நவீனன்

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

Recommended Posts

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

unnamed-1-2.jpgunnamed-11.jpgunnamed-5-2.jpgunnamed-4-3.jpgunnamed-2-4.jpg

http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/

Share this post

Link to post
Share on other sites

மட்டக்களப்பின் பல பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகள் முடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அன்றாட நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - பதுளை வீதி பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று தனியார் பேருந்துகள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடாத நிலையில் இ.போ.சபையின் ஒரு சில பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே பதிவாகியுள்ளன.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் வெறிச் சோடி காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/192770?ref=home-latest

Share this post

Link to post
Share on other sites

கையில் இருந்த வளங்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று ஹர்த்தால் போடும் நிலையில் தமிழ் மக்கள் :unsure:

Share this post

Link to post
Share on other sites

காத்தான்குடி.. சவுதி அளவுக்கு முன்னேறி இருக்குது.. ஆனால்.. மட்டக்களப்பு இன்னும் அப்படியே அபிவிருத்தி இன்றிக்கிடக்கிறது. ஆனால்.. கருணா என்கிற முரளிதரன்.. சொறீலங்காவின் 5வது பெரும் பணக்கார அரசியல்வாதி ஆகிட்டார்.  இதுதான் கிழக்கின் விடியல்..????! ?

Share this post

Link to post
Share on other sites

பற்றி எரிகிறது வீதிகள், வெறிச்சோடியது மாவட்டம்; யுத்த காலத்தை நினைவுபடுத்திய போராட்டம்!

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை ஊரில் குடிநீரை நிலத்தடியில் இருந்து உறுஞ்சி போத்தல்களில் அடைத்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியநிலையில் இன்று 07/09/2018 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய நிர்வாக முடக்கம் ஹர்தால் போராட்டம் நடத்த மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் தார்மீக ஆதரவை தெரிவித்திருந்தனர் இன்றய ஹர்தால் கதவடைப்பு நிர்வாக முடக்கம் போராட்டம் பூரண வெற்றி அடைந்துள்ளது.

மட்டுநகர் படுவான்கரைபெருநிலம் எழுவான்கரை பகுதிகள் யாவும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

ஏறாவூர் பகுதியில் சில பேரூந்து சேவை காலையில் இடம்பெற்ற போதும் வீதிகளில் சிலர் தீயிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர் இதனால் பேருந்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

படுவான்கரை பெருநிலப்பகுதி பாடசாலை மாணவர்கள் எவரும் எந்த பாடசாலைகளுக்கும் செல்லவில்லை.

சகல வர்தசங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியது திணைக்களங்களில் அன்றாட பணிகள் நடைபெற பொதுமக்கள் எவரும் செல்லவில்லை.

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை நோயாளர் நலன் கருதி இயங்கியபோதும் வரவு குறைவாகவே காணப்பட்டது.

இன்று நடைபெறும் இந்த ஹர்த்தால் எந்த ஒரு இனத்திற்குகோ மதத்திற்குகோ எதிரான போராட்டமல்ல இது எமது இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிரான போராட்டம் தண்ணீர்ப் பிரச்சனைக்கான போராட்டம் இது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாயத்திற்கு நீர் வேண்டும் என்பதற்கான போராட்டம் இப்படிப்பட்ட இந்த நியாயமான எதிர்கால உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை ஏன் முஸ்லீம்கள் சிலர் இனவாதமாக பார்க்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்றைய இந்த ஹர்த்தால் ஆனது தமிழ் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்பதுடன் யுத்தகாலத்தில் இருந்த எழுச்சி மீண்டும் மட்டக்களப்பில் உருவாகியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது இதற்காண காரனம் அங்குள்ள மக்கள் மூம்முனைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதே காரணம் என கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாவுள்ளது. அத்துடன் இன்று மட்டு நகரில் பிரபல பாடசாலைகளுக்கு சென்ற ஆசிரியர்கள் மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர் பாடசாலை இயங்கவில்லை காணமுடிகின்றது.இரு நூறுக்கும் மேற்பட்ட மீனவ படகுகளில் தொழில் செல்லாமல் நிறுத்தியதையும் காணமுடிகின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105785?ref=home-imp-flag

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, nedukkalapoovan said:

காத்தான்குடி.. சவுதி அளவுக்கு முன்னேறி இருக்குது.. ஆனால்.. மட்டக்களப்பு இன்னும் அப்படியே அபிவிருத்தி இன்றிக்கிடக்கிறது. ஆனால்.. கருணா என்கிற முரளிதரன்.. சொறீலங்காவின் 5வது பெரும் பணக்கார அரசியல்வாதி ஆகிட்டார்.  இதுதான் கிழக்கின் விடியல்..????! ?

அரசியலுக்கு வந்தவன் முழுப்பேரும் பணக்காரன் ஆகிரான் ஓட்டிட்டவன் ஓட்டாண்டி ஆகிறான் ஒரு நாள் கஞ்சிக்கு ஓடும் நிலை 

இதில் கர்ணா மட்டும் இல்லையே மற்றவர்களையும் சேர்க்கலாம் தானே  சொகுசு பங்களா, சொகுசு கார், வெளிநாட்டில் பிள்ளைகள் குடும்பங்கள் சொத்துக்கள். கர்ணா மக்களால் விலக்கப்பட்டுள்ளார் பேருக்கும்மட்டும் அவர் இருக்கிறார் பிள்ளையான் பறவாவில்லை சிறையில் இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் (கிழ்க்கு)மக்களின் வளங்கள் சூறையாடப்படவில்லை அதில் அவர் கவனம்  செலுத்தினார்.:104_point_left:

Share this post

Link to post
Share on other sites

மட்டக்களப்பில் பேருந்துகள் மீது தாக்குதல்! பலர் கைது

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு - செங்கலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரை தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மட்டக்களப்பு - பதுளை வீதி, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/192780?ref=imp-news

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்கு வந்தவன் முழுப்பேரும் பணக்காரன் ஆகிரான் ஓட்டிட்டவன் ஓட்டாண்டி ஆகிறான் ஒரு நாள் கஞ்சிக்கு ஓடும் நிலை 

இதில் கர்ணா மட்டும் இல்லையே மற்றவர்களையும் சேர்க்கலாம் தானே  சொகுசு பங்களா, சொகுசு கார், வெளிநாட்டில் பிள்ளைகள் குடும்பங்கள் சொத்துக்கள். கர்ணா மக்களால் விலக்கப்பட்டுள்ளார் பேருக்கும்மட்டும் அவர் இருக்கிறார் பிள்ளையான் பறவாவில்லை சிறையில் இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அவர் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் (கிழ்க்கு)மக்களின் வளங்கள் சூறையாடப்படவில்லை அதில் அவர் கவனம்  செலுத்தினார்.:104_point_left:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 9/8/2018 at 4:04 AM, குமாரசாமி said:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

எடுக்க மாட்டோம் :)

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On ‎9‎/‎8‎/‎2018 at 12:34 AM, குமாரசாமி said:

அன்பரே! பிரதேசவாதத்தை  கையிலெடுத்து ஒரு போராட்டத்தையே காட்டிக்கொடுத்தவர் ஒதுங்கிவிட்டார் என்பதற்காக அவரை இனிமேல் கணக்கில் எடுக்க மாட்டீர்களா? tw_blush:

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்க மாட்டோம் :)

மகிந்தா திரும்ப வந்தால்..... தனிக்காட்டு ராசாவுக்கு கருணாவே கணக்கில் பாடமெடுக்கவேண்டிய நிலையும் வரலாம். ?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்க மாட்டோம் :)

அவருக்கு இப்ப பவர்  இல்லையெண்டாப்போலை  எடுக்கமாட்டம் எண்டு எழுப்பம் விடப்படாது சார்..tw_blush:

Share this post

Link to post
Share on other sites

மட்டக்களப்பு தமிழர் பலர் (ஒருசிலரைத் தவிர) கடின உழைப்பின் மூலம் முன்னேறுவதில் அக்கறை குறைந்தவர்களாக இருப்பது கவலையானது. 

பலர் உயர்கல்வி, உத்தியோகம் போன்றவற்றில் சலுகைகளை கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. 

இது கிழக்கு மாகாண கல்வியலாளர்கள் சிலர் கவலையுடன் சொன்ன தகவல்கள். 

போராட்டங்களின் போது சொத்துக்களை தாக்குவது ஆரோக்கியமான விடயம் இல்லை. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

இது கிழக்கு மாகாண கல்வியலாளர்கள் சிலர் கவலையுடன் சொன்ன தகவல்கள். 

போராட்டங்களின் போது சொத்துக்களை தாக்குவது ஆரோக்கியமான விடயம் இல்லை. 

தாக்கியவர்கள் யார் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யார்மூலம் வந்தார்கள் என்பதை இந்த நவீன காலத்தில் படம்போட்டுக் காட்ட முடியுமே ஏன் போடவில்லை. சல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் காவற்துறையே சொத்துக்களைத் தாக்கி அழித்தது. அவர்கள் நிச்சயம் பதவி உயர்வும் அடைந்திருப்பார்கள். இந்தியாதானே இலங்கை அரசுக்குப் பாடம் சொல்லித் தருகிறது. ?

Share this post

Link to post
Share on other sites

நன்றி நெடுக்கு,

நீங்கள் இங்கே குறிப்பிடும்வரை எனக்கு இப்படியொரு செய்தி இருப்பதே தெரிந்திருக்கவில்லை

போர்ப்ஸ் இதழின்படி 2017 இல்ஈலங்கையின் முதல் பத்துப் பணக்காரர்களின் பட்டியல் இதோ,

குறிப்பு : இவை பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட சொத்து விபரங்களை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கிறது !!!

1. முன்னால் அரசுத்தலைவர், மகிந்த ராஜபக்ச - அமெரிக்க டாலர்களில் 18 பில்லியன்.

2. உன்னால் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர், அர்ஜுன ரணதுங்க - அமெரிக்க டாலர்களில் 68 மில்லியன்

3. இனறைய அரசுத் தலைவர், மைத்திரிபால சிறிசேன - அமெரிக்க டாலர்களில் 14 மில்லியன்

4. முன்னால் இலங்கை தொழிலாளர் கட்சித் தலைவர், ஆறுமுகம் தொண்டைமான் - அமெரிக்க டாலர்களில் 1.9 மில்லியன்

5. அரச ஆயுதக் குழுத் தலைவர், விநாயகமூர்த்தி முரளீதரன் - அமெரிக்க டாலர்களில் 1.7 மில்லியன்

6. முன்னால் அமைச்சர், பெளசி - அமெரிக்க டாலர்களில் 1.4 மில்லியன்

7. முன்னால் அரசுத்தலைவர், சந்திரிக்கா குமாரதுங்க - அமெரிக்க டாலர்களில் 1.4 மில்லியன்.

8. மக்கள் விடுதலை முன்னணி தலைவர், அநுர குமார திசானாயக்க - அமெரிக்க டாலர்களில் 1.3 மில்லியன்.

9. அமைச்சர் அதாவுள்ளா - அமெரிக்க டாலர்களில் 900,000

10. இன்றைய பிரதமர், ரணில் விக்கிரமசிங்க - அமெரிக்க டாலர்களில் - 860,000.

Share this post

Link to post
Share on other sites

புலிகளுடனிருந்து பிரிந்துசென்றபோது கருணா கையிலெடுத்த ஆயுதம் பிரதேசவாதம். ராஜன் ஆசீர்வாதம் மற்றும் மோனகுருசாமி போன்றவர்களை அருகில் வைத்துக்கொண்டு பிரதேசவாதம் கக்கிய கருணா செய்ததெல்லாம் கிழக்கு மாகாண மக்களை தனது சுயநல அரசிய லாபத்துக்காகப் பாவிக்க முனைந்ததுதான்.

ஆனால், அவரது பிரதேசவாதப் பொறியை விரைவாக உணர்ந்துகொண்ட தென் தமிழீழ மக்களும், தென் தமீழழத்தின் தளபதிகள் மற்றும் போராளிகளும் அவரை விட்டு வெளியேறியபோது அவரது முகத்திரை கிழிந்தது.

முகமாலையில் நிலைகொண்டிருந்த் ஜெயந்தன் படையணியின் போராளிகள் மற்றும் தளபதிகள் அடங்கலாக 450 பேரை, ஆயுதங்களைப் போட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடையுங்கள் என்று கருணா கட்டளையிட்டபோதே அவரது துரோகத்தனதின் முழு ரூபமும் வெளிப்பட்டு விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தளபதியாக வலம் வந்த கருணா அம்மான் எனும் போராளி, விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அழிக்க உதவிய துரோகிக்கான பட்டத்தையும் சுமந்து, தனது மக்களால் தூக்கியெறியப்பட்டு, வெறும் செல்லாக்காசாக, சிங்களத்தின் நூறோடு, நூற்றி ஒராவது கைக்கூலியாக மாறியிருக்கிறார்.

Share this post

Link to post
Share on other sites

மட்டக்களப்பான் பட்டைகிளப்பான் என்னும் நியதிக்கு ஏற்ப.
வடபகுதி மக்ககளை விட யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளுனாலும் பல இழப்புக்கள் சந்தித்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி முன்னேறியுள்ளார்கள். உண்மையில் திறமைசாலிகள்.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இலங்கையின முதல் பத்து பணக்காரர்களில் இரு தமிழர்கள் இருப்பது குறிப்பிடும்படியானது.

ஒருவர் மலையக மக்களின் அறிவீனத்தைப் பாவித்து, அவர்களின் முதுகில் சவாரி செய்து வயிறு வளர்த்தவர்.

மற்றையவர், பிரதேசவாததாலும், துரோகத்தனத்தாலும்  தனது வயிறு வளர்த்தவர்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ragunathan said:

போர்ப்ஸ் இதழின்படி 2017 இல்ஈலங்கையின் முதல் பத்துப் பணக்காரர்களின் பட்டியல் இதோ,

தப்பு! தப்பு!

இது இலங்கையின் முதல் பத்து பணக்காரர் லிஸ்ட் இல்லை!

இது இலங்கையின் அரசியல்வாதிகளினுள் இருக்கும் முதல் பத்து பணக்காரர் லிஸ்ட்!

இல்லையென்றால் என் பேரும் வந்திருக்கோணும்! (?)

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 9/9/2018 at 11:23 PM, Paanch said:

மகிந்தா திரும்ப வந்தால்..... தனிக்காட்டு ராசாவுக்கு கருணாவே கணக்கில் பாடமெடுக்கவேண்டிய நிலையும் வரலாம். ?

ஹாஹா  வந்தால் பார்ப்போம்  வேண்டும் என்றால் அவர் முகநூல் கணக்கு இருக்கிறது வேண்டுமானவர்கள் நட்பில் இணையலாம் :)

On 9/10/2018 at 2:55 AM, குமாரசாமி said:

அவருக்கு இப்ப பவர்  இல்லையெண்டாப்போலை  எடுக்கமாட்டம் எண்டு எழுப்பம் விடப்படாது சார்..tw_blush:

அப்படியென்றால் கருணா அம்மான் இன்னும் இறங்கி செய்வார் மக்களுக்காக அரசியல் 

ஆனால் அவர்  அவர் கீழ் இருந்த பிள்ளையானை கூட வெல்ல முடியாமல் போனது வேறு கதை பிள்ளையானுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மக்கள் கருணா அம்மானுக்கு இல்லையே :104_point_left: 

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியென்றால் கருணா அம்மான் இன்னும் இறங்கி செய்வார் மக்களுக்காக அரசியல் 

ஆனால் அவர்  அவர் கீழ் இருந்த பிள்ளையானை கூட வெல்ல முடியாமல் போனது வேறு கதை பிள்ளையானுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மக்கள் கருணா அம்மானுக்கு இல்லையே :104_point_left: 

மக்கள் உயிரே முக்கியம் என வரிந்து கட்டி ஒரு இன விடுதலை போரட்டத்தையே  சீர்குலைத்தவர்களில் ஒருவர் சிறையில்.....
மற்றொருவருவரை ஒதிக்கிவிட்டோம் வரிசையில்....சம்சும்மும் சரியில்லாத நிலையில்....
காத்தான்குடி கொத்துரொட்டி கோலோச்சுமா? :104_point_left:

Share this post

Link to post
Share on other sites
On 9/12/2018 at 4:45 AM, குமாரசாமி said:

மக்கள் உயிரே முக்கியம் என வரிந்து கட்டி ஒரு இன விடுதலை போரட்டத்தையே  சீர்குலைத்தவர்களில் ஒருவர் சிறையில்.....
மற்றொருவருவரை ஒதிக்கிவிட்டோம் வரிசையில்....சம்சும்மும் சரியில்லாத நிலையில்....
காத்தான்குடி கொத்துரொட்டி கோலோச்சுமா? :104_point_left:

முஸ்லீம்கள் இருப்பதால் என்னவோ ஒரு சில அபிவிருத்திகளாவது தமிழர் பகுதிகளில் கால்வாசியாவது கிடைக்கிறது  ஆனால் அவர்கள் நோக்கம் இலக்கு நோக்கி சாதாரணமாக பயணிக்கிறார்கள் சிங்களவர்களை மோடர்கள் என்றார்கள் அவர்கள் மோடர்கள் ஆக்கியது யாரை என்ற கேள்வி இருக்கு முஸ்லீம்களை வந்தேறிகள் என்றார்கள் அவர்களோ  இருக்கும் வரைக்கும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வாழ்கிறார்கள் தமிழர்கள் மட்டும் தான் தன் வாயால் கெட்டே வாழ்கிறார்கள் இப்ப வரைக்கும் காத்தான் குடி கொத்து செம ருசி :grin:

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now