யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு காத்திருக்கும் சவால்

Recommended Posts

விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு காத்திருக்கும் சவால்

Untitled-6-4c2333aa53bbbb653f0ee0a3488db5603beb6712.jpg

 

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களைத் தரும் என்றோ, இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது. 

விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அதுதான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல. 

தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம், எல்லோராலும் இலகுவாக செய்து விட முடியாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

தமிழ் மக்கள் பேரவையின், கூட்டம் கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, ‘2009இல் ஏற்றுக் கொண்ட தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறை என்பனவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்று அவர் கூறியிருந்தார்.

இதன் மூலம், மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

அது மாத்திரமன்றி, தனது எதிர்கால செயற்பாடு குறித்த நான்கு தெரிவுகளையும் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நான்கில் ஒன்றிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலில் நீடித்திருப்பது பற்றி அவர் குறிப்பிடவேயில்லை. 

எனவே, வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதுடன், விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களை தரும் என்றோ, இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது.

ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த- அதற்காக பணியாற்றிய தரப்புகள் எல்லாமே இனிமேல் இது சாத்தியமில்லை என்பதை உணரத் தொடங்கி விட்டன.

விக்னேஸ்வரன் தனது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை பகிரங்கப்படுத்தவில்லையே தவிர, அதற்கான தயார்படுத்தல்களை தொடங்கி விட்டார்.

அதுபோலவே, விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது குறித்து பங்காளிக் கட்சிகளான ரெலோவுக்கும், புளொட்டுக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், தமிழ் அரசுக் கட்சியோ அவர் இல்லாத அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இறங்கி விட்டது.

அதிகாரபூர்வமாக இந்த உறவு முடிவுக்கு வரும் திகதி பெரும்பாலும், ஒக்டோபர் 25ஆம் திகதியாக இருக்கலாம். அன்று தான், வடக்கு மாகாண சபையில், முதலமைச்சர் என்ற பதவி, விக்னேஸ்வரனிடம் இருந்து நீங்கப் போகும் நாள்.

வேண்டா வெறுப்பாகவே அரசியலுக்கு வந்த அவர், இப்போது, அதனை உதறித் தள்ளி விட்டுச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார். 

தனக்கு முன்பாக இருக்கின்ற நான்கு வாய்ப்புகளில் முதலாவதை அவர் தெரிவு செய்வார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனென்றால், அவரது அரசியல் விருப்பு நிலை அதற்கு இடமளிக்காது.

எனவே, தனிக் கட்சி அமைத்தோ, கூட்டணி ஒன்றை உருவாக்கியோ அரசியலில் நிலைத்திருப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கூட்டமைப்பில் இருந்து விக்னேஸ்வரன் வெளியேறுவது மாத்திரமன்றி, அவர் இன்னொரு கட்சியை அல்லது கூட்டணியை உருவாக்கி தேர்தலில் நிற்கும் போது, அது நிச்சயமாக கூட்டமைப்புக்கு பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் விக்னேஸ்வரன், கூட்டமைப்புக்கு ஏற்படும் அந்த பாதிப்பை தமக்குச் சாதகமாக முற்றிலும் அறுவடை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறாரா என்பது சந்தேகமே.

ஏனென்றால், முதலமைச்சர் பதவி கைவிட்டுப் போன பின்னர் தான், விக்னேஸ்வரனுக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது.

அதாவது, கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது. மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாக செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை வீசிய அவர், கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்ய முனையும் போது, தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனிக் கட்சி ஒன்றை அமைப்பது சாத்தியமானது போலத் தெரியவில்லை. அதற்குப் பெரியளவில் உழைப்பு தேவை. அதனை அவரால் வழங்க முடியுமா என்று தெரியவில்லை.

அறிக்கை அரசியலுக்கு அப்பால் அவர் செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கக் கூடிய தலைவராக இன்னமும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிக்கைகளில் அடுக்கும் அவர், அத்தகைய பிரச்சினைகளுக்காக எத்தனை முறை நேரில் சென்றிருக்கிறார் என்பது கேள்வி.

பல நூறு நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களை எத்தனை தடவைகள் சென்று சந்தித்திருக்கிறார்?, அதனை விரல் விட்டு எண்ணி விடலாம்.

முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றத்துக்காக இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் எட்டியும் பார்க்கவில்லை.

இப்படியே களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற செயற்பாட்டு அரசியல்வாதியாக விக்னேஸ்வரன் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இப்படியான நிலையில் உள்ள அவர் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து வளர்த்து, தேர்தலைச் சந்திப்பதற்கு நேரம், உழைப்பு, நிதி என்பன போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

எனவே கூட்டணி ஒன்றை அமைத்து அவர் அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன.

அங்கு தான் அவர் உண்மையான அரசியலையும், அதிலுள்ள சூட்சுமங்கள், சூது வாதுகளையும் அறிந்து கொள்வார்.

விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அதுதான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல. 

தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம், எல்லோராலும் இலகுவாக செய்து விட முடியாது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வரும். கட்சிகள் வெளியேறப் போவதாக மிரட்டும். ஆனால் கடைசியில் ஏதோ ஒரு வகையில் இணக்கப்பாடு ஏற்படும். முட்டி மோதிக் கொண்டவர்கள் தேர்தலில் ஒன்றாக நின்று போட்டியிடுவார்கள்.

தமிழரசுக் கட்சி இந்த விடயங்களைத் திறமையாகக் கையாளும் அனுபவங்களைப் பெற்றிருந்தது. ஆனால் விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தேர்தலிலும் அத்தகைய அனுபவம் கிட்டியதில்லை.

அவருக்கு மாத்திரமன்றி, அவரை மாற்றுத் தலைமையாக மேலுயர்த்துவதற்கு முற்படும், தமிழ் மக்கள் பேரவை மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் கூட இந்த விடயத்தில் போதிய அனுபவம் இல்லை.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் பெரும்பாலும், அரசியலில் அனுபவமே இல்லாதவர்கள்.

அதிலுள்ள தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், ஈபிஆர்எல்எவ்வும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கே முடியாமல் போனவை. இதிலிருந்தே, கூட்டணி ஒன்றில் ஆசனப் பங்கீட்டை சமாளிக்கும் திறன் இந்த தரப்பில் யாருக்கும் இல்லை என்பதை உணர முடியும்.

விக்னேஸ்வரன் தலைமையில் அமையக் கூடிய ஒரு கூட்டணிக்குள் கட்சிகளை உள்ளீர்ப்பதும், அவற்றுக்கான ஆசனங்களைப் பகிர்ந்தளிப்பதும் சுலபமான வேலையாக இருக்கப் போவதில்லை என்பது இப்போதே தெரிகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதலமைச்சரை தமது பக்கத்துக்கு இழுக்க முனைகிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வோ, முதலமைச்சருடன் ஒட்டிக் கொள்ள விரும்புகிறது. இந்த நிலையில் ஆனந்தசங்கரி வேறு, தமது கட்சியின் தலைமைப் பதவியை விக்னேஸ்வரனுக்குத் தாரை வார்க்கத் தயார் என்று கூறிக் கொண்டு திரிகிறார்.

விக்னேஸ்வரன் தனியான கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும் புளொட்டும், அவருடன் சேர முனைந்தால் அது சாத்தியப்படுமா என்றும் கேள்விகள் இருக்கின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது தாம் முதலமைச்சருடன் தான் கூட்டணி அமைப்போம் என்றும், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சித் தேர்தலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ். முதுகில் குத்தி விட்டுச் சென்றது என்பதை அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். அதுபோலவே, ரெலோ, புளொட்டுடன் கூட்டணி அமைக்க முதலமைச்சர் முடிவெடுத்தால், அந்தக் கூட்டில் இணைவதா என்று தாம் சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

ஆனந்த சங்கரிக்கும் கஜேந்திர குமாருக்கும் எட்டாம் பொருத்தம் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனோ அண்மையில் ஒரு முறை கஜேந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் ஒருமித்த கருத்து இருப்பதாக கூறியிருந்தார்.

இருந்தாலும், அவர்களுக்கிடையில் இருக்கும் முறுகலைத் தீர்ப்பது சிக்கலானதாகத் தெரிகிறது. 

பல ஆண்டுகளாக இணக்கப்பாட்டை ஏற்படுத்தப் பேசினோம். ஆனாலும் முடியவில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பதானது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வையும் ஒரே கூட்டுக்குள் வைத்திருப்பதில் உள்ள சவாலை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுபோலவே, ரெலோ, புளொட் மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிருப்தியில் இருக்கிறது.

முதலமைச்சர் அமைக்கும் கூட்டணியில் தலைமைப் பாத்திரத்தை அல்லது அதிகளவு பங்கை (Lion Share) தமக்கு பெற்றுக் கொள்ளும் இலக்குடன் கஜேந்திரகுமார் தரப்பு இருப்பதாகத் தெரிகிறது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாகவும் இருந்தன.

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி சேரும் ஏனைய தரப்புகள் அதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது தான் பிரச்சினை.

இதுபோன்ற பிரச்சினைகளை அரசியல்வாதியாக சிந்திப்பவர்களால் தான் இலகுவாகத் தீர்க்க முடியுமே தவிர, நீதியரசராக சிந்திக்கும் ஒருவரால் நிச்சயமாக தீர்ப்பது சாத்தியமல்ல.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உண்மையான சவாலை கூட்டமைப்புக்குள் எதிர்கொள்ளவில்லை. அவர் கூட்டமைப்புக்கு வெளியே செய்யப் போகும் அரசியல் தான் அவருக்கான உண்மையான சவாலாக இருக்கப் போகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-10

Share this post


Link to post
Share on other sites

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?

 
 
cmmmm-e1534419579844-780x405.jpg

 

 

30.8.2018அன்று வட­மா­காண நிதி முகா­மைத்துவச் செயற்­தி­றன் விருது வழங்­கும் நிகழ்­வில் வட­மா­காண முதல்­வர் சி.வி. விக்­கி ­னேஸ்­வ­ரன் உரை­யாற்­று­கை­யில் ‘‘சிங்­க­ள­வர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்த் தலைமை உரு­வாக வேண்­டும்’’ என்­றொரு புதிய கருத்தை முன்­வைத்­தி­ருந்­தார். தமது அந்த உரை­யில் தமி­ழர்­கள் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­கள் என்­ப­தால் சிங்­க­ள­வர்­கள்­கூ­டப் பொரு­ளா­ளர் பத­வி­யைத் தமி­ழ­ருக்கே கொடுப்­பார்­கள் என­வும் பெரு­மை­யா­கக் கூறி­யி­ருந்­தார்.‘‘அர­சி­யல் ரீதி­யா­க­க் கணக்கு வைப்­ப­தில் நாம் சிறந்­த­வர்­க­ளா­க­வும், கணக்கு விடு­வ­தில் பெரும்­பான்­மை­யி­னர் பெரும் வல்­ல­வர்­க­ளா­க­வும் இருப்­பது உண­ரப்­பட்­டுள்­ளது ’’ என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார். அவ்­வா­ றெ­னில், வடக்கு மாகாண சபை­யில் கணக்கு வைத்­தது யார்? கணக்கு விட்­டது யார்?

விக்னேஸ்வரனின் தலை­மை­யி­லான
வடக்கு மாகா­ண­ச­பை­யின் நிலை
2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­சபை அமைக்­கப்­பட்­ட­போது விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக்கி, பெரும்­பான்­மை­யி­ன­ரான ஆளும் கட்­சி­யா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரு­மி­தம் அடைந்­தது. அதில் மக்­க­ளின் பங்கு பெரும் பங்­கா­கும். இத்­த­கைய ஒரு பெரும் பொறுப்பை விக்­கி­னேஸ் வரனை நம்பி வட­க்கு மா­கா­ணத் தமிழ் மக்­கள் கைய­ளித்­த­னர் என்­ப­து­தான் சரி­யா­னது.

இந்­தச் சபை­யில் பெரும்­பான்­மை­யி­ன­ரான விக்­கி­னேஸ்­வ­ரன் தலை­மை­யி­லான உறுப்பினர்கள் கணக்கு விட்­ட­தால் தான், முத­லா­வது வட­மா­காண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளும் ஊழல்­வா­தி­கள் என முதலமைச்சராகலேயே உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இங்கு கேள்வி என்­ன­வென்­றால், தமி­ழர்­கள் எப்­போ­தும் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­கள், கணக்கு வைத்­தல் விட­யத்­தில் நேர்­மை­யா­ன­வர்­கள் என்­பது தனது தலை­மை­யி­லான வட மாகா­ண­ச­பை­யில் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் விக்­கி­னேஸ்­வ­ரன்.

குறித்த ஊழல் விட­யத்­தில், நிதிக் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வுக்கு இந்­தத் தக­வல்­களை வழங்கி, ஊழல் செய்­த­வர்­க­ளைத் தண்­டிக்­காது, மக்­க­ளின் பணத்தை மீளப்­பெ­றாது, மக்­க­ளுக்­குக் கணக்கு விட்­ட­வர் முத­ல­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன்­தான். அவர் சிங்­க­ள­வரா?

விக்­கி­னேஸ்­வ­ர­னின் புதிய ஊடக வடி­வம்
ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இத்­த­கைய கேள்­வி­க­ளைக் கேட்­டுச் சங்­க­டப்­ப­டுத்தி விடு­வார்­கள், அல்­லது மூக்­கு­டை­பட நேரி­டும் என்­ப­தால் தான் ‘கேள்­வி­யும் நானே பதி­லும் நானே’ என்ற புதிய ஊடக வடி­வம் ஒன்றை விக்­கி­னேஸ்­வ­ரன் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ஆனால், விக்­கி­னேஸ்­வ­ரன் மற்­ற­வர்­க­ளி­டம் கேள்வி கேட்டு அவர்­க­ளின் பதில் என்­ன­வென்று அறி­வ­தற்­காக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது ஒரு முதிர்ச்­சி­ய­டைந்த மனி­த­ருக்கு அழ­கல்ல. ஊட­கங்­க­ளுக்­குச் செய்தி வழங்­கா­மல் ஒரு மூடிய அறைக்­குள் இருந்து கதைத்து முடி­வெ­டுக்க வேண்­டிய விட­யம் இது. இந்த விட­யத்­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் மிக­வும் பொறுப்­பு­டன் நடந்து கொள்­வது தெரி­கி­றது. இந்த இரண்டு மூத்த தலை­வர்­க­ளது நிலையை நோக்­கும்­போது ஒரு உறைக்­குள் இரண்டு வாள்­கள் இருப்­பதை ஒத்­த­தா­கக் காணப்­ப­டு­கின்­றது. சம்­பந்­த­ரின் அர­சி­ய­லில் குறை கண்­டு­பி­டித்த பலர், விக்­கி­னேஸ்­வ­ர­னின் ஒப்­பீட்­டு­டன் சம்­பந்­தர் நல்ல தலை­வர் என்ற முடி­வுக்கு வந்­துள்­ள­னர். இது­பற்றி சாதா­ரண மக்­கள் மத்­தி­யில் நில­வு­கின்ற கருத்து இது. (நேநீர்க் கடை ஒன்­றில் நின்­று­கொண்­டி­ருந்த நாற்­பது வயது மதிக்­கத்­தக்க மூவ­ரின் சம்­பா­ச­னை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது) “எனக்­குச் சம்­பந்­த­ரைப் பிடிக்­காது. ஆனால், அந்த மனிசன் தமி­ழ­ரைச் சிங்­க­ள­வர் அடிக்­கும் அள­வுக்­குச் சிங்­க­ள­வ­ரைச் சீண்­ட­வில்லை, ஆனால் விக்­கி­னேஸ்­வ­ரன் தமி­ழ­ருக்கு அடி­வாங்­கித் தரப்­போ­கி­றார்’’ என்று கூறி­னார் அதில் ஒரு­வர்.

இந்த வகை­யில் பார்த்­தால், ஏனைய தமிழ்த் தலை­வர்­களோ, முஸ்­லிம் தலை­வர்­களோ, சிங்­க­ளத் தலை­வர்­களோ திராணி உள்­ள­வர்­கள் என்ற முடி­வுக்கு வர­மு­டி­யும்.
மறைந்து வாழ்ந்த பிர­பா­க­ரன்­கூட உண்­மை­யைச் சொல்­வ­தற்­காக ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தி­ருந்­தார்.

ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கப் பயப்ப­டு­கின்ற ஒரு கோழை மனி­தர் எவ்­வாறு தமிழ் மக்­க­ளுக்­குத் தலைமை தாங்க முடி­யும்? புதிய தமிழ்க் கட்­சியை உரு­வாக்க முடி­யும்? தமிழ் மக்­கள் பேர­வையை தகுந்த மக்­கள் பேரி­யக்­க­மாக இவ­ரால் எப்­படி மாற்ற முடி­யும்? விக்­கி­னேஸ்­வ­ரன் சிங்­க­ள­வர் என்­ப­தாலா தமிழ்க் கட்­சி­க­ளைப் போட்­டிக்கு இழுக்­கி­றார்? “தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு துரோ­கி­க­ளு ­டன் கூட்­டுச் சேரக்­கூ­டாது ’’ எனக் கூறு­வ­தன் மூலம் தமிழ் மக்­கள் எப்­போ­தும் பிரிந்­தி­ருப்­ப­தையே அவர் விரும்­பு­ கி­றார்.

நீண்ட கால ஆயு­தப் போராட்­டத்தை நடத்­தித் தலை­ம­றைவு வாழ்க்­கையை வாழ்ந்த விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன்­கூட ஒரு பன்­னாட்­டுப் பத்­தி­ரிகை மாநாட்டை நடத்­தி­யி­ருந்­தார். பல நியா­யங்­க­ளைக் கருத்­தில் எடுத்துப் பல தீர்ப்­புக்­களை வழங்­கிய ஓர் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரால் ஊட­கங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யா­தி­ருப்­பது என்­பது வேடிக்­கை­யா­னது. கையில் இருந்த இயன்­ற­ளவு அதி­கா­ரத்­தைக் கொண்டு மக்­க­ளுக்­குத் தொண்­டாற்­றா­மல், ஒதுக்­கப்­பட்ட நிதி­யைத் திருப்­பி­ய­னுப்­பி­ ய­வர்­க­ளும், கோழை­க­ளும் இனி­மே­லும் தமிழ் மக்­க­ளுக்­குத் தலைமை தாங்க நினைப்­பது தவறு. அந்த அள­வுக்­குத் தமி­ழி­னம் பாதிக்­கப்­பட்டு விட்­டது.

தன்­னைக் கெட்­டிக்­கா­ர­னா­க
காட்­டு­வ­தைக் கைவிட வேண்­டும்
பட்டி மன்றங்கள், விவாத மேடை­க­ளில் வாய்ப்­பேச்­சால், வேறு யாரை­யாவது நக்­க­ல­டித்­துத் தன்­னைக் கெட்­டிக்­கா­ர­னா­கக் காட்­டிக்­கொள்­ளும் நிலை­யைக் கையில் வைத்­தி­ருக்­கின்ற விக்­கி­னேஸ்­வ­ரன் முத­லில் அதைக் கைவிட வேண்­டும்.
கடந்த ஐந்து வருட காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு அவர் எத்­த­கைய சேவையை ஆற்­றி­யி­ருக்­கி­றார் என்­பதை ஒவ்­வோர் ஊர­வர்­க­ளும் நன்கு அறி­வர். பல விட­யங்­க­ளில் மக்­கள் தெளி­வாக உள்­ள­னர் என்­பதை இனி வரு­கின்ற தேர்­தல்­க­ளின்­போது முத­ல­மைச்­சர் புரிந்து கொள்ள வாய்ப்­பி­ருக்­கும்.

பிரிட்டன் ஆளு­கைக்­குட்­பட்ட நாடு­க­ளின் தலை­வர்­க­ளி­டம் மற்­ற­வரை அடி­மைப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற மனப்­பாங்கு எப்­போ­தும் இருப்­ப­துண்டு. பிரிட்டன் மீது விசு­வா­சம் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­ச­ருக்­கும் அந்த மன­நிலை இருப்­ப­தா­லேயே சிங்­க­ள­வரை அடக்­கும் அல்­லது கட்­டுப்­ப­டுத்­தும் மன­நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.இந்த நாட்­டில் சிங்­க­ள­வர்­கள் 80வீதம் என­வும், தமி­ழர்­கள் 12 வீதம் என­வும் எனைய இனங்­கள் 8 வீதம் என­வும் சாதா­ரண தமிழ் மக்­க­ளுக்கே நன்கு தெரிந்­தி­ருக்கிறது. இந்த விட­யம் முத­ல­ மைச்­ச­ருக்­குத் தெரி­யா­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யம்­தான். இந்த நிலை­யில் 12 வீத­மான சிறு­பான்மை மக்­கள் 80வீத­மான பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு­போ­தும் தலைமை தாங்­கவோ, அல்­லது கட்­டுப்­ப­டுத்­தவோ முடி­யாது. சிங்­க­ளத் தலை­வர்­கள் 80 வீத­மான பெரும்­பான்மை மக்­கள் மத்­தி­யில் இருந்து தெரிவு செய்­யப்­ப­டு­வ­தால், அவர்­க­ளின் தலை­மைத்­து­வத்தைச் சிங்­கள மக்­கள் ஏற்­பர்.

ஒரு முனிவ­ரின் கதை
மற்­ற­வர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறு­வ­தற்கு முன்னர், அவ்விதம் ஆலோ­சனை கூறு­ப­வர் அதற்­குத் தக செயற்­ப­டு­ப­வ­ராக இருப்­பது அவ­சி­யம். தம்மை ஒரு ஆத்மிக வாதியாகக் கூறிக்­கொள்­வ­தால், ஒரு முனி­வ­ரின் கதை முத­ல­மைச்­ச­ருக்கு மிக­வும் பய­னு­டை­ய­தாக இருக்­கும் என நம்­பு­கி­றேன்.

ஒரு தாய் தனது மகனை இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் எனப் பல­முறை கேட்­டும் அவன் இனிப்­பைச் சாப்­பிட்­டுக்­கொண்டே இருந்­தான். அந்­தத் தாய் தனது மகனை ஒரு முனி­வ­ரி­டம் கூட்­டிச்­சென்று, ‘‘இவனை இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் என்­று­கூ­றுங்­கள் சுவாமி ’’ என்று கேட்­டி­ருக்­கி­றார். அதற்கு முனி­வர் ஒரு தவணை கொடுத்து அந்த நாளன்று மக­னைத் தன்­னி­டம் அழைத்து வாருங்­கள் என்று தாயி­டம் கூறி அனுப்­பி­னா­ராம். அந்­தத் தவ­ணைக்­குச் சென்­ற­போது மீண்­டும் ஒரு தவணை கொடுத்­தா­ராம். பின் மூன்­றாம் தட­வை­யும் தவணை கொடுத்து அனுப்­பி­னா­ராம். அதன் பின்­னர் தான் முனி­வர் அந்­தப் பைய­னுக்கு “நீ இனி­மேல் இனிப்­புச் சாப்­பி­டக்­கூ­டாது ’’ என்று கட்­ட­ளை­யிட்­டி­ருக்­கி­றார்.

இதைக்­கேட்ட தாய் ‘‘சுவாமி இதை முதல் நாளே நீங்­கள் மக­னுக்­குச் சொல்­லி­யி­ருக்­க­லாமே? ’’ என்று கேட்­ட­போது முனி­வர் ‘‘நான் முத­லா­வது தடவை தவணை கேட்­டது ஏன் என்­றால், முத­லில் நான் இனிப்­புச் சாப்­பி­டு­வதை நிறுத்­து­வ­தற்­கா­கவே.இப்­போ­து­தான் நான் இனிப்­புச் சாப்­பி­டு­வதை நிறுத்­தி­யி­ருக்­கி­றேன். அதன் பின்­னர்­தான் அதற்கு முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கும் நான், உங்­கள் மக­னுக்கு இனிப்­புச் சாப்­பி­ட­வேண்­டாம் என்று பணிப்புரை விடுக்க முடிந்­தது’’ என்­றா­ராம்.

முத­ல­மைச்­சர் முத­லில் தனது தலை­மை­யில் உள்ள வடக்கு ­மா­காண சபைக்­குச் சரி­யா­கக் கணக்­குக் காட்­டி­ய­பின்பே, கணக்கு விடு­ப­வர்­கள் பற்­றிப் பேச முடி­யும். வெறும் வாய்ப்­பேச்­சால் பய­னில்லை. முன்­னு­தா­ர­ண­மாக அவர் இருக்­க­வேண்டும். ‘தீதும் நன்­றும் பிறர்­தர வாரா’ என்­ப­தை­யும் அவர் அறிந்­தி­ருப்­பார். தமி­ழரே தமி­ழ­ருக்­குக் கணக்கு விட்­டு­விட்­டுச் சிங்­க­ள­வர்­க­ளைக் கெட்­ட­வர் க­ளா­கக் காட்­டு­வது நல்­ல­தல்ல.

https://newuthayan.com/story/17/வடக்கு-மாகாண-சபையில்-கணக்கு-விட்டவர்கள்-சிங்களவர்களா.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு