Athavan CH 1,490 Report post Posted September 7, 2018 தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன், உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல; முழு நேர அரசியலில் இறங்கிவிட்டேன்: நடிகர் கார்த்திக் பேட்டி அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார். இந்தப் பதிவுக்குக் கீழே பலரும் உதயநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். https://tamil.thehindu.com/tamilnadu/article24890681.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers Share this post Link to post Share on other sites