உண்மைகளை இல்லாமல் செய்வதற்கு சமனானதாக அமைந்துவிடும்.

எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டு குறித்த சம்பவங்களுக்கான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை வெளியிடவேண்டியது காணாமல்போனோர் அலுவலகத்தின் பணியாக அமையவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்!

 

கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு அன்று பொறுப்பாக இருந்தவரும் தற்போது அதே பல்கலைகழகத்தின் உபவேந்தராக உள்ளவருமான பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்கள் 26 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து மீண்டும் தனது கருத்தை பதிவுசெய்யும் போது பின்வருமாறு கூறினார்.

இன்று கானாமல் போனோர்கள் பற்றி அரசாங்கம் மிகவும் சிறப்பான முன்னெடுப்போன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை திறந்தது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அவற்றின் செயற்பாடுகள் என்பது எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? என்பதை நாம் விமர்சித்துக்கொண்டே போகலாம் எதுவும் நடக்கலாம் எதுவும் நடக்காது என்று கூட கூறலாம் ஆனால் இது ஒரு முதல் படி என்ன நடக்காது என்று நாம் 28 வருடங்களுக்கு முன்னர் கூறினொமோ அது தற்போது நடந்துள்ளது.

அடுத்து நிலைமாறுகால நீதி அது இன்று ஒரு எடுகோளாக வந்துள்ளது. அவற்றில் நான்கு அம்சங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது உண்மையை கண்டறிதலாகும். எந்தவோரு செயற்பாட்டிற்கும் மிக முக்கியமானது உண்மையை கண்டறிவதாகும். உண்மையை கண்டறிந்ததன் பின் அதனை எதற்கு பாவிக்கின்றோம் என்பது யாருக்கும் வித்தியாசப்படலாம்.

அவை நல்லிணக்கம் தண்டணைவழங்கள், மீளநிகழாமை, இழப்பீடுவழங்கள்; என எதற்கும் பாவிக்கலாம் அது பின்னர் நாம் யோசிக்கவேண்டியது. ஆனால் எல்லோருக்கும் விசேடமாக தங்களது உறவினர்களை தொலைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிவதற்கான சட்டரீதியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதன் ஊடாக நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக தேடித்தேடி அலைந்து கஸ்டப்பட்டதற்கான ஒரு பலனை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் என நான் கருதுகின்றேன் என்றார்.

கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அனுமதி மறுப்பது ஏன்?

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இன்று 05.09.2018 கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை அனுஸ்டிப்பதற்கு கிழக்குப்பல்கலைகழக நிர்வாகம் அனுமதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களை காணாமல் போனவர்களின் உறவுகள் முன்வைத்துவருகின்றனர்.

கடந்த காலங்களில் கூட தாங்கள் வீதியில் உள்ள ஒரு மின்சாரத் தூணில் விளக்கு வைத்தே நினைவு கூர்ந்ததாகவும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு அமைவாக இம்முறையாவது கிழக்குப்பல்கலைகழக வளாகத்திற்குள் காணாமல்போனவர்களுக்கான நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் பல்கலைகழகத்திற்கு வெளியே அதனை அனுஸ்டித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்நிலையில் இதற்கான நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கும் இடம் ஒதுக்கித்தரப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் என பலர் கடந்த பல வருடங்களாக முன்வைத்துவந்த நிலையில் அதனை பல்கலைகழக நிர்hகம் நிராகரித்தே வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தங்களது உறவினர்களை ஏற்றிச் சென்றதை நேரில் கண்ட சாட்சி என்பதுடன் அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதி முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும் மீண்டு 28 வருடங்களுக்கு பிறகாவது உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும் என்பதோடு அங்கும் இங்குமாக அலைந்து திரியும் இம்மக்கள் ஒரு இடத்தில் கூடி தங்களது உறவுகளை நினைவு கூறுவதற்கு நல்லாட்சி அரசாங்கமும் கிழக்கப்பல்கலைகழக நிர்வாகமும் அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிதர வேண்டு என்பதே அனைவரினது வேண்டுகோளாகவுள்ளது.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Sethu அவர்களால் வழங்கப்பட்டு 05 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Sethu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.ibctamil.com/articles/80/105699

Share this post


Link to post
Share on other sites

இந்த நாள் எனக்கு நன்கு நினைவிலிருக்கிறது.

புனித மரியாள் விடுதியில் நானும், இன்னும் 40 நண்பர்களும் தங்கியிருந்தோம். வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு புளியந்தீவில் வேலை பார்த்தும் வந்த பாலக்குமார் (பால்ராஜ் ஆகக் கூட இருக்கலாம்) என்னும் இளைஞர் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தார். மிகவும் நட்பாக அனைவருடனும் பழகும் அவர், எமக்கு அவ்வப்போது கற்றலிலும் உதவியிருக்கிறார்.

மட்டக்களப்பில் புலிகளுடன் ராணுவம் மோதத்தொடங்கியிருந்த காலத்திலிருந்து, தனது வீட்டிற்குப் போக முடியாமல் எமது விடுதியிலேயே தங்கியிருந்தார்.

கிரான் பகுதியில் ராணுவ முகாமை புலிகள் தாக்கியிருந்த காலமென்று நினைக்கிறேன், அப்பகுதியிலிருந்து பெருமளவிலான மக்கள் வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அண்ணன், பாலகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கிருப்பதாக செய்தி வரவே, அவர் மிகவும் துன்புற்றிருந்தார். "எனது குடும்பம் கஷ்ட்டப்பட்டுக்கொண்டிருக்க, நான் இங்கே சுகமாக இருக்கமுடியாது. நானும் அவர்களுடன் சென்று இருக்கப்போகிறேன் " என்று சொல்லிக்கொண்டிருந்தார். 
சொல்லியவாறே ஒருநாள் இன்னொரு நண்பரையும் கூட்டிக்கொண்டு சைக்கிளில் உட்பாதைகள் வழியாக வந்தாற்மூலைப் பலகலைக் கழகத்திற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து, தான் சேமமாக வந்துசேர்ந்துவிட்டேன், எனது குடும்பத்துடன் இணைந்துவிட்டேன் என்று செய்தியொன்றையும் அவர் அனுப்பியிருந்தார். அதுதான் நாங்கள் அவரிடமிருந்து பெற்ற கடைசிச் செய்தி.

சில நாட்களின் பின்னர் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தவர்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என்று குறைந்தது 156 பேர் அரச படைகளாலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் கூட்டிச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. பாலக்குமார் அண்ணன் தப்பியிருப்பார் என்று நாங்கள் எல்லோரும் வேண்டிக்கொண்டிருக்க, இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரும் ஒருவர் என்கிற செய்தி வந்து சேர்ந்தது. தனது குடும்பத்துடன் இருக்கவேண்டும் என்கிற ஆசையில் அங்குசென்று தனது வாழ்க்கையை சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் பறிகொடுத்து கொல்லப்பட்டு இன்றுவரை அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்ட பாலகுமார் அண்ணாவுக்கும், அவருடனேயே கூட்டாகக் கொல்லப்பட்டுக் காணாமல்ப் போகச் செய்யப்பட்ட அனைவருக்கும் எனது இரங்கல்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தயவுசெய்து செய்திகள் எழுதும்போது 
தமிழர்கள் படுகொலை என்று எழுதாதீர்கள்

அது சில தமிழரின் மனதை புண்படுத்துகிறது 

சிங்கள காடை இராணுவம் செய்தது 
முஸ்லீம் காடைகள் செய்தவை படுகொலைகளுக்குள் வாராது 

புலிகள் செய்தால்தான் அது படுகொலை பயங்கரவாதம் 

அவர்கள் செய்தால் .... 
தமிழர்கள் மீது இலேசாக வீழ்ந்த மெல்லிய கீறல் 
அப்படி ஏதாவது எழுதுங்கள்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this