Jump to content

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா


Recommended Posts

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

 

இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பத்திற்கும் மேற்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.

விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானமொன்று இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பேர்த்திலிருந்து இலங்கை சென்றுள்ளது.

கடந்த ஆறு வருடகாலத்திற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் இவர்களில் சிலரின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்கின்றன அந்த நிலையிலும் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்து

 கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பலரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலிய பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் பேர்த்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளனர்

plane_1.jpg

http://www.virakesari.lk/article/40168

Link to comment
Share on other sites

இரவோடு இரவாக நாடு கடத்தப்பட்ட யாழ். உள்ளிட்ட வடக்கு, கிழக்கு இளைஞர்களின் நிலை

 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 9 பேர் இன்று காலை இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த 25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியிருந்தார்கள்.

இவர்களில் 9 பேர் இலங்கையர்கள் என்பதுடன், அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் இவர்கள் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளும் விமானத்தில் வந்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இலங்கையர்களை ஒப்படைத்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக தேசிய இரகசிய தகவல் பிரிவு மற்றும் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

https://www.tamilwin.com/community/01/193098?ref=home-latest

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 9 இலங்கையர்களும் சிஐடியினரால் கைது

 

deported-300x200.jpgஅவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனார்.

அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர்.

நேற்று இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் சிறிலங்கா அதிகாரிகளிடம்,  ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27, 29, 36, 48 வயதுகளை உடையவர்கள் என்றும், முந்தல், கொச்சிக்கடை, உடப்பு, சிலாபம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/09/12/news/32852

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.