• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்!

Recommended Posts

ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்!

 

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை.

மெஸ்ஸி

2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு இவ்விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, குரோஷியாவின் லூக்கா மோட்ரிச், எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்று வந்த மெஸ்ஸி இம்முறை இல்லாதது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ரெனால்டோ

ரொனால்டோ வழக்கம்போல் தன் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி இம்முறையும் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார், ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் அவரின் ஹாட்ரிக் கோல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அடித்த 15 கோல்கள் ரியல் மாரிட் அணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் பெற வைத்தது.

 

 

மோட்ரிச் இம்முறை ரொனால்டோவோடு இணைந்து கோல் மழை புரிந்து ரியல் மாரிட் அணியில் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் தனது அசாத்திய ஆட்டத்தால் குரோஷியாவை ஒற்றை ஆளாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

முகமது சாலாவின் ஆட்டம் உலகக் கோப்பையில் சற்று குறைவாக இருந்தாலும் லிவர்பூல் அணிக்காக அவர் சாம்பியன்ஸ் லீக்கில் ஆடிய ஆட்டம் அவரை இங்கு அழைத்து வந்துள்ளது. இந்த வீரர்களின் வரிசையில் இம்முறை அதிகம் சோபிக்காத மெஸ்ஸிக்கு வாய்ப்பு கிடைப்பது சற்றே குறைவுதான் எனக் கால்பந்து விமர்சகர்கள் பலர் முன்னரே தெரிவித்திருந்தனர். அதிகம் பரபரப்பை உண்டாக்கிய ஃபிஃபா அவார்டஸின் இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இம்முறையும் ரொனால்டோ வென்றால் ஆறாவது முறையாக வென்ற சாதனையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/135853-fifa-awards-final-list-announced.html

Share this post


Link to post
Share on other sites

பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி

fifa-awards-2018-696x464.jpg
 

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐந்து முறை பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, இம்முறை விருதுக்கான முதல் மூன்று இடங்களுக்கு வருவதற்கு தவறியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிக்கத் தவறுவது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

 

 

பிஃபாவினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு தசாப்தமாக உலகக் கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ இருவரில் உயரிய விருதில் இருந்து மெஸ்ஸி விடுபட்டிருக்கும் நிலையில் அந்த விருதை ஆறாவது முறையாக வெல்லும் போட்டியில் 33 வயதுடைய ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் கடந்த மே மாதம் 100 மில்லியன் யூரோவுக்கு ஜுவண்டஸ் அணியில் ஒப்பந்தமானார்.

ரொனால்டோவின் முன்னாள் ரியல் மெட்ரிட் சக வீரரான லூகா மொட்ரிக்கும் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு அவருடன் போட்டியிடுகிறார். பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணி வீரரான மொட்ரிக் உலகக் கிண்ண தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.

எகிப்து முன்கள வீரரான மொஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களைப் போட்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை லிவர்பூல் அணியால் முன்னேற முடிந்தது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (UEFA) ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ மற்றும் சாலாஹ் ஆகியோரைத் பின்தள்ளி மொட்ரிக் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்று தங்கப்பாதணி விருதை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான 10 வீரர்கள் பட்டியலில் இருந்தபோதும் அவரால் இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியவில்லை.

உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த விருதை வெல்லும் போட்டியில் குரோஷியாவின் ஸ்லாட்கோ டலிக் மற்றும் முன்னாள் ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினடின் சிடேன் உள்ளனர்.

 

சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனைக்கான இறுதிப் பட்டியலில் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லியோன் அணியின் டுவோ அடா ஹகர்பேர் (நோர்வே), ஜெர்மனியின் செனிபர் மரொசான் மற்றும் பிரேசில் முன்கள வீராங்கனை மார்டா இடம்பெற்றுள்ளனர்.

பல்லோன் டிஓர் விருதுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விலகிக் கொண்ட நிலையில் இந்த விருது தனியாகவே இடம்பெறுகிறது.

பிஃபாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஒவ்வொரு விருதுக்கும் 10 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்திருந்தது. தேசிய அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை தேர்வுசெய்யவுள்ளனர்.

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக ரொனால்டோ தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகள் கிக்’ (Bicycle kick) மற்றும் கரெத் பேல் லிவர்பூலுக்கு எதிராக தலைக்கு மேலால் உதைத்துப் பெற்ற கோல்கள் சிறந்த கோலுக்கான 10 பரிந்துரைகளில் உள்ளன. இதில் வெற்றி கோல் ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.

பிஃபா விருதின் வெற்றியாளர்கள் லண்டனில் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளனர்.

சிறந்த வீரர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜுவண்டஸ் மற்றும் போர்த்துக்கல்

லூகா மொட்ரிக் – ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷியா

மொஹமட் சலாஹ் – லிவர்பூல் மற்றும் எகிப்து

சிறந்த வீராங்கனை

டுவோ அடா ஹகர்பேர் – லியோன் மற்றும் நோர்வே

செனிபர் மரொசான் – லியோன் மற்றும் ஜெர்மனி

மார்டா – ஓர்லாண்டோ பிரைட் மற்றும் பிரேசில்

ஆடவர் பயிற்றுவிப்பாளர்

ஸ்லாட்கோ டலிக் – குரோஷியா

டிடியர் டிஸ்சம்ப்ஸ் – பிரான்ஸ்

சினடின் சிடேன் – முன்னாள் ரியல் மெட்ரிட்

பெண்கள் பயிற்றுவிப்பாளர்

ரெய்னால்ட் பெட்ரோஸ் – லியோன்

அசாகோ டககுரா – ஜப்பான்

சரினா விக்மன் – நெதர்லாந்து

 

கோல்காப்பாளர்

திபோட் கோர்டொயிஸ் – ரியல் மெட்ரிட் மற்றும் பெல்ஜியம்

ஹூகோ லொரிஸ் – டொட்டன்ஹாம் மற்றும் பிரான்ஸ்

கஸ்பர் ஷிமைக்கல் – லெய்சஸ்டர் மற்றும் டென்மார்க்

ரசிகர் விருது

பேரு ரசிகர்கள்

ஜப்பான் ரசிகர்கள்

செபஸ்டியன் கரேரா (டிபோர்ட் புர்டோ மொண்ட், சிலி)

புஸ்கா விருது (சிறந்த கோல்)

கரேத் பேல் (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

டெனிஸ்செரிஷேவ் (ரஷ்யா) எதிர் குரோஷியா

லசரோஸ் கிறிஸ்டோடௌலோபோலோஸ் (க்ரூசைரோ) எதிர் அமெரிக்கா எம்.ஜி.

ரிலேய் மக்ரீ (நியூகாஸில் ஜெட்) எதிர் மெல்போர்ன் சிட்டி

லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜன்டீனா) எதிர் நைஜீரியா

பென்ஜமின் பவார்ட் (பிரான்ஸ்) எதிர் ஆர்ஜன்டீனா

ரிகார்டோ குவரஸ்மா (போர்த்துக்கல்) எதிர் ஈரான்

கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

முஹமட் சலாஹ் (லிவர்பூல்) எதிர் எவர்டன்

http://www.thepapare.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்

 
அ-அ+

உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
மூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்
 
பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

201809052142374385_1_griezmann-s._L_styvpf.jpg

ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/05214237/1189266/Antoine-Griezmann-Pleads-Case-For-Ballon-dOr-After.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தமிழகத்தில் இன்று 5,871 பேருக்குக் கரோனா: சென்னையில் 993 பேருக்குத் தொற்று   சென்னை தமிழகத்தில் இன்று மொத்தம் 5,871பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,14,520-ல் சென்னையில் மட்டும் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,56,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 27 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,56,298. இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,878 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. * தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 72 தனியார் ஆய்வகங்கள் என 133 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: * தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,929. * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34,32,025. * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 71,575. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,14,520. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,871. * சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 993. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,89,677 பேர்/ பெண்கள் 1,24,814 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் . * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,521 பேர். பெண்கள் 2,350 பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,633 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,56,313 பேர். * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,278 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2370 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/569531-corona-bulletin-in-tamil-nadu-3.html  
    • உன் பாதம் நான் பணிவேன்  
    • மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு   மூணாறு,  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர். இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 6-ம் நாளான நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பாறைகள் தகர்த்து அகற்றப்பட்டன. நேற்று நடந்த மீட்பு பணியின்போது, வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்குள்ளேயே 5 நாட்களுக்கும் மேல் இருந்ததால் அவர்களின் முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதன் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. தேயிலை தோட்ட உரிமையாளர்களின் உதவியுடன் அவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 7-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. https://www.dailythanthi.com/News/India/2020/08/13022049/The-death-toll-from-Moonar-landslides-has-risen-to.vpf
    • மக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன்   மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றதுடன், எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா – கற்குழிபகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள். எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்கமுடிகின்றது. போரினால் பாதிக்கபட்ட மக்கள் அதனை எதிர்பார்பது தவறில்லை. ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோது தான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.எனவே இந்த சூழலைவன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலானவிடயம். ஏனெனில் பெரும்பாண்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவை எமக்கு சவாலாகஇருக்கபோகின்றது. எனவே நாங்கள்தூங்கமுடியாது.எமது மண்ணைகாக்கின்ற பொறுப்பு எம் தலைமேலேசுமத்தப்பட்டிருக்கின்றது. தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில் இருந்தும் பலர் விமர்சித்தார்கள். எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள கட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள்.” – என்றார்.   https://newuthayan.com/மக்கள்-எமக்கு-நல்ல-பாடத்/
    • பாலகி கமலா தாயார் சியாமளா கோபாலன். இன்று ஒரு ஜேர்மன் வானொலியில் தமிழிச்சி என்றே கூறினார்கள்