Sign in to follow this  
நவீனன்

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

Recommended Posts

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

maithripala-sirisena-300x200.jpgநாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.

அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.

மனிதர்களால் சாப்பிட முடியாத-  நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32836

Share this post

Link to post
Share on other sites
42 minutes ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

நம்ம ஆக்கள்....அந்தக் காலத்தில...அமெரிக்கன் அனுப்பின...புழுக்கட்டிப் போன விசுக்கோத்தையே...ஆஹா.....ஓஹோ...என்று சொல்லிச்? சாப்பிட்ட்டவை தானே!

வேற என்னத்தை எதிர்பார்க்க்கலாம்?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

எயர்லைன்ஸ், முழுக்க மகிந்தன்ற ஆக்கள், அவயள் உங்களை எப்படி மதிக்கினம் எண்டு பாருங்கோவன்.

1 hour ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

அதாவது, விலை குடின கஜூ எக்கனமிவகுப்பில கொடுக்கிறதில்லை.

பஸ்ட் கிளாசில , கொடுத்தது, கொஞ்சம் பழசு தான். வேணாம் எண்டால் நாய்க்கு போட்டிருக்கலாம். 

ஜானாதிபதி இப்படி கதைச்சு, பிபிசி வரை நாறிப்போச்சே... ?

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, நவீனன் said:

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

அதே தினம் நானும் இதே ஏயர்லைன்சில வேறு இடத்துக்கு பயணித்தேன். பயண நேரம் குறைவு என்பதால் சான்விச் மட்டும் தந்தார்கள்.

அப்பாடா நான் தப்பிட்டன் 

Share this post

Link to post
Share on other sites

அவனின்ட முந்திரிக் கொட்டடை பற்றி எமக்கு ஏன் கவலை.எங்கடை மக்களை எப்படி முன்னேற்றலாம் என்டு எல்லோ எங்கடை முளை யோசிக்க  வேணும்.

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, பெருமாள் said:

அப்ப நம்ம ஆட்கள் அதில் போய் வந்து சாப்பாடு அப்படி என்று புளுகினான்களே ?

எங்கடையள் ஆட்டுறைச்சியும் சோறும் தாறாங்கள் எண்டு இப்பவும் புளுகியடிக்குதுகள்....
ஜனாதிபதியார் என்னடாவெண்டால் வாயிலையும் வைக்கேலாது எண்டுறார்.....:(

நியூஸ் படிக்கிற சனம் எங்கை போய் முட்ட?????

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ட்ரான்சிட் பிளைட் 395 பவுண்டுக்கு போகுது  900க்கு ஏன் airலங்காவில் போகிறீங்க என்பதுக்கு வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்துகொண்டு தை பொங்கலுக்கு பொங்கலும் போட்டு வடையும் தந்தவங்கள் என்று வாயால் வடை சுட்டவரை தேடிக்கொண்டு இருக்கிறன் .?

Share this post

Link to post
Share on other sites

“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை 

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்ட முந்திரிப் பருப்புக்களை நாய் கூட உண்ணமுடியாதவை என நேற்று முன் தினம் ஹம்பாந்தோட்டையில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

srilankans_airlines_with_maythiri.jpg

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

http://www.virakesari.lk/article/40276

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, நவீனன் said:

“முந்திரி பருப்புக்களை நாய் கூட சாப்பிடாது”: ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை 

ஜனாதிபதி திண்டுபார்த்து முந்திரி பருப்பு சரியில்லை என்று சொன்னதால்தான் அதிரடி நடவடிக்கையா?

மற்றும்படி இதுவரைநாள் முந்திரி பருப்பை தின்ற,

எவன் வாய் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதா எயார் லங்காவின் உலகதர சேவையின் திட்டம்?

நாயே தின்னாது என்ற தரத்தில் இருந்த முந்திரி பருப்பை மைத்திரிக்கு கொடுத்ததன்மூலம்  மைத்திரியை இலங்கை விமான சேவை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை அறிய ஆவல்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, நவீனன் said:

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

நான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஜீவன் சிவா said:

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

கட்டா கருவாட்டையும் இறக்கிரான்கள் ஜீவன் அதுவும் பக்கதில் இருக்கும் பிளட் பிடிக்கபோன மாலைதீவில் இருந்து கேட்க்க நாதியில்லை .?

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ஜீவன் சிவா said:

நான் ஒருமுறை மட்டக்களப்புக்கு சென்றபோது ஒரு உறவு சில கஜு பக்கற்றுகளை எனக்கு அன்பளிப்பாக தந்திருந்தார் - என்ன ருசி. நானும் நண்பர்களும் இரண்டு கிலோவையும் சில மணி நேரங்களிலேயே தின்னு தீர்த்திருந்தோம்.

இதுக்குள்ளே டுபாய் நிறுவனத்துடன் ஒப்பந்தமாம் - டேய் கிரிபத்தும் கட்டு சம்பலும் இங்கிருந்துதானே வருகுது. கஜூவையும் மட்டுவில வாங்குங்கோடா விசருகளா.

சந்தர்ப்பம் கிடைத்தால்....கல்பிட்டிக் கஜுவையும் சுவைத்துப் பாருங்கள்!

காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை! நீங்களே பிடுங்கிச் சாப்பிடலாம்!

மணல் வெளிகளில்...தாங்களாகவே வளர்ந்து .....தரை முழுவதும்...பரந்த படி...கிடக்கும்!

இப்போ நினைத்தாலும்....எனது அழகிய தேசமே...என்ற ஏக்கம் தான் மிச்சம் இருக்கின்றது!

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this