Sign in to follow this  
நவீனன்

‘என்னைத் தடை செய்து விடாதீர்கள்’: விபரீதம் புரிந்ததும் கெஞ்சிய கோலி: ஆஸி. தொடரில் மன்னிப்பு கேட்ட தப்பித்த சுவாரஸ்யம்

Recommended Posts

‘என்னைத் தடை செய்து விடாதீர்கள்’: விபரீதம் புரிந்ததும் கெஞ்சிய கோலி: ஆஸி. தொடரில் மன்னிப்பு கேட்ட தப்பித்த சுவாரஸ்யம்

 

 
kohli11

கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி ரசிகர்களைப்பார்த்துச் செய்த செயலால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் போட்டி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு தடையிலிருந்து தப்பித்த விஷயம் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது அப்போது, சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

 

அப்போது, ரசிகர்கள் கிண்டல் செய்ததைத் தாங்க முடியாத கோலி, ரசிகர்களைப் பார்த்து தனது கையின் நடுவிரலை உயர்த்தி சைகை செய்தார். இது மறுநாள் ஆஸ்திரேலிய நாளேடுகளில் வெளியாகி பெரும் பிரச்சினையானது. ஆனால், அதன்பின் கோலி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்தத்தகவலும் இல்லை.

இந்தச்சம்பவத்துக்கு பின் நடந்த விஷயங்களை கேப்டன் விராட் கோலி, விஸ்டன் கிரிக்கெட் மாத இதழில் பகிர்ந்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் கையின் நடுவிரலை உயர்த்தி சைகை செய்வது மிகவும் அநாகரீகமான, தனிமனிதரைஇழிவுப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் கடந்த 2012-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது நான் மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தேன். அப்போது ரசிகர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்ததும், அவர்களைப் பார்த்து எனது கைநடுவிரலை உயர்த்தி சைகை செய்தேன். அதன் விபரீதம் அப்போது புரியவில்லை. மறுநாள் என்னுடைய புகைப்படம் அனைத்து நாளேடுகளிலும் வந்திருந்தது.

kohlijpg
 

என்னை போட்டிநடுவர் ரஞ்சன் மடுகலே அழைத்திருந்தார். அவரின் அழைப்பே ஏற்றுச் சந்திக்க சென்றேன். மைதானத்தில் நேற்று என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டார். ஒன்றும் நடக்கவில்லை என்று நான் கூறினேன்.

அவர் திடீரென கோபமடைந்து, என் முன் நாளேட்டை தூக்கிஎறிந்து இதற்கு என்ன அர்த்தம், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ஆத்திரமாகக் கேட்டார்.

ஏதோ மிகப்பெரிய தவறுநடந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. உடனே என்னை மன்னித்துவிடுங்கள், தயவு செய்து என்னைத் தடை செய்துவிடாதீர்கள். அதன் விபரீதம் தெரியவில்லை என்றேன். அவர் அதை புரிந்து கொண்டு, என்னை ஏதும் சொல்லாமல் வெளியே அனுப்பிவிட்டார்.

என்னுடைய செயல்பாடுகள் இளமைக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி பெருமை கொண்டேன். ஆனால், என்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. உலகில் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளக்கூடாத என்ற சிந்தனையில் அவ்வாறு நான் இருந்தேன். ஆனால்,அதை இப்போது நினைக்கும் போது மகிழ்ச்சி இல்லை. இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்

https://tamil.thehindu.com/sports/article24873838.ece

Share this post


Link to post
Share on other sites

`சிட்னி மைதானத்தில் நடுவிரலை உயர்த்தியது ஏன்?'- 6 ஆண்டுகளுக்குப் பின் மனம் திறந்த கோலி

 
 

சிட்னி டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை நோக்கி நடுவிரலைக் காட்டிய விராட் கோலி தன் செய்கைக்காக போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலேவிடம் மன்னிப்புக் கோரியதாக தற்போது கூறியுள்ளார். 

விராட் கோலி

2012-ம் ஆண்டு சிட்னி நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. எல்லைக் கோடு அருகே நின்று கொண்டிருந்த அப்போதையை அணியின் இளம் வீரரான விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எரிச்சல் அடையும் வகையில் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். கடுப்பான விராட் கோலி  ரசிகர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இந்தச் சம்பவம் குறித்து விராட் கோலி தற்போது 'விஸ்டன்' இதழில் மனம் திறந்து கூறியதாவது:

 

 

``நடுவிரலைக் காட்டிய அடுத்த நாள் காலை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலேவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நேற்று பவுண்டரி லைன் அருகே என்ன நடந்தது என்று கேட்டார். ஒன்றும் நடக்கவில்லையே... சும்மா வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன் என்று பதிலளித்தேன். உடனே மேஜையில் பத்திரிகை ஒன்றை தூக்கிப் போட்டார். நடுவிரலை உயர்த்திக் காட்டிய என் புகைப்படம் பெரியதாக அதில் இடம் பெற்றிருந்தது. எனக்குள் ஒரு ஷாக். உடனே சார்.. மன்னித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைத் தடை செய்து விடாதீர்கள் என்று அவரிடத்தில் கூறினேன். ரஞ்சன் மதுகலே ஒரு ஜென்டில்மேன். என்னை அவர் புரிந்துகொண்டார் '' என்று விராட் தெரிவித்துள்ளார். 

 

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு விராட் கோலி வெளியிட்ட ட்விட்டில், ``என் வாழ்க்கையில் நான் கேட்ட மோசமான வார்த்தை அது.  ரசிகர்களின் செய்கைக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை கிரிக்கெட்டர்களுக்கு இல்லை. தாயாரை, சகோதரியைத் தவறாகப் பேசினாலும் பதிலடி கொடுக்க முடியாது'' என்று கூறியிருந்தார். விஸ்டன் இதழில் தன் பால்ய கால பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவையும் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார். ``தன் குடும்பத்துக்குப் பிறகு தன்னை அதிகமாகப் புரிந்துகொண்டவர் ஆனந்த் ஷர்மாதான். 9 வயதில் இருந்து அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். இப்போது, வரை அவருடன் என்  ஆட்டம் குறித்து விவாதித்து வருகிறேன் '' என்று ஆனந்த் ஷர்மா குறித்து விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/sports/136135-why-i-showed-middle-finger-to-a-section-of-the-crowd-virat-kohli-recalls-sydney-test-row.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this