Sign in to follow this  
நவீனன்

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

Recommended Posts

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

 

 

 

தமக்கு வாக்­க­ளித்­துத் தம்­மைப் பத­வி­யில் அமர்த்­திய மக்­க­ளது அபி­லா­சை­கள் குறித் துத் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் போதும் போதும் என்று கூறும் அள­வுக்­குத் துன்­பங்களை அனு­ப­வித்து விட்­ட­னர்.

இன்­ன­மும் வேத­னை­க­ளுக்கு மத்­தி­யில்­தான் அவர்­க­ளது அவல வாழ்வு தொட­ரு­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது துய­ரங்­க­ளுக்கு ஒரு தீர்­வைப் பெற்­றுத் தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கையை அவர்­கள் இன்­ன­மும் இழந்­து­வி­ட­வில்லை.

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கையை தமிழ் அர­சி­யல்­வா­தி­கள்
காப்­பாற்­று­வார்­களா?

இந்த நம்­பிக்­கை­தான் அவர்­களை வாழ வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவர்­கள் நம்­பி­யி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் அவர்­க­ளது நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வார்­களா? என்­ப­து­தான் இன்­றுள்ள முக்­கிய வினா­வா­கும்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளால் தமி­ழர் அர­சி­யல் குழம்­பிப் போய்க் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக மக்­க­ளும் குழப்­பத்­தில் ஆழ்ந்து கிடக்­கின்ற­ னர். எவர் சொல்­வது சரி?.எவர் பொய் சொல்­கி­றார்? என்­பதை அனு­மா­னிப்­ப­தில் அவர்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். அவர்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருந்த வடக்கு மாகாண சபை அவர்­களை முற்­றி­லும் ஏமாற்­றி­விட்­டது.

குறிப்­பாக அதன் முத­ல­மைச்­சர் முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர் மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை முற்­றா­கவே தகர்ந்து விட்­டது. முக்­கி­ய­மான சபை அமர்­வைப் புறக்­க­ணித்து விட்டு திரு­மண நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்ட அவர் அதற்­குக் கூறிய வியாக்­கி­யா­னம் விசித்­தி­ர­மா­னது.

திரு­ ம­ணம் வாழ்­வில் ஒரு­மு­றை­தான் நிக­ழக் கூடி­யது. ஆனால் மாகாண சபைக் கூட்­டம் மாதாந்­தம் நடக்­கக் கூடி­ய­தென பொறுப்­பற்ற விதத்­தில் கூறிய அவர் போன்ற வேறொ­ரு­வ­ரைக் காண்­பது அரி­தான விட­யம்.

சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர்­போ­ன­வர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன்

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுமந்­தி­ரன் சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர் போன­வர். நாட்­டின் மிகச் சிறந்த வழக்­க­றி­ஞர்­க­ளில் ஒரு­வ­ரான அவர் சில­வே­ளை­க­ளில் தம்மை மறந்து சில கருத்­துக்­க­ளைக் கூறிச் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

காலி­யில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் உரை­யாற்­றிய அவர் சமஷ்டி தமி­ழ­ருக்­குத் தேவை­யில்லை­ எனக் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துக் கண்­ட­னங்­கள் எழுந்­துள்­ளன. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் இதற்­குத் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன. ஆனால் தாம் சமஷ்டி தேவை­யில்­லை­யென ஒரு­போ­தும் கூற­வில்­லை­யெ­ன­வும், சமஷ்டி என்ற பெயர்ப் பல­கை­தான் தேவை­யில்­லை­யெ­னக் கூறி­ய­தா­க­வும் சுமந்­தி­ரன் புதிய விளக்­க­மொன்றை அளித்­தி­ருக்­கி­றார்.

ஆனால், இது விட­யத்­தில் சுமந்­தி­ர­னின் வியாக்கி­ யானம் எடு­ப­டுமா? என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­ன­தொன்று. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இது போன்ற தேவை­யில்­லாத சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­தல்ல.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரால் தமிழ் மக்­கள் பேரவை தடம்­பு­ரண்டு செல்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. பேர­வை­யில் அர­சி­ய­லுக்கு இட­மில்­லை­யென ஆரம்­பத்­தில் கூறப்­பட்­டது. ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளின் வழி­ந­டத்­த­லின் கீழேயே பேர­வை­யின் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­கா­கப் பேர­வை­யைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்.

கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான­ வர்­கள் அங்கு தஞ்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தை­யும் காண முடி­கின்­றது. இவற்­றை­யெல்­லாம் கூட்­டிக் கழித்­துப் பார்க்­கும்­போது தமிழ் மக்­கள் பேர­வை­யை­யும் ஓர் அர­சி­யல் கட்­சி­யா­கவே பார்க்க முடி­கின்­றது. இவர்­கள் மக்­களை ஏன் இவ்வாறு ஏமாற்­று­கின்­றார்­கள் என்­பது புரிய­ வில்லை.

பளை­யில் காற்­றாலை அமைத்­த­த­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­னவா?

முன்­னாள் மாகாண அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் தமது சொத்து விவ­ரங்­களை உட­ன­டி­யா­கச் சமர்ப்­பிக்க வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பளை­யில் காற்­றாலை அமைக்­கப்­பட்­ட­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­தா­கக் கூறியே இந்­தக் கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. ஆனால் முத­ல­மைச்­சர் தரப்­பி­லி­ருந்து இதற்­கான ஆக்­க­பூர்­வ­மான பதில் எது­வும் இது­வரை வௌிவ­ர­வில்லை. அது­மட்­டு­மல்­லாது காற்­றா­லைக்கு அனு­மதி வழங்­கிய வடக்கு மாகாண சபைக்­குப் பெரும் நிதி இழப்­பீடு ஏற்­பட்­ட­தா­கக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இது தொடர்­பாக முத­ல­மைச்­சர் அலட்­சி­ய­மா­கப் பதி­ல­ளித்­துள்­ளார். பளைக் காற்­றா­லை­யால் மாகாண சபைக்­குக் கிடைத்­தது கொடையே என­வும், நிதி­யி­ழப்பு ஏது­மில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அறிக்­கை­யின் பிர­கா­ரம் மாகாண சபைக்கு நிதி­யி­ழப்பு ஏற்­பட்­டது உண்­மை­யா­னால் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மா­கும்.

ஒட்டு மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கத் திக­ழ­வேண்­டும். மக்­க­ளின் மன­ம­றிந்து செயற்­ப­டு­கின்ற தன்­மை­யை­யும் அவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

https://newuthayan.com/story/13/மக்கள்-மனமறிந்து-செயற்படுவார்களா-தமிழ்-அரசியல்வாதிகள்.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this