Jump to content

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

Recommended Posts

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

சிறகை விரி பின் பற என்ற தத்துவத்தை சொன்னது நீங்கள்தானா......?? இதனைத்தான் அறப்படித்த பல்லி கூழ் பானைக்குள் விழுந்தது என்று சொல்கிறார்களோ. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று மஹிந்தவும் சொல்றார்...

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று காசி ஐயாவும் சொல்றார்...

அவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில்  சிங்கள இனமான அரசியல்வாதி...

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

இரண்டுபேரின்  நரம்பு சூடேற்றும் வேலைகளும் ஒன்றே ஒன்றுதான் பண்ணும்....

எந்த  இனத்திற்காக போராடபோய் இன்று அதே இனத்திடம் யாசகம் வேண்டியும்,சல்லிகாசு தட்டில் விழாத நிலையில் வெறும் திருவோட்டுடனும் காய்ந்த வயிறுடனும் வாழும்

பல ஆயிரம் முன்னாள் போராளிகளிடமிருந்து அவர்களுக்கு சொத்தென்று சொல்லி  எஞ்சியிருக்கும் ஒரேயொரு உயிரையும் அவர்களிடம் இருந்து பறிச்சிடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை இப்படி ஒரு விடையத்தைக் கூறச்சொல்லியிருக்கும் அப்போதான் தமிழ்நாட்டிலும் இலங்கைத்தீவிலும் அவர்கள் தங்கள் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் முன்னெடுக்கலாம் காத்தமுத்து சிவானந்தன் அவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் மனிதர்கள் தாம் பேசுவதுபற்றி தெளிவுடன் இருக்கிறார்களா என்று எண்ணத் தோன்றும்.

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதோ அல்லது தலைவர் பிரபாகரன் இன்னும் இருக்கிறார் என்பதோ பலரைப் பொறுத்தவரையில் நினைப்பதற்கு சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் யதார்த்த நிலை என்று வரும்போது சிலவேளைகளில் இப்படியான கருத்துக்கள் கேலியாக மாறிவிடுவதுடன் இவர்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

இப்படியான முழு லூசுகளால்  இன்னமும் கிடைக்க வேண்டியதும் கிடைக்காமால் தள்ளி போகின்றது போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகின்றன இன்னமும் சனம் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாமல் போராடுதுகள்  என்ற யதார்த்தம் கூட விளங்காமல் உளறுகிறார் . பிடிச்சுக்கொண்டு போய் கீல் பாக்கம் பயித்தியகார மருத்துவமனையில் சேர்த்து விட்டால் தாயகத்தில் இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் நிம்மதியாய் இருக்கும்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

45_E10_CBC-_EFFB-439_E-8_C2_F-2_A73_BA06

நானும் இதைத்தான் நினைத்தேன்.?

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

இப்படியான கருத்துக்களை இணையங்களும் வெளியிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. 

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 9:57 PM, valavan said:

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

99.99% ஆன தமிழ் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் 99.99% கற்பனையில் கோட்டைகட்டி அதை உண்மையென நம்பி வாழ்பவர்கள்.
இவர்களால் உருப்படியாக சாதிக்கப்பட்டது என்று இன்றுவரை எதுவுமே இல்லை!
இதற்கு உதாரணமாக கம்பன்கழக புழுதிவாரிதி ஜெயராஜ் முதல் காசியானந்தன் ஈறாக அப்துல்ரகுமான் வரை கூறலாம்.

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 3:50 AM, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம் இனி மக்கள் ( போராளிகள் ) நிம்மதியாக வாழட்டும் இவர் எங்க்ருந்தும் பேசிட்டு போகட்டுமே 

On 9/5/2018 at 11:55 PM, ragunathan said:

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

ஒர் ஆளை விட்டுடீங்க  ..............சிங்கன் சீமானை :):104_point_left:

Link to comment
Share on other sites

9 hours ago, கலைஞன் said:

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

இந்த பதிவிலுள்ள ஒரு யாழ் உறவின் கருத்தை நீங்கள் கவனிக்கத் தவறியதுபோல் தோன்றுகிறது அதனால் அதனை இங்கு உங்களுக்காக இணைத்துள்ளேன். கவனமெடுத்து படியுங்கள், உங்களுக்கும் புரியவரும். :103_point_down::103_point_down:

On ‎9‎/‎5‎/‎2018 at 9:06 PM, nedukkalapoovan said:

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.