Jump to content

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

காலக்கெடு எதையும் அரசியலமைப்புச் சட்டம் விதிக்காததால், அவர் காலம் தாழ்த்தவும் செய்யலாம்.

dot_1536666363.jpg தேவைப்பட்டால் அவர் மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்கலாம்.

இதைத்தான் கவர்னர் செய்ய வாய்ப்பு உண்டு  .. அடுத்த கவர்னர் வரும்வரை இழுத்தடித்து விடலாம் எனக்கு தெரிந்த எளிய வழி அக்கா நிர்மலாதேவியிடம் முறைபாடு செய்வதாகும்.. மிகுதியை அவர் பார்த்து கொள்வார் . .?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதைத்தான் கவர்னர் செய்ய வாய்ப்பு உண்டு  .. அடுத்த கவர்னர் வரும்வரை இழுத்தடித்து விடலாம் எனக்கு தெரிந்த எளிய வழி அக்கா நிர்மலாதேவியிடம் முறைபாடு செய்வதாகும்.. மிகுதியை அவர் பார்த்து கொள்வார் . .?

தமிழக அரசு அவர்களை (நீண்ட) பரோலில் விட முடியுமே...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

தமிழக அரசு அவர்களை (நீண்ட) பரோலில் விட முடியுமே...

ரெல்லியை எதிர்த்து ? எனக்கு நம்பிக்கை இல்லை தோழர்..?

Link to post
Share on other sites

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யக்கூடாது- ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய பெண் பொலிஸ் எதிர்ப்பு

 

 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு அந்த சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவேளை அந்த பகுதியில பணியாற்றிய அனுசியா டெய்சி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் அவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என கருத்து வெளியிட்டுள்ளார்.

rajiv-murder.jpg

1991 மே 21 ஆம் திகதி எனது வாழ்நாளில் கறுப்பு நாள் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புத்தூர் வந்திருந்தார், என தெரிவித்துள்ள அவர் கூட்டத்திலிருந்த பெண்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஓப்படைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நானும் வேறு 10 பெண் காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தோம் நான் ராஜீவ்காந்திக்கு அருகில் நின்றிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நான் தடுமாறி விழப்போனேன் அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து பதட்டப்படாதீர்கள் எனவும் தெரிவித்தார் என அனுசியா குறிப்பிட்டுள்ளார்

சிறுமியொருவர்  ராஜீவ்காந்தியிடம் எதனையோ தெரிவித்துக்கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி அதனை செவிமடுத்துக்கொண்டிருந்தார் தீடீரென பயங்கர சத்தம் கேட்டது எனது உடலை ஏதோ துளைத்துக்கொண்டு சென்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேகத்தில் நான் தூக்கியெறிப்பட்டேன், எனது உடலின் இடது புறம் முற்றாக சிதைவடைந்தது, எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான் எனது கைவிரல்கள் மூன்றை இழந்தேன்,முடிகள் அனைத்தும் கருகிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு சிதறல்கள் என்னை துளைத்திருந்தன யாரோ என்னை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மூன்று மாதங்கள் வரை நான் சிகிச்சை பெற்றேன் எனினும் பின்னர் நான் மீண்டும் காவல்துறைக்கு திரும்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு துடிப்பதையும்  அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது நெஞ்சு கொதிக்கின்றது எனவும் அனுசியா டெய்சி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40348

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2018 at 5:39 PM, nedukkalapoovan said:

அவர்கள் அப்பாவிகள் என்பது நியாயம்.  பின்னர் சொல்கிறீர்கள் புலிகள் திட்டத்துக்கு கருவி ஆக்கினார்கள் என்று..??!

அதுக்கு மேல.. புலிகள் தான் குறித்த சம்பவத்துக்குப் பொறுப்பு என்பதும்.. இவர்களை புலிகள் பாவித்தார்கள் என்பதும்.. எப்படி நிரூபிக்கப்பட்டது..??!

உங்களின் கற்பனைகளை புலிகள் மீதும்.. இந்த அப்பாவிகளை புலிகளின் கருவிகளாக்கி.. மீண்டும் குற்றவாளிகள் ஆக்காமலும் விட்டாலே போதும்.

ராஜீவ் கொலைக்கு முன் அவ்விடத்துக்கு விஜயம் செய்த சுப்பிரமணியம் சுவாமி.. சூ அடிக்கத்தான் போனன் என்று சொல்லிக்கிட்டு திரியுறார்.. அவரிடம் போய் இப்படியான கேள்விகளை கேட்டு பதில் வாங்குவீங்களா கொழும்பான் சார்..??! ?

புலிகள் கொழும்பில் பல தாக்குதல்கள் நடத்தியபோது எத்தனையோ அப்பாவிகள் இவ்வாறு பலியாடுகளாக்கப்பட்டார்கள். 

Link to post
Share on other sites

தமிழக அமைச்சரவை பரிந்துரை - 7 பேர் விடுதலையில் அடுத்தகட்டத்தை நோக்கி ஆளுநர்!

 

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

7 பேர் விடுதலை

அண்மையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமை  செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

 

ஆளுநர்

இதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/136820-rajiv-gandhi-murder-case-governors-next-move.html

Link to post
Share on other sites

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் உடன்பாடு – நாராயணசாமி

 

narayanasamyjpg.jpg

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்காக தான் அவர்களின் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவர் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க கூறியுள்ளதால், தாமும் அதற்கு உடன்படுவதாக கூறினார்.

எனினும் தனிப்பட்ட ரீதியில் குற்றவாளிகளை விடுவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், மாநில அரசு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ராஜீவ்-கொலை-குற்றவாளிகள-2/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2018 at 11:50 AM, colomban said:

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

சும்மா ஒரு  பேச்சுக்கு.......
இங்கே தவற விட்டதை அங்கே வேறொரு கோணத்தில்.........

நினைத்ததை செய்து முடித்திருக்கலாம் அல்லவா?

 

 

Link to post
Share on other sites

இவர்களின் விடுதலை விடயத்தில் யாருமே இதய சுத்தியோடு நடந்துகொள்ளவில்லை..

வலிமை மிக்க தமிழக அரசியல்வாதிகளாக இருந்து மாண்டுபோன கருணாதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இவர்களின் விடுதலையை தாம் தமிழன் நலன் சார்ந்தவர் என ஒரு வெளியே சொல்லிக்கொள்ள அரசியல் செய்தவர்கள்..

இவர்கள் நினைத்திருந்தால் சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி என்றோ விடுவித்திருக்கலாம். அப்போதைய ஆளுநர்கள் இரு தலைவர்களின் அரசியல் பலம், மக்களின் செல்வாக்கு இவ்வற்றைப் பார்த்தாவது வாய் பொத்தி கையொப்பமிட்டுருப்பர்,

இப்போதிருக்கும் டம்மி அரசை, மத்திய அரசு சமாளிப்பது மிக மிக எளிது..

அசுரபலம் மிக்க தமிழக தலைவர்கள்  தமிழக அரசில் அமையாதவரை, இப்போதைக்கு இவர்களின் விடுதலை கானல் நீர்தான்..!

Link to post
Share on other sites

ஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

 

 
Thol%20Thirumavalavan-01jpg

தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில்; அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல மாநில உரிமைகளுக்கு முரணானதுமாகும். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

பேரறிவாளன் 2015-ம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் சமர்ப்பித்த கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் விடுவிப்பார் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் ஆளுநர் முடிவெடுக்கும் போது உள்துறை அமைச்சகத்தையோ மத்திய அரசையோ கலந்தாலோசிக்குமாறு அந்த சட்டத்திலோ நீதிமன்ற தீர்ப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆளுநரின் இந்த நடவடிக்கையை காலம் தாழ்த்தும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

‘தனஞ்செய் சாட்டர்ஜி எதிர் மேற்குவங்க அரசு’ என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது; அது மாநில அரசின் பரிந்துரைக்கு கட்டுப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஏழு பேர் விடுதலை தொடர்பான விஷயத்தில் மாநில அரசு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளித்துவிட்டது. அப்படியிருக்க ஆளநர் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியதை மாநில அரசை உதாசீனம் செய்யும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விரைந்து விடுவிப்பதற்கு முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24942851.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப பாருங்களேன் தமிழ் மொழியை "அல்லகைஸ்" புகழ்ந்து தள்ளுவினம் .. சமாதானம் அடைந்து விடுவீனமாம் ..  ஆண் மையுள்ள எடப்பாடியாக இருந்தால் அக்கா நிரமலாவின்ர வழக்கை துரிதபடுத்த வேண்டும்.. ஒத்துவராத கவர்னரை வழிக்கு கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் இவரிண்ட பாலியல் சேட்டைகளுக்காக களி தின்ன வைக்க வேண்டும் ..?

Link to post
Share on other sites

ராஜீவ் காந்தி கொலை: சாந்தனின் தாயார் எடப்பாடிக்கு கடிதம்!

 

aGWEwer.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாந்தனின் தாயார், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் தாயார் மகேஸ்வரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் “மகனின் விடுதலைக்கு பரிந்துரைத்த உங்களுக்கு என் குடும்பம் நன்றிக் கடன் பட்டுள்ளது.

வெகுவிரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இறுதிக் காலத்தில் என்னை பராமரிக்க எனது மகனை எனக்கு வழங்குமாறு கோருகிறேன்” என உருக்கமாக கோாிக்கை விடுத்து குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார.

http://athavannews.com/ராஜீவ்-காந்தி-கொலை-சாந்த/

Link to post
Share on other sites

ராஜீவ்  கொலை வழக்கு கைதிகள்  விடுதலை தொடர்பில் ஆதாரமற்ற அச்சங்கள்

 

 
 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுட்காலச் சிறைக்கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கம் சிபாரிசு செய்தபின்னரும் கூட, அவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்று சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்கள். 

INDIAN.jpg

ஆனால், மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் பிரகாரம் செயற்பட்டு அவர்களை விடுதலை செய்வதைத் தவிர ஆளுநருக்கு வேறு தெரிவு இல்லை என்று உறுதியாக நம்புவதாக இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இந்திய பத்திரிகைப் பேரவையின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கூறியிருக்கிறார்.

சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையில் வெள்ளியன்று அவர் ' ராஜீவ் காந்தி கொலை ; 7 கைதிகளும் போதுமானளவுக்கு துன்பத்தை அனுபவித்துவிட்டார்கள் ' என்ற தலைப்பிலான கட்டுரையில் ' எமது பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இரவலாகப் பெறப்பட்டதாகும். அதில் ஆளுநர் எனப்படுபவர் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரைப் பெருமளவுக்கு ஒத்தவராவார். அரசியலமைப்பு ரீதியான ஒரு தலைவரான அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படவேண்டுமே தவிர, தனது சொந்த தற்துணிபின்படி செயற்படலாகாது ' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசியல், சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பெரும் விவாதங்களை மூளவைக்கக்கூடிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவருபவரான கட்ஜு 7 கைதிகளினதும் விடுதலையை உறுதியாக ஆதரித்து முன்வைத்திருக்கும் வாதத்தில் முன்னைய பல முக்கியமான சட்டப்பிரச்சினைக்குரிய வழக்குகளின் தீர்ப்புக்களை உதாரணம் காட்டியிருக்கிறார்.

அவர் எழுதியிருப்பதாவது ;

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த கருணைமனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் சகலரையும் மன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு தமிழ்நாடு அரசாங்கம் சிபாரிசு செய்திருந்தது.

மாநில அரசாங்கத்தின் அந்தச் சிபாரிசுக்குப் பின்னரும் கூட, கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா என்று சிலர் சந்தேகம் கிளப்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் பிரகாரம் செயற்பட்டு அவர்களை விடுதலை செய்வதைத் தவிர, ஆளுநருக்கு வேறு தெரிவு இல்லை என்றே நம்புகிறேன்.

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இரவலாகப் பெறப்பட்ட எமது பாராளுமன்ற ஜனநாயக முறைமையில் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரைப் பெருமளவுக்கு ஒத்ததே ஆளுநர் பதவி.அரசியலமைப்பு ரீதியான தலைவரான அவர் தனது தற்துணிபு அதிகாரத்தின் பிரகாரம் செயற்படலாகாது.அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம செயற்படவேண்டும்.1974 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுஷாம்ஷெர் சிங் என்பவருக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் பிரகடனம் செய்த சட்டமே இதுவாகும். அரசியலமைப்புக்கான 42 வது திருத்தத்துக்கு முன்னரே அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது.42 வது திருத்தமும் அரசியலமைப்பில் ஏற்கெனவே உட்கிடையாகச் சொல்லப்பட்டிருந்ததையே கூறியது.

 இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசுக்கும் மாரு ராம் என்பவருக்கும் இடையிலான வழக்கிலும் 1988 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் கெஹார் சிங் என்பவருக்கும் இடையிலான வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய இரு தீர்ப்புக்களை இங்கு கவனத்தில் எடுக்கவேண்டியது முக்கியமானதாகும். அதாவது அரசியலமைப்பின் 72 வது சரத்தை ( குறிப்பிட்ட சில வழக்குகளில் மன்னிப்பு வழங்குதல் , தண்டனை இடைநிறுத்தல், தண்டனைக் குறைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் பற்றியது ) அல்லது 161 வது சரத்தை ( அதே செயன்முறைகளைப் பொறுத்தவரை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் பற்றியது) நடைமுறைப்படுத்தும்போது ஜனாதிபதியோ அல்லது ஆளுநரோ அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படவேண்டுமே தவிர , தங்களது சொந்தத் தற்துணிபு அதிகாரத்தின் பிரகாரம் அல்ல என்று தீர்ப்பில் கூறப்பட்டது.ஆகவே ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்வதைத் தவிர தமிழ்நாடு ஆளுநருக்கு வேறு வழியில்லை. 

இரு அச்சங்கள்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சிபாரிசுக்குப் பின்னரும் கூட , 7 கைதிகளையும் விடுதலை செய்யமுடியுமா என்று சந்தேகம் கிளப்புபவர்கள் இரு அச்சங்களைக் கொண்டுள்ளார்கள்.ஆனால், அவை ஆதாரமற்றவையாகும்.

முதலாவது அச்சம் 2015 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் சிறிஹரன் என்ற முருகனுக்கும் இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டதாகும்.அந்தத் தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு இருக்கும் சட்ட ரீதியான அதிகாரத்துடன் தொடர்புபட்டதே தவிர, அரசியலமைப்பின் 161 வது சரத்தின் கீழ் ஆளுநருக்கு இருக்கும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதை அதை உன்னிப்பாக ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும்.

 மத்திய புலனாய்வு பணியகத்தினால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில் தண்டனைக் குறைப்பைச் செய்ய மாநில அரசாங்கம் விரும்பும்போது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை செய்யவண்டிய அவசியத்தை வலியுறுத்தும் குற்றவியல நடைமுறைச் சட்டக்கோவையின் 435 (1) பிரிவு பற்றியே தீர்ப்பு சுட்டிக்காடுடுகிறது.அதேவேளை, அந்தப் பிரிவின் கீழ் ஆலோசனை செய்தல் என்ற சொல் ( Consultation  ) உடன்படுதல்  ( Concurrence  ) என்று கருதப்படக்கூடியதாகவே அர்த்தப்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால், 161 வது சரத்தின் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழான சட்டரீதியான அதிகாரத்திலிருந்து வேறுபட்டது.ஆதலால், மேற்கூறப்பட்ட தீர்மானம் மத்திய அரசாங்கத்தின் உடன்பாடு இல்லாமல் மன்னிப்பு வழங்குவதற்கு குறுக்கே நிற்கவில்லை.

இரண்டாவது அச்சம் ஆளுநர் மன்னிப்பு வழங்கினால், அதைத் தன்னிச்சையானது என்று நீதிமன்றம் நிராகரிக்கக்கூடும் என்பதாகும்.மன்னிப்பு வழங்குவதில் ஆளுநரின் செயல் நீதித்துறையின் மீளாய்வுக்கு ஆட்பட்டது எனபதிலும் தன்னிச்சையானதாக அல்லது தீயநோக்குடனானதாக இருந்தால் நீதிமன்றம் அதை ரத்துச் செய்யமுடியும் என்பதிலும் சந்தேகமில்லை.இதை மாரு ராமின் வழக்கிலும் அதையடுத்து வேறு வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் சந்தேகத்துக்கிடமின்றி தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.

ஆனால், மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் அடிப்படையில் 7 கைதிகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் மன்னிப்பு வழங்கினால், அவர் தன்னிச்சையாக அல்லது தீயநோக்குடன் செயற்படுகின்றார் என்று சொல்லமுடியுமா? இதற்கு ' இல்லை ' என்பதே நிச்சயமான பதிலாகும்.72 வது சரத்தின் கீழும் 161 வது சரத்தின் கீழும் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் மிகப்பல என்பதுடன் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் அடிக்கடி மாறுந்தன்மை கொண்டவையாகும்.அத்தகைய பெருவாரியான காரணங்கள் அல்லது நோக்கங்கள் மத்தியில் இந்தக் கைதிகள் 27 வருடங்களைச் சிறையில் கழித்து போதுமானளவு துன்பங்களையும் அனுபவித்துவிட்டார்கள் என்ற உண்மையும் நிச்சயமாக அடங்கமுடியும்.ஷேக்ஸ்பியரின்  Merchant of Venice நாடகத்தில் 

போஷியா சொன்னது போன்று (Justice should be tempered with mercy) நீதி என்பது கருணையுடன் கலந்து பதப்படுத்தப்பட வேண்டும்   தமிழ்நாடு ஆளுநர் விரைந்துசெயற்பட்டு ஆரவாரமேதுமின்றி 7 கைதிகளையும் இப்போது விடுதலை செய்யவேண்டும்.

http://www.virakesari.lk/article/40446

Link to post
Share on other sites

எழுவர் விடுதலை விவகாரம் சிக்கலான ஒன்று - ஆளுநர் மாளிகை கருத்து.!

 

 
Image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பரிந்துரை செய்தது.

தமிழக அரசின் பரிந்துரை குறித்து உள்துறையின் கருத்தினை ஆளுநர் மாளிகை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் சிக்கலான ஒன்று ; இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது ஆளுநர் மாளிகை.

முன்னதாக, எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/india/80/106153

 

 

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு

 

 
21CHRGNPUROHITjpg

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - கோப்புப் படம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.

 

2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. சில தொலைக்காட்சி சேனல்கள் இதை வைத்து விவாதம் நடத்தியுள்ளன.

ஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. இந்த வழக்கு சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

7விடுதலை குறித்து நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சரவையின் பரிந்துரை ஆவணங்கள் 14ம் தேதி தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’ என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24953733.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to post
Share on other sites

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா?- சட்ட நிபுணர்கள் கருத்து

 

 
1

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச் சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக் குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்கக்கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘‘இந்த 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து மத் திய அரசுக்கு குறிப்புரைகள் அனுப்பப்பட்டு விட்டதாக ஓர் அனுமானத்தின் அடிப்படையில் சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன.

அவ்வாறு ஊடகங்களில் வெளி யாவது போல எந்தக் குறிப் புரையும் மத்திய அரசுக்கு அனுப்பப் படவில்லை. இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சிக்கலான விஷயம். அதனால் மிகவும் கவனமுடன் ஆராய்ந்து பரிசீலிக் கப்பட்டு வருகிறது.

மாநில அமைச்சரவையின் பரிந்துரை மற்றும் தீர்ப்புகள் என ஏராளமான பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் கடந்த செப். 14-ம் தேதிதான் ஆளுநர் மாளிகை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்குட் பட்டு நேர்மையான, வெளிப்படை யான முடிவை எடுப்பார்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு ஆளு நர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: இது சட்ட ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடுள்ள வழக்கு. தற் போது உச்ச நீதிமன்றம் எந்த வொரு தீர்க்கமான உத்தரவை யும் இதில் பிறப்பிக்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறியுள்ளது. அமைச் சரவை முடிவை அப்படியே வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் ஆளுநருக்கு கிடையாது.

‘அப்ளிகேஷன் ஆப் மைண்ட்’ என்பதை சட்ட ரீதியாக முழுமனது டன் ஆவணங்களி்ல் செலுத்தி அவற்றை பரிசீலித்து சட்டத்துக் குட்பட்டுதான் ஆளு நரால் முடிவு எடுக்க முடியும். எடுத்தோம், கவிழ்த்தோம் என உடனடியாக முடிவை அறிவித்து விட முடியாது. அதேபோல மன்னிப்பு வழங்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு முரணாக மாநில அரசால் செயல்பட முடியாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இப்படி பல்வேறு முரண்பாடுகள் இதில் உள்ளன. ஆனால் இந்த 7 பேரையும் விடுதலை செய்வதா, வேண்டாமா என்பதில் எனக்கு தனிப்பட்ட கருத்து ஏதும் கிடையாது. அதேபோல ஆளுநர் தனது முடிவை அறிவிக்கவும் சட்ட ரீதியாக எந்த காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் காலதாமதம் தவிர்க்க முடியாத ஒன்று.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இந்தியாவில் மட்டும் தான் 20, 30 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. மற்ற எந்த நாட்டிலும் இத்தனை ஆண்டுகளுக்கு வழக்குகளை இழுத்தடிப்பது இல்லை. இந்த 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யுமாறு மாநில அரசும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கோருகிறது.

உச்ச நீதிமன்றமும் அதைத்தான் சொல்லியுள்ளது. ஆனால் இது சட்ட சிக்கல் வாய்ந்த வழக்கு எனக்கூறி ஆளுநர் இனியும் காலதாமதம் செய்வது என்பது ஏற்புடையதல்ல. அதேநேரம் அவரை நிர்பந்திக்க முடியாது என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். சட்ட சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்க நிபுணர்கள் இருக்கிறார்களே?

சாதாரண சிட்டி சிவில் நீதிமன்றங்களிலேயே வாதங்கள் முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பளிக் கப்பட வேண்டும் என உத்தரவுகள் உள்ளன.

வாதங்களைக் கேட்ட நீதிபதி விரைவாக தீர்ப்பு அளித் தால்தான் அவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எனவே இதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன்: இந்த விஷயத்தில் ஆளுநர் உடனடியாக முடிவு எடுத்துதான் ஆக வேண்டும் என்ற எந்த காலவரம்பும் கிடையாது. அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக் கென தனிப்பட்ட சில அதிகாரங் களை வழங்கியுள்ளது. அந்த அதி காரத்தில் யாரும் தலையிட முடி யாது. அதன்படி அவர், இது தமிழக அமைச்சரவையின் பரிந்துரை என்றாலும் கூட இதில் எத்தனை நாட்களுக்கு வேண்டுமென்றாலும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியும்.

ஆனால் ஒரு முக்கியமான வழக்கில் முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். ஆளுநர் ஒருவேளை காலதாமதம் செய்வதாகத் தெரிந் தால் அதுகுறித்து மீண்டும் நீதி மன்றத்திடம் முறையிட்டுத்தான் பரிகாரம் தேட முடியும். அரசியல் ரீதியாகவும் இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24960171.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to post
Share on other sites

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7 பேர் விடுதலையில் சிக்கல்: பலியானோர் குடும்பத்தினர் மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை

 

 
sup

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 

இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பரிந்துரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் மற்ற 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் தனு தவிர மற்றவர்கள் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்களது குடும்பத்தினர் சார்பிலும், வேறு சில அமைப்புகள் சார்பிலும் 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கக் கூடாது

சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அவர்கள் தரப்பில் வலியுறுத் தப்பட்டு வருகிறது. மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச் சகத்துக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்து ஆளுநர் மாளிகை சார்பில் கடந்த சனிக் கிழமை அறிக்கை வெளியானது. அதில், ‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் 7 பேர் விடு தலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவெடுப்பது சற்று சிக்கலான விஷயம். இதில், சட்டப்பிரச்சினை, நிர்வாக மற்றும் அரசியலமைப்பு சட்டரீதியான பிரச்சினைகள் அடங்கியிருப்பதால் ஆளுநர் தீர ஆலோசித்து தக்க முடிவெடுப்பார்’ என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் வழக்கு

இதற்கிடையே, 2014-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 7 பேர் விடு தலை குறித்து எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து, காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம், ராம.சுகந்தன் உள்ளிட் டோர் சார்பில் அப்போது தொடரப் பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ள விவகாரம் அப்போது நீதிமன்றத்தின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டது. அவர்களை விடுதலை செய் வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்பதால், தற்போதுள்ள நிலை மற்றும் தமிழக அரசின் புதிய பரிந்துரைகளை சேர்த்து 3 வாரங்களுக்குள் புதிய மனு தாக்கல் செய்யும்படி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை யடுத்து 7 பேர் விடுதலை விவ காரம் மீண்டும் உச்ச நீதிமன்ற படிக் கட்டுகளைச் சென்று சேர்ந்துள்ளது.

பலியானவர் மகன் மனுதாரர்

இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் ராஜீவ் கொலையின்போது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சம்தானி பேகம் என்பவரின் மகன். கணவனை இழந்த சம்தானி பேகம், 1991-ம் ஆண்டு தென்சென்னை மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர். ராஜீவ் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளச் சென்றபோது குண்டுவெடிப்பில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/india/article24973820.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to post
Share on other sites

ஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள் ; உருக்கமாக வைத்த ஒற்றை கோரிக்கை.!

 

 
 
Image

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

அரசின் பரிந்துரையை தொடர்ந்து பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து பரிசீலித்து வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால். திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கூடாதென காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/india/80/106581

Link to post
Share on other sites

7 பேர் விடுதலை பிரச்சினை - உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஆளுநர் முடிவு எடுப்பார்

 

 
 

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் முடிவெடுப்பார் என தெரியவருகிறது. 

ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது.

201809271335517572_Rajiv-Gandhi-murder-c

இதற்கிடையே ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் ஆளுநரை சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பன்வாரிலாலை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரும் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது என கேட்டுக் கொண்டனர்.

மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது” என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் தாக்கல் செய்தனர்.

அவர்களது கோரிக்கையையும் ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகே ஆளுநர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk/article/41294

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ .... அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   
  • இல்லாமல் என்ன  அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம்  என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான்  ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் ,  முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை  
  • சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார்.  பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும்.  ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள.  ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள்.  சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 
  • 121 விபத்துக்கள், 14 மரணங்கள், அதுதான் சாராம்சம்.
  • Southern E-Way revenue tops Rs. 135 mn   http://www.dailynews.lk/sites/default/files/news/2021/04/15/01-Southern.jpg The Southern Expressway Operations and Maintenance Division said that the revenue of the Southern Expressway during the last four days has exceeded Rs.135 million. Over Rs.135 million had been earned until April 13 and it will receive a higher revenue in the next two days from the date of the Sinhala and Hindu New Year, they said. During that period, more than 515,000 vehicles have entered the Southern Expressway. Compared to last year, a large number of vehicles have been driven on the Southern Expressway this year and its revenue has increased by Rs. 8 million compared to last year.  http://www.dailynews.lk/2021/04/16/local/246730/southern-e-way-revenue-tops-rs-135-mn
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.