யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்!

Recommended Posts

ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்!

 

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை.

மெஸ்ஸி

2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு இவ்விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, குரோஷியாவின் லூக்கா மோட்ரிச், எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்று வந்த மெஸ்ஸி இம்முறை இல்லாதது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ரெனால்டோ

ரொனால்டோ வழக்கம்போல் தன் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி இம்முறையும் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார், ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் அவரின் ஹாட்ரிக் கோல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அடித்த 15 கோல்கள் ரியல் மாரிட் அணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் பெற வைத்தது.

 

 

மோட்ரிச் இம்முறை ரொனால்டோவோடு இணைந்து கோல் மழை புரிந்து ரியல் மாரிட் அணியில் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் தனது அசாத்திய ஆட்டத்தால் குரோஷியாவை ஒற்றை ஆளாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

முகமது சாலாவின் ஆட்டம் உலகக் கோப்பையில் சற்று குறைவாக இருந்தாலும் லிவர்பூல் அணிக்காக அவர் சாம்பியன்ஸ் லீக்கில் ஆடிய ஆட்டம் அவரை இங்கு அழைத்து வந்துள்ளது. இந்த வீரர்களின் வரிசையில் இம்முறை அதிகம் சோபிக்காத மெஸ்ஸிக்கு வாய்ப்பு கிடைப்பது சற்றே குறைவுதான் எனக் கால்பந்து விமர்சகர்கள் பலர் முன்னரே தெரிவித்திருந்தனர். அதிகம் பரபரப்பை உண்டாக்கிய ஃபிஃபா அவார்டஸின் இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இம்முறையும் ரொனால்டோ வென்றால் ஆறாவது முறையாக வென்ற சாதனையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/135853-fifa-awards-final-list-announced.html

Share this post


Link to post
Share on other sites

பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி

fifa-awards-2018-696x464.jpg
 

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐந்து முறை பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, இம்முறை விருதுக்கான முதல் மூன்று இடங்களுக்கு வருவதற்கு தவறியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிக்கத் தவறுவது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

 

 

பிஃபாவினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு தசாப்தமாக உலகக் கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ இருவரில் உயரிய விருதில் இருந்து மெஸ்ஸி விடுபட்டிருக்கும் நிலையில் அந்த விருதை ஆறாவது முறையாக வெல்லும் போட்டியில் 33 வயதுடைய ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் கடந்த மே மாதம் 100 மில்லியன் யூரோவுக்கு ஜுவண்டஸ் அணியில் ஒப்பந்தமானார்.

ரொனால்டோவின் முன்னாள் ரியல் மெட்ரிட் சக வீரரான லூகா மொட்ரிக்கும் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு அவருடன் போட்டியிடுகிறார். பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணி வீரரான மொட்ரிக் உலகக் கிண்ண தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.

எகிப்து முன்கள வீரரான மொஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களைப் போட்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை லிவர்பூல் அணியால் முன்னேற முடிந்தது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (UEFA) ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ மற்றும் சாலாஹ் ஆகியோரைத் பின்தள்ளி மொட்ரிக் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்று தங்கப்பாதணி விருதை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான 10 வீரர்கள் பட்டியலில் இருந்தபோதும் அவரால் இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியவில்லை.

உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த விருதை வெல்லும் போட்டியில் குரோஷியாவின் ஸ்லாட்கோ டலிக் மற்றும் முன்னாள் ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினடின் சிடேன் உள்ளனர்.

 

சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனைக்கான இறுதிப் பட்டியலில் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லியோன் அணியின் டுவோ அடா ஹகர்பேர் (நோர்வே), ஜெர்மனியின் செனிபர் மரொசான் மற்றும் பிரேசில் முன்கள வீராங்கனை மார்டா இடம்பெற்றுள்ளனர்.

பல்லோன் டிஓர் விருதுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விலகிக் கொண்ட நிலையில் இந்த விருது தனியாகவே இடம்பெறுகிறது.

பிஃபாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஒவ்வொரு விருதுக்கும் 10 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்திருந்தது. தேசிய அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை தேர்வுசெய்யவுள்ளனர்.

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக ரொனால்டோ தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகள் கிக்’ (Bicycle kick) மற்றும் கரெத் பேல் லிவர்பூலுக்கு எதிராக தலைக்கு மேலால் உதைத்துப் பெற்ற கோல்கள் சிறந்த கோலுக்கான 10 பரிந்துரைகளில் உள்ளன. இதில் வெற்றி கோல் ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.

பிஃபா விருதின் வெற்றியாளர்கள் லண்டனில் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளனர்.

சிறந்த வீரர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜுவண்டஸ் மற்றும் போர்த்துக்கல்

லூகா மொட்ரிக் – ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷியா

மொஹமட் சலாஹ் – லிவர்பூல் மற்றும் எகிப்து

சிறந்த வீராங்கனை

டுவோ அடா ஹகர்பேர் – லியோன் மற்றும் நோர்வே

செனிபர் மரொசான் – லியோன் மற்றும் ஜெர்மனி

மார்டா – ஓர்லாண்டோ பிரைட் மற்றும் பிரேசில்

ஆடவர் பயிற்றுவிப்பாளர்

ஸ்லாட்கோ டலிக் – குரோஷியா

டிடியர் டிஸ்சம்ப்ஸ் – பிரான்ஸ்

சினடின் சிடேன் – முன்னாள் ரியல் மெட்ரிட்

பெண்கள் பயிற்றுவிப்பாளர்

ரெய்னால்ட் பெட்ரோஸ் – லியோன்

அசாகோ டககுரா – ஜப்பான்

சரினா விக்மன் – நெதர்லாந்து

 

கோல்காப்பாளர்

திபோட் கோர்டொயிஸ் – ரியல் மெட்ரிட் மற்றும் பெல்ஜியம்

ஹூகோ லொரிஸ் – டொட்டன்ஹாம் மற்றும் பிரான்ஸ்

கஸ்பர் ஷிமைக்கல் – லெய்சஸ்டர் மற்றும் டென்மார்க்

ரசிகர் விருது

பேரு ரசிகர்கள்

ஜப்பான் ரசிகர்கள்

செபஸ்டியன் கரேரா (டிபோர்ட் புர்டோ மொண்ட், சிலி)

புஸ்கா விருது (சிறந்த கோல்)

கரேத் பேல் (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

டெனிஸ்செரிஷேவ் (ரஷ்யா) எதிர் குரோஷியா

லசரோஸ் கிறிஸ்டோடௌலோபோலோஸ் (க்ரூசைரோ) எதிர் அமெரிக்கா எம்.ஜி.

ரிலேய் மக்ரீ (நியூகாஸில் ஜெட்) எதிர் மெல்போர்ன் சிட்டி

லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜன்டீனா) எதிர் நைஜீரியா

பென்ஜமின் பவார்ட் (பிரான்ஸ்) எதிர் ஆர்ஜன்டீனா

ரிகார்டோ குவரஸ்மா (போர்த்துக்கல்) எதிர் ஈரான்

கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

முஹமட் சலாஹ் (லிவர்பூல்) எதிர் எவர்டன்

http://www.thepapare.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்

 
அ-அ+

உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
மூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்
 
பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

201809052142374385_1_griezmann-s._L_styvpf.jpg

ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/05214237/1189266/Antoine-Griezmann-Pleads-Case-For-Ballon-dOr-After.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஓம் தோழர், அவர் சிறிது காலம் தந்தி ரீவியில் பாண்டேவின் கீழ் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .. 😢
  • 3  மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி ; பாதிக்கப்பட்டோர் உட்பட பலர் பங்கேற்பு ! கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் திறக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர். கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் மாத்திரம் சுமார் 105 பேர் உயிரிழந்ததுடன், பலர்  படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    https://www.virakesari.lk/article/60860  
  • ஒரு பெண்ணின் தனிப்பட்ட குரோதம் காலம் கடந்தும் ஒரு இனத்தையே பலியெடுத்துக் கொண்டிருக்கு......!   🤨
  • சிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை இலங்கை வாழ் சகல மக்களும் அறிவர். அதேசமயம், 1987ஆம் ஆண்டு அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தமும் இலங்கை ஒரு பல்லின, பலமொழி மற்றும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற ஒரு நாடு என்பதையும் வடக்கு-கிழக்கு என்பது தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வாழிடம் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிங்கள மக்கள் தமது வரலாற்று ஆவணமாகப் பின்பற்றும் மகாவம்சம்கூட சிங்கள மக்களின் வரலாறு விஜயனின் வருகையையொட்டியே ஆரம்பிப்பதாகக் கூறுகிறது. ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் விஜயன் இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கையில் வளர்ச்சியடைந்த ஒரு நாகரிகம் இருந்ததாகவும் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாகவும் இயக்கர், நாகர்கள் என்ற இனக்குழுக்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான இனக்குழுமங்கள் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  அதுமாத்தரமல்லாமல், இலங்காபுரி என்பது இராவணனின் நாடு என்பதும் அவன் தனது தாயாரின் இறுதிக்கிரியைகளைச் செய்வதற்காக திருகோணமலை கன்னியாவில் தனது வாள்மூலம் ஏழு வெந்நீர் கிணறுகளைத் தோண்டியதாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பழமைவாய்ந்த ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் இராவணன் வெட்டு என்னும் பகுதி இன்றளவும் உயிர்த்திருக்கிறது.  சிவபக்தனான இராவணனால் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், மேற்கே திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டீஸ்வரமும் அமைக்கப்பட்டது என்பது வரலாறு. இதில் தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு ஈஸ்வரங்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இன்னமும் நிலைத்திருக்கின்றன. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இராமயணத்தின் காலம் என்பது சற்றேறக்குறைய பத்தாயிரம் வருடங்கள் என்று தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆகவே இலங்கையில் இராவணனுடைய வரலாறு என்பதும் அதே காலக்கட்டத்திற்குரியது என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இதனடிப்படையில்தான் கோணேஸ்வரர் கோயிலுக்கும், கன்னியா வெந்நீரூற்றுக்கும், நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய போன்ற பிரதேசங்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சென்று தரிசித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களைப் போற்றி சைவக்குரவர்களும் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பாசுரங்கள் பாடியுள்ளனர். ஆகவே இந்த நாட்டில் சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கான நூற்றுக்கணக்கான புராதனச் சின்னங்களும், தொல்லியல் அடையாளங்களும் இருக்கின்றன. அவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். அதுவே இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்றது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் புதைந்து போயிருக்கக்கூடிய இலங்கை அரசியல் இந்த புராதான பாரம்பரியச் சின்னங்களை அழித்தொழித்து அதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதென்பது தமிழ் மக்களின் அடையாளங்களையும் புராதனச் சின்னங்களையும் அழிப்பது மாத்திரமல்லாமல் அவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துவந்த மில்லியன் கணக்கான அன்னியச் செலாவணி வருமானத்தை இழப்பதற்கும் இது வழிகோலும். முல்லைத்தீவில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் புனருத்தாரணம் செய்வதற்கு அனுமதிக்காமல் அங்கு ஒரு பௌத்த விகாரையைக் கட்ட எத்தனிப்பதும், வவுனியாவில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சிவன்கோயிலை புனருத்தாரணம் செய்து மக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்காமல் விகாரை கட்ட முயற்சிப்பதும், இராவணனால் உருவாக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்றை பௌத்த பிக்குகள் கைப்பற்றி அங்குள்ள சைவ அடையாளங்களை அகற்றி பௌத்த விகாரையைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், அவற்றிற்கு எதிராகப் போராடிய தென்கயிலை ஆதீன முதல்வர்மீதும் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான பெண்மணிமீதும் எச்சில் தேநீர் ஊற்றி அவமதிப்பதும் மிகமிக அநாகரிகமான விடயங்களாகும். மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருப்பதும், கோணேஸ்வரத்தில் ஒரு பாரிய புத்தர் சிலையை நிறுவியிருப்பதும், பௌத்தர்கள் வாழாத வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வலிந்து புத்தவிகாரைகளை நிர்மாணிப்பதும் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க நாடு என்பதை நிறுவுவதற்கான முயற்சியாகும். பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் பூர்வீகக் குடிகள் இத்தகைய திணிப்புக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன், இது ஒரு பல்லின, பலகலாசார, பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை நாம் தெளிவுபட கூறுகின்றோம்.  இலங்கையில் இருக்கக்கூடிய புராதன வரலாற்றுச் சின்னங்கள் அவ்வாறே பாதுகாக்கப்படவேண்டும். குறுகிய சிங்கள பௌத்த தேசியவாத நோக்கில் இவற்றை அழித்தொழிப்பதும் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்ற முயற்சிப்பதும் இலங்கையின் வரலாற்றையே அழித்தொழிக்கும் செயற்பாடாகும். ஆகவே இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்திசைவாக நிதி வழங்கி இவற்றை அழித்தொழிக்காமல் அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும் என்பதுடன், அந்தந்த பிரதேசங்களில் காணப்படும் இத்தகைய சின்னங்களை அந்தந்த பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகள் அவற்றைப் போற்றிப்பாதுகாப்பதற்கான அதிகாரங்களையும் வழங்க வேண்டும். இறுதியாக, சமயத் தலைவர்கள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள். இதில் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதும் அவர்களது கௌரவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் இராணுவமும் பொலிசும் இத்தகைய இழிசெயல்களை வேடிக்கை பார்ப்பதும் நிறுத்தப்படவேண்டும்.  திருகோணமலையில் தென்கயிலை ஆதீன முதல்வர் அவர்களை கன்னியா வெந்நீரூற்றிற்கு அழைத்துச் சென்ற பொலிசாருக்கு எதிரிலேயே சில காடையர்களால் எச்சில் தேனீர் ஊற்றப்பட்டதும் அவர்களை அழைத்துச் சென்ற பொலிசார் இதனை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் இவர்களது சிங்கள பௌத்த இனவாதத்தையும் மேலாதிக்கத்தையும் வெட்டவெளிச்சமாகக் காட்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/60846
  • ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர். அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்துகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்" என தெரிவித்தனர்.     https://www.virakesari.lk/article/60845