Sign in to follow this  
நவீனன்

புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்சி தொடர்பில் சம்­பந்­தனின் ஆதங்கம்

Recommended Posts

புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்சி தொடர்பில் சம்­பந்­தனின் ஆதங்கம்

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்­தியா உதவி புரி­வ­துடன் அதற்­கான அழுத்­தங்­க­ளையும் வழங்க வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பை­விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வா­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டு­மென்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சித்­த­லை­வர்­களை உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டுள்­ளது. இந்தக் குழு­வினர் நேற்று முன்­தினம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இந்தக் கருத்­துக்­களை தெரி­வித்­துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த சம்­பந்தன் தற்­போது நடை­முறை­யி­லுள்ள அர­சியல் யாப்பில் உள்ள குறை­பா­டுகள் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­ய­துடன் புதிய அர­சியல் யாப்பின் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். புதிய அர­சியல் யாப்பின் மூல­மா­கவே இலங்­கையில் தமிழ் மக்கள் நல்­வாழ்வை வாழ முடியும். இந்த அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் இலங்­கையில் முரண்­பாடு ஏற்­படும். எமது இந்தக் கோரிக்­கை­யினை செவி­ம­டுக்­காது விட்டால் நாளை வடக்கில் என்னால் கூட சமா­ளிக்க முடி­யாத நிலைமை ஏற்­படும். தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வாகும் என்றும் சம்­பந்தன் எடுத்­து­ரைத்­துள்ளார்.

இத­னை­விட இந்­தி­யாவில் வாழ்ந்து வரும் இலங்கை அக­தி­களை மீளவும் இலங்­கைக்கு திருப்பி அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் சம்­பந்தன் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்ட தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சனும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்சி தொடரும் அதே­வேளை தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கான அழுத்­தங்­க­ளையும் இந்­தியா வழங்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே ஈ.பி.டி.பி.யின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்­தாவும் 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு இலங்கை அர­சாங்­கத்­துக்கு இந்­தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்டால் தேசிய இனப்­பி­ரச்­சி­னையில் பெரும் பங்கு தீர்க்­கப்­பட்­டு­விடும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள குழுவில் பங்­கேற்­றி­ருந்த தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் தலை­வர்கள் 3 பேரும் 13ஆவது திருத்­தத்தின் முழு­மை­யான அவ­சி­யத்­தையும் புதிய அர­சியல் யாப்பின் முக்­கி­யத்­து­வத்­தையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்த விட­யத்தில் இந்­தி­யா­வா­னது பூரண அக்­கறை செலுத்த வேண்­டி­யதன் அவ­சியம் இதன்­மூலம் எடுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தை எடுத்­துக்­கொண்டால் அதில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பை தட்­டிக்­க­ழித்­து­விட முடி­யாது. ஈழத்­த­மிழர் பிரச்­சி­னையில் இந்­தியா கடந்த காலங்­களில் மிகவும் அக்­கறை கொண்டே செயற்­பட்டு வந்­துள்­ளது. மறைந்த முன்னாள் பிர­தமர் இந்­திரா காந்தி காலத்­தி­லி­ருந்து இந்த நிலைமை நீடித்து வரு­கின்­றது.

ஆனால் இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து ஈழத் தமிழர் விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் போக்­கா­னது சற்று மாறு­பட்­ட­தாக அமைந்­தி­ருந்­தது. இதன் பின்­ன­ணியில் இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தற்கும் இந்­தியா பூரண உத­வி­களை இலங்கை அர­சாங்­கத்­துக்கு செய்­தி­ருந்­தது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்­பெற்ற காலங்­களில் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துடன் அப்­போ­தைய இலங்கை அர­சாங்­க­மா­னது நல்­லு­றவைப் பேணியே யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தி­ருந்­தது.

இறுதி யுத்­தத்­தின்­போது இந்­தியா முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தாக அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரான பஷில் ராஜபக் ஷ, பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜபக் ஷ ஆகியோர் பகி­ரங்­க­மா­கவே பாராட்­டு­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர். முன்னாள் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக இருந்த சரத் பொன்­சேகா கூட இந்­தி­யா­வுக்கு அன்­றைய காலப்­ப­கு­தியில் நன்­றி­களை தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­போது அன்று ஒத்­து­ழைப்பு வழங்­கிய இந்­தி­யா­வா­னது யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தது. இவ்­வாறு தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்பை செய்­த­ுவந்த இந்­தி­யா­வா­னது தற்­போ­தைய நிலையில் 3 தசாப்­த­கால யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு அவர்கள் எதிர்­பார்க்கும் தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­பதில் அக்­கறை காட்­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். இந்த விட­யத்தில் அக்­கறை செலுத்தி தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டிய கடப்­பாடும் இந்­தி­யா­வுக்கு உள்­ளது.

இந்­த­நி­லை­யில்தான் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்­சிக்கு இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பும் அழுத்­தமும் அவ­சி­ய­மென்­பதை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இந்­தியப் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே இந்த விட­யத்தில் இந­்தி­யா­வானது அக்­கறை செலுத்தி இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கு­மானால் அந்த முயற்சி ஓர­ள­வுக்கு வெற்­றி­பெறும் என்­பது திண்­ண­மாகும்.

இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அதன் மூல­மா­கவே மாகா­ண­சபை முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த முறை­மையில் மாற்­றங்­களைச் செய்­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. இதற்­கான திருத்­தங்கள் அமைச்­ச­ர­வை­யிலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­த ­நி­லையில் கூட்­ட­மைப்பின் தலைமை இந்­திய மத்­திய அர­சுடன் தொடர்­பு­கொண்டு நிலை­மையை விளக்­கி­ய­தை­ய­டுத்து மாகா­ண­சபை முறை­மையில் மாற்­றங்­களைச் செய்­ய­வேண்டாம் என்ற அழுத்­தத்தை அப்­போது இந்­திய மத்­திய அரசு கொடுத்­தி­ருந்­தது. இதன்­கா­ர­ண­மாக அந்த திருத்­தங்­களை அன்­றைய அர­சாங்கம் செய்­ய­வில்லை.

இதே­போன்றே அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க ­முடியும். அவ்­வா­றான அழுத்­தங்கள் இந்த முயற்­சிக்கு உந்­து­சக்­தி­யாக அமை­யக்­கூ­டி­ய­தா­கவும் இருக்கும்.

தற்­போ­தைய நிலையில் புதிய அர­சி­யல் ­யாப்­புக்­கான முயற்­சிக்கு தெற்கில் பெரும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளுக்­கி­டை­யேயும் பூரண இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­டாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய குழு இந்­தியப் பிர­த­மரை சந்­தித்­த­போது ஏனைய பிர­தி­நி­தி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் அர­சி­யல்­யாப்பின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். இதன்­மூலம் ஏனைய கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும் தமிழ் மக்­களின் நிலைப்­பாட்டை சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் முன்­னி­லை­யி­லேயே விளக்­கி­யி­ருக்­கின்றார். இதுவும் வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விடயமாகவே உள்ளது.

அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விட்டுக்கொடுப்புகளுடன் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இந்த விட்டுக்கொடுப்பானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு பாதகமானதாக அமைந்துள்ளபோதிலும் தீர்வொன்றை பெற்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் இந்த முயற்சி தோல்வியடையுமானால் வடக்கு, கிழக்கில் தீவிர போக்கைக் கொண்ட தலைமை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் மூலம் அரசியல் தீர்வுக்கான முயற்சி தோல்வி கண்டால் தமது தலைமைக்கு ஆபத்து என்பதையும் சம்பந்தன் உணர்ந்துள்ளதாகவே தெரிகின்றது.

எனவே கூட்டமைப்பின் தலைமையின் விட்டுக்கொடுப்பை உணர்ந்து தென்பகுதி அரசியல் தலைமைகள் தீர்வுக்கு முன்வர வேண்டும். இதற்கு இந்திய மத்திய அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-12#page-4

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this