Sign in to follow this  
நவீனன்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி

Recommended Posts

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி

 

அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கணை செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka

 
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி
 
நியூயார்க்:
 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
 
இதில், நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதியில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவை வீழ்த்தி அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா.
 
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ஒசாகா. 
 
இந்த போட்டியின் போது செரினாவுக்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையுடன் முடிந்தது. 
 
இரண்டாவது செட்டை செரினா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தார். அதனை விதிமீறல் என நடுவர் கண்டித்தார். ஆனால் செரினா, தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டினார், ஏமாற்றி வெற்றி பெருவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன் என பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
பின்னர், அவரது டென்ன்ஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத்தில் செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சாந்தப்படுத்தினர்.
 
201809090718577476_1_535._L_styvpf.jpg
 
இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது செட்டை தொடர்ந்த செரினா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார். 
 
தனது முன்மாதிரி செரினா தான் என அடிக்கடி கூறிய ஒசாகா, தற்போது அதே செரினாவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09051716/1190085/Japanese-tennis-player-Naomi-Osaka-beats-American.vpf

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க ஓபன் மகளிர் இறுதியாட்டத்தில் செரீனாவால் பரபரப்பு

 

 
 

அமெரிக்க ஓபன்தொடரின் மகளிருக்கான இறுதியாட்டத்தில் நடுவராக பணியாற்றியவர் பெண்களிற்கு எதிரானவர் என குற்றம்சாட்டியுள்ள செரீனா வில்லியம்ஸ் ஆண்களை விட தன்னை நடுவர் கடுமையாக தண்டித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஓபன் தொடரின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே செரீனா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனிக்கிழமை போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை செரீனா விதிமுறைகளிற்கு மாறாக விளையாடினார் என நடுவர் கார்லோஸ் ரமோஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

போட்டியின் போது பயிற்றுவிப்பாளரிடமிருந்து பயிற்சி அறிவுரையை பெற்றார்,ரக்கெட்டை உடைத்தார், நடுவரை திருடன் என அழைத்தார் என நடுவர் செரினா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.

இவற்றின் காரணமாக செரீனா இறுதிப்போட்டியில் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

எனினும் இதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள செரீனா நடுவர் பெண்களை விட ஆண்கள் மீது அனுதாபம கொண்டவர் பெண்களிற்கு எதிரானவர் என தெரிவித்துள்ளார்

serena5.jpg

நான் பல போட்டிகளில் ஆண்கள் இதனை விட மோசமாக நடுவரை அழைப்பதை பார்த்திருக்கின்றேன், என செரீனா தெரிவித்துள்ளார்.

நான் இங்கு பாலியல் சமத்துவம் மற்றும் பெண் உரிமைகளிற்காக குரல்கொடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் தன்னை திருடன் என தெரிவித்தமைக்காக அவர் ஒருபோதும் அவர்களை தண்டிக்கவில்லை என செரீனா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40016

 

 

Share this post


Link to post
Share on other sites

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen

 

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்’ என்ற பிம்பத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார்.

பெண்ணியம் பேசும் செரினா வில்லியம்ஸ்... இதுதான் உங்கள் ஸ்போர்ட்ஸ் `வுமன்’ஷிப்பா? #SerenaWilliams #USOpen
 

டந்த சனிக்கிழமை, செரினா வில்லியம்ஸுக்கு அப்படி ஒருநாளாக அமையும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

2018-ம் ஆண்டின் யு.எஸ் ஓப்பன் இறுதிப் போட்டி... செரினா வில்லியம்ஸ், ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசகா (Naomi Osaka) மோதுகிறார்கள். இடைவேளையின்போது, தன் பயிற்சியாளருடன் (பாட்ரிக் மெளரடொக்ளோவ்) சைகை மொழியில் செரினா பேசினார் என எச்சரித்தார், நடுவரான கர்லோஸ் ரமொஸ் (Carlos Ramos). டென்னிஸ் விதிமுறைப்படி, போட்டிக்கிடையே, சம்பந்தப்பட்ட வீரருக்கும் பயிற்சியாளருக்கும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்கக் கூடாது. எனவேதான், செரினாவுக்கு எச்சரிக்கை அளித்து, அவரின் ஆட்டப்புள்ளிகளையும் எதிராளிக்கு அளித்தார் ரமோஸ்.

செரினா

 

 

இதனால் கோபமடைந்த செரினா, “ஏமாற்றுவதைவிட ஆட்டத்தில் தோற்பது மேல் என நினைப்பவள் நான். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, இனி நான் விளையாடும் மைதானத்தில் நிச்சயம் இருக்க மாட்டீர்கள். நீங்கள் பொய் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்? மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். என்னிடம் கேளுங்கள். மன்னித்துவிடு எனக் கேளுங்கள். என் புள்ளிகளை நீங்கள் திருடிவிட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனும்” என ஆவேசமாகக் கத்தினார். தன் டென்னிஸ் ராக்கெட்டையும் வீசி எறிந்தார்.

 

 

இதன்மூலம், விளையாட்டின் மூன்று விதிமுறைகளை மீறியிருக்கிறார் என 17,000 டாலர் அபராதம் விதித்திருக்கிறது யு.எஸ் டென்னிஸ் அமைப்பு. விளையாட்டின்போது பயிற்சியில் ஈடுபட்டதால் 4,000 டாலர்களும், நடுவரிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதால் 10,000 டாலர்களும், டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததால் 3,000 டாலர்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.

செரினா

இதுகுறித்து செரினா வில்லியம்ஸின் பயிற்சியாளர் பாட்ரிக் மெளரடொக்ளோ, “நான் நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். செரினாவுக்குப் பயிற்சி அளிக்கவே முயன்றேன். ஆனால், அவர் என்னைப் பார்த்ததுபோலத் தெரியவில்லை. அதனால்தான், அவருக்கு இந்த விஷயம் பற்றி தெரியவில்லை. ஆனால், ஒசாகாவின் பயிற்சியாளரும் அவருக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்” எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு, சனிக்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செரினா வில்லியம்ஸ், ``பெண்களின் உரிமைகளுக்கும் அவர்களைச் சமமாக நடத்துவதற்கும் பெண்கள் சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் நான் போராடி வருகிறேன். அவரைத் திருடன் என அழைத்தது, என்னை அவர் நடத்தியவிதமும், பாலியல் பாகுபாடு கொண்ட வகையில் இருந்ததற்குமே. காரணம், எந்த ஆண்களையும் அவர் இப்படி நடத்தியதில்லை. ஆனாலும், நான் தொடர்ந்து பெண்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் போராடுவேன். இந்தச் சம்பவம், இனிவரும் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு நற்பாதையை அமைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

 

 

செரினா

செரினாவின் இந்த ஆவேச செயல், பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள், "அவர் எப்போதுமே 'தான் பாதிக்கப்பட்டவள்' என்ற பிம்பத்தை தனக்குள் வைத்துக்கொண்டு திரிகிறார். அதனால்தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார்" எனக் குற்றம் சாட்டுகிறது. மற்றொருபுறம், அந்த நடுவர் எப்போதுமே இப்படித்தான் என்று விளையாட்டு வீரர்களை அவர் நடத்தும் விதம் பற்றி பலரும் மனவருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒருமுறை பிரபல விளையாட்டு வீரர் ரபேல் நாடல், 'நடுவர் என்பவர் ஒரு போட்டியை அலசி ஆராய வேண்டுமே தவிர, வீரர்கள் மீதே குறியாக இருக்கக் கூடாது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அதேபோல அவரும் இருந்தால் நன்றாக இருக்கும்’ என வருந்தியுள்ளார்.

இங்கு விஷயம் அதுவல்ல செரினா... 23 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 36 வயதாகும் நீங்கள், பல மைதானங்களையும் நடுவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவ்வளவு சீனியரான நீங்கள், இந்த விஷயத்தைச் சற்றே நிதானமாகக் கையாண்டிருந்தால், பெண் உரிமைக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறீர்கள். இது நீங்கள் கூறும் 'வருங்கால டென்னிஸ் வீராங்கனைகளுக்கு' எத்தகைய தவறான முன்னுதாரணமாக அமையும்? நம் நேர்மையைச் சந்தேகிக்கும்போது நிச்சயம் கோபம் வரும்தான். அந்தக் கோபத்தை விளையாட்டில் காண்பித்து, நீங்கள் பேசும் பாலின பாகுபாட்டை உடைத்திருக்கலாமே? தற்போது, செய்திருக்கும் செயலால், முன்பு நீங்கள் நியாயமாகப் பேசிய பெண்ணியமும் கேள்விக்குறியாகி இருப்பதை உணரமுடிகிறதா செரினா?

https://www.vikatan.com/news/sports/136542-controversy-over-serenas-behaviour-is-it-right-to-violate-sportsmanship.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this