யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்

Recommended Posts

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்

 

peraivalan.jpg?resize=615%2C350
இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

 

இதனையடுத்து கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்ட போதும் அதனை மத்திய அரசும் ; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அதனனை நிராகரித்தனர்.

ஜனாதிபதியின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது

எனவே, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்த மனு மீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

http://globaltamilnews.net/2018/94480/

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அதிகாரம்; ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்

 

 
rajiv2410852f

கோப்புப் படம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, தமிழக அரசு இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பலாம் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, ''ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம்'' என்றார்.

 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஆளுநர் அந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்க வாய்ப்புள்ளது.

என்ன நடந்தது?

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம் கெடு

இந்த முடிவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதனிடையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் நிராகரிப்பு

இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.

இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்நிலையில் கருணை அடிப்படையில் எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.ஆனால் எழுவரை விடுவிக்க மறுத்த மத்திய அரசு, அதற்கான கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கக் கோரி, தமிழக அரசு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்த முடிவு மீண்டும் மத்திய அரசிடமே சென்றுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24879887.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

 

Share this post


Link to post
Share on other sites

மிக நல்ல செய்தி. 

ஆயினும் ஆளுனர், பாஜக ஆளாயிற்றே....

Share this post


Link to post
Share on other sites

உடனடியாக விடுலை செய்யவேண்டும்- பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்

 

 
 

ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

28வது ஆண்டாவது இந்த வழக்கை முடித்து வைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது மகிழச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்கள் விடுதலை தொடர்பில் இரு தடவை அறிவித்திருந்தார் இதன் காரணமாக இவர்களை தமிழக அரசு உடனடியாக  விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

atputhammal_1.jpg

தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்திக்கப்போகின்றேன் அந்த சந்திப்பின் போது விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பேன் எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39862

Share this post


Link to post
Share on other sites

நல்ல செய்திதான்..

இன்னமும் காலத்தை இழுத்தடிக்காமல், சீக்கிரம் விடுதலை பெற வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

விடுதலையை சாத்தியமாக்க தமிழகம் ஒன்றிணைந்து தமிழக அரசிடமும்.. ஹிந்திய மத்திய அரசு ஆளுநரிடமும் பலமான ஒற்றுமைக் குரலை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடுதலை.. இந்த தீர்ப்பை அடுத்து..  தன்னிச்சையாக நிகழும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அப்படி தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்யின் அது வரலாற்றில் மதிக்கப்படும். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

Share this post


Link to post
Share on other sites

இவர்களுடைய விடுதலையை அரசியலாக்கி அதன் மூலம் மத்திய மாநில
கூட்டணி என்ற அரசியல் சாக்கடையில்  மாநிலக் கட்சிகளும்
மத்தியில் அரசுகளும் நீண்ட காலமாகவே சேறடிக்கின்றனர்.
இப்போதும் அப்பாவிகளின் வாழ்க்கையை நினைக்காமல் எல்லாம் அரசியலாகவே இருக்கின்றது.
நீதிமன்றிற்கு இல்லாத உரிமை  ஆளுநருக்கு இருக்கும் வரையில் எல்லாமே கேள்விக்குறிதான்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, colomban said:

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

பழம் தின்று, வீசி எறிந்த கொட்டையும் முளை போட்டாச்சு என்று சொல்வார்களே...

அதேபோல 27 வருசத்துக்கு முந்தி வந்த கேள்வி... இப்ப கேட்டு என்ன பிரயோசனம்...

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, colomban said:

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

அவர்கள் அப்பாவிகள் என்பது நியாயம்.  பின்னர் சொல்கிறீர்கள் புலிகள் திட்டத்துக்கு கருவி ஆக்கினார்கள் என்று..??!

அதுக்கு மேல.. புலிகள் தான் குறித்த சம்பவத்துக்குப் பொறுப்பு என்பதும்.. இவர்களை புலிகள் பாவித்தார்கள் என்பதும்.. எப்படி நிரூபிக்கப்பட்டது..??!

உங்களின் கற்பனைகளை புலிகள் மீதும்.. இந்த அப்பாவிகளை புலிகளின் கருவிகளாக்கி.. மீண்டும் குற்றவாளிகள் ஆக்காமலும் விட்டாலே போதும்.

ராஜீவ் கொலைக்கு முன் அவ்விடத்துக்கு விஜயம் செய்த சுப்பிரமணியம் சுவாமி.. சூ அடிக்கத்தான் போனன் என்று சொல்லிக்கிட்டு திரியுறார்.. அவரிடம் போய் இப்படியான கேள்விகளை கேட்டு பதில் வாங்குவீங்களா கொழும்பான் சார்..??! ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எத்தனை  வருடங்களானாலும்

ஈழத்தமிழருடன் இவ்வாறு  எலியும் பூனையும்  விளையாட்டை  விளையாடுவதை  இந்தியா  நிறுத்தாது

ராஜீவ்காந்தியின் கொலை  கூட

இந்த  வதைப்பினால்  எழுந்த தாங்க முடியாத  வலியின்   கோபமே..

Share this post


Link to post
Share on other sites

7 தமிழர்களும் கருணை மனுதாக்கல் செய்யும் வாய்ப்பு

 

 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது. 

முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின் அந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

rajiv-murder.jpg

என்ன வழக்கு இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டது.

குறித்த கொலையை சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால், மத்திய அரசுக்கு மட்டுமே விடுதலை செய்ய உரிமை உள்ளது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி எண் 161இன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கருணை மனு இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

supreme-court-679-1536289430.jpg

இன்று அவர்கள் ஆளுநரிடமும், முதலமைச்சரிடம் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். என்ன முடிவு ஆனால் ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு ஆளுநர்களிடம் இந்த 7 தமிழர்களும் கருணை மனுவை அளித்துள்ளனர். 

ஜனாதிபதியிடமும் கருணை மனுவை அளித்து இருக்கிறார்கள். முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் தற்போது தமிழக ஆளுநரிடம் இருப்பதால், என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/39924

Share this post


Link to post
Share on other sites

பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை ஆவார்களா?

ராஜீவ் கொலை வழக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவை இன்று மாலை கூடுகிறது.

தேர்தல் பிரசாரத்திற்காக 1991ல் ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தனுக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுட்கால சிறைதண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி,ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோரும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாகத் தனது மகன் பேரறிவாளன் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் வழக்கு நடத்தப்பட்ட விதத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் கூறி வருகிறார். தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடிய அவர், தண்டனை காலத்தில் பேரறிவாளனின் நன்னடத்தையைக் காரணமாக கொண்டு அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரிவந்தார்.

ராஜீவ் கொலை வழக்குபடத்தின் காப்புரிமைSTRDEL

வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல சமூகஅமைப்புகள் பிரசாரம் செய்துவந்த நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை பற்றி முடிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை இன்று கூடி முடிவுசெய்யவுள்ளது. ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டபோது, பதில் ஏதும் வரவில்லை.

ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-45463758

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

 

 

 
rajivjpgjpgjpgjpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்யத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

   
 
rajnjpg
 

இவர்களை விடுதலைக் குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலைக் குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4மணிக்கு கூடியது. ஏறக்குறைய 2 மணிநேரம்வரை இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

அமைச்சரவை முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

jeyakumarjpg

அமைச்சர் ஜெயக்குமார்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை காலதாமதம் இன்றி உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2-வது தீர்மானமாகத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாவதாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரை சூட்டி, எம்.ஜி.ஆர். மத்திய ரயில்நிலையம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருதுவழங்க பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ராஜீவ் கொலையில் நீண்ட ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாகும். எந்தவிதமான தாமதமும் இன்றி ஆளுநருக்கு உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை செய்ய வேண்டிய விஷயத்தில் ஆளுநர் தாமதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தமிழக அமைச்சரவையின் இந்தப் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். 7 பேர்விடுதலை தொடர்பாகஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வலுசேர்த்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24908715.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, நவீனன் said:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருதுவழங்க பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தீர்மானத்துக்கு நன்றி.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு என்ன அர்த்தம்? ?

உச்சநீதிமன்றால் சிறைக்கு இவரது கூட்டு களவாணிகள் அனுப்பபட்டு  உள்ளனர். இவர் உயிருடன் இருந்தால் உள்ள இருப்பர் கம்பி எண்ணிக் கொண்டு...

பிறகு எப்படி அந்த விருது கிடைக்கும்? ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, Nathamuni said:

தீர்மானத்துக்கு நன்றி.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு என்ன அர்த்தம்? ?

உச்சநீதிமன்றால் சிறைக்கு இவரது கூட்டு களவாணிகள் அனுப்பபட்டு  உள்ளனர். இவர் உயிருடன் இருந்தால் உள்ள இருப்பர் கம்பி எண்ணிக் கொண்டு...

பிறகு எப்படி அந்த விருது கிடைக்கும்? ?

உஷ் உஷ்   இப்ப எமக்கு அலுவல் நடக்கவேணும்.

Share this post


Link to post
Share on other sites

ஆளுநர் கருணை காட்டவேண்டும்- நளினியின் தாயார்

 

 
 

தமிழக ஆளுநர் கருணை காட்டவேண்டும் என ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தாயார் பத்மாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழு தமிழகர்களின் விடுதலை தொடர்பில்  தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையிலேயே நளினியின் தாயார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள நளினியின் தாயார் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கருணை காட்டவேண்டும், எனது மகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

nalini_murugan.jpg

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஆளுநர்  அவர்கள் 27 வருடங்களை சிறையில் கழித்துள்ளதை கருத்தில்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/40058

Share this post


Link to post
Share on other sites

7 தமிழரை விடுதலை – தமிழக அரசின் பரிந்துரையை, ஆளுநர் நிராகரிப்பார்…

 

 

Subramaniyaswamy.jpg?resize=800%2C600

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். எனினும் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும்,  தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, “இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு ஆளுநரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என நம்புகிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/94957/

Share this post


Link to post
Share on other sites

இந்த ஏழுபேரும் குற்றவாளிகள் என்பதை நான் நம்பவில்லை. ஏனென்றால் இந்திய நீதித்துறையும், காவல்த்துறையும் நீதியான, பக்கச் சார்பில்லாத விசாரணையை நடத்தியிருக்கும் என்பதை இங்கு எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

 வேண்டுமென்றே திட்டமிட்டுச் சோடிக்கப்பட்ட சாட்சிகள், வேண்டுமென்றே விசாரணைக்குட்படுத்தாது விடப்பட்ட சாட்சிகள் என்று ஒரு அவசரப்பட்டு, புலிகள் மீது பழியைப் போட்டுவிடவேண்டுமென்ற நோக்குடனேயே நடத்தி முடிக்கப்பட்ட விசாரணை எபது தெளிவு.

சரி, ஒரு பேச்சுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட, 27 வருடங்கள் தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்து, கொலையாளிகள் என்ற பட்டத்தைச் சுமந்து இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு தயவு காட்டுவதில் என்ன தவறிருக்கிறது?

கொழும்பான், உங்கள் கேள்வியால் கவலைப்படுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவின் முன்னணிச் செய்தி நிறுவனங்களில் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தியா டுடே இணையத்தளத்தில் இந்தச் செய்திக்குப் பின்னூட்டமாக இடப்பட்டு வரும் கருத்துக்களில் பெரும்பாலானவை இவர்கள் விடுதலை செய்யப்படக் கூடாதென்று கோரி வருகின்றன. 

தமது பிரதமரைக் கொன்றவர்கள், கொலையாளிகள், தமிழர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று விழித்து தமிழின எதிர்ப்புக் கக்கப்பட்டு வருகிறது.

பலருக்கு நடந்தவை பற்றியோ அல்லது ரஜீவ் கொல்லப்படு நிகழ்வுக்கு முன்னோடியாக நடந்த நிகழ்வுகள் பற்றியோ எந்தவித அறிவும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் கூட, இந்தியத் தேசியவாதம் எனும் போலியான கருத்தியலை மட்டுமே கொண்டு எழுதிவருகிறார்கள்.

முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Rajiv-Gandhi-assassination-case-Tamil-Nadu-cabinet-decides-to-recommend-release-of-all-seven-convicts/articleshow/65743007.cms

 

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

``7 பேர் விடுதலை நியாயமானதா.. சாத்தியம் ஆகுமா?" என்ன சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்?

 

28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.

``7 பேர் விடுதலை நியாயமானதா.. சாத்தியம் ஆகுமா?
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இம்முறையும் விடுதலை மறுக்கப்படுமா அல்லது விடுதலை செய்வார்களா என்பது பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கேள்வி. 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இவர்களின் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும், ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. இதுகுறித்து சிலரிடம் பேசியபோது.. 

ஹென்றி டிபேன்; 

 

 

ஹென்றி டிபேன், ஏழு பேர் விடுதலை``7 பேரும் தவறு செய்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்களை சிறை வாழ்க்கை திருத்தியிருக்காதா?. சிறையில் ஒருவர் அடைக்கப்படுவதே தண்டனை என்பதைத் தாண்டி மறுவாழ்வுக்கு அவர்களைத் தயார் செய்வதுதானே. அதை போதும், போதும் என்கிற அளவுக்கு இவர்கள் பெற்றுவிட்டார்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் சார்ந்து இருக்கிற சிக்கல்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவை சட்டரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் எப்போதாவது அதற்குப் பதில் கூறியிருக்கிறார்களா?. நீண்டநாள்களுக்குப் பிறகு முறையாக ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அரசாங்க நடைமுறைகள் 7 பேருக்குச் சாதகமாகப் போய்க் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தயவுசெய்து இதில் அரசியல் செய்யாதீர்கள். ஏற்கெனவே, இவர்கள் விடுதலையில் அரசியல் செய்து நீண்டகாலம் அவர்களைச் சிறையில் இருக்க வைத்துவிட்டீர்கள். 7 பேரின் குடும்பமும் பல கனவுகளுடன் காத்திருக்கின்றன." 

 

 

கோபண்ணா; 

``முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் `கொலைக் குற்றவாளிகள்' என 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக அவரைக் கொல்ல வேண்டுமென விடுதலைப் புலிகள் தீட்டிய சதித் திட்டத்தின் காரணமாகத் தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். இதன்மூலம் நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் இறையாண்மையையே அச்சுறுத்தினர். 

கோபண்ணாஇதில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் விடுத்துள்ளன. இவர்களை விடுவிப்பதற்குக் காட்டுகிற அக்கறை இதேபோல கொலைக் குற்றம் செய்து சிறையில் இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் காட்டப்படுமா? இவர்களை விடுவிக்கும் போது இதேபோல சிறையிலிருக்கும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் ஏன் கோரவில்லை?. ஆனால், `நாங்கள் நிரபராதிகள், ராஜீவ்காந்தி கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நாங்கள் அப்பாவிகள்' என்று கூறுவது என்ன நியாயம். உச்சநீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட பிறகு நிரபராதிகள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். இதை நியாயப்படுத்திப் பேசுபவர்கள் என்ன சூப்பர் நீதிபதிகளா. இதைவிட நீதிமன்ற அவமதிப்பு வேறு உண்டா. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் காட்டுகிற கனிவை மற்ற குற்றவாளிகள் விஷயத்தில் ஏன் காட்டவில்லை. 7 பேருக்குக் காட்டுகிற பரிவு ராஜீவ்காந்தியோடு கொல்லப்பட்ட 18 பேரின் குடும்பத்தினருக்கு ஏன் காட்டப்படவில்லை. 7 பேர் தமிழர்கள் என்றால் 18 பேர் தமிழர்கள் இல்லையா. தமிழ் மக்களை அதிகமாக நேசித்தவர் ராஜீவ்காந்தி. அதேபோல, தமிழ் மக்களும் ராஜீவ்காந்தியை மிகவும் நேசித்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக ஒப்பந்தம் போட்டு உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை படுகொலை செய்த பாவத்தைச் செய்தவர்களுக்குப் பரிந்து பேசலாமா. இப்படிப் பேசுவது மனுநீதிச் சோழன் வழிவந்த தமிழர் பண்பாடா. 

 

 

நீண்டகாலமாகச் சிறையில் இருப்பதால் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பழி வாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கருணை மனுவை 11 ஆண்டுக்காலம் முடிவெடுக்காமல் காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டதால்தான் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. சட்டமும், நீதிமன்றமும் என்ன முடிவெடுக்கிறதோ, அதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்." 


ஹரி பரந்தாமன் (ஓய்வுபெற்ற நீதிபதி): 

``தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவரை விடுதலை செய்ய அரசுக்கு இரண்டுவிதமான அதிகாரங்கள் உள்ளன. ஒன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கும் அதிகாரம். அச்சட்டத்தின்படி குற்றவியல் வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து இருந்தால், அந்த வழக்கில் தண்டனை பெற்றவரை மாநில அரசு விடுதலைச் செய்ய வேண்டுமென்றால் அதுபற்றி மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும். (Consultant). 

இச்சட்டப்படி 2014 பிப்ரவரியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள்தண்டனையில் இருந்த 7  பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதை மத்திய அரசுக்குத் தெரிவித்தார். உடனே, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்று விடுதலைக்குத் தடைபெற்றது. 2014 மே மாதத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அரசு போட்ட வழக்கைத் தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க தொடர்ந்து நடத்தியது. 

அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 2.12.2015ல் தீர்ப்பு கூறியது. அத்தீர்ப்பில் மத்திய அரசின் ஒப்புதலின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய முடியாது என்றது உச்சநீதிமன்றம். ஆனால், அதே தீர்ப்பில் மாநில அரசு அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்தால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று குறிப்பிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மத்திய அரசு அப்போது ஒப்புதல் தர மறுத்ததால் விடுதலை சாத்தியமற்றதாகி விட்டது. 

நீதிபதி ஹரி பரந்தாமன்இந்தச் சூழலில் பேரறிவாளன் போட்ட வழக்கில் 161ன் கீழ் அவரை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் இந்த செப்டம்பர் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கி, பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய தமிழக ஆளுநரை பரிசீலிக்கக் கோரியது. எனவே, அத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கடந்த 9ம் தேதி ஏழு பேரையும் அரசமைப்புச் சட்டம் 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்ய முடிவு எடுத்து, அதை ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. அதொரு பக்கம் இருக்க, எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் எந்த ஆயுள்தண்டனை கைதியும் 28 ஆண்டுகள் சிறையில் இருந்ததில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஆகிய தினங்களில் எத்தனையோ கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. ஒருவேளை இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமையான ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டதனால் இவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆனானப்பட்ட மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இதே இந்திய அரசு எப்படி விடுதலை செய்தது! கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்டே, மதன்லால் பெஹ்வா ஆகிய 3 பேரும் காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் 16 ஆண்டுகளே சிறையில் இருந்தனர். ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் படேலும் இறந்து போனதும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

மட்டுமல்லாது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பல அதிகாரிகள் பின்வாங்கிவிட்டனர். இவ்வழக்கை விசாரித்த 3 பேர்கொண்ட நீதிபதிகள் அமர்வில் தலைமை தாங்கிய கே.டி தாமஸ், `இவர்களை விடுதலை செய்யலாம்' என சோனியா காந்திக்குக் கடிதமே எழுதிவிட்டார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் புலனாய்வு செய்த தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், `வழக்கின் சூழலைக் கணக்கில் கொண்டால் இந்த 7 பேரையும் விடுதலை செய்யலாம்' எனக் கருத்துத் தெரிவித்தார். 

மற்றொரு புலனாய்வு அதிகாரியான தியாகராஜன், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு விட்டார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுவே போட்டார். 

இம்மாதிரியான சறுக்கல்கள், சந்தர்ப்பங்கள் மகாத்மா காந்தி வழக்கில் இல்லை. ஆனால், அவர்கள் மன்னித்து விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற அந்த 3 பேருக்கு ஒரு நியாயம். இந்த 7 பேருக்கு ஒரு நியாயமா. தமிழர்கள் என்பதால் இந்த இளக்காரமா. இனியும் காலம் தாழ்த்தாது இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே என் கோரிக்கை.", என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/136576-is-the-release-of-rajiv-gandhi-murder-accused-possible-this-time.html

Share this post


Link to post
Share on other sites
On 9/9/2018 at 11:40 PM, ragunathan said:

இந்தியாவின் முன்னணிச் செய்தி நிறுவனங்களில் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தியா டுடே இணையத்தளத்தில் இந்தச் செய்திக்குப் பின்னூட்டமாக இடப்பட்டு வரும் கருத்துக்களில் பெரும்பாலானவை இவர்கள் விடுதலை செய்யப்படக் கூடாதென்று கோரி வருகின்றன. 

தமது பிரதமரைக் கொன்றவர்கள், கொலையாளிகள், தமிழர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று விழித்து தமிழின எதிர்ப்புக் கக்கப்பட்டு வருகிறது.

பலருக்கு நடந்தவை பற்றியோ அல்லது ரஜீவ் கொல்லப்படு நிகழ்வுக்கு முன்னோடியாக நடந்த நிகழ்வுகள் பற்றியோ எந்தவித அறிவும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் கூட, இந்தியத் தேசியவாதம் எனும் போலியான கருத்தியலை மட்டுமே கொண்டு எழுதிவருகிறார்கள்.

முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Rajiv-Gandhi-assassination-case-Tamil-Nadu-cabinet-decides-to-recommend-release-of-all-seven-convicts/articleshow/65743007.cms

 

 

ஒவ்வொன்றும் ஒவ்வொறுவித தனிபட்ட கருத்துக்கள்.

ஏற்கனவே ஜனாதிபதி நிராகரித்த நிலையில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே ஆளுனர் நிராகரிக்க காரணம் சொல்ல முடியாது. ஏனெனில் அது மீண்டும் உச்ச நீதிமன்ற பரிசீலணைக்குள்ளாகும்.

Share this post


Link to post
Share on other sites

7 பேர் விடுதலை விவகாரம்.. ஆளுநர் நினைத்தால்... பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி!

 
   
  7 பேர் விடுதலையில் பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி- வீடியோ

  சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

   

  இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

   
   
  பரிந்துரை செய்வது

  பரிந்துரை செய்வது

  இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று கூடியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   
  அதிகாரம் உண்டு
    

  அதிகாரம் உண்டு

  விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

   
  நிராகரிக்க அதிகாரம் உண்டு
   

  நிராகரிக்க அதிகாரம் உண்டு

  எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

   
  குடும்பத்தினர் வேதனை
    

  குடும்பத்தினர் வேதனை

  எப்போதும் மக்கள் நலனுக்கு எதிராகவே பேசி வரும் சுப்பிரமணியன் சுவாமி 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்திலும் இவ்வாறு பேசியுள்ளதை கேட்டு அவர்களது குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

  https://tamil.oneindia.com/news/tamilnadu/subramaniyan-swamy-says-that-tn-governor-may-reject-the-resolution/articlecontent-pf324577-329425.html

  Share this post


  Link to post
  Share on other sites

  ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல்

   
   

  ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும்

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  ஏழு பேரின் விடுதலை தமிழக ஆளுநர் முடிவு

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. ஆனால், ஏழு பேரின் விடுதலை செய்து குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

   

   

  இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி, 'ஏழு பேரின் விடுதலைக் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும். மத்திய புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது. ஆகையால், ஆளுநர்  தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கவோ அல்லது மறுக்கவோ மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதைத் தெரிவித்து, இது குறித்து வெளிநாட்டில் விசாரணை  நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது சி.பி.ஐ. 

   

   

  மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-யின் படி, குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசுடன் ஆலோசனை பெற்ற பிறகே மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும். ஆகையால், மாநில அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

  https://www.vikatan.com/news/india/136665-governor-has-no-power-to-release-rajiv-gandhi-rajiv-gandhi-assassination-case-prisoners-say-home-ministry-officials.html

  Share this post


  Link to post
  Share on other sites

  விடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்

  1097_thumb.jpg
   

   

  விடுதலைச் சூழல் விரல்நுனி வரை வந்து கைநழுவிப் போன தருணங்கள் நிறைய. அதனால்தான், அவர்களால் கொண்டாட முடியவில்லை; நம்பிக்கை மட்டுமே தெரிவிக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் ஏழு பேருக்கு மீண்டும் ஒரு விடுதலைத் தருணம் வாய்த்திருக்கிறது. இம்முறை அது சாத்தியமாகுமா? செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி அளித்த பரிந்துரையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என்ன செய்யப்போகிறார்? எல்லாக் கண்களும் கிண்டி ராஜ்பவன் நோக்கியே இருக்கின்றன.

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 27 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தனு, ராஜீவ் காந்தியோடு உடல் சிதறிப் பலியாகிப்போனார்; ராஜீவ் கொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் இந்த வழக்கில் சிக்கித் தண்டனை பெற்ற ஏழு பேர், 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். விடுதலை தொடர்பாக, மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. அதற்கு, சட்டப்படியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப் போடப்படும் முட்டுக்கட்டைகளை ஏழு பேரும் சட்டத்தின் துணைகொண்டே ஒவ்வொரு முறையும் உடைக்கின்றனர். இந்த முறையும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் உடைபட்டுள்ளன. ஆனால், விடுதலை சாத்தியமா? 

  p4a_1536666427.jpg

  தூக்குத் தண்டனை ரத்து!

  ராஜீவ் கொலை வழக்கில் இறுதியாக வழங்கிய தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; மற்றவர்களை விடுதலை செய்தது.

  நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் மாறி மாறி மனுக்கள் போடப்பட்டன. அதையடுத்து, 2000 ஏப்ரல் 26 அன்று, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை, நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தது. இந்த நிலையில், 2011 செப்டம்பர் 9-ம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களைத் தூக்கிலிடத் தேதி குறிக்கப்பட்டது. உடனடியாக அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு, 2014 ஜனவரி 21-ம் தேதி தீர்ப்பளித்தது. ‘கருணை மனுக்களை எந்த முடிவும் எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டது தவறு. எனவே, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது’ என்பதே அந்தத் தீர்ப்பு. தூக்குத் தண்டனை ரத்தானது. ஆயுள் தண்டனை தொடர்ந்தது.

  ஜெயலலிதா தீர்மானம்!

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா, திடீரென சட்டமன்றத்தைக் கூட்டினார். 2014 பிப்ரவரி 19-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் கூடிய சட்டமன்றம், “23 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி தமிழக அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு, மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தன் கருத்தைத் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிக்காமல், காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி, ஏழு பேரையும் என் தலைமையிலான அரசு விடுதலை செய்யும்” என அறிவித்தார்.

  தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதே சமயத்தில், ‘இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா’ என்பதை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது.

  p4_1536666410.jpg

  அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சில விதிமுறைகளை உறுதிப்படுத்தினர். அதன் சாரம்...

  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-ன் படி,

  1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையைத் தமிழக அரசு குறைக்க முடியாது.

  2. சி.பி.ஐ. உள்ளிட்ட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனையைக் குறைக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

  3. இது தொடர்பான அரசியல் சாசனப் பிரிவில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசின் ‘ஒப்புதல்’ பெற வேண்டும் என்பதே அர்த்தம்.

  4. ஆயுள் தண்டனை என்பது ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.

  5. அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி கவர்னருக்கு உள்ள கருணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசு ஏழு பேரை விடுதலை செய்வதில் மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் முடிவெடுக்கலாம். நாங்கள் அளித்துள்ள இந்த வரையறைகளின்படி, விடுதலை தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரித்துத் தீர்ப்பளிக்கும் என்று குறிப்பிட்டனர்.

  நளினி மனு, பேரறிவாளன் கடிதம்!

  உச்ச நீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை நளினி தாக்கல் செய்தார். அதில், தன்னை அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, தமிழக அரசு இதில் முடிவெடுக்கட்டும்’ என உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, விடுதலை தொடர்பான வழக்கைத் தொடர்ந்து விசாரித்துவந்தது.

  அப்போது பேரறிவாளன் சார்பில் கவர்னருக்கு ஒரு மனு அனுப்பப்பட்டது. அதில், ‘தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால், எங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், எங்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்கீழ் விடுதலை கோர முடியவில்லை. அதனால், அந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அது அப்படியே உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஏழு பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம்’ என உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் ஏழு பேரை விடுதலை செய்ய இப்போது அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

  சட்டம் என்ன சொல்கிறது?

  இனியும் விடுதலையில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளதா? மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், ‘‘தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மூன்று வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வது, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்தவர்களைச் சிறை சீர்திருத்த அறிவுரைக் குழுமத்துக்கு அனுப்பி விடுதலை செய்வது, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது.

  இவற்றில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய, 1994-ம் ஆண்டு நவம்பர் 10 அன்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனைக் கைதிகளை, அவர்கள் எந்தவிதமான குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி, மாநில அரசு அப்படி விடுதலை செய்தால் மத்திய அரசோ, வேறு எந்த அரசு அமைப்போ அதைத் தடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களுக்கும்கூட அதைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. தற்போது உச்ச நீதிமன்றம் அதையே உறுதிப்படுத்தியுள்ளது.

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், appropriate government என்று சொல்லப்படவில்லை; அப்படிச் சொல்லவும் முடியாது; ஏனென்றால், சி.ஆர்.பி.சி சட்டத்துக்குத்தான் அந்த வார்த்தை வரும். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், concern authority என்றுதான் குறிப்பிட்டுள்ளது. அந்த concern authority தமிழக அரசுதான். அந்த அடிப்படையில்தான், தமிழக அமைச்சரவை கூடித் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது. ஒருவேளை கவர்னர் முடிவெடுக்கத் தாமதித்தால், மாநில அரசு அவரை வேகமாக முடிவெடுக்கச் சொல்லிக் கேட்கலாம். கவர்னரின் காலதாமதம் இயற்கை நீதிக்கு எதிராகப் போகும்போது, அதை எதிர்த்து நீதிமன்றத்தையும் நாடலாம்’’ என்றார்.

  முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘‘உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி, ஏழு பேர் விடுதலைக்குத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அது கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கொடுக்க மட்டும்தான் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. புறந்தள்ளுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே 1998-99 காலகட்டத்தில் அளித்த தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரிய கருணை மனுக்களை, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் அன்றைய கவர்னர் ஃபாத்திமா பீவி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கவர்னருக்கு மாநில அரசை ஆலோசிக்காமல் எதையும் புறந்தள்ள அதிகாரம் இல்லை. மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்’ என்று உறுதிசெய்தது. இப்படி பல வழக்குகளும் சட்டங்களும் உள்ளன. அதனால், கவர்னர் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் கொடுப்பது மட்டும்தான் அவருக்கு இருக்கும் அதிகாரம்’’ என்றார்.

  அதிகாரத்துக்கும் அன்புக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன ஏழு உயிர்கள்.

  - ஜோ.ஸ்டாலின்
  அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


  p4b_1536666320.jpgகவர்னர் என்ன செய்வார்?

  ரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி, கருணை அடிப்படையில் இவர்களின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதில் முடிவெடுக்க வேண்டியது கவர்னர். அவர் என்ன செய்யலாம்?

  dot_1536666363.jpg அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். எனவே, உடனே இதை ஏற்று அவர்களை விடுதலை செய்யலாம்.

  dot_1536666363.jpg இதற்கு காலக்கெடு எதையும் அரசியலமைப்புச் சட்டம் விதிக்காததால், அவர் காலம் தாழ்த்தவும் செய்யலாம்.

  dot_1536666363.jpg தேவைப்பட்டால் அவர் மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்கலாம்.

  dot_1536666363.jpgஏதாவது விளக்கம் கேட்டோ, திருத்தம் செய்யச் சொல்லியோ, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டோ, தமிழக அரசுக்கு அவர் திருப்பி அனுப்பலாம். அதன்பிறகு இரண்டாவது முறையும் தமிழக அரசு அதைத் திருத்தம் செய்தோ, அல்லது அப்படியேவோ அனுப்பிவைத்தால், அதை மறுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

  dot_1536666363.jpg அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 

  https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-16/investigation/144141-rajiv-gandhi-assassination-case-convicts-issue.html

  Share this post


  Link to post
  Share on other sites

  Join the conversation

  You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

  Guest
  Reply to this topic...

  ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  Sign in to follow this  

  யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
  விபரங்களிற்கு


  • Topics

  • Posts

   • கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறிது காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பாதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/124598
   • விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த  பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம். 
   • தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது. இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். https://www.ibctamil.com/srilanka/80/124588
   • அமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்!   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார்.   அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.   இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.       http://eelamurasu.com.au/?p=20363&fbclid=IwAR1c2yk8YqbeDcx8RXjZeVd0wGU7ZXkFtWXF0T1KcBPf_BWKwszwszhfg4U      
   • மொத்தத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் இதனூடாக ஊடுருவும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதால் இந்த ரெட் க்றசென்ட் குழுக்களை தடை செய்வது நாட்டின் அமைதிக்கு நல்லது.