Jump to content

சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி


Recommended Posts

சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி
 

-எம்.றொசா்ந்த்

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர், இன்று காலை நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.

அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தனர்.

அதையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று, குறித்த சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது, கைதுசெய்ய முயற்சித்தது. 

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி  கைதுசெய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, பொலிஸார் குறித்த சட்டத்தரணியை, பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி, அழைத்துச் சென்றனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சட்டத்தரணியை-கைதுசெய்ய-முயற்சி/71-221704

Link to comment
Share on other sites

புத்தரை அவமதிக்கும் நோக்கில் சேலை அணியவில்லை : பெண் சட்டத்தரணி வாக்குமூலம்

 

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நேற்று நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது.sari.jpgஎனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண் சட்டத்தரணி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கினார்.

“இந்தியாவிலுள்ள உறவினர் ஒருவரால் எனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் தர நிலை பொலிஸ் அலுவலகர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர், நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை தந்தனர். 

அவர்கள் சட்டத்தரணிகளின் நூலகத்துக்கு அருகில் சென்று, புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த சட்டத்தரணி ஒருவரைத் தேடுவதாகத் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும். அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பெண் சட்டத்தரணி ஒருவரை விசாரிப்பதற்கு பெண் உப பொலிஸ் பரிசோதகரே வரவேண்டும் என சட்டத்தரணிகளால் எடுத்துக் கூறப்பட்டது. அதனால் அங்கு வந்திருந்த பொலிஸார் திரும்பிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகர், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் என நால்வர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சட்டத்தரணிகளின் நூல் நிலையத்துக்கு வருகை தந்தனர்.

அதன்போது, மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் உள்ளிட்டோர் தலையிட்டு, “உங்களால் தேடுப்படும் பெண் சட்டத்தரணி, வேறொரு நீதிமன்றுக்குச் சென்றுள்ளார். அவர் வருகை தந்ததும் வாக்குமூலம் வழங்குவார்” என பெண் உப பொலிஸ் பரிசோதகரிடம் தெரிவித்தனர். அதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யு சிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.

எனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.

இதேவேளை, புத்தரின் உருவம் பொறித்த சேலைகள் பல நாடுமுழுவதுமுள்ள புடவைக் கடைகளில் பொலிஸாரால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு திருகோணமலையிலுள்ள புடவைக் கடையில் புத்தரின் உருவம் பொறித்த சேலைகள் மீட்கப்பட்டதுடன் அந்த புடவையக உரிமையாளர் நீதிமன்றில் தண்டம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40358

Link to comment
Share on other sites

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

puthar.png?resize=669%2C370
புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ; இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனனர்.

 

பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினர் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம்இ வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினா தேடியிருந்தனர்.
காவல்துறை அவசர இலக்கமான 119இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் எனவும் அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் காவல்துறையினரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார். எனினும் குறித்த பெண் சட்டத்தரணிஇ காவல்நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.

இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் தனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் தான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லையென இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின்இ அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைபேசியின் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது. பெண் காவல்துறை உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு காவல்துறையினரால் முன்வைப்பட்டது.

இந்தநிலையில் காவல்துறையினரின்  இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான்இ மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஆலோசனை பெற்றது.

இந்த நிலையில் பெண் சட்டத்தரணிஇ புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த வந்த விவகாரத்தை நீதிமன்றுக்கு காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/96161/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.