Jump to content

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து


Recommended Posts

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து
புருஜோத்தமன் தங்கமயில் /

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். 

முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது; மூன்றாவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது; நான்காவது, கட்சி அரசியலைக் கைவிட்டு, தமிழ் மக்கள் பேரவையைப் பேரியக்கமாக மாற்றுவது.   

 இதில், முதலாவது தெரிவை, கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பினாலும், கூட்டமைப்புக்கு எதிரான அணிகளோ, விக்னேஸ்வரனோ விரும்பவில்லை. ஆக, அந்தத் தெரிவு ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்று.   
அதுபோல, நான்காவது தெரிவையும் ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், விக்னேஸ்வரனின் ஐந்து வருட அரசியலில், அவர் என்றைக்குமே தன்னையொரு களச் செயற்பாட்டாளராகவோ, சமூகத்துக்குள் மக்களோடு மக்களாகச் சமாந்தரமாகப் பயணித்து, விடயங்களைக் கையாளக் கூடியவராகவோ காட்டிக் கொள்ளவில்லை.அவரின் செயற்பாட்டு அரசியல் என்பது, அவர் அணியும் ஆடைகள் மாதிரியானவை; மடிப்புக் கலையாத தன்மை கொண்டவை; வேர்வைகள் கூட ஒட்டாதவை.

அப்படிப்பட்ட ஒருவரால், அதிக உழைப்பைக் கோரும் செயற்பாட்டு அரசியலை, அதாவது, கட்சி - வாக்கு அரசியலுக்கு அப்பாலான மக்கள் அரசியலைச் செய்வதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை. 
ஏனெனில், பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், பேரவைக்குள் அவரின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை நோக்கினாலே புரிந்து கொள்ள முடியும்.   

பேரவையின் முக்கிய செயற்பாடுகளாக எழுக தமிழையும் அரசியல் தீர்வுக்கான யோசனைகள் முன்வைப்பையும் கொள்ள முடியும். 

ஆனால், ‘எழுக தமிழ்’ போன்ற மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டச் செயற்பாட்டுக்கான முனைப்பை வெளியிடும் கட்டத்தில், விக்னேஸ்வரன் ஒரு முகமாக மாத்திரமே இருந்தார். அவர், ஒரு செயற்பாட்டாளராக இருக்கவில்லை.  

மற்றவர்கள் ஓடி ஆடிக் கட்டிய மேடையில், பிரதம இடத்தைப் பிடிப்பது மாத்திரமே அவரின் பாத்திரமாக இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஐந்து வருடப் பயணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராகியதும், பேரவையின் முகமாகியதும் அப்படித்தான்.   

இனி வருங்காலங்களில், இரண்டாவது,  மூன்றாவது தெரிவுகளின் இணைப்புப் பாதையிலேயே விக்னேஸ்வரன் பயணிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், மாகாண சபைத் தேர்தல், ஜனவரி மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.   

அதற்குள், புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து, அதன் பின்னர் கூட்டணியொன்றை ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆரம்பித்தல் என்பது சற்றுச் சிரமமானது.    

அப்படியான நிலையில், ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுடன், பேரவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, பேரவையின் வழி, தன்னைத் தலைவராக முன்னிறுத்தி, தேர்தல்களைச் சந்திக்கலாம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம்.    

ஆனால், பேரவை, வாக்கு அரசியலில் ஈடுபடாது என்கிற உறுதிமொழியை வழங்கிய பின்னரே, அதன் இணைத் தலைவர் பதவியை ஏற்றதாக, விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணியொன்றுக்குள் பேரவையை வெளிப்படையாகக் கொண்டு வருவதில் சிக்கலுண்டு. அதனை, இலகுவாகக் கேள்விக்குள்ளாக்கலாம். அத்தோடு, பேரவையிலுள்ள புத்திஜீவிகளும் வைத்தியர்களும், பேரவை மீது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் அரசியல் அடையாளம் விழுவதையும் விரும்பவில்லை.   

அவர்கள், பேரவை ஒருங்கிணைக்கும் அரசியல் கூட்டொன்றுக்கு, விக்னேஸ்வரன் தலைமையேற்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அப்படியான கட்டத்தில், தவிர்க்க முடியாமல் கட்சியொன்றின் அடையாளத்தை விக்னேஸ்வரன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.   

இன்னொரு கட்டத்தில், கூட்டமைப்போடு முரண்பட்டு, விக்னேஸ்வரனின் பின்னால் தற்போது நிற்கின்ற, பொ. ஐங்கரநேசன், க. அருந்தவபாலன், அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கு, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை உண்டு. அதுதான், தம்முடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.   

ஏனெனில், பேரவையை முன்னிறுத்திக் கொண்டு, விக்னேஸ்வரனின் பின்னால் சென்றாலும், விக்னேஸ்வரனின் காலத்துக்குப் பின்னர், தங்களுடைய அடையாளம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் அவர்களுக்கு உண்டு.  

 அதன்போக்கில், புதிய கட்சியொன்றை எப்படியாவது ஆரம்பித்து, அதில் தங்களுக்குரிய பதவிகளை அடையாளங்களாகக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அதன்போக்கில், புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை, ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டிருப்பதாகக் தெரிகின்றது.   

ஆனால், மாகாண சபைத் தேர்தலுக்குள் புதிய கட்சியைப் பதிவு செய்து, சின்னத்தைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே? அதனை, விக்னேஸ்வரனும் வெளிப்படுத்துகிறார்.   

விரைவாகத் தேர்தலொன்று வரும் நிலையில், பேரவைக்குள் இருக்கிற கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னம்) ஆகியவற்றின் சின்னங்களில் ஒன்றில் பயணிக்க வேண்டிய கட்டத்தை ஏற்படுத்தலாம். இது, உண்மையிலேயே விக்னேஸ்வரனுக்கும், அவர் தரப்புக்கும் உவப்பான ஒன்றல்ல.   

சின்னத்தின் தேவை கருதி, தமிழர் விடுதலைக் கூட்டணியை (உதய சூரியன்) உட்கொண்டுவர விக்னேஸ்வரன் முயலக்கூடும். ஆனால், வீ.ஆனந்தசங்கரியோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து பணியாற்றுவாரா என்கிற விடயம் மேலேழுகின்றது.  

 சுயேட்சைக் குழுவாகச் சின்னமொன்றைப் பெற்றுக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடுவார்களே அன்றி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, விக்னேஸ்வரனின் பின்னாலுள்ளவர்களும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் விரும்பமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், புதிய சிக்கலொன்றையும் பேரவை ஒருங்கிணைக்கப் போகும் தேர்தல் கூட்டணி சந்திக்கப்போகின்றது.   

பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்த கருத்தும் நோக்கப்பட வேண்டியது. ஏனெனில், கூட்டமைப்போடு முரண்பட, விக்னேஸ்வரன் ஆரம்பித்த காலத்திலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரையிலும், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை நேரடியாக விமர்சித்து வந்தாலும், இரா.சம்பந்தன் மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தது கிடையாது.   

ஆனால், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதான தொனியை, விக்னேஸ்வரன் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பது என்பது, சம்பந்தனுக்கு எதிரான தலைமைத்துவத்தை, தான் எடுத்துக்கொள்ளத் தயார் என்று விடுத்த அறைகூவலாகும்.   

சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் கூட, சம்பந்தனோடு பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்வது தொடர்பில், விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் காட்டினார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.   

ஆனால், தமிழரசுக் கட்சியினரின் பலமான எதிர்ப்பை அடுத்து, அந்தச் சந்திப்பைச் சம்பந்தன் தவிர்த்தார். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ரீதியில், “விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் இனி வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். 

இதுவும் கூட, விக்னேஸ்வரன் - சம்பந்தன் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களை, பின்வாங்க வைத்திருக்கின்றது.   

விக்னேஸ்வரன் புதிய அணியொன்றுக்குத் தலைமை ஏற்பதை, சம்பந்தன் துளியும் விரும்பவில்லை. எப்படியாவது, விக்னேஸ்வரனைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், கௌரவமான ஓய்வுநிலையில் வைத்துவிட வேண்டும் என்றே அவர் விரும்பினார்.  

 அது, தனக்கும் கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமும் பொய்த்துப்போன புள்ளியில், விக்னேஸ்வரனை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.   

அதன்போக்கில்தான், விக்னேஸ்வரனுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்கப்படும் என்ற காட்டமான செய்தியை, ஊடகங்களின் வழி சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.   

கூட்டமைப்பைத் தோல்வியடைந்த தலைமையாக விளிக்கும் விக்னேஸ்வரன், தேர்தல் வழி, இன்னோர் அணிக்குத் தலைமையாக நினைக்கின்றார். ஏனெனில், அதுதான், இலகுவானது; அதிக உழைப்பைக் கோராதது.   

தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் பேரியக்கங்களைத் தோற்றுவிக்கும் ஆளுமையை, 2009க்குப் பின்னரான கடந்த பத்து வருடத்தில், கூட்டமைப்போ, கூட்டமைப்புக்கு எதிரான அணியோ, எதுவாக இருந்தாலும் வெளிப்படுத்தவில்லை. 

அப்படியான கட்டத்தில், தேர்தல் இழுபறி - குத்துவெட்டு அரசியலைத்தான் தொடர்ந்தும் பேச வேண்டியிருக்கும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியின்-தெரிவு-பேரவை-உரையை-முன்வைத்து/91-221251

Link to comment
Share on other sites

விக்­னேஸ்­வ­ர­னின் துரோ­கம்- மன்­னிக்­கவே முடி­யாதது!!

 
 
wig-sam.jpe
 
 
 

தமிழ்த் தேசிய அர­சி­ய­லில் தலைமை ஏற்­கத் தாம் தயா­ரென அறி­வித்­த­தன் மூல­மாக சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீண்ட நாள்­க­ளா­கத் தமது உள் ம­ன­தில் புதைந்து கிடந்த ஆசையை வௌிப்­ப­டுத்­தி­விட்­டார்.

தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் பெரும்பாலானோர் தமி­ழர்­க­ளின் தலை­மைப் பொறுப்பை ஏற்­கு­மாறு அவ­ரி­டம் கோரிக்கை விடுக்­காத நிலை­யில், அவர் தமது ஆசை கலந்து விருப்­பத்தை வௌிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

கூட்­ட­மைப்­பைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வது
முத­ல­மைச்­ச­ரது விருப்­பம்
அவர் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும், அதற்­குள் பிள­வு­களை ஏற்­ப­டுத்தி இறு­தி­யில் அதை அழிப்­ப­தற்­கா­க­வும், அந்த அமைப்­பி­னுள் சம்­பந்­த­னின் ஆத­ர­வைப் பெற்று நுழைந்­திருக்­கி­ றார் என்­பது தௌிவா­கத் தெரி­கின்­றது.

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தோற்­றுப் போன­தும் தெரி­கின்­றது. கொழும்­பில் போட்­டு­வைத்த தேவைக்கு உத­வாத பழைய இரும்பை வட­ப­கு­தித் தமி­ழர்­க­ளின் தலை­க­ளில் சம்­பந்­தன் சுமத்­தி­விட்­ட­தாக வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரொ­ரு­வர் ஒரு சந்தர்ப்பத்தில் சிலே­டை­யா­கச் சுட்­டிக்­காட்­டி­யமை மிக­வும் சரி­யா­னதுதான் என்­பது இப்­போ­து­தான் புரி­கின்­றது.

கொழும்­பைத் தமது வதி­வி­ட­மா­கக் கொண்­டி­ருந்த இந்த விக்­னேஸ்­வ­ரன், கொடிய போர் கார­ண­மா­கத் தமி­ழர்­கள் சொல்­லொ­ணாத் துன்­பங்­களை அனு­ப­வித்த போது அது தொடர்­பா­கச் சிறி­தும் அக்­கறை காட்­டி­ய­தில்லை. தாமும் தமது குடும்­ப­மும் என்ற வகை­யில்தான் அவ­ரது வாழ்வு கழிந்து கொண்­டி­ருந்­தது.

விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்­புக்­குள்
கொண்­டு­வந்தமை சம்­பந்தனின் தவறு
கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன், இவரை வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தி­ய­தன் மூல­மாக இமா­ல­யத் தவற்­றைப் புரிந்­தி­ருக்­கி­றார். கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான ஒரு­வரை முன்­நி­றுத்­தி­ய­தன் மூல­மாக அவர் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­குத் துரோ­கம் புரிந்­து­விட்­டார் என்றே கூற­வேண்­டும்.

2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போதே விக்­னேஸ்­வ­ரன் தமது உண்­மை­யான முகத்­தைக் காட்­டி­விட்­டார். கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரான தமது விரோ­தத்தை வௌிக்­காட்­டி­விட்­டார். அந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் கூட்­ட­ மைப்­புக்கு ஆத­ர­வான பரப்­புரை எதி­லும் விக்­னேஸ்­வ­ரன் கலந்­து­கொள்­ளாது ஒதுங்­கி­விட்­டார்.

2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற இதே தேர்­த­லி­லும் அவ­ரது நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவர் வௌிப்­ப­டை­யா­கவே கூட்­ட­மைப்பை எதிர்த்து நின்­றார். கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் உற­வைப் பேணிக் கொண்­டார்.

தேர்­தல் முடி­வு­கள் கூட்­ட­ மைப்­புக்­குச் சற்று ஏமாற்­றத்­தைக் கொடுத்­தன. அந்த அமைப்­புத் தொடர்­பாக மக்­க­ளி­டம் பரப்­பப்­பட்ட எதிர்­ம­றை­யான கருத்­துக்­க­ளும், கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே பிள­வு­கள் ஏற்­பட்­ட­மை­யும் சிறு சறுக்­கல் ஏற்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மா­கி­விட்­டன.

ஆனா­லும் வடக்­குக் கிழக்­கில் உள்ள அநே­க­மான உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பி­னால் முடிந்­தது. கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட சறுக்­கல் தொடர்­பாக விக்­னேஸ்­வ­ரன் மகிழ்ச்­சி­ய­டை­யவே செய்­தார். இதை அவர் பகி­ரங்­க­மா­கத் தெரி­விக்­க­வும் தவ­ற­வில்லை.

ஓர் அமைப்­பி­னுள் இருந்து கொண்டு அது தொடர்­பா­கத் தவ­றான தக­வல்­களை வௌியிட்­டு­வ­ரும் விக்­னேஸ்­வ­ரனை ஒரு நேர்­மை­யா­ன­வ­ரென எவ்­வாறு கூற­மு­டி­யும்? கூட இருந்­து­கொண்டே குழி­ ப­றிக்­கின்ற அவ­ரது செயல் அவர் முன்­னர் வகித்த பத­விக்கு இழுக்­கையே தேடித்­த­ரும்.

எங்­கேயோ கிடந்த தம்மை கூட்­ட­மைப்­பின் தலை­வர் அழைத்து வந்து உய।­ரிய ஓர் இடத்­தில் அமர்த்­தி­யதை இவர் எவ்­வாறு மறந்தார் என்­பது தெரி­ய­வில்லை. கூட்­ட­மைப்பை அழிப்­ப­தற்கு இவர் மேற்­கொள்­கின்ற நட­வ­டிக்­கை­கள் சம்­பந்­த­னுக்­குச் செய்­கின்ற மிகப்­பெ­ரிய துரோ­க­மா­கவே கணிக்­கப்­ப­டும். இவர் தற்­போது தம்மை ஆத­ரித்து நிற்­ப­வர்­க­ளுக்­கும் துரோ­கம் புரிய மாட்­டா­ரென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்?

தமிழ்­மக்­கள் பேரவை
அர­சி­யல் கல­வாமை என்ற
தனது கொள்­கை­யில் இருந்து
மாறு­பட்டு நிற்­கிறது

இவர் இணைத் தலை­வர் பத­வியை வகிக்­கும் தமிழ் மக்­கள் பேரவை அர­சி­யல் கல­வாமை என்ற தனது அடிப்­ப­டைக் கொள்­கை­யையே இழந்து நிற்­கின்­றது. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் அர­சி­யல் கூடா­ர­மா­கவே அது மாறி­விட்­டது. விக்­னேஸ்­வ­ரன் மூல­மா­கத் தமது அர­சி­யல் அபி­லா­சை­களை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்கு பேர­வை­யில் அங்­கம் வகிக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் சிலர் விரும்­பு­கின்­ற­னர்.

ஆவே­ச­மான உரை­கள் மூல­மாக விக்­னேஸ்­வ­ரன் தம்மை அர­சி­ய­லில் நிலை­நி­றுத்­திக்­கொள்­ளப் பார்க்­கின்­றார். இதன் கார­ண­மா­கவே தெற்­கில் அவ­ரொரு இன­வா­தி­யா­கக் கணிக்­கப்­ப­டு­கின்­றார். இனி­மேல் இவர் எதைக் கூறி­னா­லும் இன­வா­த­மா­கவே கணிக்­கப்­ப­டு­மென்­பதை மறுக்க முடி­யாது.

விக்­னேஸ்­வ­ரன் கூட்­ட­மைப்­புக்கு புரி­கின்ற துரோ­கத்தை எந்த வகை­யி­லும் மன்­னிக்க முடி­யாது. அவர் மனச்­சாட்சி உள்ள ஒரு­வ­ராக இருந்­தி­ருந்­தால், கூட்­ட­மைப்­பி­லி­ருந்து உட­ன­டி­யாக வில­கியி ருக்­க ­வேண்­டும். இதை­வி­டுத்து அந்த அமைப்­பி­னுள் இருந்­து­கொண்டே, அதைச் சிதைக்­க­வும், அழிக்­க­வும் முயல்­வது மிகப்­பெ­ரிய துரோ­மா­கும். இதை எந்த வகை­யி­லும் மன்­னிக்­கவே முடி­யாது.

https://newuthayan.com/story/09/விக்­னேஸ்­வ­ர­னின்-துரோ­கம்-மன்­னிக்­கவே-முடி­யாதது.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.