யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி

Recommended Posts

அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி
எம்.எஸ்.எம். ஐயூப் / 

 

எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும்.   

உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள்.  

அந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்பின் போட்டியாளர்கள் எவரும் ஏற்கவில்லை. 

அவர்கள் இன்னமும், அவரை விட்டுவிடவில்லை. சுமந்திரனும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற, புதிய அரசமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றின் போதும், அவர் தமது காலி உரையைப் பற்றி, விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.   

“தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை; பிரிந்து செல்லும் உரிமையையும் கேட்கவில்லை; மாகாண சபை முறையில், சில மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது” என்று சுமந்திரன், காலியில் கூறியதாகவே சில ஊடகங்கள் தெரிவித்தன. அதுவே, இந்தச் சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.   

ஏற்கெனவே, சுமந்திரன் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்களுக்குப் பிடிக்காது. அவ்வாறிருக்க, சமஷ்டி தேவையில்லை என்று, அவர் கூறியதாகச் செய்தி வெளிவந்தால், அவர்கள் விட்டுவிடுவார்களா?  

இந்தச் செய்தி வெளியானதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், சுமந்திரனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர்.   

“தமிழர்களுக்கு, சமஷ்டி தேவையில்லை என்று, சுமந்திரன் எவ்வாறு கூற முடியும்” எனக் கேள்வி எழுப்பினர். “இது சுமந்திரனின் கருத்தா, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா?” என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.   

அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், “தாம் கூறியது, திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். சமஷ்டி அமைப்பு முறையைத் தாம் நிராகரிக்கவில்லை என்றும், அந்தச் சொல்லால் அழைக்கப்படாத, ஆனால், சமஷ்டி அமைப்பு முறையின் அம்சங்களைக் கொண்ட அரசமைப்பொன்றையே தாம் வலியுறுத்தியதாக அவர் அப்போது கூறியிருந்தார்.   

உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், இந்த அளவில் இல்லாவிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல், வடக்கில் தமது போட்டியாளர்களின் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதற்குக் காரணம், புதிய அரசமைப்பு தயாரிப்பு விடயத்தில், ஆவணமொன்று முதன் முதலாக, அந்த மாதத்தில் வெளியிடப்பட்டமையாகும்.    

புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக, நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட ஆறு உப - குழுக்களும் தமது அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தன.  

 அந்த ஆறு குழுக்களுக்கும் மேலாக, நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் தலைவராக, பிரதமர் செயற்படுவதே அதற்குக் காரணமாகும். வழிநடத்தல் குழு, அவ்வறிக்கைகளை ஆராய்ந்து, அதன் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவால், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  

அதில், அரசாங்கத்தின் தன்மையை விளக்குவதற்காக, இதுவரை பாவிக்கப்பட்ட ‘ஒற்றையாட்சி’ என்ற சொல் இடம்பெறவில்லை; மாறாக, அரசாங்கத்தின் தன்மையை விளக்க, ஒரு சிங்களச் சொல்லோடு, ஒரு தமிழ்ச் சொல் இணைக்கப்பட்டிருந்தது.   

அதன்படி, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ - ‘ஒருமித்த நாடு’ என்றே, அதில்  வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த, ‘ஒருமித்த நாடு’ என்ற பதம், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதை ஏற்றுக் கொண்டது.   

இந்த அடிப்படையில் தான், “சமஷ்டி தேவையில்லை” என்று, சுமந்திரன் காலியில் உரையாற்றும் போது கூறியதாகச் செய்திகள் கூறின.

ஆனால், ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தோடு, இணைக்கப்பட்டுள்ள சிங்களச் சொல்லான, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பது, ஒற்றையாட்சியை குறிப்பதால், “இது அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை” எனத் தமிழ்த் தீவிர போக்குடையவர்கள் கூறுகின்றனர்.   

‘ஒருமித்த நாடு’ என்றால், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறி, சிங்களத் தீவிர போக்குடையவர்களும் அரசாங்கத்தின் இந்தப் பதப் பிரயோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் - சிங்கள இனங்களில் உள்ள, தீவிர போக்குடையவர்களைச் சமாளிக்க எடுத்த இந்த முயற்சியால், அரசாங்கம் அவ்விருசாராரையும் மேலும் பகைத்துக் கொண்டது.  

இந்தநிலையில் தான், சுமந்திரன் காலியில் உரையாற்றியிருந்தார். அவர், காலியின் சூழலுக்கு ஏற்ப உரையாற்றி இருக்கிறார் போலும். அதனாலேயே, “சமஷ்டி தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். சமஷ்டி தேவையில்லை; ஒருமித்த நாடு என்பதே போதுமானது என்பது, அவரது வாதமாக இருந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வடபகுதியில் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அதனைப் பிடித்துக் கொண்டனர். சுமந்திரன், யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, இதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் தான் அவர், “சமஷ்டி என்ற எமது கொள்கையில் மாற்றம் இல்லை; ஆனால், சமஷ்டி என்ற பெயர்ப் பலகை தேவையில்லை. உள்ளடக்கத்தில் சமஷ்டி இருந்தால் போதுமானது” என்று கூறினார். அதை, வடபகுதி மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ தெரியாது. ஆனால், அந்தச் செய்தி, தென்பகுதியை வந்தடைந்தால், அங்கு மற்றொரு சர்ச்சையை சுமந்திரன் எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

அதாவது, “காலியில் சமஷ்டி தேவையில்லை என்று கூறியவர், யாழ்ப்பாணத்துக்குச் சென்று, சமஷ்டி வேண்டும் என்கிறார். அதுவும், சமஷ்டியை மூடி மறைத்து, ‘லேபில்’ இல்லாமல் வேண்டும் என்கிறார்” என்று தென்பகுதித் தீவிர போக்காளர் கூறக்கூடும்.   

இதுதான், வடக்கிலும் தெற்கிலும் அரசியல் மிதவாதம் எதிர்நோக்கும் பிரச்சினை. இனப்பிரச்சினைத் தீர்வதாக இருந்தால், அதன் பிரதான அம்சமான தமிழ், சிங்கள முரண்பாட்டின் போது, ஒன்றில் தமிழர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது சிங்களவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும், அல்லது இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும். 

ஆனால், எந்த இனத் தலைவர்களுக்கும்  விட்டுக் கொடுக்க, அந்த இனத்தைச் சேர்ந்த தீவிரபோக்காளர்கள் இடமளிக்க மாட்டார்கள். இன்று, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை இதுவே.   

இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையின் போது, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப் பரவலாக்கலை நடைமுறையில் ஏற்றுக் கொள்கின்றன. ஏன், தென்பகுதி பேரினவாத தீவிர போக்காளர்களும் தான், அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகிறார்கள்.   

அவர்கள் அதிகாரப் பரவலாக்கலை எதிர்ப்பதாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததைப் போல், மாகாண சபை முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே கோஷமெழுப்ப வேண்டும்.  

உத்தேச அரசமைப்பிலும் சில மாற்றங்களுடன் அதிகாரப் பரவலாக்கல் ஓரங்கமாக அமையப் போகிறது. அதைத் தான் சுமந்திரன், “மாகாணசபை முறையில், சில மாற்றங்கள் செய்தால் போதும்” எனக் காலி கூட்டத்தின் போது கூறியிருக்கிறார் போலும்.   

ஆனால், அந்த அதிகார பரவலாக்கல் அமைப்பை, என்னவென்று அழைப்பது என்பதிலேயே, அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.   

அதிகாரப் பரவலாக்கல் என்றால், அடிப்படையில் சமஷ்டி முறை என்பதால், அதை சமஷ்டி என்று அழைக்கலாம். அப்போது, தென்பகுதித் தீவிரபோக்காளர் துள்ளிக் குதிப்பார்கள்.   
ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்ததைப் போல், பண்பில் சமஷ்டியாக இருந்தாலும், தென்பகுதியைச் சமாளிப்பதற்காக, அதனை ஒற்றையாட்சி என அழைக்கலாம். அப்போது, வட பகுதி தீவிரவாதிகள் குழம்பிவிடுவார்கள். 

எனவே, இரண்டு சாராரையும் சமாளிப்பதற்காக, வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இரண்டையும் இணைத்து ‘ஏக்கீய ராஜ்ஜிய-ஒருமித்த நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

தமிழர்கள் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தையும் சிங்களவர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்ற பதத்தையும் கண்டு, இதனை ஏற்றுக் கொள்வார்கள் என இதை வரைந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இரு தீவிரவாதக் குழுக்களும் நேர் மாறானதையே செய்தார்கள்.

 தமிழ்த் தீவிரபோக்காளர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது ஒற்றையாட்சி எனக் கூச்சலிடுகிறார்கள். சிங்களத் தீவிர போக்காளர், ‘ஒருமித்த நாடு’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது சமஷ்டியே என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.   

பெயர் எதுவாக இருந்தாலும், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை, இரண்டு தீவிர போக்குடைய குழுக்களும் ஆராய விரும்பவில்லை. அது, அவர்களது அரசியல் இருப்பைப் பாதிக்கும் என்பதே அதற்குக் காரணமாகும். உண்மையில், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பது, எவருக்கும் தெரியாது. அது, இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தற்போதைய அரசமைப்புப் பணிகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா என்பதேயாகும்.   

கூட்டமைப்பு, அரசமைப்புப் பணிகள் மீதே, தமது முழு நம்பிக்கையையும் வைத்திருக்கிறது போல் நடந்து கொள்கிறது. 

எனவே, தீர்வு இன்று வரும் நாளை வரும் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறி வருகிறார். அதேவேளை, தாம் விரும்பும் தீர்வு கிடைக்குமா என்பதில், சில சந்தரப்பங்களில் அவர், சந்தேகத்தையும் வெளியிட்டு வருகிறார்.   

சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்த சம்பந்தன், “சமஷ்டி தான், எமக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளோம்; ஆனால், கிடைக்குமா இல்லையா என்பதைக் கூற முடியாது” என்றார்.  அவ்வாறாயின், கூட்டமைப்பினருக்கும் அவர்களது போட்டியாளர்களுக்கும் இடையில், அரசியல் நிலைப்பாட்டில் என்ன வேறுபாடு இருக்கிறது? 

ஒரு சாரார், அரசாங்கத்தோடு நெருக்கமாக இருந்து, சமஷ்டியைக் கேட்கிறார்கள். மற்றைய சாரார், பொது மேடைகளில் அரசாங்கத்துக்கு எதிராகக் கர்ஜித்து, அதையே கேட்கிறார்கள். 

ஒரு சாரார், ‘லேபிள்’ எதுவாக இருந்தாலும், நடைமுறையில் சமஷ்டி இருந்தால் போதும் என்கிறார்கள். மற்றைய சாரார், நடைமுறையைப் பற்றிப் பேசாது, லேபிளில் சமஷ்டி இருக்க வேண்டும் என்கின்றனர். 

இவற்றில் லேபிலில் சமஷ்டி இருக்க வேண்டும் என்பதில், ஈர்ப்புச் சக்தி அதிகமாகவே தெரிகிறது. மக்கள் அதையே விரும்புவார்கள்.  

வடக்கிலும் தெற்கிலும் தலைவர்கள், மிகவிரைவில் தேர்தல்களை எதிர்நோக்கப் போகிறார்கள். அது, இந்த அரசமைப்பு விவகாரத்தையும் பாதிக்கக்கூடும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்வியை அடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்து, அரசாங்கம் பொருளாதார திட்டங்களை முன்வைத்துள்ளது.   

இந்தநிலையில், தென்பகுதி தீவிரபோக்காளர்களுக்குத் தீனி போட, அரசாங்கம் விரும்பாது. எனவே அரசமைப்புப் பணி முன்னெடுக்கப்படுமா என்பதும் முன்னெடுக்கப்பட்டாலும் சமஷ்டிக் கோரிக்கை ஏற்கப்படுமா என்பதும் சந்தேகத்துக்குரியவையே.  

அதேவேளை, வடமாகாண சபையின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அத்தோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகளின் காரணமாக, கூட்டமைப்பின் கீழ், அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.   

இந்த நிலையில், அவர் மேலும் தீவிர போக்கைக் கடைபிடித்து, கூட்மைப்பை மேலும் அசௌகரித்துக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தமிழர் அரசியலில் மிதவாதம், மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-மிதவாதத்தின்-நெருக்கடி/91-221599

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…   விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க, மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பமாகும் என்பதை என்னைப் போலவே நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் முன் உரை நிகழ்த்தும் இன்றைய தினம் ஒரு தேசிய துக்க தினமாகும். துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அரசு இதனை பிரகடனப்படுத்தியது. நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்த பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இலங்கை அரசு என்ற வகையிலும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையிலும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும். இந்த சம்பவத்தைப் பற்றி இத்தருணத்தில் இந்த நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள், திறனாய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் விமர்சனங்கள் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஜனநாயக சமூகத்தின் இயல்பான தன்மை என்றே கருதுகிறேன். உலகிலேயே மிகவும் பயங்கரமான எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் 27 வருடங்களுக்கும் மேலான மிக கொடூரமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அக்காலகட்டத்தில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை, அதன் துன்ப துயரங்கள், பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவையில்லை. அந்த நீண்ட கால அனுபவங்கள் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்து இப்போதைக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டில் மிக உயரிய சமாதானம் நிலவியது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி முதல் இது வரையிலான நான்கரை வருடங்கள் ஜனநாயகம், ஊடக சதந்திரம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் அனுபவித்துவந்த காலம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இத் தேசிய துன்பியல் சம்பவத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் முன் எடுத்துரைப்பதும் ஒழிவு மறைவின்றி அனைத்து விடயங்களையம் இந்த நாட்டு மக்களாகிய உங்கள் முன் வைக்க வேண்டியதும் எனது கடமையும் பொறுப்புமாகும். இந்த பயங்கரவாத அமைப்பை பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் எமது பாதுகாப்பு துறைகளுக்கு அறியக் கிடைத்திருந்தது. அதற்கமைய அவ்வமைப்பினர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்தது. இதனால் எமது பாதுகாப்பு தரப்பினர் இவ்வமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி மோப்பம் பிடித்து தகவல்களைத் திரட்டி வந்தார்கள். இருப்பினும் இவ்வமைப்பை சார்ந்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல்களும் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூடிய நேரங்களில் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் மேற்கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து நாம் அறிந்து வைத்திருந்தோம் என்பதைக் கூறவேண்டும். இருப்பினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத நேரத்தில் இவ்வமைப்பு சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் ஏற்படுத்திய இந்த மாபெரும் உயிர்ச்சேதத்தினால் வறிய அப்பாவி குடும்பங்களின் பிஞ்சுக் குழந்தைகள் முதல் செல்வந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் வரையிலும் இந்த நாட்டுக்கு வருகைத்தந்திருந்த உல்லாச பிரயாணிகளும் வர்த்தகர்களும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். இவ்வனைவருக்காகவும் மீண்டும் இந்நாட்டு மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சோதனையும் வேதனையும் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் குடிமக்களாகிய எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ மதத்தினர் வெளிப்படுத்திய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் பற்றி நான் இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும். மதிப்பிற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் மக்களும் இந்த நாட்டினுள் மோதல்கள் ஏற்படாதவகையில் அமைதியான முறையில் மக்களை வழிநடத்தியதையிட்டும் மக்களை வழிநடத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் செயற்பட்டதற்காகவும் இத்தருணத்தில் இந்த கிறிஸ்தவ மக்கள் சமூகத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். இப்போது இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டு மக்கள் என்ற வகையில் எம்முன் இருப்பது இந்த துயரத்திலும் அழிவிலுமிருந்து எவ்வாறு மீள் எழுவது என்ற செயற்பாடே ஆகும். அச்செயற்பாட்டின் போது எமது பாதுகாப்புத் துறை பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளின் கட்டமைப்பில் முழுமையான ஒரு மறுசீரமைப்பினை ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு துறை தலைமைகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தவுள்ளேன். இந்த சம்பவம் நிகழ்ந்த கணம் முதல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழந்தவர்களினதும் துன்பங்ளையும் துயரங்களையும் புரிந்து கொண்டு சமயோசிதமான முறையில் பொலிஸாரும் பாதுகாப்புத் துறையினரும் செயற்பட்டதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு நான் உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ அமைப்பு ஆரம்பமான 80களில் இந்த நாட்டின் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இந்த நாட்டின் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவே நோக்கினர். ஆயினும் காலப்போக்கில் எல்லா தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகையினாலேயே எம்மால் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. ஆகையால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என்பதை மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே. ஆகையினால் நாட்டினுள் சிங்கள, முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது. நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அவசரகால சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த அவசர கால சட்டங்களை அறிவிக்காது இருப்பின் குறிப்பாக பொலிசாருக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்கள் போதுமானதாக அமையாததுடன் பாதுகாப்பு செயற்பாடுகளில் தரைப்படை, வான்படை, கடற்படை ஆகிய முப்படைகளை உள்வாங்க இயலாது போய்விடும். அந்த நிலைமையை சமாளித்து முப்படையினருக்கு தேவையான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவே குறிப்பாக அவசரகால சட்டதிட்டங்களுடன் பயங்கரவாத தடை சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எவ்விதத்திலும் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்துவதற்காகவோ எவருக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் வகையிலோ சுதந்திரமான இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக அமையும் விதத்திலோ இந்த சட்ட திட்டங்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்ற பொறுப்பை தனிப்பட்ட வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் பேச்சு சுதந்திரம், ஊர்வலங்கள் செல்வதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல், ஊடக சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இச்சட்ட திட்டங்கள் எவ்விதத்திலும் எவருக்கும் இடையூறாகவோ சவாலாகவோ அமையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அத்தோடு இத்தருணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நேரம் முதல் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவரும் முப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் செயற்திறன், குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பாராட்டுவதுடன் இப்புலனாய்வு பணிகளின் போது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் இங்கு நான் மதிப்புடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஏற்கனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சந்தேக நபர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு பெருமளவு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் மீண்டும் இவ்வாறான மனம் வருந்தத்தக்க துன்பியல் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதையும் இங்கு நான் கூற வேண்டும். அத்தோடு இந்த சம்பவத்தின் பின்னர் பலம்மிக்க சுமார் ஏழு எட்டு எமது நட்பு நாடுகள் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க முன்வந்திருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பினை பெற்று எதிர்காலத்தில் செயற்படவிருக்கின்றோம். இந்த சம்பவம் பற்றி ஊடகங்களிலும் சமூகத்திலும் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான கருத்தாக எமது நட்பு நாடொன்றினால் கொடுக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எமது பாதுகாப்பு துறையினர் எதனால் செயற்படவில்லை என்பது இங்கே கலந்துரையாடப்படும் மக்களுக்கு கேள்விக்குறியாகவுள்ள விடயமாக இருக்கின்றது. ஆயினும் அவ்வாறு அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற அத்தகவல்கள் பற்றி புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளினால் எனக்கும் அறியத்தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கிடைக்கப்பெற்ற அத்தகவல்களை எனக்கு அறிவித்திருப்பார்களாயின் உடனடியாக தக்க நடவடிக்கைகளை நான் எடுத்திருப்பேன் ஆகையால் அப்பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டியவர்கள் அப்படி செய்யத் தவறியிருப்பதால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன். நேற்று மாலை கூடிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. ஆகையினாலேயே நான் அரச பாதுகாப்பு துறையிலும் புலனாய்வு துறையிலும் முழுமையான மறுசீரமைப்பினை மேற்கொண்டு இவ்வாறான பயங்கரவாத செயல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மலரும் நாளைய பொழுதில் இந்த நாட்டு மக்களுக்கு அச்சமும் பயமும் இன்றி வாழ்வதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் நான் வகுத்திருக்கின்றேன். குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் அரச ஊழியர், பாடசாலை மாணவரகள் வர்த்தகர்கள் நாட்டின் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழத்தக்க சூழலை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூற வேண்டும். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று சுமார் மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்த அனுபவங்களையும் அதன் வெற்றியையும் பற்றி பேசுகின்ற நாம் இந்த சம்பவங்களுக்கும் அந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான பிரச்சினைகளின் போது நாம் உணர்வுபூர்வமாக கதைப்பதை விட புத்திசாதுர்யமாக கதைப்பதே சாலச் சிறந்தது என நான் நம்புகின்றேன். விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது. அதாவது சர்வதேச ரீதியில் பலமிக்கதோர் அமைப்பு இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அறியவந்திருக்கின்றது. ஆகையால் உள்நாட்டு ரீதியில் உருவாகிய பயங்கரவாத அமைப்பின் தன்மைக்கும் எமக்கு புதிய அனுபவமாக இருக்கின்ற இந்த துன்பகரமான பலமிக்க சர்வதேச பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. ஆகையால் இவ்விடயம் தொடர்பில் நாம் மிகுந்த பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட வேண்டும் என நான் நினைப்பதைப் போன்றே நீங்களும் நினைப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் புதிய தொழிநுட்பம், உயரிய தொழிநுட்பம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்களின் உத்திகளையும் உபயோகப்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான மிக உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் ஆலோசனைகளையும் வளங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பினை நமது தாய் நாட்டிலிருந்து வேறோடு பிடுங்கியெறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்பதை உங்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகையால் இவ்வாறான விடயத்தில் எமது ஒற்றுமையே பலமாக அமைகின்றது. அரசியல் கட்சி பேதங்களின்றி மத பேதங்களின்றி இன பேதமின்றி செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இனவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன? என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவும் ஆற்றலுமிக்க நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் இந்த பாரதூரமான பயங்கரவாத அமைப்பு இலங்கையை இவ்வாறு தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டில் இருந்துவந்த சமாதானமான சூழ்நிலையை சிதைத்து நாட்டு மக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி குறிப்பாக ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் ஒரு குழுவினருடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்தை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது இத்தருணத்தில் தகுந்ததல்ல என்பதே எனது நம்பிக்கையாகும். ஆகையால் அவ்வாறு செயற்பட வேண்டாம் என மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் செய்யாத அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வட்ட மேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் அரசின் எதிர்கால திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து மதத் தலைவர்களையும் இந்த நாட்டின் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைத்து ஒரே மேசையில் அவர்களுடன் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி இந்த அரசின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தை சுதந்திரமான ஒரு சமூகமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்க கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகையால் வதந்திகளைப் பரப்பாது உண்மை மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து வதந்திகளை நம்பி ஏமாறாது செயற்படுவது இத்தகைய தருணத்தில் மிகவும் தேவைப்படுகின்றது. ஆகையால் அரசியல் லாபம் கருதி செயற்படாது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இன்று இந்த நாட்டில் வாழும் மக்களைப் போன்றே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எமது இந்த முடிவிற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு மிகுந்த கௌரவத்துடன் உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். http://lankasee.com/2019/04/24/ஜனாதிபதி-மைத்திரிபால-சி-22/
    • கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.
    • எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/
    • தெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக்  கரியாக்க வேண்டாம் என்று.  சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும்,  அதுவும் எல்லுப்பன்  பச்சை மஞ்சளும் கலந்து முகம்,  கை,  கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்-  இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.   சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள்.   அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.  சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.