Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

நகைக் கள்ளனும் நானும்

Recommended Posts

நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும்  அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. 

ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவிதமாய்ச் சங்கிலிகளும் தோடுகளும் மாத்தி மாத்திப் போட்டு வர நான் மிகவும் மெல்லிய ஒரு சங்கிலியும் சிறிய தோட்டுடனும் இருப்பது எனக்கே கடுப்பைக் கிளப்பும். அதுக்குக் காரணம் மனிசன் நகைகள் வாங்க விடுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் நகைகளையும் வீட்டில் வைக்கவிடாது பேங்க் லாக்கரில் கொண்டுபோய் வச்சிடுவார். ஒருநாள் நானும் வீட்டில கிடந்த நல்ல வடிவான சங்கிலியும் பெரிய தோடும் போட்டுக்கொண்டு போக, வந்த ஒரு கறுப்பு இனத்தவன் "கோல்ட் ஆ.... உது" என்று கேட்டதிலிருந்து திருப்ப வெள்ளித் தோடு சங்கிலி என மாறிப்போனன். 

எனது நண்பர் ஒருவரின் தபார் கந்தோரில் வேலை செய்யும் பெண் இருவார விடுமுறையில் செல்ல வேலைக்கு ஆட்கள் இன்றி என்னைக் கெஞ்சிக் கேட்டதனால் வேறு வழியின்றி சம்மதம் சொல்லிவிட்டு முகவரியைக் கேட்டால், அங்கு கார் நிறுத்தக் கன காசு. நீர் பஸ்ஸில் வாரும் என்றார் நண்பர்.

அந்தத் தபார் கந்தோருக்கு முன்னர் ஒருதடவை போயிருக்கிறேன் தான். ஆனாலும் வேலையை ஏற்கும் நேரம் காசுக் கணக்குகளை ஒழுங்காக எடுத்துப் பொறுப்பெடுக்க வேண்டும். திங்கள் காலை எட்டு மணிக்குத் திறப்பது. எட்டில் இருந்து பன்னிரண்டு சரியான சனமாக இருக்கும். நீர் ஒரு பன்னிரண்டுக்கு வந்தால் சனம் குறைவான நேரம் கணக்கெடுத்து எல்லாம் சொல்லித்தரமுடியும் என்றார் நண்பர்.

சரி அவதியாய் முதல் நாள் ஓடத் தேவை இல்லை. ஆறுதலாக எழும்பி மதிய உணவையும் சமைத்து காலை உணவையும் உண்டு முடித்து, புது இடம் எண்டதால கொஞ்சம் நல்ல உடுப்பைப் போட்டு கண்ணாடியைப் பார்த்தால் சில்வர் சங்கிலி பொருத்தம் இல்லாததுபோல் ஓர் எண்ணம் தோன்ற, நண்பரின் தபாற்கந்தோர் திறந்தது அல்ல. மூடியது. எனவே என்னிடம் உள்ள தங்க நகையைப் போடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுந்தது. சாதாரணமாகச் சிறிய சங்கிலி போடும் என் கைகளில் புதிதாக வாங்கி ஒரே ஒருமுறை மட்டும் போட்ட அழகான சங்கிலி தட்டுப்பட, அங்கே ஒருத்தரும் பறிக்க முடியாது என்ற நின்மதியான எண்ணமும் கூடவே எழுந்தது. பஸ்சும் கடையின் வாசலில் தான் நிற்பது. ஏறுவதும் எதிர்ப்பக்கம். எனவே என்னை நானே கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.

அடிக்கடி பஸ்ஸில் பயணிக்காததால் பிரையாண அட்டையைத் தேடி எடுத்து இதற்கென்று வைத்திருக்கும் சிறிய பணப் பையுள் இருபது பவுன்ஸ் தாளும் ஒரு ஆறு பவுண்ட்சுகள் சிலறையும் போட்டு கைப்பையுள் வைத்து பதினொன்று பத்துக்குப் புறப்பட்டாச்சு. தரிப்பிடம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். தரிப்பிடத்தில் போய் நின்றால் பஸ் வரப் பத்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. தரிப்பிடத்தில் யாரும் இல்லை. தெந்தட்டில் இருப்பதற்கான  இருக்கை இருக்க அதில் நான் இருக்க அந்த நேரம் பார்த்து என் மனிசன் போன் அடிக்கிறார்.

என்ன வெளிக்கிட்டியோ ???? ஓமப்பா பஸ் வரேல்லை.

சரி போய்ச் சேர்ந்தபிறகு போன் செய்.

நான் என்ன சின்னப் பிள்ளையே துலைய. ஒருக்கா நீங்கள் கொண்டு போய் விடுங்கோவன்.

இப்பதான் வீட்டை வந்தனான். நிறைய வேலை இருக்கு. நீயே போய்க்கொள்.

சரி போனை வையுங்கோ என்று கடுப்போடு சொல்லிவிட்டு பார்க்க நான் இருக்கும் பக்கமாக ஒரு ஸ்கூட்டியில் இருவர் வீதியின் பக்கம் உள்ள நடைபாதையில் வருவதையும் அவர்களில் ஒருவன் வீடுகள் இருக்கும் பக்கமாய்க் கையைக் காட்டி எதோ மற்றவனுக்குக் கூறுவதையும் கவனித்த நான் அவர்கள் அந்த வீடுகளில் எதிலாவது இருக்கிறார்கள் போல என எண்ணியபடி பார்க்க இருவரும் முகத்தில் மூக்கை மறைத்து கறுப்புத் துணியும் கட்டியிருப்பதைப் பார்த்து என்னடா இவர்கள் குளிரும் இல்லை.  வெய்யில் கொளுத்துகிறது. எதற்கு முகத்தில் துணி என எண்ணமிட்டவாறே பையைத் திறந்து காசு வைத்த பையையும் எடுத்து பிரையாண அட்டையை எங்கே என்று  குனிந்து பையுள் தேடிக்கொண்டு இருக்க, என் குனிந்த தலைக்கு முன்னால் எனக்குக் கிட்டவாக இரு சப்பாத்துக் கால்கள் தெரிகின்றன. தலையை நிமிர்த்திப் பார்த்தால் என்னை முட்டிவிடும் தூரத்தில் கறுப்பு உடைகளுடன் தலைக் கவசம் அணிந்தபடி ஒரு ஆணின் உருவம் தெரிகிறது. 

திடுக்கிட்டு நான் எழ, என்னிலும் உயரமாக ஒருவன் வெள்ளை நிறத்தவன் நிற்பது தெரிய உனக்கு என்ன வேண்டும் என நான் கேட்கிறேன். அவனின் இரு கைகளும் என் காதுகளை நோக்கி வர அப்போதுதான் அவன் திருடன் என்று எனக்கு உறைக்கிறது. உடனே நான் என் இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிட்டு ஓடுகிறேன். அவன் பின்னால் துரத்துகிறான். நான் அவனிடம் அகப்படவே இல்லை .......என் கூச்சல் கேட்டு வீதியால் சென்றவர்கள் ஓடிவர திருடன் பயந்து ஓடிவிட்டான். என் நகையும் தப்பி விட்டது. 

மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ .....

அவன் என் காதுக்குக் கைகளைக் கொண்டுவர என் கைகள் தானாகவே என் காதைப் பொத்திக்கொள்ள செய்வதறியாது நிற்கிறேன் நான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது எல்லாம் மறந்து மரத்துவிட்ட நிலை ஒரு நிமிடம். அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும்  தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான். அப்போதுதான் என் நான்கு விரல்களிலும் நான் போட்டிருந்த மோதிரம் என் நினைவுக்கு வர, ஆட்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வினாடி எப்படிக் கத்துவது என்று எண்ணிவிட்டு க்காஆ........என்று என் குரலை எத்தனை கூட்ட முடியுமோ கூட்டிக் கத்துகிறேன். உடனே அவன் மிரண்டு ஓட நானும் ஓடிப் போய்ப் பார்க்கிறேன். ஸ்கூட்டியில் எந்த இலக்கத்தையும் காணவில்லை. மற்றவன் ஸ்கூட்டியை தயார் நிலையில் வைத்திருக்க ஏறப் போனவன் நான் எட்டிப் பார்ப்பதைக் கண்டு மீண்டும் திரும்பி வருகிறான். ஒரு செக்கன் என்னசெய்வது என்று திகைத்தபடி பார்க்க என் கைப்பையும் போனும்  வேறு சில பொருட்களும் நிலத்தில் கிடப்பது தெரிகிறது. உடனே ஒரு கையில் கைப்பையையும் மறுகையில் போனையும் எடுத்துக்கொண்டு வீதியைப் பார்க்கிறேன். வீதியில் யாரும் இல்லை. வாகனங்கள் கூட ஒன்றும் இல்லை. உதவி உதவி  திருடர் என்று கத்திக்கொண்டு ஓடுகிறேன்.

ஒரு ஐம்பது மீற்றரும் ஓடியிருக்கமாட்டேன். எனக்கு எதிர்ப்புறமாக இரு ஆண்கள் சாதாரண உடையுடன் ஓடிவருவது தெரிகிறது. ஒரு வினாடி அவர்களும் என்னைப் பிடிப்பதற்காகத்தான் ஓடிவருகின்றனர் என நான் ஸ்தம்பித்து நிற்க அவர்கள் என்னைக் கடந்து ஓடிய பின்தான் அவர்கள் திருடனைத் துரத்துகிறார்கள் என்று புரிய உடனே திரும்பிப் பார்க்கிறேன். அவன் ஓடிச் சென்று ஸ்கூட்டியில் அமர மற்றவன் ஸ்கூட்டியை வீதிக்கு இறக்குகிறான். படங்களில் வருவதுபோன்று வீதியின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அவர்களை மறிக்க, அவர்கள் இருவரும் கீழே விழுகின்றனர். துரத்திக்கொண்டு போனவர்கள் அண்மித்துவிட அவர்கள் பிடிபடுவது உறுதி என நான் மகிழ, விழுந்த வேகத்தில் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் எப்படிப் பறந்தார்கள் என்று இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும் திரும்பி வந்து உனக்கு ஓக்கேயா என்று கேட்டுவிட்டு போலீசுக்கும் போன் செய்துவிட்டு என்னைச் சுவரில் அமரச் சொல்கிறார்கள். அமரும்போது பார்க்கிறேன் என் கால்கள் இரண்டும் தொய்ந்துபோய் நடுங்குகின்றன. ஒரு போலந்துக்காரர் நான் இருந்த இடத்தில் சிதறிக்கிடந்த என் பொருட்கள் சிலவற்றை எடுத்துவருகிறார். ஆம் என்று வாங்கிய நான் பையுள் தேடுகிறேன் எனது சிறிய பணப் பையையும் காணவில்லை.

ஒரு ஐந்து நிமிடமும் இல்லை போலீசார் இருவர் வந்துவிட்டனர். காரில் வழிமறி த்தவர் திரும்பி வந்து போலிசுக்கு வாக்குமூலம் கொடுத்தார். அவர்கள் எதோ வைத்திருந்தார்கள். அது துவக்கா கத்தியா என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் பயத்தால் நான் அவர்களைப் பின்பற்றிச் செல்லவில்லை என்றார். மற்ற இருவரிடமும் வாக்குமூலம் ஒருவர் எடுக்க மற்றவர் என்னிடம் வந்து கருப்பு இனத்தவரா என்றார். இல்லை வெள்ளை என்றேன் நான். எப்படி இருந்தார்கள், என்ன நிற உடை அணிந்தார்கள், உனக்கு ஏதாவது காயங்கள் உள்ளதா, அம்புலன்சுக்கு அடிக்கவா எனக் கேட்டு நான் வேண்டாம் என்றபின் எதுக்கும் நாம் தடவியல் துறைக்கு அறிவித்துள்ளோம். உன் கழுத்தில் அவர்கள் கை பட்டதா??? அல்லது கையுறை போட்டிருந்தார்களா என்றெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு நினைவில்லை என்றவுடன் உன்வீடு எங்கே என்றார்கள். ஐந்து நிமிட நடைதான் என்றவுடன்  என்னோடு அவர்களும் வந்து நான் அழைப்பு மணியை அழுத்த வந்து கதவைத் திறந்த மனிசன் போலீசையும் என்னையும் மாறிமாறிப் பாக்கிறார். மனிசனுக்கு விசயத்தைச் சொல்லிப்போட்டு நான் கதிரையில் அமர்கிறேன்.

நான் போட்டிருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரும்படி போலிஸ் கூற நான் உடைமாற்றி வந்து எனது அழகிய மேற்சட்டையை ஒரு பையில் வைத்து அவர்களிடம் கொடுத்தேன்.

மூன்று நாட்களின் பின் தம்மால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உனது கேசை தற்காலிகமாக மூடுகிறோம் என்றனர். எனது மேற்சட்டை எங்கே என்றேன். தடவியல் துறையினரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் திருப்பிய அனுப்புகிறோம் என்றார்கள். இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை.

அது ஒருபுறம் இருக்க ஒரு வாரம் கடந்தபின் மீண்டும் அந்த இருவரும் என் கண்ணில் பட்டனர்.  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 3
  • Haha 2
  • Sad 5

Share this post

Link to post
Share on other sites

எனது அழகிய தோழியே....,!

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

இது கோடை காலம்!

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

மீண்டும் துர்க்கையம்மன் .....:cool:

அப்ப வரவேண்டாமோ????

6 hours ago, புங்கையூரன் said:

எனது அழகிய தோழியே....,!

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

இது கோடை காலம்!

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

போலீஸ்காரன் சொன்னதும் அதுதான். உங்கள் ஆட்கள் விலை அதிகமான நகையை ஏன் போடுகிறார்கள் என்றான். எமது காசில் தானே நாம் போடுகிறோம் என்றேன் நான்.

பணம் மிஞ்சியிருப்பவர்கள் முப்பது பவுண் கொடி ஒரு விழாவுக்கு ஒரு நகை என்று போடுவார்கள். நாம்அப்படியா????

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

உண்மைதான். அடுத்த தடவை கள்ளன் நிக்கிறான் என்று போன் செய்தும் யாருமே வரவில்லை. இப்ப வீட்டினுள்ளும் தனிய இருக்கப் பயமாத்தான் இருக்கு.

3 hours ago, Nathamuni said:

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

4 hours ago, MEERA said:

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

2 hours ago, Nathamuni said:

வெள்ளைகளுக்கே இப்பிடி என்றால்

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

Share this post

Link to post
Share on other sites

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

உங்கள் காப்புறுதிப் பத்திரத்தை வாசித்து பாருங்கள். 

எடுத்து செல்லும் மடிக்கணினி கைத்தொலைபேசி என்பவற்றுடன் அணிந்திருக்கும் நகைகளுக்கும் காப்புறுதி உள்ளது. (கைப்பையில் அல்ல)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, MEERA said:

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

ஒன்றின் மேல் பொறாமைப்படுவதற்கு  அதன் மேல் ஆசை இருக்க வேண்டும்...நான் லிப்ஸடிக் போடுவதால் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை....நகை போடுவது,போடாமல் விடுவது சுமோவின்{அவரவர்} விருப்பம்...ஆனால் எதுவும் இடத்திற்கு தக்க மாதிரி இருக்க வேண்டும் ...

கலைஞ்னுடனான எங்கள் சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்...முகத்திற்கு பின்னால்  மற்றவர்களை விமர்ர்சிக்கும் உங்களை போன்றவர்களை  இனி மீள் சந்திக்கவே கூடாது...நன்றி ...வணக்கம் 
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

ஒருவர் ஒரு பொருளை இழந்து நிற்கும் போது மகிழ்ச்சி கொண்டாடும் உங்களை போன்றவர்களின் மனநிலையை என்ன என்று சொல்வது.

சந்திப்பிற்கு வருவதும் வராமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஆனால் முகத்திற்கு பின்னால் விமர்சித்தமை என்பது உங்களின் அடுத்த புரளி.

Share this post

Link to post
Share on other sites

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

உண்மைதான்

5 hours ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

நீங்கள் இப்பிடித்தான் எழுதுவீர்கள் என்று அனுமானித்தபடியால் கோபம் வரவில்லை. நகை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதுதான். உங்கள் கதையைப் பார்த்தால் நகை போடுபவர்கள் எல்லாம் மற்றவர்கள் நகையைத் திருடிப் போடுவதுபோல் கூறுகிறீர்கள். நான் வேலைசெய்து என்காசில் நகை வாங்கிப் போடுவதில் உங்களுக்கு ஏன் கோபம்.??????

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, பெருமாள் said:

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

1 hour ago, vanangaamudi said:

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

1 hour ago, Kavi arunasalam said:

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

அதன்பின் நான் யோசித்தேன். இந்தநாட்டில் பட்டப்பகலில் நான் ஒருசிலநிமிடம் உறங்குநிலைக்குச் சென்றுவிட்டேன் என்றால் உயிர்ப் பாதுகாப்பற்ற நிலையில் இராணுவத்தைக்கண்டு எப்படிப் பெண்பகள் பதைத்திருப்பர்.

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப வரவேண்டாமோ????

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

மிக்க நலம் குமாரசாமி?

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

இப்படியொரு கருத்துக்குத்தான் ஒராள் வேண்டிகட்டிகொண்டு இருக்கிறா இப்போ நீங்களும் அதே வழியில் எவர் அடுக்கினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ? இரண்டரை என்ன 100 பவுனில் போடுங்க இங்குதான் தனியார் பாதுகாப்பு நிருவனம்கள் முடக்குக்கு முடக்கு இருக்கிறது பந்தாவா நகைகளை போட்டுகொண்டு பாதுகாவலர் புடை சூழ போய் வாருங்க . சும்மா அரசமரத்துக்கு கீல் நின்றுகொண்டு பறைவை எச்சம் போட்டுதாம் என்று வழமை போல் முகாரி பாடதீங்க.

2 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

வான் களவு போனதுக்கு போனில் கிரைம்  ரெபரன்ஸ் தரும் இங்குள்ள போலிஸ் .

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

ஐயோ....குய்யோ என்று குழறிய மனுசி....போலிசை அழைக்கப் போலிஸ் காரன்...அவவிடம்...அந்தக் கொடியின் பெறுமதி எவ்வளவு இருக்கும் எனக் கேட்கப் பதினைந்து பவுணுக்கு மனுசி விலை சொல்ல.....போலிஸ் காரனால்...அதை நம்பவே முடியவில்லை!

அதைக் களவெடுத்த கறுவலுக்கும் ...அந்தக் கொடியின் உண்மையான பெறுமதி...தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

இன்னொரு சம்பவம்....பாரிஸில்..எனது உறவினரது திருமணத்துக்குப் போயிருந்த போது...நடந்தது!

திருமணம் நடந்த மண்டபத்தில்....ஆண்கள்...பெண்களுக்கு...என கழிப்பறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன!

நான் கழிப்பறைக்குப் போன போது....ஒரு ஆண்...பெண்கள் கழிப்பறை வாசலில் காவலுக்கு நிண்டதை...அவதானித்தேன்!

அது வழமைக்கு மாறாக இருக்கவே...எனது உறவினரினரிடம்...விசாரிக்க...அவர் கூறிய பதில் ...கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

உள்ளே சென்ற அவரது மனைவியின் ...கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி...இருபத்தியாறு பவுணாம்!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this