யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலின் பொருட்டும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர். ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து, சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உரையாற்றியபோது சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லத்தம்பி மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டார். இதனையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் குடும்ப சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய மகேந்திரன் குடும்பத்தினரை பிபிசி தமிழ் சந்தித்தது திருமனான உடனே கைது மகேந்திரனுக்கு திருமணமாகி அப்போது ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு ராணுவத்தினர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இறுதியாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கிணங்க நீண்ட கால சிறைத் தண்டனையை மகேந்திரன் இப்போது அனுபவித்து வருவதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர். இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டான்சேனை மகேந்திரனின் சொந்த ஊர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலம் மகேந்திரன் செயற்பட்டதாக அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர். பிறகு அந்த அமைப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில்தான், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடத்தப்பட்ட, படையினரின் சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தையும் அதற்குப் பிறகு மகேந்திரனுக்கு என்னவானது என்பதையும், அவரின் மருமகள் மெரீனா பிபிசியிடம் விவரித்தார். "ராணுவத்தினருடன் இணைந்து அப்போது செயற்பட்ட, முகம் மறைத்த 'ஆள்காட்டி' ஒருவரால், எனது மாமா காட்டிக் கொடுக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பாக சட்டத்தரணிகளை வைத்து வாதிடுமளவுக்கு எங்களுக்கு வசதியிருக்கவில்லை. அந்த நிலையில்தான், அவருக்கு 70 வருடங்கள் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது," என்கிறார் மெரீனா. மகேந்திரனுக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மகேந்திரனின் சிறைக் காலத்தில்தான் அவரின் அப்பாவும் அம்மாவும் இறந்தார்கள். அம்மாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே மகேந்திரனுக்குக் கிடைத்தது. Image caption மெரீனா இவ்வாறான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தொடச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது குறித்து சாதகமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், முறக்கொட்டான்சேனையில் சந்தித்த மகேந்திரனின் மூத்த சகோதரி புஷ்பவதியும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தார். "விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, பிடிபட்டவர்களில் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மகேந்தினுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, அவரையும் விடுவிக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இறக்கும் போது, அவர் எங்களுடன் இருக்கவில்லை. அம்மாவின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அவரைக் கொண்டு வந்தார்கள். அப்போது எங்கள் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை," என்றார் புஷ்பவதி. சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகேந்திரனுக்கு இப்போது 46 வயதாகிறது. தனது இளமைக் காலத்தை சிறைக்குள்ளேயே அவர் தொலைத்துவிட்டார். அவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகள் தினத்தன்று, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சந்தித்ததாகக் கூறும் மெரீனா நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் மகேந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிறைவாசத்தை அனுபவதித்து வருகிறார் என்றார். இதேவேளை, மகேந்திரனை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்தே மகேந்திரன் குறித்து நாடாளுமன்றில் வியாழேந்திரன் உரையாற்றியதாகவும் மெரீனா தெரிவித்தார். இதனையடுத்து, "மகேந்திரனின் விடுதலை தொடர்பில், நடவடிக்கைகள் எதையாவது மேற்கொண்டுள்ளீர்களா" என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் பிபிசி வினவியது. Image caption புஷ்பவதி அதற்கு பதிலளித்த அவர்; "மகேந்திரனுக்கு 68 வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, அவர் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்". "சிறைச்சாலை சென்று அவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். நடப்பதற்குக் கூட முடியாத நிலையில் இருக்கின்றார். அந்த சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள், தங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மகேந்திரனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டனர்" என்று கூறியதோடு, "மகேந்திரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமும், ஏனைய உயர் மட்டத்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்," என்றார். இதேவேளை, இவ்வாறானவர்களின் விடுதலை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார். சுமார் 03 தசாப்த காலத்தையும், தனது இளமைக் காலத்தையும் சிறைக்குள் தொலைத்து விட்ட மகேந்திரன், விடுதலை பெற்று வந்து, தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, அவரின் குடும்பத்தாரினுடைய பேரவாவாக உள்ளது. இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே புனர் வாழ்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஆனால், மகேந்திரன் இறுதி யுத்தத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர் என்பதால், அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/sri-lanka-48642796
    • June 17, 2019 கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலை சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது. 2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள குறித்த புத்தர் சிலையை பிரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் கடந்த சில நாட்களின் முன்னர் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை ஆக்கிரமிக்க முயன்றமைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். இதனாலும் மாவட்டத்தில் மதநல்லிணக்கம் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டது. இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அனுராதபுரத்தில் இருந்து வருவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு கிழக்கில் இந்து ஆலய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளமையும் இங்கே நினைவுகூரத்தக்கது . http://globaltamilnews.net/2019/124475/  
    • June 17, 2019 தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.  சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக், பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.   இந்தப் பெண் அணிந்திருந்த ஆடை ஒன்றில் பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கணை காவற்துறையினர் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி, அவரைக் கைது செய்து, 18 ஆம் திகதி மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் முன்னலை செய்தனர்.  இதன்போது, குறித்த பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜுன் மாதம் 03 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது.  இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஆடையில் காணப்பட்ட வடிவம், தர்மச் சக்கரம்தானா என்பதை அடையாளம் காண்பதற்காக, அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபைக்கும் தாம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஒப்பீடு செய்வதற்குரிய சரியான தர்மச் சக்கர வடிவம் தம்மிடம் இல்லை என, அவர்கள் தெரிவித்து விட்டதாகவும், மஸாஹிமாவுக்கு பிணை வழங்கிய அன்று, நீதிமன்றில் காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தனது ஆடையில் இருந்த வடிவத்தை காரணம் காட்டி, தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையின் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். #மஸாஹிமா  #ஜேசிவெலியமுன்ன #தர்மச்சக்கரம் #உயர்நீதிமன்றம்,  #அடிப்படைஉரிமைமீறல் BBC http://globaltamilnews.net/2019/124492/
    • June 17, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.   கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.  #அம்பாறைமாவட்டம் #கல்முனைவடக்குதமிழ்பிரதேசசெயலகம் #சாகும்வரைஉண்ணாவிரதப்போராட்டம் http://globaltamilnews.net/2019/124518/
    • இலங்கையின் சொந்த குடிமக்கள் தனிமனித சுதந்திரமீறல் அரசியல், மதம், மொழி, இன ஒடுக்குமுறை என்பவற்றால் பாதிக்கப்பட்டு அகதிகளாக ஏற்கனவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் அவலம் தீர்வெதுவுமின்றி நீடிக்கும் இந்நிலையில் வேறு நாடுகளிலிருந்து அதே காரணங்களுக்காக குடிபெயரும் அகதிகளை குடியமர்த்துவதற்கு இலங்கையில் பாதுகாப்பும் பராமரிப்பு வசதிகளும் உண்டென்று நம்பும் மேற்குலகம்  இரட்டைவேடம் போடுகிறது.