யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா

Recommended Posts

நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா

Share this post


Link to post
Share on other sites

சூறாவளி ஃபுளோரன்ஸ்: 'பேரழிவு ஏற்படலாம்' - பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் ஏராளமான மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சூறாவளியின் தாக்கம் அடுத்த 48 மணி நேரங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியேறிவரும் மக்கள்படத்தின் காப்புரிமைEPA Image captionவெளியேறிவரும் மக்கள்

பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் மற்றும் புயல் காற்றை எதிர்கொள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வட மற்றும் தென் கரோலினா, வர்ஜீனியா, மேரிலாண்ட் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய மாகாணங்களை தொடர்ந்து, புதன்கிழமையன்று ஜார்ஜியா மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களில் கடந்த 3 தசாப்தங்களில் ஏற்பட்ட சூறாவளிகளில் இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் ஃபுளோரன்ஸ் சூறாவளி வலுப்பெறும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.

சூறாவளி ஃபுளோரன்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேசிய வானிலை சேவை மைய பேச்சளார் ஒருவர் கூறுகையில், ''கரோலினா கடற்கரையில் சில பகுதிகளில் வாழ்நாளில் ஒருவர் சந்தித்த மிகப்பெரிய புயலாக இதன் தாக்கம் இருக்கக்கூடும்'' என்று தெரிவித்தார்.

''முந்தைய சூறாவளிகளான டயானா, மேத்யூ போன்றவைகளின் பாதிப்பை முன்பு சந்தித்த நிலையில், தற்போதைய ஃபுளோரன்ஸ் சூறாவளியின் தாக்கம் கணக்கிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வட கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்ட செய்தியில், ''பேரழிவு வீட்டுவாசலில் நிற்கிறது' என்று ஃபுளோரன்ஸ் சூறாவளி ஏற்படுத்தவுள்ள பாதிப்பை வர்ணித்துள்ளார். இதனால் பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் வெள்ள நீரில் சூழப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சூறாவளி ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து பல தகவல்கள் வெளிவரும் நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில் தெற்கு கரோலினாவில் பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம் நடந்துவரும் நிலையில், அங்குள்ள ஒரு சிறையில் கிட்டதட்ட 1000 கைதிகள் அங்கிருந்து வேறு செல்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது

''முன்பு இதே போல் இயற்கை பேரழிவுகள் நடந்தபோதுகூட அவர்கள் அதே செல்களில் இருந்தனர். இந்த இடம் பாதுகாப்பானதுதான்'' என்று ஒரு அரசு துறை பேச்சளார் இது குறித்து தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45505336

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா: ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை நெருங்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Hurricane Florenceபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஅட்லாண்டிக் கடலின் மேலே உருவாகியுள்ள ஃபுளோரன்ஸ் சூறாவளி

உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.

இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த இந்த சூறாவளி, உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது இதன் வேகம் மணிக்கு 165 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதால், இது இரண்டாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை

ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Hurricane Florence

ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"வெள்ளம் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம். இது மிகவும் ஆபத்தான சூறாவளி, " என்று கூறியுள்ள லாங், "உங்களுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் வெளியேற மறுக்கிறீர்கள். கடல்மட்டம் அதிகரிக்கப்போகிறது," என்று வெளியேற மறுக்கும் மக்களைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

கள நிலவரம் என்ன?

இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

கரோலினாவின் சில பகுதிகளில் 20 - 30 அங்குலம் அளவுக்கு மழை பொழியும் என்றும், தனித்து உள்ள பகுதிகளில் அது 40 அங்குலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் காரணமா?

பருவநிலை மாற்றம் மற்றும் சூறாவளி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது.

Hurricane Florence

கடலில் வெப்பம் அதிகமானால் அது சூறாவளிகளின் பலத்தை அதிகரிக்கும். ஆகவே, வரும் காலங்களில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்தால் சூறாவளிகளின் வீரியமும் அதிகரிக்கலாம்.

வளி மண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, சூறாவளியால் அதிக மழைப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சூறாவளி ஏற்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பருவநிலை மாற்றதுக்கு உள்ள தொடர்புகளை அறிவது கடினமானது.

https://www.bbc.com/tamil/global-45517595

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவைத் தாக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: ஊருக்குள் புகுந்த கடல் நீர்

florence hurricaneபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு சேதமடைந்து, துண்டாகியுள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-45517595

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை

us5.jpg?resize=768%2C512
அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில்  மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் , வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியதுடன் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது.  இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கோரப்பட்டள்ளனர்.

us-4.jpg?resize=700%2C450

us2.jpg?resize=780%2C438us3.jpg?resize=720%2C405us4.jpg?resize=285%2C177

http://globaltamilnews.net/2018/95662/

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, பழுவூர் கிழான் said:

நல்லவேளை நாங்கள் தப்பித்தோம்...

இடம் கொஞ்சம்   ஒதுக்குப்புறம் போலை கிடக்கு.....:cool:

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: 5 பேர் பலி

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை சூறையாடி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: 5பேர் பலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வடக்கு கரோலினா பகுதியில் புயலால் மரம் ஒன்று விழுந்ததில் தாய் மகன் பலியாகினார். தந்தை பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பல மரங்கள் விழுந்து வரும் நிலையில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. புயலால் சேதமடைந்த விடுதி ஒன்றிலிருந்து டஜன் கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர்.

புயலின் வேகம் குறைந்துள்ள போதும் பெருமளவில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியன்று வடக்கு கரோலினாவில், ஒன்றாம் நிலை புயலாக உருவான ஃபுளோரன்ஸ் சூறாவளி, விரிட்ஸ்வில்லி கடற்கரையில் மண்சரிவை ஏற்படுத்தியது.

உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.

இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபுளோரன்ஸ் புயலின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது.

ஃபுளோரன்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேசிய வானிலை சேவையின் தகவல்படி தற்போது மணிக்கு 110கிமீ வேகத்தில் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது.

ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

ஃபுளோரன்ஸ்படத்தின் காப்புரிமைREUTERS

"400மைல் வேகத்தில் வீசும் சூறாவளியில் மொத்த பகுதியும் அடித்து செல்லக்கூடும்" என வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வடக்கு கரோலினாவின் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு கரோலினாவின் சில பகுதியில் 10அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் காரணமா?

பருவநிலை மாற்றம் மற்றும் சூறாவளி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது.

கடலில் வெப்பம் அதிகமானால் அது சூறாவளிகளின் பலத்தை அதிகரிக்கும். ஆகவே, வரும் காலங்களில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்தால் சூறாவளிகளின் வீரியமும் அதிகரிக்கலாம்.

வளி மண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, சூறாவளியால் அதிக மழைப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சூறாவளி ஏற்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பருவநிலை மாற்றதுக்கு உள்ள தொடர்புகளை அறிவது கடினமானது.

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/global-45532173

Share this post


Link to post
Share on other sites

புளோரன்ஸ் புயல்: வரலாறு காணா வெள்ளம்; தொடர்பு அறுந்துபோன அமெரிக்க நகரம்

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிவரும் புளோரன்ஸ் சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கடற்கரை நகரமான வில்மிங்டன் வட கரோலினா மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்டுள்ள நகரம்படத்தின் காப்புரிமைREUTERS

இந்த இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லா சாலைகளும் அணுக முடியாதவையாக ஆகியுள்ளன. எனவே வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நகரில் இருந்து தள்ளியே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

1.2 லட்சம் மக்கள் தொகை உடைய இந்த நகரம் மாகாணத்துக்குள்ளேயே ஒரு தீவு போல இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப் புயலால் "ஆபத்து அதிகரித்து வருகிறது" என்றும் முன்பை விட இப்போதுதான் இந்தப் புயல் ஆபத்தானதாக மாறியிருக்கிறது என்றும் கூறியுள்ளார் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர்.

புளோரன்ஸ் புயலினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கேட்டுக்கொண்டார்.

புளோரன்ஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கரையை கடந்தாலும், தொடர்ந்து வடக்கு, தெற்கு கரோலினாவை நோக்கி நகர்ந்து வருவதுடன் வரலாறு காணாத மழையையும் பொழிந்து வருகிறது.

வடக்கு கரோலினாவில் 10 பேர் மற்றும் தென் கரோலினாவில் 5 பேர் என ஃபுளோரன்ஸ் புயல் பாதிப்பின் காரணமாக இதுவரை 15 உயிரிழந்துள்ளனர்.

மெதுவாக நகரும் இந்தப் புயல் மேற்கு நோக்கி செல்கிறது. ஆனால், அது வடபுறம் திரும்பி ஓஹியோ மாநிலத்தை நோக்கிச் செல்லவுள்ளது.

வில்மிங்டன் பகுதியில் இன்னும் இரண்டு நாள்களுக்கு திடீர் வெள்ளம் ஏற்படலாம் என தேசிய தட்ப வெட்ப மையம் எச்சரித்துள்ளது.

எவ்விதமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?

வில்மிங்டன் மழை மேகம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலில் சூறாவளியாக உருவெடுத்திருந்த புளோரன்ஸ், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வடக்கு மற்றும் தென் கரோலினாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் தொடருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதற்கு முன்பில்லாததைவிட ஆபத்தான நிலையை இது தற்போது அடைந்துள்ளதாக" வடக்கு கரோலினா ஆளுநர் கூப்பர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தென் கரோலினாவின் பெரும்பாலான பகுதிகளில் 60 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளதால் அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புளோரன்ஸ் மலைப்பகுதிகளை அடையும்போது நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூப்பர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-45544172

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு