நவீனன்

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

Recommended Posts

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

 

 

 

 

 

 

அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பொது தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

சம்பவத்திற்கான பின்னணி!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியைச் சேர்ந்த சோதிநாதன் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியான வினோஜினி மற்றும் அவரது மூன்றுமாதக் குழந்தை என குடும்பமாக தனிமையில் வசித்து வந்த குடும்பம் தங்களது தொழில் நிமிர்த்தம் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வலத்தாப்பட்டி பகுதியில் உள்ள ஸ்மையில் புரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் இவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில நபர்களுடன் கைகலப்பு நடைபெற்ற பொலீசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்யின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுவந்த குறித்த குடும்பம் ஸ்மையில் புரத்தில் உள்ள இஸ்லாமியர்களினால் பல தடவைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாரு வற்புறுத்தப் பட்டுள்ளனர் இன் நிலையிலேயே அந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய 9 பேர்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த 09 பேர் இது வரை இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும்.

அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நெல்லிக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர்களும் தொழில் நிமிர்த்தமாக அம்பாறை வலத்தாப்பட்டி கிராமத்திற்கு சென்று வந்த போது சம்மாந்துரையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொலிசார்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்மாந்துரை பொலீசில் முறைப்பாடு செய்தும். குறித்த சம்பவம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளாத பொலிசார். ஒரு குடும்பத்தின் கொலை முயற்சியை சிவில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சில இஸ்லாமிய மத வாத குழு தங்களது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும். தங்களது மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு நாங்கள் மாற முடியாது எனவும் தாங்கள் தங்களது வீட்டில் வைத்து வணங்கிய இந்து கடவுள்களை எடுத்துக் கொண்டு கரடியணாறு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இனிமேல் அங்கு சென்றால் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த அரசாங்கம் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
 
இதையும் தவறாமல் படிங்க

https://www.ibctamil.com/srilanka/80/105639?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, colomban said:

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

அவர் மொக்குத்தனமா நீதிமன்றத்தில குழப்படி பண்ணிபோட்டார்.

எங்கண்ட தூசனப் பிக்கர், சுமனை தேரரிட்ட ஓடிப் போய், விசயத்தைக் காதில போட்டால், மனிதர் சன்னதம் கொண்டாடும். 

உங்க அமைச்சர் முஸ்தபாவின் மருமகன், சிட்டினிலே மாட்டுப் பட்டிருக்கிறதை பார்த்தால், நீங்கள் சொல்லுறது சரிதான். 

Share this post


Link to post
Share on other sites

இதையெல்லாம் நான் சில வருடங்களுக்கு முன்னர் எதிர்வு கூறியபோது எந்தவொரு யாழ்  களத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதைவிட நிர்வாகம் எச்சரிக்கை புள்ளியும் இட்டு இருந்தது.....!!!!!

இப்பொழுது எல்லாரும் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்

  • Like 3
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மே 2009 க்குப் பின் முஸ்லீம் மதப் பயங்கரவாதம்... தனது தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை அராபிய நாடுகள் மற்றும் பாகிஸ்தான்.. மற்றும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்களின் உதவியுடன் கடுமையான முன்னெடுத்து வருகிறது.

ஆனால் எங்களில் சிலர் முஸ்லீம் பயங்கரவாதத்திற்கு சகோதர முலாம் பூசி.. தமிழ் மக்களிடம் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களால்.. இந்த முஸ்லீம் பயங்கரவாதத்தை எதிர்த்து கடிதம் எழுத முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, நவீனன் said:

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

Share this post


Link to post
Share on other sites

சம்பாந்துறை போலீஸெல்லாம் அல்லாண்ட ஆக்கள் தானே.

Share this post


Link to post
Share on other sites

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்! ?

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, nedukkalapoovan said:

.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

நீங்கள் இப்படியே புலி வரும் எண்டு கனவு கண்டு கொண்டே இருங்கோ....!!! புலி இல்லை பூனையும் வராது....  அவன் வன்னியில் 1/3 பங்கை ஆக்கிரமித்துக் விட்டான், கிளி.முல்லையும் தான் மிச்சம்.

வடமரட்சி கிட்டதட்ட அவனது கட்டுபாட்டில், தென்மராட்ட்சி மிக வேகமா இஸ்லாமிய மயமாகிறது.

 

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Nathamuni said:

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்!

ஞானசார ஏன் கவனிக்க வேண்டும், தமிழர்கள் எல்லாம் எங்கே...??????!!!!!!!!!!

நல்லூர் திருவிழாவில் ஒரு கூட்டம் பிசி

சாமத்திய சடங்கு கொண்டாடுரதில ஒரு குறூப் பிசி...!!!!

வடக்கு மாகாணத்தில இருக்கிற காணி எல்லத்தையும் முஸ்லீமுக்கு விக்கிறதில பிசி...!!!!!!

எப்படி வெளிநாட்டில அசைலம் அடிக்கலாம் எண்டதில இன்னொரு குறூப் பிசி....!!!!

அப்படி அசைல்ம் அடிக்க ஏலாட்டி எப்படி கல்யாணம் கட்டி வெளிநாட்டுக்கு வரலாம் என்பதில் இன்னொரு குறூப் பிசி....!!!!

இதுக்கு என்ன ம*******க்கு போராட்டம் விடுதலை என்று  இந்த பரதேசி கூட்டம் வெளிக்கிட்டது என்று தான் எண்ட கேள்வி...!!!!!

நாம் எல்லாம் சூடு சுரணை உள்ளவர்களாக இருந்தால் இந்த குடும்பத்தை மிரட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம், அடுத்து மதம் மாறிய இவர்களது உறவினர்களை மீண்டும் தமிழர் ஆக்குவோம்.....!!!!!

எங்களிடம் அதற்கான பண வசதி உண்டு, சட்ட அறிவு உண்டு..!!! இலங்கை அரசு செய்யாவிடில் ஜெனிவா வரை செல்வோம்...!!!!!!

Share this post


Link to post
Share on other sites

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

குறிப்பாக மேலே குறிப்பிட்ட வலத்தபிட்டி கிராமம் முழுமையாக மதமாற்றம் மூலம் இஸ்லாமியமயமாக்கப்பட்ட கிராமம்.

இதற்கான உத்தியோகபூர்வ தரவுகள் உள்ளன.

  • Sad 2

Share this post


Link to post
Share on other sites

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

தவறே இல்லை என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்!

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

 

9 hours ago, Dash said:

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

என்று , கிஸ்புல்லாவின் தமிழருக்கு எதிராக தாம் செய்தவற்றை விபரித்த தம்பட்ட வீடியோவை பார்த்தேனோ, அன்றே இவர்கள் தொடர்பான எனது வெகுளித்தனத்தை மூட்டை கட்டி வைத்தேன்.

தேவை என்றால், தமிழ் பேசும்....பிட்டும் தேங்காய்பூவும் புண்ணாக்கு கதை... தேவை சிங்களத்தரப்பிலிருந்தாயின், தமிழர் , இஸ்லாமியர் கதை... 

தனது மக்களின் காணித்தேவைக்காக, ரிசாத்தின், வில்பத்து தேசிய காடழிப்பு, முல்லைத்தீவு காடழிப்பு போன்றவை மிகவும் கிரிமினல் தனமானது.

கொழும்பின் மேல்தட்டு மாணவர் , அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தொடர்பில் கைதாகியமை சாதாரணமாணதல்ல.

கிழக்கின், மத்திய கிழக்கு தொடர்புகள் அபாயகரமானவை. பாகிஸ்தான், இலங்கையின் கிழக்கு ஊடாக தென்னிந்தியாவை குறிவைக்கலாம் என்பது ரோவின்  இப்போதைய தலைவலி.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, Dash said:

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு வந்து இப்படியான முஸ்லீம் பயங்கரவாதமும்.. சிங்கள பெளத்தர அரசாங்கத்தின் பயங்கரவாதமும் முறியடிக்கப்படும் என்று நினைத்தால் அப்படியே நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியான்.

இதெல்லாம்.. ஜெனிவா போய் நடக்கிற காரியமில்லை.

இப்படியான தமிழ் மக்களுக்கு எதிரான மதவாத இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிங்கள பெளத்தத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள்.. சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. 

அதேவேளை.. இவற்றிற்கு எதிராக.. குரல் கொடுக்க மறுக்கும் எமது அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இப்படியான பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான சர்வதேசத்தின் நீதியை கோர வேண்டும்.

அரசியல் ரீதியாக எமது மக்கள் சந்திக்கும்.. இப்படியான துயர்களை.. உடனுக்குடன் வெளிப்படுத்தும்.. பிரபல்யப்படுத்தும்.. மக்கள்.. மண் நலன் சார்ந்த அரசியல் தலைவர்கள்.. பிரதிநிதிகளை மக்கள் உள்ளூரில் உருவாக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும்.

இளைய சமூகம்.. இவற்றிற்கு எதிராக முறையாக குரல்கொடுப்பதோடு நிறுவனப்படுத்திய வகையில் உடனடி எதிர்ப்புக்களை சாத்தியமான சட்ட நடவடிக்கைகளை.. எதிர்ப்புக்களை தடைகளை உருவாக்க வேண்டும்.  இவ்வாறான செயல்களுக்கான ஆதாரங்களை.. சாட்சியங்களை..  ஆவணப்படுத்துவதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஒரு சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை உருவாகவல்ல.. சர்வதேச அழுத்தம் ஒன்றினால் தவிர.. எமது மக்களையும் மண்ணையும் அவ்வளவு இலகுவில்.. முஸ்லீம் மதப் பயங்கரவாதத்திடம் இருந்தும்... சிங்கள பெளத்த அரச பயங்கரவாதத்திடம் இருந்தும் பாதுகாக்க முடியாது. இதுதான் கள யதார்த்தம். 

அதைவிடுத்து.. அசைலம் அடிக்கிறவனையும்.. கல்யாணம் முடிக்கிறவனையும்.. ஜெனிவாவையும்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அதனால்.. நமக்கு எந்த நன்மையும் விளையாது.

மூன்றாம் உலக நாடொன்றில் அடிமையாக மூன்றாம் நிலை பொருளாதார நிலையில் வாழும் ஓர் இனத்துக்கு பணக்கார நாடுகளில் நல்ல வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால்.. எந்த இனமும் எம்மவர் போலத்தான் நடந்து கொள்ளும். அதற்குள் இருந்து தான் நாம் போராடிப் பெற வேண்டும்.. உரிமைகளை. திட்டி ஒரு பிரயோசனமும் இல்லை. ?

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

தமிழர்கள் ஒன்று படாவிட்டால் இது தான் நிலைமை

Share this post


Link to post
Share on other sites

கிழக்கில் இசுலாமியர்களால் வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

குறித்த செய்தி கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மதமாற்றம் குறித்த உண்மைகளையும் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் உண்மை தன்மையையும் உலகிற்கு எடுத்து காட்டியிருக்கிறது.

இது வரை நாங்கள் தமிழர்களை மதம் மாற்றவில்லை என்று கூறிய இஸ்லாமிய மத தலைவர்கள் இந்த செய்தியின் பின் நாங்கள் தமிழர்களை வற்புறுத்தி மதம் மாற்றவில்லை அவர்களாகவே விரும்பி மதம் மாறியுள்ளார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

குறித்த செய்தி கிழக்கில் தமிழின அழிப்பு நடைபெறுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இஸ்லாமிய மதமாற்றம் என்பது தமிழின அழிப்பே!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அவர் அவர் விரும்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இலங்கையில் உண்டு ஆனால் அதே சுதந்திரம் ஒரு இனத்தை அழிக்கிறது என்றால் என்ன செய்வது?

கிழக்கில் இடம்பெறும் இஸ்லாமிய மாற்றம் என்பது வெறும் மத மாற்றம் அல்ல அது ஒரு இன மாற்றம் அதாவது மத மாற்றம் என்ற பெயரில் நடைபெறும் தமிழின அழிப்பு.

இதனால் ஒரு தேசிய இனம் மிகவும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கிழக்கை பொறுத்தமட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இஸ்லாமிய மயமாக்கல் மிகவும் திட்டமிட்டு அரவு நாடுகளில் உதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெறுகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

முஸ்லீம்களின் பிரதேசங்களில் கடைகளையோ ஆலயங்களையோ வீடுகளையோ தமிழர்கள் கட்டமுடியாது. ஒரு அங்குலம் நிலத்தை கூட தமிழர்கள் வாங்க முடியாது அப்படி அவர்களது பிரதேசத்தில் வாழ்வதாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் இன்நிலையில் தமிழர்களின் பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் எதுவும் செய்யலாம் என்ற நிலை கிழக்கில் உண்டு.

இந்த உண்மையை கூறினால் இந்த ஊடகம் இனவாதத்தை தூண்டுகிறது என்று முழக்கம் இடுவார்கள். இன வாதமோ மத வாதமோ அல்லது பாரிச வாதமோ உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

எனவே கிழக்கில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது என்பதற்கு இந்த குடும்பத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறிய 9 பேருடன் இஸ்லாத்திற்கு மாற மறுக்கும் அந்த குடும்பமும் ஒரு சாட்சி.

அவர்கள் விரும்பி போனார்களோ இல்லை வற்புறுத்தப்பட்டார்களோ என்பதற்கு அப்பால் இது போன்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மத மாற்றங்கள் கிழக்கில் நடைபெறு‌கிறது என்ற உண்மையை எமது ஊடகம் பதிவு செய்கிறது. இல்லை என்று வாதிடுபவர்கள் இதற்கான மறுப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இன்றைய நிலை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தமிழன் ஒருவரின் வீடு ஆட்டடோ எரிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் இரவு நித்திரையில் இருந்த போது எரித்துள்ளார்கள் அவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் அவர்களும் தீயில் எரிந்து இருப்பார்கள். அவர்கள் நாளாந்தம் வருமானம் தேடிய முச்சக்கர வண்டியும் எரிக்கப்பட்டுள்ளது இதற்கெல்லாம் விடை தேடாத சில ஊடகங்கள் பாதிக்கப்பட்ட குடும்பம் குறித்து கவலை கொள்ளாத ஊடகங்கள் இஸ்லாமிற்கு மதமாறுமாரு வற்புறுத்தினார்களா? இல்லை என்பதை மட்டும் நிருபிப்பதற்கு செய்தி தயாரிப்பில் ஈடுபட்டு ஊடகத்தின் மனிதாபிமானம் எவ்வாறு இருந்தது என்று அதை பார்த்தவர்களுக்கு தெரியும்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுத்து. அவர்கள் தங்கியிருந்த வீட்டை எரித்தவர்கள் யார் என்பதை வெளியில் கொண்டுவராது அந்த சம்பவத்திற்கான காரணத்தை தேடாது முற்று முழுதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை இழிவு படுத்தும் வேலையை ஊடகம் என்ற போர்வையில் சென்ற அந்த இஸ்லாமிய மதவாத குழு கனகச்சிதமாக செய்துள்ளது.

அவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால் இதே பதிலைத்தான் சொல்லி இருப்பார்கள் அது அவர்களது ஒற்றுமை.

தற்போது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டி வந்த முச்சக்கர வண்டி எரியூட்டப்பட்டதால் அவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போது அவர்கள் போரதீவு என்னும் இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கவலை கொள்ளாத அம்பாறை தமிழ் பாராளுமன்ற மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மதம் மாற்றம் பற்றிபேசியதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர் முச்சக்கர வண்டிக்காக நாடகமாடுவதாக கூறியுள்ளனர்.

அவர்கள் முச்சக்கர வண்டி வேனும் என்றால் இஸ்லாம் மதத்திற்கே சென்றிருப்பார்கள். இப்படி தமிழ் பிரதிநிதிகள் இடம் கெஞ்சி திரியவேண்டிய தேவையில்லை.

இதே விடயம் ஒரு முஸ்லீம் நபருக்கு தமிழ் பிரதேசங்களில் நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள். இன்நேரம் அந்த குடும்பத்திற்கு அரவு நாட்டில் இருந்து உதவிகள் குவிந்திருக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டது தமிழ் குடும்பம் என்ற படியால் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை சுத்துமாத்து கதைகள் பாவம் அந்த குடும்பம். அவர்களை எமது தமிழ் உறவுகளே ஏடேடுத்து பார்க்கவில்லை.

நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்!

குறித்த குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்ததுடன். அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

புலம்பெயர் உறவுகளுக்கான வேண்டுகோள்!

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தன்னுடைய நாளாந்த வருமானத்திற்காக இருந்த முச்சக்கர வண்டியையும் இழந்து இருப்பிடம் இல்லாது தவித்து வருகின்றனர். எனவே இவர்களது நாளாந்த வருமானத்திற்கான உதவிகளை செய்ய முன்வருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஊதவி செய்ய விரும்பும் உறவுகள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்- சோதிநாதன் சந்திரசேகர் 0773507156

https://www.ibctamil.com/srilanka/80/106050

Share this post


Link to post
Share on other sites

வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

வீடு எரிக்கப்பட்ட தமிழ் இளைஞரது தந்தையின் சாட்சி

தமிழ்க் குடும்பத்தின் வீடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது!!

 

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஒரு சில ஊடகங்கள் மறுத்திருந்தன.

இந்த நிலையில் குறிப்பிட்ட தமிழ் இளைஞனின் வீடும், அவனது முற்சக்கரவாகணமும் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயல்வீட்டில் வசித்தவர்களால் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ibctamil.com/articles/80/106078?ref=home-imp-flag

Share this post


Link to post
Share on other sites

இன்று ஒரு சாதரண கூலி வேலைக்கும் அங்கே அதாவது முஸ்லீம்கள் பகுதிகளுக்கும் கடைகளுக்கும் சென்று  காத்திருக்கும் நிலை தமிழ் மக்களுக்கு அங்கே சந்தியில் வேலைக்கு தேவையான ஆட்களை நாட்கூலி பேசி  அழைத்து செல்வார்கள் அப்படி களைத்து வேலை செய்து விட்டு பெற்றுக்கொள்ளும் பணத்தை அப்படியே  சாராய தவறனைக்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள் நான் கண்ணால் பார்க்கும் காட்சி இடம் சாய்ந்த மருது பள்ளியடி சந்தி மற்றது கல்முனை தரவை பிள்ளையாரடி சந்தி 

 

தமிழர்களோ ஓர் அபிவிருத்தி அல்லது கடை கட்டி வியாபாரம் செய்ய தயார் இல்லை ஆனால் பதுக்கி வைத்த பணத்தை பல மாடி கட்டிடங்களை அழகான வீடுகளைகட்டியும் தூசும் ஒட்டறையும் பிடிக்க வைத்துள்ளார்கள் ஓர் அரச வேலை செய்தால்  போதும் எனவும் பிறகு எப்படி அடுத்தவனுக்கு தொழில் கொடுத்து அவனையும்  வாழ வைக்கலாம் என்ற சிந்தனையும் இல்லை. தான் வாழ்ந்தால் போதும் என  நினைக்கும் கூட்டம்தான் அதிகம் ( ஒரு சிலர்) 

இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் ஆனால் அதுவும்  இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை (தனிப்பட்ட ) அந்த நபர்தான் செய்திருக்கலாம் என கூற முடிகிறது (அந்த தமிழர்)  விசாரணை தொடர்கிறது வளத்தாப்பிட்டி பிரதேசம் நாள்தோறும் அரிக்கப்பட்டும் விற்கப்பட்டும் வரும் பகுதியாக மாறுகிறது அதே போல கிழக்கில் வறுமை காரணமாக மதமும் மாறுகிறார்கள் பின் சேருகிறார்கள் மாறுகிறார்கள் சேருகிறார்கள் இது நாள் தோறும் காணும் நிலை சிறிய சிறிய ஊர்களில் இருக்கும் மக்கள் மனது ஏன் கிறிஸ்தவ பாதிர்யர்களால் கூட தான் மாற்றப்படுகிறது என்றும் கூறலாம்  வறுமையும் வயிறும் தான் காரணம் அது தான் போராட்டமாக இருக்கிறது 

41717076_1101368036680304_51504790313715  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.