யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

‘ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!’ - ஆனந்தக் கண்ணீரில் இலங்கைத் தம்பதி

Recommended Posts

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,'' உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, தொடர்ந்து அறச்சலூர் அரசு மருத்துவமனையிலேயே முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். 

 

 

குழந்தைகள்

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், கலானியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அவருடைய கணவரும், உறவினர்களும் சேர்த்திருக்கின்றனர். ஒருவாரமாக சிகிச்சையில் இருந்த கலானிக்கு, திடீரென இன்று காலை பிரசவ வலியெடுக்க, மருத்துவர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே, ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்ததால், தாயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டி மருத்துவர்கள் ஆபரேஷன் செய்திருக்கின்றனர். அப்போதுதான் மருத்துவர்களே வியந்துபோன அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

 

 

குழந்தைகள்

ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் என்று இருக்க, நான்காவதாக ஒரு குழந்தை வயிற்றில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதைக் கண்ட மருத்துவர்கள் அதிசயித்துப்போயிருக்கின்றனர். அதன்பிறகு, சரியாக மதியம் 12.30 மணியளவில் நான்கு குழந்தைகளையும் ஆபரேஷேன் செய்து வெளியே எடுத்திருக்கின்றனர். பிறந்த 4 குழந்தைகளையும் மருத்துவர்கள் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தபோது, கலானியின் கணவர் மற்றும் உறவினர்கள் அனைவருமே சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருக்கின்ற செய்தி மருத்துவமனை முழுக்க பரவ, எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.

 

 

இது சம்பந்தமாக கலானியின் கணவர் விஜயகுமாரிடம் பேசினோம். “30 வருஷத்துக்கு முன்னாடி இலங்கையில இருந்து உயிருக்குப் பயந்து குழந்தைகள்தப்பிச்சு வந்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தன். நான் அப்போ சின்னப் பிள்ளையாக இருந்தாலும், அங்கிருந்து அகதியா தமிழகத்துக்கு வந்தது இன்னும் கஷ்டமா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி  மூன்றரை வருஷமாகியும் குழந்தை பிறக்கவே இல்லை. ‘ஏன் உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை’ன்னு பலரும் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாம பல நாள் மனசுக்குள்ளயே கண்ணீர் விட்டிருக்கேன். அந்தக் கடவுள் என்னைக்கு இருந்தாலும் எனக்கு நிச்சயமாக குழந்தையைக் கொடுப்பார்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த நம்பிக்கை இன்னைக்கு வீண் போகலை. இத்தனை வருஷம் காத்திருந்ததுக்காக இன்னைக்கு எனக்கு 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை என மொத்தம் 4 குழந்தையை ஆண்டவன் கொடுத்திருக்கான். நான் தமிழ்நாட்டுக்கு அகதியா வந்து, ஒரு பெயின்டரா வேலைபார்த்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா, என்னோட 4 குழந்தைகளும் என்ன மாதிரி கஷ்டப்படக் கூடாது. நல்லபடியா என் குழந்தைகளை வளர்ப்பேன்” என முடித்தவரின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.

இது சம்பந்தமாக மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்கேன் ரிப்போர்ட்டுல 3 குழந்தைகள்தான் தெரிஞ்சது. ஒருவேளை குழந்தை வயிற்றுல திரும்பியிருந்ததால ஸ்கேன்ல தெரியாம இருந்திருக்கும். மற்றபடி, சுகப்பிரசவத்துக்கு சாத்தியம் இல்லாததால சிசேரியன் செஞ்சி இப்போ அம்மாவும், 4 குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. நோய்த் தொற்று ஏற்படாத வகையில் 4 குழந்தைகளும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரைதான் பிறந்திருக்கிறது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை” என்று நெகிழ்ந்து போனார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/136380-erode-woman-give-birth-to-4-children-in-single-delivery.html

Share this post


Link to post
Share on other sites

முதலில் வாழ்த்துக்கள்.

ஆசியாவில் நான்கு பிள்ளைகளை ஒரே நேரத்தில் வளர்தெடுப்பதென்பது இலகுவான காரியமல்ல.

சமூகநல நிறுவனங்கள் உதவி செய்யுமென நம்புகின்றேன்.


ஜேர்மனியாக இருக்குமென்றால் அரசே தாய் தந்தையருக்கு ஊதியம் கொடுத்து பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளர்த்தெடுக்கும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/9/2018 at 7:40 AM, குமாரசாமி said:

முதலில் வாழ்த்துக்கள்.

ஆசியாவில் நான்கு பிள்ளைகளை ஒரே நேரத்தில் வளர்தெடுப்பதென்பது இலகுவான காரியமல்ல.

சமூகநல நிறுவனங்கள் உதவி செய்யுமென நம்புகின்றேன்.


ஜேர்மனியாக இருக்குமென்றால் அரசே தாய் தந்தையருக்கு ஊதியம் கொடுத்து பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளர்த்தெடுக்கும்.

அது நாடு...

Share this post


Link to post
Share on other sites
On 9/8/2018 at 10:40 PM, குமாரசாமி said:

முதலில் வாழ்த்துக்கள்.

ஆசியாவில் நான்கு பிள்ளைகளை ஒரே நேரத்தில் வளர்தெடுப்பதென்பது இலகுவான காரியமல்ல.

சமூகநல நிறுவனங்கள் உதவி செய்யுமென நம்புகின்றேன்.


ஜேர்மனியாக இருக்குமென்றால் அரசே தாய் தந்தையருக்கு ஊதியம் கொடுத்து பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளர்த்தெடுக்கும்.

ம்....ம்.

ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கிறதோ?

உங்க, ஒரு மில்லியன் அம்மையார் இறக்கியிருக்கிறா.... 

இனிப்பாருங்கோவன்.... சீனவெடி... சிவகாசி வெடியளை...

நம்ம இடத்தில், சோமாலி சீனவெடி... சிவகாசி வெடியளை... தாங்கேலாம.... எம்மளவும் பெறுங்கோ... ஆனா குடும்பத்துக்கு £500 தான் லிம்ட் எண்டு டேவிற் கமரோன் சொல்லிப்போட்டார். 

ஒவ்வொரு பிள்ளைக்கும் எண்டு தனியா வாங்கி கொண்டிருந்தவயள், இப்ப லிம்ட் எண்டோன, வெடிச்சத்தம் குறைஞ்சிட்டுது.

?

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

அம்மா தாய்- சேய் நலத் திட்ட தின் கீழ் சோப்பு ,சாம்பு, கிலு கிலுப்பை .. அடங்கிய பொதி ஒன்றினை கொடுப்பினம் .. யாருக்கும் வாங்க தெரியாது ?

http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_40676.html

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகள்..! நான்கு குழந்தைகளும் நலமுடன் வளர்ந்து வரட்டும்..! ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍
  • – யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர். இச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.thamilan.lk/இணுவில்-கந்தசுவாமி-ஆலயத்/
  • 83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன் அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்.. இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர். எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா? அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது. அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா? அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா? யாரும் கைது செய்யப்பட்டார்களா? கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா? அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா? இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.thamilan.lk
  • (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய  முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு  திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு,  தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன  அறிக்கைவிடுத்துள்ளார்.   அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள்  அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.  ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில்,  பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று  அனுப்பி வைத்துள்ளார்.  அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட  பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும்  தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம்  செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை  வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. http://www.virakesari.lk/article/54674
  • தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு  ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை  எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/54680